scorecardresearch
Live

Tamil news today: கனமழை எதிரொலி.. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

Tamil Nadu News, Tamil News, Petrol price Today – 12 December 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Tamil news
Tamil news updates

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 100 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. உபரிநீர் அதிகரிக்கப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 24 அடியுள்ள செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22.25 அடியாக உயர்ந்துள்ள நிலையில் நீர்வரத்து 2,046 கன அடியாக உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Read More
Read Less
Live Updates
21:51 (IST) 12 Dec 2022
சென்னையில் 16 சதவீதம் கூடுதல் மழைப் பொழிவு

சென்னையில் 16 சதவீதம் கூடுதல் மழைப் பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

21:48 (IST) 12 Dec 2022
புதன்கிழமை உதயநிதி அமைச்சராக பதவி ஏற்பு: தமிழக ஆளுனர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை அமைச்சராக பதவியேற்க உள்ளதை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

21:36 (IST) 12 Dec 2022
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேதி வெளியீடு

மாண்டஸ் புயல் காரணமாக தேர்வுகள் தடைப்பட்ட நிலையில் மாற்று தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 24 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

20:44 (IST) 12 Dec 2022
உதயநிதி ஸ்டாலின் டிச.14ஆம் தேதி அமைச்சராக பதவியேற்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் டிச.14ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.

20:18 (IST) 12 Dec 2022
சட்ட விரோத லைட்டருக்கு தடை விதிக்க கனிமொழி கோரிக்கை

சட்டவிரோத லைட்டருக்கு தடை விதிக்கக் கோரி கனிமொழி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.

20:01 (IST) 12 Dec 2022
புதுச்சேரிக்கும் திராவிட மாடல் தேவை.. மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

19:25 (IST) 12 Dec 2022
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு.. 2 பேர் கைது

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

19:12 (IST) 12 Dec 2022
செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருவள்ளுவர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

18:59 (IST) 12 Dec 2022
லத்தி டிரெய்லர் வெளியீடு

விஷால் நடித்துள்ள லத்தி படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

18:35 (IST) 12 Dec 2022
மத்தியப் பிரதேசத்தில் ராகிங் 11 மாணவர்கள் கைது

மத்தியப் பிரதேசத்தில் ராகிங்கில் ஈடுபட்ட 11 மாணவர்களை போலீசார் கைது செய்தார்.

இவர்களை ஷாலினி என்ற பெண் போலீஸ் கல்லூரி மாணவி போல் மாறுவேடத்தில் சென்று கைது செய்துள்ளார்.

17:59 (IST) 12 Dec 2022
நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி வழக்கு; 2 பேர் கைது

நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த இரண்டு முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

17:57 (IST) 12 Dec 2022
பொங்கல் பரிசு தொகுப்பு: பொருட்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யக் கோரி வழக்கு

பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட கோரிய வழக்கில், கூட்டுறவுத்துறை செயலர், வேளாண்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

16:23 (IST) 12 Dec 2022
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் – தொடரை வென்றது இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட் – தொடரை வென்றது இங்கிலாந்து

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது சாதனை படைத்துள்ளது.

16:03 (IST) 12 Dec 2022
குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒ.பி.எஸ் பங்கேற்பு

குஜராத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க –வில் பூபேந்திர படேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளனார். இன்று அவர் பதவியேற்க உள்ள நிலையில், இந்த விழாவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.

15:43 (IST) 12 Dec 2022
இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை

இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து ஊர் காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு இலங்கைக்குள் வர தடை விதித்துள்ளது

15:42 (IST) 12 Dec 2022
பாலாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை தடுப்பணைக்கு நீர் வரத்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் பாலாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

15:17 (IST) 12 Dec 2022
தி.மு.க.-வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: வரும் 21ஆம் தேதிக்கு மாற்றம் – அ.தி.மு.க தலைமை அறிவிப்பு!

தி.மு.க.வை கண்டித்து அதிமுக சார்பில் நாளை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள் வரும் 21ஆம் தேதிக்கு மாற்றம் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

14:50 (IST) 12 Dec 2022
நடிகர் ரஜினிகாந்துக்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து!

நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. அவர் தனது ட்விட்டர் பதிவில்,

“பாசமுள்ள மனிதனப்பா – நீ

மீசவச்ச குழந்தையப்பா

நன்றியுள்ள ஆளப்பா

நல்லதம்பி நீயப்பா

தாலாட்டி வளர்த்தது

தமிழ்நாட்டு மண்ணப்பா

தங்கமனம் வாழ்கவென்று

தமிழ்சொல்வேன் நானப்பா” என்று பதிவிட்டுள்ளார்.

14:25 (IST) 12 Dec 2022
தீப்பெட்டி ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

“தீப்பெட்டி மூலப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்” என்று மக்களவையில் மத்திய அரசுக்கு திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

14:24 (IST) 12 Dec 2022
திருவள்ளூர்: நாளை பள்ளிகளுக்கும் விடுமுறை!

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும், இன்று 3 மணி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

14:23 (IST) 12 Dec 2022
உயிரிழந்த மூதாட்டியிடம் திருட்டு!

காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உயிரிழந்த மூதாட்டி உடலில் இருந்த நகைகள் திருட்டு போயுள்ளது. உடலுக்கு குளிர்சாதன பெட்டி வைக்க வந்த ரஞ்சித், ராஜபாண்டியன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 4 சவரன் நகை மீட்க்கப்பட்டுள்ளது.

14:21 (IST) 12 Dec 2022
குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பு!

குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

13:39 (IST) 12 Dec 2022
முல்லைப் பெரியாறு அணை: கேரள அரசு அறிக்கை தாக்கல்!

முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கேரள மாநில நீர்ப்பாசனத்துறை மற்றும் திருச்சூர் வன ஆராய்ச்சி மைய தொழில்நுட்ப குழுவினர் நடத்திய ஆய்வு அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய அணை கட்டப்பட வேண்டிய இடத்தை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், புதிய அணை கட்ட ரூ.1,100 முதல் ரூ.1,500 கோடி வரை செலவாகும் என்றும், கட்டி முடிக்க 10 ஆண்டுகள் ஆகும் எனவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13:38 (IST) 12 Dec 2022
அரசு வீட்டுமனைகள் ஒதுக்கீடு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அரசு வீட்டுமனைகள் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான புகார் விவகாரத்தில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையளி, ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

13:29 (IST) 12 Dec 2022
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; வானிலை ஆய்வு மையம் தகவல்!

அரபிக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரளாவின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது; இது வடக்கு கேரளா, தெற்கு கர்நாடக கடற்கரை பகுதிகள் வழியாக அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு வாய்ப்புள்ளது.

13:16 (IST) 12 Dec 2022
சென்னையில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை!

சென்னையில் கனமழை தொடர்வதால் பெருநகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அரை நாள் மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

13:15 (IST) 12 Dec 2022
ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, வழக்கை திரும்ப பெற்றன தனியார் பால் நிறுவனங்கள்.

13:02 (IST) 12 Dec 2022
ரஜினிக்கு, மம்முட்டி வாழ்த்து

ரஜினி பிறந்தநாளுக்கு மலையாள நடிகர் மம்முட்டி வாழ்த்து

13:00 (IST) 12 Dec 2022
கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். வடகடலோரம், உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12:35 (IST) 12 Dec 2022
பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

12:35 (IST) 12 Dec 2022
விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அம்பேத்கரை இந்து அமைப்புகளை சேர்ந்தோர் அவமதித்ததாக கூறி தமிழகம் முழுவதும் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.

12:20 (IST) 12 Dec 2022
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஊர்வலம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இதில் மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

12:01 (IST) 12 Dec 2022
பெற்றோர்கள் முற்றுகை போராட்டம்

சிட்லபாக்கத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை மழையில் நிற்க வைத்த தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

11:30 (IST) 12 Dec 2022
ரஜினிக்கு, கமல் பிறந்தநாள் வாழ்த்து

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு, கமல்ஹாசன் வாழ்த்து

11:29 (IST) 12 Dec 2022
ரஜினிக்கு, அண்ணாமலை வாழ்த்து

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

11:26 (IST) 12 Dec 2022
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 17 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

11:25 (IST) 12 Dec 2022
ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வாழ்த்தியுள்ளார்.

11:24 (IST) 12 Dec 2022
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அன்பு சகோதரர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று இபிஎஸ் வாழ்த்தி உள்ளார்.

11:01 (IST) 12 Dec 2022
அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து – கமல்

அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து .

உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து

10:59 (IST) 12 Dec 2022
புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் – ஸ்டாலின்

புதுச்சேரி முதல்வர் நல்லவர் தான், ஆனால் வல்லவராகவும் இருக்க வேண்டும். நமக்குள் போட்டி இருக்க வேண்டும். பொறாமை இருக்க கூடாது.

திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தற்போதைய தேவை. புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி மக்களுக்காக நடைபெறுகிறதா?

எந்தவிதத்திலும், எந்த சூழலிலும் மக்களோடு துணை நின்று பணியாற்றுவேன்.

புதுச்சேரி திமுக அவைத்தலைவர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

10:53 (IST) 12 Dec 2022
நீடூழி வாழ்க தலைவா – ரஜினிகாந்த்திற்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து

“செப்பு மிங்கிளாகிவரும் தங்கம் அல்ல அவர்.. எப்பவுமே சிங்கிளாகவரும் சிங்கம்”

“இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை – நீடூழி வாழ்க தலைவா!”

நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து

10:41 (IST) 12 Dec 2022
உயிர் மூச்சு இருக்கும் வரை போயஸ் கார்டன் வருவேன் – ரஜினி ரசிகர்

நடிகர் ரஜினிகாந்த் 73-வது பிறந்தநாள் இல்லத்தில் ரஜினி இல்லை என்பது தெரிந்தவுடன் ஏக்கத்தில் கண்ணீர் மல்க ரசிகர்கள் காத்திருப்பு

ரஜினி தரிசனத்திற்காக வேலூரில் இருந்து ஆட்டோவிலேயே சென்னை வந்த ரசிகர்

உயிர் மூச்சு இருக்கும் வரை போயஸ் கார்டன் வருவேன்- ஆட்டோ ஓட்டுநர் இஸ்ரேல்

10:40 (IST) 12 Dec 2022
ரஜினி ஊரில் இல்லை; ரசிகர்கள் காத்திருக்க வேண்டாம் – லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ஊரில் இல்லை; ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் என லதா ரஜினிகாந்த் விளக்கம்

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்

10:25 (IST) 12 Dec 2022
சென்னையில் 7 பழங்கால சாமி சிலைகள் மீட்பு

சென்னை ஆர். ஏ புரத்தில் 7 பழங்கால சாமி சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டனர். 7 சிலைகளில் 3 சிலைகள் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து 2011இல் திருடப்பட்டவை. மற்ற 4 சிலைகள் மறைந்த தீனதயாளனால் சர்வதேச சந்தையில் பலகோடி ரூபாய்கு விற்கப்பட்டவை.

10:08 (IST) 12 Dec 2022
செம்பரம்பாக்கம் ஏரி: 1,000 கனஅடி உபரிநீர் திறப்பு

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் 1,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

09:15 (IST) 12 Dec 2022
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று கனமழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

09:13 (IST) 12 Dec 2022
பூபேந்திர பட்டேல் இன்று பதவியேற்பு

குஜராத் மாநில முதலமைச்சராக 2-வது முறையாக பூபேந்திர பட்டேல் இன்று பதவியேற்கிறார். ஆளுநர் ஆச்சார்ய தேவ் விராட் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். காந்தி நகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

08:31 (IST) 12 Dec 2022
சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை

தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் கனமழை

சென்னை புறநகர் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதிகளில் கனமழை

08:30 (IST) 12 Dec 2022
இனிய நண்பர் ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் – ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

“இனிய நண்பர், தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” – முதல்வர்

08:29 (IST) 12 Dec 2022
7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்

Web Title: Tamil news today live petrol diesel price gujarat cm chembarambakkam lake