பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
இமாச்சல் முதல்வர் பதவியேற்பு
இமாச்சலப் பிரதேச புதிய முதல்வராக காங்கிரஸின் சுக்விந்தர் சிங் சுகு இன்று பதவியேற்கிறார். மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார். துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்தாரி பதவியேற்கிறார்.
கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. கால் இறுதி போட்டியில் நேற்று மொராக்கோ- போர்சுக்கல் அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கணக்கில் மொராக்கோ அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து போர்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீருடன் வெளியேறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நாளை டிச. 12 முதல் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல நாளை டிசம்பர் 12ம் தேதி அனுமதி சீட்டு வழங்கப்படும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வரும் 16ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு இருந்ததைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்துக்குள் பாம்பு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணைக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
சிவகாசியில் முன்னாள் அதிமுக எம்பி ராதாகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 65.
இமாச்சலப் பிரதேச மாநில முதல்வராக பதவியேற்றுள்ள சுக்விந்தர் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் இ.பி.எஸ் பங்கேற்கவில்லை. விழாவில் பங்கேற்க முடியாத சூழலில் உள்ளதாகவும், முதல்வராக பதவியேற்பதற்கு வாழ்த்து கூறி பூபேந்திர படலுக்கு இ.பி.எஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அந்த மாவட்டங்கள், தேனி,, ஈரோடு, சேலம், விருதுநகர், நாமக்கல், திருப்பூர், தஞ்சை, திண்டுக்கல், , தென்காசி, , மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் ஆகும்.
கேரள மாநிலம் வயநாட்டில் மகனை துன்புறுத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
5 வயது மகனை அடித்து துன்புறுத்தியுள்ள நிலையில் அவரது பிறப்புறுப்பில் காயப்படுத்தியுள்ளார்.
தற்போது சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இமாச்சலப் பிரதேச முதல் அமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் பாதிப்புகள் குறித்து சென்னை காசிமேட்டில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பிகே சேகர் பாபு, ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ எபினேசர் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
சென்னை காசிமேட்டில் இன்று மீன் விற்பனை எதிர்பார்த்தப்படி நடைபெறவில்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு மீன் விற்பனை அதிகரித்து காணப்படும்.
கார்த்திகை மாதம் என்பதாலும் மழை பெய்துகொண்டிருப்பதாலும் மீன் விற்பனை மந்தமாக நடைபெறுவதாக மீன்வியாபாரிகள் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆமதாபாத் சென்றுள்ளார்.
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில், தாம்பரத்தை சேர்ந்த ராஜேந்திரன் முதல் பரிசு பெற்றார்.
இவர், 100 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் 44 நாடுகள் கலந்துகொண்டன.
பிரான்ஸ் நாட்டின் நிகழ்ந்த வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
ஒசூர் அருகே உத்தனப்பள்ளியில் 5ஆவது சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து மறியல் போராட்டம் நடத்திய 500 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொசஸ்ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் 37 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பூண்டி ஏரியில் திறக்கப்பட்ட நீர் ஒருபுறம், காட்டு வெள்ளம் மறுபுறம் என 37 பேர் நீரில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா அமைச்சர் சந்திரகாந்த் பாட்டில் மீது கறுப்பு மை வீசியவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆந்திராவில் கோபூஜையின்போது பாரதிய ஜனதா எம்.பி.யை பசு எட்டி உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்காட்டில் 10 செ.மீ மழை பொழிவு பதிவாகியுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பதிவாகியுள்ளது.
வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம் திறக்கப்பட்டது. ரூ.18 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட இந்த நினைவு இல்லத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சீர்காழியில் கடல் அருகேயுள்ள கிராமத்தில் 300 மீட்டர் தூரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
சிவாகாசியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் புயல் பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கின.
சென்னையில் புயலுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்ட கால்நடை விலங்குகள் பலியாகியுள்ளன என முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு விரைவில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். சிறப்பு ஊக்கத்தொகையான ரூ.195 உடன் சேர்த்து டன்னுக்கு ரூ.2950 வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
சிம்லாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் ஹிமாச்சல பிரதேசத்தின் 15-வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்
நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
கோவாவில் 2,870 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மோபா விமான நிலையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை அமைந்தகரை எம்.எச்.காலனி பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இருசக்கர வாகனத்திற்கு 2 நபர்கள் தீ வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது
மாண்டஸ் புயல் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள புல்லூர் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கூறியுள்ளார்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே என்று பாடிய புரட்சியாளர், யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்!' என அஞ்சா நெறி வழிதொட்ட முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியார் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ட்வீட் செய்துள்ளார்
வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தை, சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சேலம், ஏற்காடு மலைப்பாதையில் 18வது கொண்டை ஊசி வளைவு அருகே வேரோடு சாய்ந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு
நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை
நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
தம்பதிகள் தங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் வரும் 13ம் தேதி வரை ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மகாராஷ்டிரா, நாக்பூர் ரயில் நிலையத்தில் நாக்பூர் – பிலாஸ்பூர் இடையேயான 'வந்தே பாரத்' ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை 23.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து
சென்னையில் இருந்து திருச்சி சென்ற பேருந்து கருங்குழி அருகே கவிழ்ந்து விபத்து
நிலை தடுமாறி சாலை தடுப்பின் மீது மோதி கவிழ்ந்த பேருந்து
பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
திருவள்ளூர், பூண்டி ஏரியில் 10,000 கன அடி உபரி நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரித்து வருவதால் நீர் திறப்பு
கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி