Advertisment

Tamil news Highlights: சென்னை உள்பட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 12 Nov 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil news Highlights: சென்னை உள்பட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

TN Rains

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

இமாச்சல பிரதேச தேர்தல்

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. மாநிலத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

412 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் 56 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. 10% இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

வாக்காளர் சிறப்பு முகாம்

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தங்கள் செய்யலாம் என அறிவிப்பு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:37 (IST) 12 Nov 2022
    ராஜீவ் கொலை வழக்கு; நளினி உள்ளிட்ட 6 பேரும் சிறையில் இருந்து விடுவிப்பு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்



  • 20:17 (IST) 12 Nov 2022
    டெல்லியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு

    சனிக்கிழமை மாலை டெல்லி-என்சிஆர் பகுதிகளில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் இருந்தது.



  • 19:26 (IST) 12 Nov 2022
    தமிழ் உள்ளங்களுக்கு நன்றி - நளினி

    என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி; மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி என சிறையில் இருந்து இன்று விடுதலையான நளினி கூறியுள்ளார்



  • 18:54 (IST) 12 Nov 2022
    திமுக வாக்குசாவடி முகவர்களுடன் மு.க. ஸ்டாலின் உரையாடல்

    234 சட்டமன்ற தொகுதி, திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

    இதில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.



  • 18:35 (IST) 12 Nov 2022
    ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில்வெள்ளப்பெருக்கு - 150 பேர் சிக்கி தவிப்பு

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தில், கோவிலுக்கு சென்ற 150க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

    அவர்களை மீட்கும் பணியில், தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



  • 18:35 (IST) 12 Nov 2022
    ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில்வெள்ளப்பெருக்கு - 150 பேர் சிக்கி தவிப்பு

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தில், கோவிலுக்கு சென்ற 150க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

    அவர்களை மீட்கும் பணியில், தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



  • 17:54 (IST) 12 Nov 2022
    இந்தியாவில், 2023இல் உலக மகளிர் குத்துச்சண்டை

    2023ஆம் ஆண்டுக்கான மகளிர் உலக குத்துச் சண்டை போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன.



  • 17:37 (IST) 12 Nov 2022
    ராஜிவ் கொலை தண்டனை கைதிகள் விடுதலை

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து புழல் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.



  • 17:06 (IST) 12 Nov 2022
    ராஜிவ் கொலை தண்டனை கைதி நளினி விடுதலை

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து வெளியேறினார்.



  • 16:55 (IST) 12 Nov 2022
    உயரமான வாக்குச் சாவடி - 98.08% வாக்குப்பதிவு

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியான தாஷிகாங்கில் 52 வாக்காளர்களில் 51 பேர் வாக்களிப்பு தாஷிகாங்கில் 98.08% வாக்குகள் பதிவாகியுளளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • 16:54 (IST) 12 Nov 2022
    "பாஜக மீது பொய் வழக்கு : விவரங்களை அமித்ஷாவிடம் கொடுத்த அண்ணாமலை

    தமிழகத்தில் பாஜகவினர் மீது போடப்படும் பொய் வழக்கு குறித்த விவரங்களை அமித்ஷாவிடம் கொடுத்துள்ளோம் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தெரிவித்துள்ளார் என அண்ணாமலை கூறியுள்ளார்.



  • 15:50 (IST) 12 Nov 2022
    அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

    தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் கண்ணீரை துடைப்போம் கடமைகளை ஆற்றுவோம் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். குடிநீர், பால் மற்றும் உணவு பொருட்களை தேவைப்படும் மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்று கூறியுள்ளார்



  • 15:48 (IST) 12 Nov 2022
    செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக நீர் திறக்க வாயப்பு - அதிகாரிகள் தகவல்

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், இன்னும் கூடுதலாக உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 15:24 (IST) 12 Nov 2022
    இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரையும் இணைத்துவிட்டதா பா.ஜ.க?

    அதிமுகவில் ஒற்றுமையுடன் இருந்த இபிஎஸ் ஒபிஎஸ் இருவரும் தற்போது பொதுச்செயலாளர் பதவியால் வந்த மோதலில் பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதில் இரு தரப்பினரும் மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில், சட்டமன்றத்தில் ஒபிஎஸ் அருகே அமர மறுத்து சட்டமன்றத்தை புறக்கணித்தார். இபிஎஸ். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒபிஎஸ் கட்சியில் இணைய வாய்ப்பில்லை என்று இபிஎஸ் கூறியிருந்தார்.

    இந்நிலையில், நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியை ஒபிஎஸ் இபிஎஸ் இருவரும் அருகருகே நின்று வரவேற்றது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூட்டணி கட்சியாக பாஜக அதிமுகவை இணைத்தவிட்டதா என்று கேட்டு வருகின்றனர்.



  • 15:01 (IST) 12 Nov 2022
    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.



  • 14:55 (IST) 12 Nov 2022
    குஜராத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை ; காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

    குஜராத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.



  • 14:49 (IST) 12 Nov 2022
    ஆந்திராவில் புதிய திட்டங்கள்: தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    ஆந்திராவில் ரூ.15233 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.



  • 14:47 (IST) 12 Nov 2022
    ”பிரதமர் மோடி தமிழகம் மீது தனி கவனம் செலுத்துகிறார்" - உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

    சென்னையில் இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "உலகின் மூத்த மொழியான தமிழால் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை தமிழகத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடி தமிழகம் மீது தனி கவனம் செலுத்துகிறார். தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை பிரதமர் கூர்ந்து கவனித்து வருகிறார். தமிழகத்திற்கான வரி பகிர்மானத்தை மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.



  • 14:02 (IST) 12 Nov 2022
    உலக கோப்பை கால்பந்து : மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அறிவிப்பு ..!

    22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் வருகிற 20-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி 26 பேர் கொண்ட உலக கோப்பைக்கான அர்ஜென்டினா அணியை அறிவித்துள்ளார்.

    அர்ஜென்டினா அணி

    கோல்கீப்பர்கள்: பிராங்கோ அர்மானி , எமிலியானோ மார்டினெஸ் , ஜெரோனிமோ ருல்லி

    பின்களம் : கோன்சாலோ மான்டியேல் , நாஹுவேல் மோலினா , ஜெர்மன் பெசெல்லா , கிறிஸ்டியன் ரோமெரோ, நிக்கோலஸ் ஓட்டமெண்டி , லிசாண்ட்ரோ மார்டினெஸ் , நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ , மார்கோஸ் அகுனா , ஜுவான் போய்த்

    நடுகளம் : லியாண்ட்ரோ பரேடெஸ் , கைடோ ரோட்ரிக்ஸ் , என்ஸோ பெர்னாண்டஸ் ,ரோட்ரிகோ டி பால், எக்ஸிகியெல் பலாசியோஸ் , அலெஜான்ட்ரோ கோம்ஸ் , அலெக்சிஸ் மேக் அலிஸ்டர்

    முன்களம் : பாலோ டி பாலா , லயோனல் மெஸ்ஸி , ஏஞ்சல் டி மரியா , நிக்கோலஸ் கோன்சலஸ் , ஜோக்வின் கொரியா , லாடரோ மார்டினெஸ் ஜூலியன் அல்வாரெஸ்.



  • 13:59 (IST) 12 Nov 2022
    'இபிஎஸ் - ஓபிஎஸ் பேசிக்கொள்ளவில்லை' - ஆர்.பி.உதயகுமார்!

    ”பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் எப்படி இருக்கிறீர்கள் என கேட்டார். மற்ற யாரிடமும் அவர் பேசவில்லை; இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பேசிக்கொள்ளவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.



  • 13:41 (IST) 12 Nov 2022
    செம்பரம்பாக்கம் ஏரி: 1,000 கன அடி உபரிநீர் திறப்பு!

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று (12-11-22) பிற்பகல் 3 மணிக்கு 1,000 கன அடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது என்றும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • 13:38 (IST) 12 Nov 2022
    சீர்காழி: 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை!

    சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் கனமழை கொட்டி தீர்த்ததற்கு மேகவெடிப்பு காரணமில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:33 (IST) 12 Nov 2022
    10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தீர்மானம்!

    10% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



  • 12:43 (IST) 12 Nov 2022
    தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரவு

    10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை ஆதரவு தெரிவித்துள்ளார்.



  • 12:43 (IST) 12 Nov 2022
    தீர்மானம் நிறைவேற்றம்

    தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில், 10% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



  • 11:51 (IST) 12 Nov 2022
    தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவீந்திரநாத் எம்.பி. நேரில் ஆஜர்

    கடந்த மாதம் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை வேலியில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவீந்திரநாத் எம்.பி. இன்று நேரில் ஆஜர் ஆனார்.



  • 11:24 (IST) 12 Nov 2022
    இமாச்சலபிரதேச தேர்தல்

    இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 7,881 வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பு 68 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 56 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.



  • 11:01 (IST) 12 Nov 2022
    சமூக நீதி கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது

    சமூக நீதி கொள்கைக்கு தற்போது மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது

    மிக மிக அடிப்படையான கொள்கையை நிலைநாட்ட அனைத்து கட்சி கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது

    சமூகம், கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கே இடஒதுக்கீடு என்பது சட்ட வரையறையாக உள்ளது - முதல்வர்



  • 11:00 (IST) 12 Nov 2022
    ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

    10% இட ஒதுக்கீடு விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை

    அரசியலமைப்பு சட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இடஒதுக்கீட்டில், பொருளாதார அளவுகோலை புகுத்த நினைக்கிறது மத்திய அரசு - முதல்வர்



  • 10:31 (IST) 12 Nov 2022
    பரோலில் உள்ள நளினி இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை

    நளினி விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை

    வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தகவல்

    பரோலில் உள்ள நளினி இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை

    நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கட்கிழமை விடுதலை செய்ய வாய்ப்பு

    உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டிருந்த நிலையில் சிறை எஸ்.பி. தகவல்



  • 10:30 (IST) 12 Nov 2022
    பரோலில் உள்ள நளினி இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை

    நளினி விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை

    வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தகவல்

    பரோலில் உள்ள நளினி இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை

    நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கட்கிழமை விடுதலை செய்ய வாய்ப்பு

    உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டிருந்த நிலையில் சிறை எஸ்.பி. தகவல்



  • 10:30 (IST) 12 Nov 2022
    இமாச்சல் தேர்தல் - 4% வாக்குகள் பதிவு

    இமாச்சலில் ஒரே கட்டமாக 68 தொகுதிகளுக்கு தேர்தல்

    9 மணி நிலவரப்படி 4% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்



  • 10:29 (IST) 12 Nov 2022
    இமாச்சல் தேர்தல் - முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வாக்குப்பதிவு

    இமாச்சல் தேர்தல் - மண்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்



  • 10:10 (IST) 12 Nov 2022
    சிதம்பரத்தில் 30.79 செ.மீ. மழைப்பதிவு

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30.79 செ.மீ. மழைப்பதிவு

    அண்ணாமலைநகரில் 27.58 செ.மீ., புவனகிரியில் 20.6 செ.மீ, காட்டுமன்னார்கோவிலில் 18.54 செ.மீ. மழைப்பதிவு



  • 10:09 (IST) 12 Nov 2022
    சென்னையில் மழையால் மின்தடை பாதிப்பு இல்லை - செந்தில்பாலாஜி

    சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

    சென்னையில் மழையால் மின்தடை பாதிப்பு இல்லை: புகார்கள் மீது உடனடி நடவடிக்கை

    சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி



  • 10:01 (IST) 12 Nov 2022
    16ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    அந்தமான் அருகே வரும் 16ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம்

    அந்தமான் அருகே வரும் 16ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 09:31 (IST) 12 Nov 2022
    16-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

    வங்கக்கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    தமிழகத்தில் இன்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு

    16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

    தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment