FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரின் கால் இறுதி சுற்றுக்கு பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் முன்னேறியது. ROUND OF 16 சுற்றில் போலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தியது.
அதே சுற்றில் செனகல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஃபிபா கால் இறுதி
ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா அணி. இதையடுத்து அர்ஜென்டினா அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி தனது 1000-வது போட்டியில் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ். முதலில் தாய் மொழி பின்னர் சகோதர மொழி, எதற்காக வெளிநாட்டு மொழியை தேடிச் செல்ல வேண்டும். கலாச்சாரம் நம் வாழ்வியல் அது மதம் அல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்
பாலா இயக்கத்தில் தயாராகும் 'வணங்கான்' படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார். கதையில் செய்யப்பட்ட மாற்றங்கள் சூர்யாவுக்கு பொருந்தாது என்பதால், இருவரும் பேசியே முடிவு செய்திருப்பதாக இயக்குநர் பாலா அறிவித்துள்ளார். விரைவில் நடிகர் சூர்யா உடனான கூட்டணி உருவாகும் எனவும் இயக்குநர் பாலா உறுதியளித்துள்ளார்
இலங்கை அருகே வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது
ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியிடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 187 ரன்கள் இலக்கை 46வது ஓவரில் எட்டி வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் வெற்றியை மெகதி ஹசன் – முஸ்தாபிசூர் ரஹ்மான் ஜோடி தட்டிப்பறித்துள்ளது
திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை கூடாது. சம்மன் அனுப்பி எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம் என போக்சோ வழக்குகள் தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி பெரிய குளத்தில் அவரது ரசிகர்கள் யாகம் நடத்தி வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில், அப்பகுதியில், இளைஞர்களின் கனவு முதல்வரே, நாளைய முதல்வரே என விஜய்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் பழைய இரும்பு வியாபாரி வெட்டி கொலை செய்யப்படட் வழக்கில் தலைமறைவாக இருந்த மணி, அப்பாஷ், அஷ்ரப் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நால்வரும், திருவள்ளுவர் அருகே வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர்.
தற்போது இவர்கள் நால்வரும் பெரியமேடு காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள காவா என்கிற கிஷோர் குமாரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
ராமநாதபுரத்தில் அரிய வகை கடற் உயிரினங்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜாகிர் உசேன் என்பவர் மீது போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.
பெரியபட்டிணத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் மீது மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் 1.5 லட்சம் நோயாளிகளின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் சீனா, பாகிஸ்தான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
டெல்லியில் புதிய கட்டடங்கள் கட்டவும், பழைய கட்டங்களை இடிக்கவும் மாநில அரசு தடை விதித்துள்ளது.
மாநிலத்தில் நிலவும் சுற்றுச்சூழல் மாசுவினை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் நீர்வளத்துறையின் கீழ் உள்ள 12 அணைகள் 100 சதவீத முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
பெரியாறு, சோலையாறு, வீராணம் உள்ளிட்டவை 90 சதவீதத்துக்கும் மேல் நிரம்பியுள்ளன.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் வசிக்கும் தனது தாயார் ஹீராபென் மோடியிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிர்வாதம் பெற்றார்.
சென்னை படப்பை அருகில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைதுசெய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பாலாஜி, அலெக்ஸ் என்பது தெரியவந்தது.
ஆன்லைன் ரம்மிக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காதது தமிழ்நாட்டின் சாபக்கேடு என துரை வைகோ விமர்சித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரி தமிழ்நாடு அரசு மசோதா ஒன்றை ஆளுனர் மாளிகைக்கு அனுப்பியிருந்தது.
இந்த மசோதாவில் சில கேள்விகளை எழுப்பிய ஆளுனர் ஆர்.என். ரவி, மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்தது.
திருநெல்வேலியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றதழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 5 தினங்கள் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யக் கூடும்.
டிசம்பர் 8ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எகிப்து நாட்டில் நடைபெற்ற பிரசிடெண்ட் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி வெள்ளி கோப்பையை தட்டிச் சென்றது.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இது ஐயப்ப சுவாமி பக்தர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வல்லூர் அனல் மின் நிலையத்தில் 500 வாட் மின்சார உற்பத்தி இன்று பாதிக்கப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வேதாரண்யம் கடற்கரையில் இன்று திதி கொடுத்தார்.
ஜெயலலிதா நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படும் நிலையில் இன்று திதி கொடுத்துள்ளார் ஓ.எஸ். மணியன்
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் 6 அடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்த செயல்பாட்டிற்கு வந்தது. டோக்கன் பெற நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். இதனால், விமான நிலையத்திற்கு வந்தவர்கள் கட்டண சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாகன நெரிசலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாகனமும் சிக்கியது.
டெட் தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி பேட்டி: “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த தேதி டிசம்பர் 4 என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் உள்ளது; அந்த அறிக்கையின் மேல் நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து வருகிறார் தலைமை செயலாளர் இறையன்பு
சமீபத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிரந்தர மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி
ரூ.90 கோடி செலவில் நிரந்த மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது
தமிழகத்தில் 8ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அனைவருக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது – முதல்வர்
அரசியல் செய்ய எதுவும் கிடைக்காததால், சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்
கோயில் என்பது மக்களுக்குத் தான், தனிப்பட்ட நபரின் சொத்து அல்ல
அமைச்சர்களை முதலமைச்சர் வேலை வாங்குவதை பார்த்து இருக்கிறோம், ஆனால் முதல்வரை வேலைவாங்க கூடியவராக அமைச்சர் சேகர் பாபு இருக்கிறார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கான திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இணையர்களுக்கு தாலி உடன் 30 சீர்வரிசைப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்
திருமண நிகழ்வில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு
டெல்லியில் நடைபெறும் 250 வார்டுகளுக்கான மாநகாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கியது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா
பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று ஆன்லைனில் டிக்கெட் விநியோகம்
சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்
ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் டெல்லி பயணம்
ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விடுமுறை தினமான இன்று கன்னியாகுமரியில் மக்கள் வெள்ளம். திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள்
பொது மக்கள், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு
பொது மக்கள் வருகை அதிகரிப்பு – பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார்