Advertisment

Tamil news today : இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil news today : இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு விசாரணை

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி பீட்டா, கூபா உள்ளிட்ட 15 அமைப்புகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரிக்கப்படுகிறிது. மத்திய அரசின் காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க கோரிக்கை.

ஆதாரை இணைக்காத விவசாயிகளுக்கு சிக்கல்

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆதார் எண்ணை இதுவரை இணைக்காத 9 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே உதவித் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 19:50 (IST) 23 Nov 2022
    குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ

    குட்கா வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர்கள் டி.கே. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 21 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குட்கா வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.



  • 19:47 (IST) 23 Nov 2022
    திருவல்லிக்கேணி அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து; பெண் படுகாயம்

    சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி அரசு மகளிர் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. பள்ளி அருகே கடை வைத்திருந்த நிர்மலா(40) என்ற பெண் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • 19:43 (IST) 23 Nov 2022
    10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை - போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

    10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக நடத்துனர்கள் மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து, 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 18:58 (IST) 23 Nov 2022
    ரூ.10 நாணயத்தை பெறாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை

    ரூ.10 நாணயங்களை பெற்றுக் கொள்ள மறுக்கும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.



  • 18:45 (IST) 23 Nov 2022
    ஆபாச நடனம் ஏற்கதக்கதல்ல.. மதுரை உயர் நீதிமன்ற கிளை

    பல்வேறு இடங்களில் குறவன், குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனங்கள் ஆடப்படுவதாக தெரிகிறது.

    இது ஏற்கதல்ல என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.



  • 18:33 (IST) 23 Nov 2022
    மக்னா யானை துரத்தியதில் வன அலுவலர் கால் முறிவு

    நீலகிரியில் உள்ள தேவாலா பகுதியில் தொடர்ச்சியாக வீடுகளை சேதப்படுத்தி, மூதாட்டியை கொன்ற PM2 மக்னா யானை, துரத்தியதில் வனக்காப்பாளருக்கு கால்முறிவு ஏற்பட்டது.

    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கேரள எல்லைக்குள் சென்ற யானை, இன்று மீண்டும் தமிழ்நாட்டு எல்லைக்குள் வந்த நிலையில் வனத்துறையினர் அதனை பிடிக்க முயற்சி செய்துவருகின்றனர்.



  • 18:21 (IST) 23 Nov 2022
    புகார் அல்ல.. பொய்களின் தொகுப்பு.. தங்கம் தென்னரசு

    தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் இன்று புகார் அளித்த நிலையில், அது புகார் அல்ல, பொய்களின் தொகுப்பு என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.



  • 18:04 (IST) 23 Nov 2022
    ஒடிசாவில் ஊழியர்களின் நலன் தொகுப்பு அறிவிப்பு

    ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஊழியர்களின் நலனுக்கான தொகுப்பை அறிவித்தார். அப்போது கெண்டு இலை சேகரிப்பு மீதான ஜிஎஸ்டியை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.



  • 17:45 (IST) 23 Nov 2022
    பொருளாதார இடஒதுக்கீடு.. காங்கிரஸ் வழக்கு

    பொதுப்பிரிவில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு பொருளாதாரத்தில் அளிக்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.



  • 17:30 (IST) 23 Nov 2022
    புதிய கவர்னர் பதவியேற்பை தவிர்த்த சுவேந்து அதிகாரி

    மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி புதிய கவர்னர் பதவியேற்பு விழாவை தவிர்த்தார்.

    “தன்னை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியதால் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றார் அவர்.



  • 17:16 (IST) 23 Nov 2022
    இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வு

    இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் நிறைவு செய்தன.



  • 17:00 (IST) 23 Nov 2022
    உள்ளாட்சி சாலைகளை மேம்படுத்த ரூ.2200 கோடி ஒதுக்கீடு

    தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புர உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.



  • 16:58 (IST) 23 Nov 2022
    ஒடிசா குடோனில் பயங்கர தீ விபத்து

    ஒடிசா, ஜாஜாப்பூர் அருகே உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 குழுக்களாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்



  • 16:45 (IST) 23 Nov 2022
    சங்கரன்கோவிலில் வெறிநாய் கடித்ததில் 12ம் வகுப்பு மாணவன் மரணம்

    தென்காசி, சங்கரன்கோவிலில் வெறிநாய் கடித்ததில் 12ம் வகுப்பு மாணவன் அஜித் உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்



  • 16:34 (IST) 23 Nov 2022
    முரசொலி மாறன் நினைவு நாள்; மு.க.ஸ்டாலின் ட்வீட்

    டெல்லியில் திராவிடத்தின் முகம், உலக அரங்கில் இந்தியாவின் முகம், வளரும் நாடுகளின் சார்பில் வல்லரசுகளோடு வாதிட்ட திறனாளர், அத்தனைக்கும் மேலாக கருணாநிதியின் மனசாட்சி என முரசொலி மாறன் நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்



  • 16:29 (IST) 23 Nov 2022
    ஜல்லிக்கட்டு; தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீது நாளை விசாரணை

    ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்தது



  • 16:14 (IST) 23 Nov 2022
    12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்; பள்ளி தாளாளர் மீது வழக்குப்பதிவு

    திருவள்ளூர், திருநின்றவூரில் 12ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தாளாளர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



  • 15:51 (IST) 23 Nov 2022
    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சாத்தான்குளம் வழக்கில் 9 பேர் மீது விடுபட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் கோரி சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது



  • 15:32 (IST) 23 Nov 2022
    தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு

    தாம்பரம் - கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் சேவை அரை மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் வழித்தடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்



  • 15:18 (IST) 23 Nov 2022
    மங்களூர் குண்டு வெடிப்பு; ஷாரிக்கின் பின்னணி, நிதியுதவி குறித்து தீவிர விசாரணை – கர்நாடகா அரசு

    மங்களூர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக்-ன் பின்னணி குறித்து தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. ஷாரிக் குறித்து தடயவியல் நிபுணர்களும் பல ஆவணங்களை சேகரித்துள்ளனர். ஷாரிக்கின் பின்னணி, நிதியுதவி உள்ளிட்டவை குறித்து தீவிர விசாரணை செய்யப்படும். ஷாரிக் பேச ஆரம்பித்தவுடன், கூடுதல் தகவல்கள் கிடைக்கும். வழக்கை என்ஐஏ-விடம் ஒப்படைப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்வோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்



  • 14:55 (IST) 23 Nov 2022
    வாரிசு அப்டேட்

    விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 14:25 (IST) 23 Nov 2022
    கர்நாடக குண்டு வெடிப்பு

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ. 50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:25 (IST) 23 Nov 2022
    காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு கூட்டம்

    டெல்லியில் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு கூட்டம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இதில், நாடாளுமன்ற கூட்டத்தொடர், இந்திய ஒற்றுமை நடைபயணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.



  • 13:43 (IST) 23 Nov 2022
    உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது

    தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது. கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாக கையாளவில்லை. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கை காவல்துறை முறையாக விசாரணை செய்யவில்லை என ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின் இபிஎஸ் பேட்டி அளித்தார்.



  • 13:17 (IST) 23 Nov 2022
    கனமழை பெய்ய வாய்ப்பு

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:11 (IST) 23 Nov 2022
    பொது விடுமுறை

    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தியதால் சவுதி அரேபியாவில் இன்று பொது விடுமுறை



  • 13:10 (IST) 23 Nov 2022
    ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சந்திப்பில் அதிமுக மூத்த நிர்வாகிகளும் பங்கேற்பு. தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் .



  • 13:09 (IST) 23 Nov 2022
    பள்ளி முன்பு பெற்றோர்கள் சாலை மறியல்

    சென்னை, திருநின்றவூரில் மாணவிக்கு பள்ளி தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி மாணவர்கள் போராட்டம் . போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு. பள்ளி முன்பு பெற்றோர்கள் சாலை மறியல்



  • 11:52 (IST) 23 Nov 2022
    திடலை திறந்து வைத்து பூப்பந்து விளையாடிய முதல்வர் ஸ்டாலின்

    சென்னை, பெரம்பூர் தீட்டித் தோட்டம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பூப்பந்து விளையாட்டு திடல் திறப்பு விளையாட்டு திடலை திறந்து வைத்து பூப்பந்து விளையாடிய முதல்வர் ஸ்டாலின்



  • 10:54 (IST) 23 Nov 2022
    பொங்கல் தொகுப்பில் தரமற்ற உணவுப் பொருட்கள் விநியோகம் செய்த நிறுவனத்தில் சோதனை

    தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

    கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிறுவனங்களிலும் சோதனை



  • 10:38 (IST) 23 Nov 2022
    மயிலாடுதுறையில் ரூ.1000 வழங்க அரசாணை

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.11000 வழங்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணை

    சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் - தமிழக அரசு



  • 10:36 (IST) 23 Nov 2022
    12 பா.ஜ.க நிர்வாகிகள் இடை நீக்கம்

    குஜராத்தில் 12 பா.ஜ.க நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடை நீக்கம்

    தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சுயேட்சையாக போட்டியிட முயன்ற நிலையில் நடவடிக்கை



  • 10:35 (IST) 23 Nov 2022
    சத்தீஸ்கரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    சத்தீஸ்கரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்பு - தீயை அணைக்கும் பணி தீவிரம்



  • 10:35 (IST) 23 Nov 2022
    தேங்காய் பறிக்க சென்ற ஐ.டி.ஐ மாணவர் மின்சாரம் தாக்கி பலி

    கடலூர்: பண்ருட்டி அருகே ஒறையூரில் தேங்காய் பறிக்க சென்ற ஐ.டி.ஐ மாணவர் அரசு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

    சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிரபாகரனை கைது செய்து போலீசார் விசாரணை



  • 09:25 (IST) 23 Nov 2022
    தாய்மார்கள் சுகப்பிரசவத்தை சுமை பிரசவமாக கருத கூடாது - தமிழிசை

    தெலங்கானாவில் சுகப்பிரசவங்களை அதிகரிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றது .

    தாய்மார்கள் சுகப்பிரசவத்தை சுமை பிரசவமாக கருதாமல் முன்னுரிமை அளிக்க வேண்டும் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி



  • 09:24 (IST) 23 Nov 2022
    40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

    தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

    பொது விநியோகத் திட்டத்திற்கு உணவுப் பொருட்களை சப்ளை செய்யும் தனியார் நிறுவனம் உட்பட 3 நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை



  • 08:15 (IST) 23 Nov 2022
    மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து ரொனால்டோ வெளியேறினார்

    மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறினார்.

    மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறினார் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

    மான்செஸ்டர் அணியின் மேலாளரை நான் மதிப்பதே கிடையாது, அவர் மீது நான் மரியாதை வைத்தது இல்லை என்று சமீபத்தில் ரொனால்டோ கூறியிருந்த நிலையில், இருதரப்பினருக்கும் விரிசல் அதிகமானது குறிப்பிடத்தக்கது.



  • 08:08 (IST) 23 Nov 2022
    ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

    மாணவர்கள் பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிப்பு.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment