பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
விரைவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்
ஆக்ஸ்போர்டு, ஸ்டான்போர்ட் போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளை வளாகங்களை இந்தியாவில் அமைப்பதற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி எனத் தகவல். பல்கலைக்கழக மானியக் குழு தயாரித்த வரைவு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்படவுள்ளதாகவும் தகவல்.
தொடரை வெல்லப் போவது யார்?
இந்தியா – இலங்கை மோதும் 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. குஜராத், ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடர் 1 – 1 என்ற சம நிலையில் உள்ளதால், இரு அணிகளும் பலப்பரீட்சை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
நெல்லை மாநகர் பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டுபவரும் பின்னால் செல்லும் நபரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் – காவல் ஆணையாளர்
கெவின் மெக்கெர்த்தி அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகராக தேர்வு * நீண்ட இழுபறிக்குப் பிறகு 15வது சுற்றில் வெற்றி பெற்று சபாநாயகரானார் கெவின் மெக்கெர்த்தி
இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரனேஷ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!
அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, ரூ. 109 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், செவிலியர்களுக்கு பணி நிரந்திரம் செய்ய வாய்ப்பில்லை என மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
குடிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்த பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் உண்மையான சமூக நீதி காவலர் என சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.
அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் படம் துணிவு. இந்தப் படத்தின் டிக்கெட் ரூபாய் தாள்கள் போல் அச்சடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. அஜித் குமாரின் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
திருவள்ளூர் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மது போதை பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையத்தினை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.
அப்போது. திருவள்ளூர், பூவிருந்தவல்லி மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார்.
ஜெயிலர் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்றுவருகின்றன.
“பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்குவதில், வழக்கம்போல குளறுபடிகளைச் செய்து வருகிறது திறனற்ற திமுக அரசு.
பொங்கல் பரிசை பொதுமக்களுக்கு வழங்குவதில் அவர் கட்சிக்காரர்கள் கொடுக்கும் இடைஞ்சல்களைக் கண்டும் காணாமல் இருக்கிறார்” என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “பல்வேறு இடங்களில், பொங்கல் தொகுப்பு வழங்குவதில், ஆளுங்கட்சியினர் தலையீடு இருப்பதாக, ரேஷன் கடை ஊழியர்களே வருந்திப் புலம்பும் சூழல் உருவாகியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இருவரையும் ஜனவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் ஷர்மாவை பிசிசிஐ நியமித்துள்ளது.
இந்த தேர்வுக்குழுவின் உறுப்பினர்களாக ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. இது வரும் மே மாதம் வரை நடைபெற உள்ளது.
இந்த சாதி வாரி கணக்கெடுப்பில் குடும்ப உறுப்பினர்கள், குடும்பத்தின் நிதி நிலை உள்ளிட்டவை பெறப்பட்டு டிஜிட்டலில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவானார். இந்த நிலையில் சங்கர் சர்மாவை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண்ணை தாக்கிய பூசாரி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அண்மையில், கோவிலுக்குள் வந்த பெண்ணை பூசாரி தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
“இன்றைக்கு திரை உலகம் கார்ப்பரேட்மயமாகி வருகிறது. திரை அரங்கங்கள் எல்லாம் ஒரு சிலரின் கட்டுப்பாட்டுக்குள் போகின்றன.
இதனால் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொழில், வணிக போட்டி என்பதையும் தாண்டி தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது” எனத் திருமாவளவன் எம்.பி. வேதனை தெரிவித்துள்ளார்.
போகி பண்டிகையின் போது சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க சிறப்பு நடவடிக்கையாக தாம்பரம் மாநகராட்சியின் 70 வார்டுகளிலும் பழைய பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாய்மொழிதான் முக்கியம், அதற்கு பிறகுதான் பிறமொழிகள், தாய்மொழியில் பேச தயங்கக் கூடாது என முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்
புதுக்கோட்டை இறையூர் கிராம தீண்டாமை விவகாரம் தொடர்பாக இரு வழக்கறிஞர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கைது செய்யப்பட்ட மூக்கையா, சிங்கம்மாள் ஆகியோரின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரட் ரிஷப் பண்ட்டிற்கு காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை நிறைவு பெற்றுள்ளது
சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்கள் வருகைக்கான பயோமெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும். தினகூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தினகூலி பணியாளர்களுக்கு முதல் உதவி பெட்டகங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்
அ.தி.மு.க தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வருவார் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ‘ஆண்கள் மட்டுமே’ பங்கேற்கும் கறி விருந்து பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் 50 ஆடுகள் வெட்டி தடபுடலாக ஆயிரத்த்துக்கும் மேற்பட்டோருக்கு விருந்து பரிமாறப்பட்டது
மக்கள், விவசாயிகளை காப்பாற்றுவதே அமைச்சர்களின் பணி விளைநிலம், மண்ணை பாதுகாப்பதே வேளாண் துறை அமைச்சரின் பணி. என்எல்சி நிர்வாகத்திற்கு உடந்தையாக மாவட்ட அமைச்சர்கள் செயல்படுகிறார்கள்.
என்.எல்.சி சுரங்க பணிகளுக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதே வேளாண் அமைச்சரின் பணி என நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி கூறியுள்ளார்
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் பனிமூட்ட த்திற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
66 வருடத்திற்கு முன்பு என்எல்சி -க்கு நிலம் கொடுத்தவர்களில் இன்று யாருமே வேலையில் இல்லை- அன்புமணி ராமதாஸ்
என்எல்சி சுரங்க பணிகளுக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது. என்எல்சி நிர்வாகத்திற்கு உடந்தையாக மாவட்ட அமைச்சர்கள் செயல்படுகிறார்கள். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதே வேளாண் அமைச்சரின் பணி- என்எல்சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில் அன்புமணி பேச்சு
ஆளுநருக்கு வேண்டுமென்றால் தமிழகம் என்பது சரியாக இருக்கும். எங்கள் நாடு தமிழ்நாடு. விரும்புபவர்கள் இங்கு இருக்கலாம்- சீமான்
16வது ஆசிய திரைப்பட விருதுகளுக்கு பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநருக்கு எதிராக கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளோம் – சென்னை, தலைமைச் செயலகத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி
தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என ஆளுநர் சொல்லி தர வேண்டாம். தமிழக பாஜக நமது கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி
ஒசூர் அருகே சித்தபுரா பகுதியில் வாகன தணிக்கையின் போது, ரூ.1.28 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லையைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்மரம் கட த்திய வழக்கில், சசிகலா உறவினர் பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டார். அவரது பர்னிச்சர் கடையில் இருந்த 48 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டி போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறுகிறது. 800 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
தங்கம் சவரனுக்கு ரூ.248 அதிகரிப்பு. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.41,768க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் 5,221 ரூபாய்க்கு விற்பனை
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர் வைக்க முடிவு.
நயாரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு ஹிராபா ஸ்மிருதி சரோவர் என பெயர் சூட்ட முடிவு.
பாரத் ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15-ம் தேதி பொங்கலன்று நடக்கிறது.
பொங்கல் பண்டிகை நாளில் அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.பி.ஐ வங்கித் தேர்வு தேதியை மாற்ற வேண்டும். இது மாணவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் மூலம் கோரிக்கை.
போராட்டத்தில் ஈடுபடும் தற்காலிக செவிலியர் பிரதிநிதிகள் உடன் இன்று மாலை பேச்சுவார்த்தை
மீண்டும் செவிலியர்களை பணி அமர்த்துவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது
2,300 பேரை பணியில் அமர்த்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
செவிலியர்களின் சொந்த ஊரிலேயே பணி வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது
தி.மு.க அரசு செவிலியர்களை பாதுகாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள இடஒதுக்கீடு அடிப்படையிலேயே பணி நிரந்தரம் செய்ய முடியும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கினார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்பு
கோவை கணுவாய் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை
இரவு முழுவதும் சுற்றித்திரிந்த யானை, காலையில் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு
சாலையில் யானையை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டிய வனத்துறை அதிகாரிகள்
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது .
உடனடியாக சம்பளம் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் 100 பேர் கூச்சல் போட்டதுடன், அங்கிருந்த மெட்டல் டிடெக்டர்களை சேதப்படுத்திய சம்பவம்
ரயில்வே சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் 100 மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு
'துணிவு' திரைப்பட சிறப்புக்காட்சி ஜனவரி 11ம் தேதி அதிகாலை 1 மணிக்கும், 'வாரிசு' திரைப்பட சிறப்புக்காட்சி அதே 11ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்படும் என தகவல்
சென்னையில் நிரந்தரப் புத்தகப் பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு, அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி.
எழுத்தும், இலக்கியமும் மொழியை வளர்க்கின்றன. வளர்ப்பது மட்டுமல்ல காக்கின்றன என ஸ்டாலின் தெரிவித்தார்.