/tamil-ie/media/media_files/uploads/2022/09/org_29366201909151601.jpg)
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 116-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
2024-ல் ககன்யான் திட்டம் உறுதி
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் 2024-ல் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதிப்பட தெரிவித்தார். இந்தாண்டுக்குள் சோதனை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வெற்றி
டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி உடல்
பிரிட்டன்: லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணி எலிசபெத் உடல் கொண்டுவரப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி உயிரிழந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:58 (IST) 14 Sep 2022கபடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க பரிசீலனை – மெய்யநாதன்
கபடி வீரர் மற்றும் வீராங்கனைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காப்பீடு வழங்க பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்
- 21:22 (IST) 14 Sep 2022ராபின் உத்தப்பா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா புதன்கிழமை அறிவித்தார்.
- 21:00 (IST) 14 Sep 2022நரிக்குறவர், குருவிகாரர்களுக்கு பழங்குடியின தகுதி - முதல்வர் வரவேற்பு
நரிக்குறவர் மற்றும் குருவிகாரர்கள் சமுதாயத்தினர்களுக்கு பழங்குடியின தகுதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்
- 20:02 (IST) 14 Sep 2022தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் - ஸ்டாலின்
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், செம்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்படும் ஹிந்தி தினத்திற்குப் பதில் 'இந்திய மொழிகள் நாள்' என கொண்டாட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
- 19:39 (IST) 14 Sep 2022அடுத்த கல்வியாண்டில் சிலம்பம் குறித்த பாடத்திட்டம் அமல் - அமைச்சர் மெய்யநாதன்
அடுத்த கல்வியாண்டில் சிலம்பம் குறித்த பாடத்திட்டம் சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்
- 19:29 (IST) 14 Sep 2022வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு எடுத்து செல்லப்படும் ராணி எலிசபெத்தின் உடல்
லண்டன், இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு முழு ராணுவ அணிவகுப்புடன் ராணி எலிசபெத்தின் உடல் எடுத்து செல்லப்படுகிறது. அரச குடும்பத்தினரும் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர்.
- 18:59 (IST) 14 Sep 2022சென்னை ஆவடியில் விமான படை வீரர் தற்கொலை
சென்னை ஆவடி விமான படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- 18:42 (IST) 14 Sep 2022இரவு உணவு தாமதம்- மனைவி அடித்துக் கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் இரவு உணவு தர தாமதமானதால் தோசை தவாவால் மனைவியை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
இந்தத் தம்பதியருக்கு 5 வயதில் குழந்தை உள்ளது.
- 18:07 (IST) 14 Sep 2022பிசிசிஐ மாற்றங்கள் ஏற்பு- பதவியில் தொடரும் கங்குலி, ஜெய் ஷா
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கங்குலி, செயலாளராக ஜெய் ஷா ஆகியோர் 2ஆவது முறையாக அப்பதவியில் தொடர்கின்றனர்.
பிசிசிஐ திருத்தங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
- 17:53 (IST) 14 Sep 2022மஸ்கட்-கொச்சி விமானத்தில் திடீர் புகை
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் இருந்து திடீர் புகை வெளியானது.
இந்நிலையில் உடனடியாக விமானத்தில் உள்ள பயணிகளை இறக்கிவிட்டு அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள். இதில் யாருக்கும் ஆபத்தில்லை.
- 17:40 (IST) 14 Sep 2022பஞ்சாப்பில் பிஎம்டபிள்யூ கார்கள் உதிரி பாகங்கள் தயாரிக்க ஒப்பந்தம்
பஞ்சாப் மாநிலத்தில் பிஎம்டபிள்யூ கார்களின் உதிரி பாகங்கள் தயாரிக்க, அந்நிறுவனத்துடன் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதன் மூலம் சென்னையை தொடர்ந்து பிஎம்டபிள்யூ கார்களின் உதிரி பாகங்கள் பஞ்சாப்பிலும் தயாரிக்கப்பட வுள்ளன.
- 17:29 (IST) 14 Sep 202215ஆவது இடத்தில் விராத் கோலி
ஆசிய கோப்பையில் சதம் அடித்ததன் மூலம் விராத் கோலி கிரிக்கெட் தரவரிசையில் 15ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் முதலிடத்திலும், இந்தியாவின் சூர்ய குமார் யாதவ் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.
- 16:34 (IST) 14 Sep 2022நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார்; இ.பி.எஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகாரில், விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது என்ற இ.பி.எஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
- 16:15 (IST) 14 Sep 2022நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
நரிக்குறவர்களை, குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நரிக்குறவர்களை, குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- 15:36 (IST) 14 Sep 2022ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபேத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்கிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு. செப்டம்பர் 17-இல் லண்டன் செல்லும் குடியரசுத் தலைவர் முர்மு செப்டம்பர் 19-இல் நடைபெறும் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார்.
- 15:00 (IST) 14 Sep 2022குடியரசுத் தலைவர் லண்டன் பயணம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் 19ம் தேதி நடைபெறும் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க, 3 நாள் பயணமாக வரும் 17ம் தேதி லண்டன் செல்கிறார்
- 14:32 (IST) 14 Sep 20228 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்
கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் உட்பட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர். இதன்மூலம், 40 தொகுதிகளை கொண்ட கோவாவில், 11ஆக இருந்த காங்கிரஸ் பலம் 3ஆக குறைந்தது.
- 13:40 (IST) 14 Sep 2022பள்ளியில் ஆய்வு
ராயப்பேட்டை தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மதமாற்றம், விதிமீறல்கள் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
- 13:17 (IST) 14 Sep 2022மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 13:02 (IST) 14 Sep 2022அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஹிந்து தரப்பினர் கேவியட் மனு தாக்கல்
ஞானவாபி மசூதி விவாகாரத்தில் உரிமையியல் மனுக்களை விசாரணைக்கு ஏற்ற விவகாரம் . அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஹிந்து தரப்பினர் கேவியட் மனு தாக்கல்
- 12:22 (IST) 14 Sep 2022நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் ஆஜர்
பண மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் ஆஜர்
- 12:21 (IST) 14 Sep 2022மின் கட்டண உயர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்
மின் கட்டண உயர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல். மின்கட்டண உயர்வு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கேவியட் மனு. மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு கடந்த 1ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்,
- 11:57 (IST) 14 Sep 2022அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்கள் 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
- 11:28 (IST) 14 Sep 2022அதிமுக அலுவலக வழக்கு; அலுவலக மேலாளர் விசாரணைக்காக ஆஜர்
அதிமுக அலுவலக வழக்கு தொடர்பாக அலுவலக மேலாளர் மகாலிங்கம் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் . சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மகாலிங்கம் ஆஜரானார்.
- 11:27 (IST) 14 Sep 2022ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் நீரால் பொதுமக்கள் பாதிப்பு
ஓமலூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் நீரால் பொதுமக்கள் பாதிப்பு . 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் பாதிப்பு . ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் ஊற்றெடுப்பதால் இடுப்பளவிற்கு தேங்கி நிற்கும் நீர். ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் மாணவ, மாணவிகள்
- 11:26 (IST) 14 Sep 2022எலி மருந்து கொடுத்து கொலை
காரைக்காலில் படிப்பில் போட்டி காரணமாக பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த விவகாரம் . எலிமருந்து கலந்து கொடுத்ததாக கொலையாளி சகாயராணி விக்டோரியா வாக்குமூலம்.
- 11:12 (IST) 14 Sep 2022கோவா காங். எம் எல் ஏக்கள் 8 பேர் பாஜவில் இன்று இணைகின்றனர்
கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவில் இணைய இருப்பதாக அந்தக் கட்சியின் மாநிலத்தலைவர் சதானந்த் ஷெட்தனவாடே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து மைக்கேல் லோபோ, திகம்பர் காமத் ஆகியோரும் பாஜகவுக்கு தாவுவது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 11:06 (IST) 14 Sep 2022பள்ளி மாணவர்களுக்கு 'சிற்பி' திட்டம் தொடக்கம்
பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு 'சிற்பி' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காண்பது, அவர்களுக்கு வழிகாட்டுவதே திட்டத்தின் நோக்கம்
சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு திட்டம் செயல்படும்
8-ம் வகுப்பு முதல், மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தனி சீருடை வழங்க ஏற்பாடு
முதலமைச்சர் முன்னிலையில் சிற்பி திட்டத்திற்கான உறுதி மொழி ஏற்ற மாணவர்கள்
- 11:05 (IST) 14 Sep 2022எலிமருந்து கலந்து கொடுத்ததாக சகாயராணி வாக்குமூலம்
காரைக்காலில் படிப்பில் போட்டி காரணமாக பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த விவகாரம்
எலிமருந்து கலந்து கொடுத்ததாக கொலையாளி சகாயராணி விக்டோரியா வாக்குமூலம்
- 11:03 (IST) 14 Sep 2022ஜம்மு-காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி என தகவல்
ஜம்மு-காஷ்மீர்; பூஞ்ச் நகர் சாவ்ஜியன் பகுதியில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி என தகவல்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்
- 10:58 (IST) 14 Sep 2022ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் - அமைச்சர் ரகுபதி
- 10:01 (IST) 14 Sep 20225,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் மேலும் 5,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனாவில் இருந்து மேலும் 5,675 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் 45,749 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 09:57 (IST) 14 Sep 2022இலங்கை தமிழர்கள் குடியிருப்பை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட மறுவாழ்வு முகாமை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தோட்டனூத்தில் ரூ. 17.17 கோடி மதிப்பீட்டில், 321 தனித்தனி வீடுகளுடன் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம். நூலகம், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்
- 08:45 (IST) 14 Sep 2022தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - விடுமுறை
பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்றிரவு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் 2வது நாளாக பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மோப்பநாய் உதவியுடன் நிபுணர்கள் பள்ளியில் மீண்டும் சோதனை
- 08:44 (IST) 14 Sep 2022பிரதமர் உஸ்பெகிஸ்தான் செல்கிறார்
ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் செல்கிறார்
ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் செல்கிறார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.