/tamil-ie/media/media_files/uploads/2023/05/New-Project-2023-05-19T183011.892.jpg)
Elephant
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 373வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
அசாமின் முதல் வந்தே பாரத் ரயில்
அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
ஐ.பி.எல் இறுதிப் போட்டி இன்று
சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையே ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. அகமதாபாத்தில் நேற்று கனமழை காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ரிசர்வ் நாள் அடிப்படையில் போட்டியை இன்று நடத்த ஐ.பி.எல் நிர்வாகம் ஏற்பாடு. இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:55 (IST) 29 May 2023ஒன்றிணையும் கெலாட் - சச்சின் பைலட்"
அசோக் கெலாட், சச்சின் பைலட் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளனர். இருவரும் ஒருமனதாக இந்த முன்மொழிவை ஒப்புக்கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியுடன் நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பாஜகவுக்கு எதிரான கூட்டுப் போராட்டமாக இது இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்
- 22:18 (IST) 29 May 2023சனீஸ்வர பகவான் கோவிலில் தேரோட்டம்
காரைக்கால் : திருநள்ளாறு, சனீஸ்வர பகவான் கோவிலில் நாளை தேரோட்டம் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை திருநள்ளாறு, நகரப் பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை - புதுச்சேரி அரசு
- 21:44 (IST) 29 May 202317.96 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்பு
கோவை: பட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்புள்ள 17.96 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர் 11 நபர்கள் இந்நிலத்தை ஆக்கிரமித்திருந்த நிலையில், உரிய ஆவணங்கள் அடிப்படையில் நிலத்தை மீட்டு அறிவிப்பு பலகையையும் அதிகாரிகள் வைத்தனர்
- 21:10 (IST) 29 May 2023புதிதாக 5 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 21:10 (IST) 29 May 2023புதிதாக 5 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 20:00 (IST) 29 May 2023பிளஸ் 2 மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு
பிளஸ் 2 மறுக்கூட்டலுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு விண்ணப்பித்த பாடங்களுக்கு விடைத்தாள் நகல்களை பெறலாம். மறுக்கூட்டலுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ205 மற்றும் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ305 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
- 19:55 (IST) 29 May 2023வேலூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி
ஒவ்வொரு மலைக்கிராமத்திலும் கிராம செவிலியரை வைத்துள்ளோம்; ஏதோ பதற்றத்தில் குழந்தையை கீழே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்” மலைக்கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த சிறுமி உயிரிழந்த விவகாரம்; நேரில் ஆய்வு செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி!
- 19:08 (IST) 29 May 2023மொயீன் அலி நெகிழ்ச்சி பதிவு!
உலகில் எங்கும் இந்த மாதிரியான ரசிகர்களின் ஆதரவை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்.. ஐபிஎல் தொடரின் சிறந்த அணியில் விளையாடுவது பெருமையாக இருக்கிறது" அகமதாபாத் மைதானத்தில் வரவேற்ற சென்னை ரசிகர்களின் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, மொயீன் அலி நெகிழ்ச்சி பதிவு!
- 18:46 (IST) 29 May 2023அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு
முதலமைச்சர் ஜப்பானில் இருந்து அளித்த அறிவுறுத்தலின் படி உடனடியாக பேச்சுவார்த்தையை துவங்குகிறோம். அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" தொழிற்சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வர ஒத்துக்கொண்டுள்ளனர் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
- 18:44 (IST) 29 May 2023போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவு
சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவு பணிமனைகளில் இருந்து மீண்டும் வழித்தடங்களில் இயங்கி வரும் அரசுப்பேருந்துகள்
- 18:44 (IST) 29 May 2023காவல்துறை வேண்டுகோள்
மாநகரில் பேருந்துகள் தற்காலிகமாக இயக்கப்படாததால் ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் விதிகளுக்குட்பட்டு கட்டணம் வசூலிக்க வேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். பயணிகள் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் போராட்டம் செய்வது நியாயமா? என பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை மாநகர பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் திடீர் போராட்டம் காரணமாக கட்டணம் உயர்வு ஆட்டோக்களில் வழக்கத்தைவிட ரூ.75 வரை கூடுதலாக கட்டணம் வசூல்செயயப்பட்டது. அதேபோல் சென்ட்ரல் - பல்லாவரம் டாக்ஸி கட்டணம் ரூ.550 வரை உயர்த்தப்பட்டது
- 18:43 (IST) 29 May 2023காவல்துறை வேண்டுகோள்
மாநகரில் பேருந்துகள் தற்காலிகமாக இயக்கப்படாததால் ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் விதிகளுக்குட்பட்டு கட்டணம் வசூலிக்க வேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். பயணிகள் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் போராட்டம் செய்வது நியாயமா? என பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை மாநகர பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் திடீர் போராட்டம் காரணமாக கட்டணம் உயர்வு ஆட்டோக்களில் வழக்கத்தைவிட ரூ.75 வரை கூடுதலாக கட்டணம் வசூல்செயயப்பட்டது. அதேபோல் சென்ட்ரல் - பல்லாவரம் டாக்ஸி கட்டணம் ரூ.550 வரை உயர்த்தப்பட்டது
- 18:07 (IST) 29 May 2023போக்குவரத்துறை ஊழியர்கள் திடீர் போராட்டம்
போக்குவரத்து துறை, தனியார்மயமாதலை கண்டித்து போக்குவரத்துறை ஊழியர்கள் திடீர் போராட்டம். அரசுப்பேருந்துகளை பணிமனைக்கு திருப்பி எடுத்துச் செல்வதால் பரபரப்பு. சென்னையில் உள்ள 32 பணிமனைகளிலும் பேருந்துகள் ஒவ்வொன்றாக நிறுத்தம். போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுனர்களை நியமிக்கும் முடிவிற்கு எதிர்ப்பு. தொ.மு.ச உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அவதி
- 17:18 (IST) 29 May 2023மைசூர் அருகே சாலை விபத்தில் சிக்கி 10 பேர் மரணம்
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே சாலை விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். தி.நரசிபுரா பகுதியில் இன்னோவா காரும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
- 16:54 (IST) 29 May 2023இர்பானின் கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரம்; காரை பரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
பிரபல யூடியூபர் இர்பானின் சொகுசு கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில் காரை பறிமுதல் செய்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் காரை, பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு அனுப்பினர். ஆனால், போலீசார் உரிய ஆவணங்களை வழங்காததால், பரிசோதனை செய்யாமல் அதிகாரிகள் காரை திருப்பி அனுப்பினர்
- 16:39 (IST) 29 May 2023ஜப்பான் நிறுவனங்களுடன் ரூ.819 கோடிக்கு ஒப்பந்தம்
ஜப்பானை சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.819 கோடிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
- 16:23 (IST) 29 May 2023திருச்சியில் குழந்தைகளுடன் தாய் மரணம்; தற்கொலையா? கொலையா? போலீசார் விசாரணை
திருச்சி, எடமலைப்பட்டிபுதூரில் 11 மாத குழந்தை மற்றும் 3 வயது மகனுடன் தூக்கிட்ட நிலையில் கிடந்த தாய் சம்பவத்தில் தற்கொலையா? அல்லது கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 16:04 (IST) 29 May 2023சேலத்தில் மேம்பாலத்தின் மீது விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சேலம் அடுத்த மாமாங்கம் மேம்பாலத்தின் மீது விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற குடிநீர் லாரி மூலம் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
- 15:49 (IST) 29 May 2023டெல்லியில் 16 வயது சிறுமியை கொலை செய்த விவகாரம்; ஷாஹில் என்பவர் கைது செய்து
டெல்லியில் 16 வயது சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த விவகாரத்தில் குற்றவாளியான ஷாஹில் என்பவரை 6 தனிப்படை அமைத்து டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது
- 15:34 (IST) 29 May 2023தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம்; சுகாதாரத்துறை முக்கிய நடவடிக்கை
தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவக்கல்லூரிகளில் ஆதார் உடன் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவை உறுதி செய்யவும், காலி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவும் தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தை அணுகி 500 மருத்துவ இடங்களை தக்க வைக்கவும் தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது
- 15:15 (IST) 29 May 2023தமிழ்நாடு மருத்துவ பல்கலை. துணை வேந்தராக நாராயணசாமி நியமனம்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாராயணசாமி தற்போது கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீனாக பணியாற்றி வருகிறார்
- 15:00 (IST) 29 May 2023ராகுல்காந்தி பேட்டி
கர்நாடகாவில் 136 இடங்களில் வெற்றி பெற்றது போலவே மத்தியப்பிரதேசத்திலும் 150 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்- மத்தியப்பிரதேச தேர்தல் குறித்து காங். தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் ஆலோசனை நடத்திய பின் ராகுல்காந்தி பேட்டி
- 14:59 (IST) 29 May 2023மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு
சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஜப்பான் நிறுவனங்கள் வர வேண்டும்; நிர்வாக ஆற்றல், மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு உள்ளது; முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளோம்; ஜப்பானில் உள்ள மாகாணங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது; இந்தியாவில் தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக உள்ளது- ஜப்பானில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
- 14:57 (IST) 29 May 2023ராகுல்காந்தி பேட்டி
கர்நாடகாவில் 136 இடங்களில் வெற்றி பெற்றது போலவே மத்தியப்பிரதேசத்திலும் 150 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்- மத்தியப்பிரதேச தேர்தல் குறித்து காங். தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் ஆலோசனை நடத்திய பின் ராகுல்காந்தி பேட்டி
- 14:55 (IST) 29 May 2023ஐபிஎல் டிக்கெட்
இன்று இரவு அகமதாபாத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு, மைதானத்தில் வழங்கப்பட்ட டிக்கெட் அல்லது ஆன்லைன் டிக்கெட்டின் நகல் உடன் வந்தால் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- 14:06 (IST) 29 May 2023சாலை அமைக்கும் பணி
வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்த மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
- 14:05 (IST) 29 May 2023வருமானவரித்துறை சோதனை
கரூரில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலகம் பூட்டி இருந்ததால், போலீஸ் உதவியுடன் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர்.
- 13:20 (IST) 29 May 2023வந்தே பாரத் ரயில் சேவை
அசாம்: கவுகாத்தி - நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இது, வடகிழக்கு மாநிலங்களின் முதல் வந்தே பாரத் சேவையாகும்
- 13:19 (IST) 29 May 2023சந்திராயன் - 3 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் - 3 ராக்கெட் ஜூலை 3ம் தேதி விண்ணில் ஏவப்படும்; இது ஆகஸ்ட் 2வது வாரத்தில் நிலவை சென்றடையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- 13:19 (IST) 29 May 2023கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:06 (IST) 29 May 2023போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு
திருவண்ணாமலை புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு
- 13:06 (IST) 29 May 20239 ஆண்டு கால ஆட்சியில் பாஜக சாதனை
9 ஆண்டு கால ஆட்சியில் பாஜக சாதனை“- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை .நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் கிடைக்கிறது. 2014-க்கு பிறகு ஏழை மக்களுக்கு முன்றரை கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
- 13:02 (IST) 29 May 2023திறமைசாலிகள் அதிகம் இருக்கும் தமிழ்நாட்டை ஜப்பானிய நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் பேச்சு
டோக்கியோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு . தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு மேற்கொள்ள ஜப்பானிய நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு. திறமைசாலிகள் அதிகம் இருக்கும் தமிழ்நாட்டை ஜப்பானிய நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் பேச்சு
- 12:21 (IST) 29 May 2023பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரம் : புல்லட்டில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
வேலூர் மாவட்டம் அல்லேரி மலை அடுத்த அத்தி மரத்துக்கொள்ளை பகுதியில் பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரம் ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரின் கார், மலையில் கரடு முரடான பாதையில் சிக்கியதால், புல்லட்டில் சென்று ஆய்வு செய்ததார்
- 12:19 (IST) 29 May 2023பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரம் : புல்லட்டில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
வேலூர் மாவட்டம் அல்லேரி மலை அடுத்த அத்தி மரத்துக்கொள்ளை பகுதியில் பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரம் ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரின் கார், மலையில் கரடு முரடான பாதையில் சிக்கியதால், புல்லட்டில் சென்று ஆய்வு செய்ததார்
- 12:18 (IST) 29 May 2023மாட்டு வண்டிகள் நிலைத்தடுமாறி விபத்து
மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டி பந்தயம் மாடு நிலைத்தடுமாறியதில், மாட்டு வண்டிகள் அடுத்தடுத்து மோதி விபத்து பந்தயத்தின் போது பசு மாடு குறுக்கே வந்ததால், மாட்டு வண்டிகள் நிலைத்தடுமாறி விபத்து
- 12:18 (IST) 29 May 2023மணிப்பூர் செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
மணிப்பூர் செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. கலவர பாதிப்பு தொடர்பாக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
- 11:39 (IST) 29 May 2023கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து முழக்கம்
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து முழக்கம் .விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் .
- 11:33 (IST) 29 May 2023செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்
GSLV F-12 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட NVS-01 வழிகாட்டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்
- 10:55 (IST) 29 May 2023விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி எஃப்-12 ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி எஃப்-12 ராக்கெட்
- 10:37 (IST) 29 May 20234வது நாளாக தொடரும் ஐ.டி ரெய்டு
கரூர் காந்திகிராமத்தில், பிரேம் குமார் என்பவர் வீட்டில் சோதனை
கோவையில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் வருமான வரி சோதனை
ஈரோடு திண்டல் சக்திநகரில் டாஸ்மாக் சரக்கு வாகன ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் வீட்டில் சோதனை
- 10:36 (IST) 29 May 2023பெட்ரோல் பங் எண்ணெய் தொட்டியில் விழுந்து 3 பேர் பலி
ஆந்திர மாநிலம் அண்ணமையா மாவட்டம் ராயசோட்டி நகரில் பெட்ரோல் பங் எண்ணெய் தொட்டியில் விழுந்து 3 பேர் பலி
ஒருவர் கால் தவறி எண்ணெய் தொட்டிக்குள் விழுந்ததால் அவரை காப்பாற்ற சென்ற மேலும் இருவரும் தொட்டியில் விழுந்து பலி
- 09:18 (IST) 29 May 2023பேருந்து கவிழ்ந்து விபத்து: 30க்கும் மேற்பட்டவர்கள் காயம்
விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி பகுதியில் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து
காயமடைந்த 30க்கும் மேற்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
எதிரே வந்த பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, தடுப்பை உடைத்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது
- 08:05 (IST) 29 May 2023இன்று விண்ணில் பாய்கிறது GSLV-F12 ராக்கெட்
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, இன்று விண்ணில் பாய்கிறது GSLV-F12 ராக்கெட்
2,232 கிலோ எடை கொண்ட வழிகாட்டும் வகை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது
- 08:04 (IST) 29 May 20239 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்
- 08:04 (IST) 29 May 2023அரிக்கொம்பன் யானை: 23 பேர் கொண்ட சிறப்பு குழு
அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு
தற்பொழுது சுருளிப்பட்டி யானைகஜம் வனபகுதியில் இருந்து யானை நகர்ந்து சென்றுள்ளதாக தகவல்
- 08:03 (IST) 29 May 2023அசாமின் முதல் வந்தே பாரத் ரயில்
அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை இன்று காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
- 08:02 (IST) 29 May 2023தமிழகம் முழுவதும் அ.தி.மு.க இன்று ஆர்ப்பாட்டம்
மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
விஷ சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.