பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜி ஸ்கொயர் ஐடி ரெய்டு நிறைவு
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் 6 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு. சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை 3 மணியளவில் வருமான வரித் துறை சோதனை நிறைவு பெற்றது.
ஐ.பி.எல் டி20
ஐ.பி.எல் டி20 தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி- ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் டிவிட்டர் தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இயக்கம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரிய அக்ரஹாரம் பகுதிக்கு சென்ற அமைச்சருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை jeemain.nta.nic.in மற்றும் ntaresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்கள் மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மே 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் சந்திப்பு
தருமபுரி மாவட்டம் பூதிநத்தம் கிராமத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற ஜெயராமன் என்பரின் சந்துக்கடையை பெண்களால் சூறையாடியடப்பட்டது. சட்டவிரோதமாக மது விற்பதை கண்டு கொந்தளித்த கிராம மக்கள் மதுபான பாட்டில்களை கொண்டு வந்து சாலையில் போட்டு உடைத்து நொறுக்கினர்
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் அமராவதி.
இந்தப் படம் மே1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலிஸ் செய்யப்படுகிறது.
தஞ்சை சாக்கோட்டையை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் கார்த்திகேயன் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பூதிநத்தம் என்ற கிராமத்தில் மது விற்பனை செய்துவந்த ஜெயராமன் என்பவரின் கடையை பெண்கள் அடித்து நொறுக்கினர்.
இந்தக் கடை சட்ட விரோதமாக செயல்பட்டுவந்துள்ளது.
தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார் பைக்கின் மீது தீராத காதல் கொண்டவர். இவர் பைக்கின் மூலம் நாடு முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவரின் பைக் பயணம் ஆவணப் படமாக உருவாக உள்ளதாகவும், இந்தப் பணிகளை பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வீடியோ உள்பட பல செய்திகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை மே2ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்னோபிலம் லட்சுமி நரசிம்மர் கோவில் தேர், நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சரிந்து விழுந்தது.
பழங்கால தேர் என்பதால் சரிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி இன்று காலை மரணித்தார். அவரின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, “ஒரு நல்ல நண்பரை இழந்து தவிக்கிறேன்” என்றார்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 400 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்
தானியங்கி மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இளைஞர்களை சீரழிக்கும் வகையில், தானியங்கி மூலம் மதுபான விறபனையை துவக்கி உள்ளதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
தானியங்கி தொழில்நுட்ப இயந்திரம் மூலம் மது வழங்குவதை நிறுத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம். சமூக நீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்
விருதுநகர், திருச்சுழி அருகே கட்டிட பணியில் ஈடுபட்ட 2 பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். தேர்வு விடுமுறை நாட்களை ஒட்டி அரசு கலைக்கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்ட போது, ஹரிஷ்குமார்(15), ரவிச்செல்வம்(17) ஆகிய 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
புதுச்சேரியில் ரூ450 கோடி செலவில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்படும். புதிய சட்டசபை கட்டிடத்திற்கான ஒப்பந்தம் ஒரு சில தினங்களில் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது என புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார்
கிருஷ்ணகிரியில் ஆணவ படுகொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலுக்கு அனுமதி மறுத்த கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைந்து விட்டதால் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க முடியாது எனக்கூறி கிருஷ்ணகிரி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. நீதிமன்ற காவல் முடிவடைவதற்கு முன்பே போலீஸ் காவல் கோரி மனு தாக்கல் செய்தோம். நீதிபதியே காலதாமதம் செய்தார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணனின் வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆருத்ரா விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது குற்றம்சாட்டிய நிலையில், ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையெனில் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இல்லையென்றால் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை மற்றும் குமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கர்நாடகாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து இடையிலேயே நிறுத்தப்பட்ட விவகாரத்திற்கு, அதிமுக சார்பில் அக்கட்சி மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கண்டனம் தெரிவித்துள்ளார்
காட்டு யானை அரிக்கொம்பனுக்கு வனத்துறையினர் வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். இடுக்கி, சின்னக்கானல் மற்றும் சாந்தன்பாறை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
திமுகவினரின் சொத்துப்பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட விவகாரத்தில் அண்ணாமலைக்கு எம்.பி., கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது உயர்மின்னழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பார்வையாளர்கள் 9 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த தகவல்களை அந்தந்த பள்ளிகளில் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பாண்டிச்சேரியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் எழுப்பிய புகாரின் அடிப்படையில், டி.ஜி.பி., 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி முருகன், சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் புதிய மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை கச்சேரிசாலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கச்சேரிசாலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீரென சாலை உள்வாங்கி 20அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சுற்றி பேரிகார்டு வைத்து போக்குவரத்தை சரிசெய்தனர்.
சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னையில் தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திறமையான சுகாதார நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து இந்த மாநாடு நடைபெறுகிறது. மொரீஷியஸ் உட்பட 20 நாடுகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 51,314 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரிப்பு
ஒரு கிராம் தங்கம் ரூ. 5,630க்கும், சவரன் ரூ. 45,040க்கும் விற்பனை
மதிமுகவை திமுகவுடன் இணைப்பது தொடர்பான திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்
மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவிப்பு
பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டியதை துரைசாமி பொதுவெளியில் வெளியிடுவது முறை அல்ல – துரை வைகோ
அவதூறு வழக்கில், 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ராகுல்காந்தி தொடர்ந்த வழக்கு
குஜராத் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
“பிரதமர் ஏன் இன்னும் இதுபற்றி பேசவில்லை?” – காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
பிரதமர் உண்மையாகவே மல்யுத்த வீராங்கனைகள் பற்றி கவலையுற்றிருந்தால் ஏன் இன்னும் அவர்களை சந்திக்காமலும் பேசாமலும் இருக்கிறார்?
இந்த நாடு இவர்களுக்கு துணையாக இருக்கிறது. இப்படியொரு பிரச்சனையை எதிர்த்து இவர்கள் குரல் கொடுத்திருப்பதை காண்கையில், எனக்கு மிகவும் பெருமைகயாக இருக்கிறது – பா.ஜ,க எம்.பி பிரிஜ் சிங்கிற்கு எதிராக போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்தப் பின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து.
கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி தந்ததை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துவோம்.
மக்கள் விரோத- சூழலியல் விரோத திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் நடத்தும் என்று சீமான் கூறினார்.
கன்னியாகுமரியில் இன்று மீன்களின் விலை கடும் உயர்வு
விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் என்பதால் நாட்டு படகுகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு கடும் கிராக்கி
பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி (55) புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்
அஜித் நடித்த வாலி, வில்லன், சிட்டிசன் உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர்
மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம்
மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது
மகனை ஆதரித்து அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது – திருப்பூர் துரைசாமி
ரேஷன் கடைகளில் வாங்காத பொருளுக்கு பில் போடுதல் அல்லது குறுஞ்செய்தி வந்தால் நடவடிக்கை
ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை
கர்நாடக தேர்தலையொட்டி, பிரசாரம் செய்ய வருமாறு, கமல்ஹாசனுக்கு ராகுல்காந்தி அழைப்பு
ராகுலின் அழைப்பை ஏற்று, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய கமல்ஹாசன் முடிவு