Advertisment

Tamil news Highlights: மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் குழு கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 20 Nov 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil news updates

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகக்கோப்பை கால்பந்து தொடக்கம்

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. கத்தார் தலைநகர் டோஹாவில் சாலைகளில் வீரர்களின் படங்கள் வைத்து ரசிகர்கள் உற்சாகம்.

இரவு 9.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் கத்தார் - ஈக்வடார் அணிகள் மோதுகின்றன.

ஆட்டோவில் மர்ம பொருள் வெடிப்பு

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சந்தேகத்திற்கிடமான பொருள் எரிந்த‌தாக போலீசார் தகவல். வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக சென்னை மாநகரம் முழுவதும் நள்ளிரவில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:25 (IST) 20 Nov 2022
    பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் மரணம்

    பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார். அவருக்கு வயது 91. பாசமலர், புதிய பறவை, அன்பே வா உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்.



  • 22:01 (IST) 20 Nov 2022
    மங்களூரு சம்பவம் – நீலகிரி எல்லை சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன தணிக்கை

    மங்களூரு சம்பவம் எதிரொலியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி, கக்கநல்லா எல்லை சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்



  • 21:45 (IST) 20 Nov 2022
    சிவகாசி பத்ரகாளி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் தீ விபத்து

    சிவகாசி பத்ரகாளி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்



  • 21:18 (IST) 20 Nov 2022
    மங்களூரு சம்பவம் – சந்தேக நபர் கோவையில் சிம் கார்டை பெற்றது விசாரணையில் கண்டுபிடிப்பு

    மங்களூரில் ஆட்டோ வெடித்த சம்பவ இடத்தில், 4 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோவில் பயணம் செய்தவர், கோவையில் சிம் கார்டை பெற்றது தெரிய வந்துள்ளது

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே, மைசூரில் தங்கியதும், 10-க்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் தங்கி இருந்த வாடகை அறையில் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது



  • 20:20 (IST) 20 Nov 2022
    33% மேல் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு நிவாரணம் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

    சீர்காழியில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 33% மேல் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்



  • 19:46 (IST) 20 Nov 2022
    பக்தர்களின் வசதியே நோக்கம் - அமைச்சர் சேகர்பாபு

    நாங்கள் யாரிடமும் போட்டியிடவில்லை, பக்தர்களின் வசதியே நோக்கம் என காசி பயண திட்டம் குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்



  • 19:05 (IST) 20 Nov 2022
    சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் மரணம்; மருந்தக உரிமையாளர் கைது

    கடலூர், வேப்பூர் அருகே சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழந்த விவகாரத்தில் மருந்தக உரிமையாளர் வடிவேல் கைது செய்யப்பட்டுள்ளார்



  • 18:12 (IST) 20 Nov 2022
    ரசிகர்களுடனான நடிகர் விஜயின் சந்திப்பு நிறைவு; 3 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

    பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ரசிகர்களை சந்தித்தார். நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்



  • 18:00 (IST) 20 Nov 2022
    தேயிலை தோட்ட கழகம்... மத்திய அரசு நடத்தும்.. அண்ணாமலை

    தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "தேயிலை தோட்ட கழகத்தை தமிழக அரசால் நடத்த முடியவில்லை என்றால், மத்திய அரசு நடத்த தயாராக உள்ளது” என்றார்.



  • 17:29 (IST) 20 Nov 2022
    இந்தியாவின் உயரமான ரயில் நிலையம்

    இந்தியாவின் உயரமான ரயில் நிலையமாக மேற்கு வங்கத்தின் கும் தேர்வாகியுள்ளது.

    இந்த ரயில் நிலையம் கடல் மட்டத்தில் இருந்து 7407 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.



  • 17:00 (IST) 20 Nov 2022
    நெல்லை பாஜக மாவட்ட தலைவர் கைது

    நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தயா சங்கர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து கட்டி வைத்திருந்த மாடுகளை அவிழ்த்து விட்டதாக அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • 16:46 (IST) 20 Nov 2022
    ஆட்டநாயகன்.. சூர்ய குமார் முதலிடம்

    சர்வதேச டி20 போட்டிகளில், ஒரு ஆண்டில் அதிக ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் சூர்ய குமார் யாதவ் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.



  • 16:29 (IST) 20 Nov 2022
    வாரிசு படத்தை கைப்பற்றிய 7 ஸ்கீரின் ஸ்டூடியோ

    நடிகர் விஜயின் வாரிசு படத்தை 7 ஸ்கீரின் ஸ்டூடியோ கைப்பற்றியது.

    இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜன.12ஆம் தேதி வெளியாகிறது.

    இந்தப் பொங்கல் கோதாவில் அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு நேரடியான மோதுகின்றன.



  • 16:19 (IST) 20 Nov 2022
    இந்திய அணி அபார வெற்றி

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.



  • 16:05 (IST) 20 Nov 2022
    குஜராத் சோம்நாத் ஆலயத்தில் மோடி தரிசனம்

    பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தில்

    இன்று தரிசனம் செய்தார்.



  • 15:43 (IST) 20 Nov 2022
    காசி தமிழ் சங்க பெருமை இந்து அறநிலையத் துறையைதான் சேரும்.. கே.எஸ். அழகிரி

    காசி சங்கம விழா பெருமை இந்து அறநிலையத் துறைக்குதான் சேரும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசுகையில், “காசி தமிழ் சங்க நிகழ்வில் மோடி பங்கேற்று இருந்தாலும், பாரதிய ஜனதா அதனை உரிமை கொண்டாட முடியாது.

    தமிழ்நாடு அறநிலையத்துறை செலவு செய்து 200 பேரை காசிக்கு அனுப்பியுள்ளது. அந்த துறைக்குதான் பெருமை சேரும். பாஜக உரிமை கொண்டாட நினைப்பது வாடகை வீட்டுக்கு உரிமை கொண்டாடுவது போல் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 15:39 (IST) 20 Nov 2022
    நியூசிலாந்து தடுமாற்றம்

    இந்திய அணிக்கு எதிராக 192 ரன்களை இலக்காக கொண்டு விளையாடும் நியூசிலாந்து 13.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.



  • 15:20 (IST) 20 Nov 2022
    விஜய்க்காக இறங்கிப் போராடுவேன்.. சீமான்

    வாரிசு பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்காக இறங்கிப் போராடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.



  • 13:59 (IST) 20 Nov 2022
    தமிழகத்தில் நவ. 21, 22 தேதிகளில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் நாளை நவம்பர் 21, நாளை மறுநாள் நவம்பர் 22 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:13 (IST) 20 Nov 2022
    “பா.ஜ.க-வின் குரலாக இ.பி.எஸ் பேசுகிறார்” - திருமாவளவன்

    பா.ஜ.க-வைப் பார்த்து தி.மு.க பயப்படுகிறது என்று இ.பி.எஸ் கூறியிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன்: “பா.ஜ.க-வைப் பார்த்து தி.மு.க பயப்படுகிறது என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்து பா.ஜ.க-வின் குரலாகப் பார்க்க வேண்டும். அவர் அ.தி.மு.க-வை கரைய விட்டுவிட்டார். கைவிட்டு விட்டார்” என்று தெரிவித்தார்.



  • 12:03 (IST) 20 Nov 2022
    நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

    இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு



  • 12:03 (IST) 20 Nov 2022
    சோம்நாத் கோயிலில் மோடி தரிசனம்

    குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்



  • 12:03 (IST) 20 Nov 2022
    டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் பயணமாக டெல்லி சென்றார்

    டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்



  • 12:02 (IST) 20 Nov 2022
    மாற்றுத்திறனாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்

    மாற்று திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது

    மாற்றுத்திறனாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 10:37 (IST) 20 Nov 2022
    ராமேஸ்வரத்தில் புனித நீராட குவிந்து வரும் ஐயப்ப பக்தர்கள்

    ராமேஸ்வரத்தில் புனித நீராட குவிந்து வரும் ஐயப்ப பக்தர்கள். ஞாயிற்று கிழமை என்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள்.

    பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு



  • 10:00 (IST) 20 Nov 2022
    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

    வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

    தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது * இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 10:00 (IST) 20 Nov 2022
    அரசு பேருந்து நடத்துநர் பிரகாஷ் சஸ்பெண்ட்

    அரசு பேருந்தில் இருந்து குடிபோதையில் இருந்த பயணியை கீழே தள்ளிவிட்ட விவகாரம்

    நடத்துநர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை



  • 09:59 (IST) 20 Nov 2022
    காசிமேட்டில் மீன்களின் விலை உயர்வு

    சென்னை, காசிமேட்டில் களைகட்டும் மீன் விற்பனை

    வரத்து அதிகரித்த நிலையில், மீன்களின் விலையும் உயர்வு

    வஞ்சிரம் கிலோ ரூ.1,000, வவ்வாள் - ரூ.800, சங்கரா - ரூ.400, நெத்திலி -ரூ.250, இறால் - ரூ.400, நண்டு - ரூ.400க்கு விற்பனை



  • 09:58 (IST) 20 Nov 2022
    தீவிரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல - கர்நாடக காவல்துறை இயக்குநர் அதிர்ச்சி தகவல்

    பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது

    மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை - கர்நாடக டிஜிபி



  • 09:26 (IST) 20 Nov 2022
    எனது கோல் பிரியாவிற்கு அர்ப்பணம் - வின்சி பரெடோ

    ISL கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக தான் அடித்த கோலை உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு அர்ப்பணிக்கிறேன் என சென்னை FC அணி வீரர் வின்சி பரெடோ கூறினார்.



  • 09:07 (IST) 20 Nov 2022
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    சபரிமலையில் 2 நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    திகாலை முதலே ஐயப்ப பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்



  • 09:07 (IST) 20 Nov 2022
    ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் விஜய்

    5 ஆண்டுகளுக்கு பின் இன்று ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார் நடிகர் விஜய்.

    நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.



  • 09:06 (IST) 20 Nov 2022
    கோவை குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்கா மீண்டும் திறப்பு

    கோவை குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்கா மீண்டும் திறப்பு

    கனமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் திறப்பு



  • 09:03 (IST) 20 Nov 2022
    அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டது

    அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டது

    டிரம்ப் டிவிட்டர் கணக்கின் 22 மாத தடையை நீக்கினார் எலான் மஸ்க்

    வன்முறையை தூண்டும் கருத்துக்களை பதிவிட்டதாக டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது



  • 08:11 (IST) 20 Nov 2022
    இந்தியா - நியூசிலாந்து 2வது டி20

    இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி

    மவுண்ட் மாங்கனுயி நகரில் நண்பகல் 12 மணிக்கு போட்டி தொடக்கம்

    மழை காரணமாக முதல் போட்டி ரத்தான நிலையில், 2வது ஆட்டத்தை எதிர்கொள்கிறது இந்தியா, நியூசிலாந்து அணிகள்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment