Tamil Nadu news today updates : தங்கம் விலை ஒரு கிராம் 24 கேரட் ஆபரன தங்கம் ரூ 5282 -க்கு, நிர்ணயம் செய்ய்பட்டுள்ளது. இதனால் ஒரு சவரன் தற்போது ரூ 42256-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ 67-க்கு விற்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை
தமிழகத்தில் 22-வது நாளாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலையில், பெட்ரோல் விலை ரூ 102.63-க்கும், டீசல் ரூ94.24-க்கும் விற்கப்படுகிறது.
போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு
போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளரின் அனுமதி பெறுவது அவசியம் என அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. தொழிலாளர்கள் விடுப்பு தொடர்பான நடைமுறைகள் சரியாக கடைப்பிடிக்காததால் போக்குவரத்துத்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா 2-வது டி20
இந்தியா தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது ஏற்கனவே டெல்லியில் கடந்த 9-ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பாலியல் புகாரில் கல்லூரி சேர்மன் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி சேர்மன் மீண்டு 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தனியார் கல்லூரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வானிலை அறிவிப்பு
13, 14, 15- ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்: திமுக ஆட்சியில் லாக்கப் மரணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாக்கப் மரணங்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய ரெட்ஹில்ஸ் ராஜசேகர்(33) என்பவர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீர் மரணம் அடைந்தார். உயிரிழந்த ராஜசேகரின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரின் போலீஸ் விசாரணைக்கு சென்ற ரெட்ஹில்ஸ் ராஜசேகர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரெட்ஹில்ஸ் ராஜசேகர் மீது 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், அவர் சோழவரம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய ரெட்ஹில்ஸ் ராஜசேகர்(33) என்பவர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீர் மரணம் அடைந்தார். உயிரிழந்த ராஜசேகரின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்: “ பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் 20 நாட்களுக்குள் புத்தகம், புத்தகப்பை, சீருடைகள் வழங்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பின் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றபடும். பள்ளிக்கட்டணம் உடனடியாக கட்ட சொல்லி மாணவர்களை நிர்பந்திக்ககூடாது.” என்று கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: “மாணவர்கள் நாளை (ஜூன் 13) பள்ளிக்குச் செல்ல வேண்டும்… லீவ் போடக் கூடாது; பள்ளிகளில் யோகா நடத்துவது பற்றி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: “அனைத்து பள்ளி, கல்லூரிகளில் யோகா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி: “கிராமத்தில் பிறந்து ஏழை மக்களுடன் வாழ்ந்தவன் என்பதால் அவர்களின் கஷ்டம் எனக்கு புரியும், திமுக ஆட்சியில் ஏழைகளுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன; ஒராண்டு கால திமுக ஆட்சியில் நன்மை ஏதும் நடக்கவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், கல்லூரி மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துக் கொண்ட புகாரில், கல்லூரி சேர்மன் பா.ஜ.க.,வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கேலோ இந்தியா தொடரில், தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் ஜார்கண்ட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வென்றுள்ளது
மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் புதிய செயலாளராக கு.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறைச் செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு, வணிக வரித்துறை செயலாளராக இருந்த பணீந்தர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் காலியாக உள்ள 400 வார்டன் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். மேலும், 1000 சமையலர் பணியிடங்களும் நிரப்பப்படும். ஒரு மாதத்திற்குள் விடுதிகளில் உள்ள குறைகள் சரி செய்யப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்
ஆளுநராக இருந்து கொண்டு சனாதன தர்மம் குறித்து பேசியது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க சதி செய்கிறது, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், தற்போது டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது கண்டனத்திற்கு உரியது, ஆளுநர் தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் தற்போது மின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களை விட 2,500 மெகாவாட் கூடுதல் மின் தேவை உள்ளது. நாளொன்றுக்கு 8,800 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மின் தேவை அதிகரித்துள்ளதால் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட சென்னை அனல் மின் நிலையத்தின் 3வது நிலையில் டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்
சென்னை, ராயப்பேட்டையில் வரும் 14ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, இன்று கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கப்படுவாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
விக்ரம் படத்தை பார்த்து நெகிழ்ந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கமல்ஹாசன் மற்றும் படக்குழுவினரை தனது இல்லத்திற்கு அழைத்து சிரஞ்சீவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நாமக்கல் அருகே வேன் மோதி உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ₨25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும்உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பொன்னேரி ரயில் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட அரசு கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்
சிதம்பரம் நடராஜர் கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம். கோயிலில் விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்த நிலையில் விசாரணை செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவிடம் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மக்கள் நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ கருத்துகளை தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 8,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்று பாதிப்புக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 4,435 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனாவுக்கு 44,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
குடியரசு தேர்தல் குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்த கடந்த காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன் கார்கே பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்துவது குறித்து இவர் ஆலோசிப்பார் என்றும், கொரோனா தொற்று காரணமாக சோனியாக காந்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 195.07 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், ஒரே நாளில், 13,04,427 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அதிமுக பின்தங்கி இருப்பது போன்ற மாய தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ₨10 லட்சம் மதிப்பிலான குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தப்படவிருந்த நிலையில் வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் ஆகிய 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மாநகராட்சிகளுக்கு குழு அமைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து குறித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் புகுந்த வேன் மோதியதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் தேவராஜன் பலியான நிலையில், 4 பேர் படுகாயம் அடைந்துள்னர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி நடைபெற உள்ளது.