பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
கர்நாடகா தேர்தல்
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. 224 தொகுதிகளிலும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
ஐ.பி.எல் டி20
ஐ.பி.எல் டி20 போட்டி தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது
அரசு முறை பயணமாக, ஜூன் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார். பிரதமர் மோடி அதிபர் ஜோ பைடன்-ஐ சந்திக்க உள்ளதாகவும், மோடிக்கு பிடன் விருந்தளிக்க உள்ளதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது
தமிழகத்தின் ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் அங்கு துணிகளை வீசி வரவேண்டாம் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். டெபாசிட் தொகை பெறப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதால், வனப்பகுதியில் பிளாஸ்டிக் வீசப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. 500 கிலோ துணிகள் ஆறாவது மலை ஆண்டி சுனைப்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது என வனத்துறை தெரிவித்துள்ளது
முதுமலை புலிகள் காப்பக அறக்கட்டளைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ரூ.5 லட்சம் வழங்கியுள்ளது
கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என்று சில கருத்து கணிப்புகளும், தொங்கு சட்டப்பேரவை அமையும் என சில கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன
கரும்புக்கு நியாயமான விலை வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை நியாயமான சந்தை விலை கிடையாது. விவசாயிகளின் உழைப்புக்கு கூடுதல் விலை கொடுத்தால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என கரும்பு கொள்முதல் நிலுவை தொகையை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், நிலுவைத்தொகையை 3 வாரங்களில் வழங்கவும் ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், கார் பார்க்கிங் இடத்தை அபகரிப்பு செய்வதாக திரைப்பட நடிகர் சரவணன் புகார் மனு அளித்துள்ளார். மனுக்களை அமைச்சர் தா.மோ அன்பரசன் பெற்ற நிலையில், அவரிடம் நடிகர் சரவணன் மனுவை வழங்கினார்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 14ம் தேதி நடைபெற உள்ள சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 12ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
சிவசேனா கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரும் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை (மே 11) தீர்ப்பு வழங்க உள்ளது.
நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா பணத்தை திருப்பி கேட்டு கலைச்செல்வன் வீட்டிற்கு சென்று தாக்கியதாக புகார். இருவரும் மாறி மாறி புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி. என அங்கீகரிக்க கூடாது என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கோவை: உக்கடம், சந்தை பகுதிகளில் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட 22.5 டன் மாம்பழங்கள் மற்றும் 2.5 டன் சாத்துக்குடி பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்த பழங்களை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டி அழித்து, இயற்கை உரமாக தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே முட்டை லோடு ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 30 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதம் லாரியில் இருந்த முட்டைகளில் பெரும் பங்கு உடைந்து மழை நீர் போன்று ஓடியது ஈரோடு பெருந்துறையில் இருந்து கன்னியாகுமரி சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த விவகாரம் தொடர்பான 23 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவர்களை பாதுகாக்க முடியாவிட்டால் மருத்துவமனைகளை மூட வேண்டுமா? “காவல்துறையிடம் துப்பாக்கி இல்லையா?” கொல்லம் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் காட்டம்
கர்நாடக சட்டமன்ற தேர்தல் – பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குப்பதிவு அதிகபட்சமாக, ராம் நகர் தொகுதியில் 63.36% வாக்குகள் பதிவு
'THE ELEPHANT WHISPERERS' ஆவணப்படப் புகழ் பொம்மன் – பெள்ளி தம்பதியை சிறப்பிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யானைகள் நலனுக்காக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உதவித்தொகை வழங்கவும் சிஎஸ்கே நிர்வாகம் முடிவு
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வைகை ஆற்றில் மண் பரிசோதனை; மதுரை – திருமங்கலம் இடையே 66 இடங்களில் மண் பரிசோதனை நடந்துவருகிறது இத்திட்டத்திற்காக நடப்பு பட்ஜெட்டில் ₹8500 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது
கர்நாடகாவவில் பாஜக வெல்ல வேண்டும் என சிறப்பு பூஜை செய்துள்ளேன் என சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த பிறகு நடிகை நமீதா பேட்டி அளித்துள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழக படிப்புகளில் சேர ஒரே விண்ணப்பத்தை பயன்படுத்தலாம் கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
என்எல்சியில் புதியதாக 1800 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக என்.எல்.சியில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கூறியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல்லாரியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்
கர்நாடகாவில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பல்லாரியில் உள்ள வாக்குச் சாவடியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம் கலபுர்கி தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது மனைவி ராதாபாய் கார்கே வாக்களித்தனர்.
#watch | #karnatakaelections | Congress national president Mallikarjun Kharge and his wife Radhabai Kharge cast their votes at a polling booth in Kalaburagi. pic.twitter.com/Z6BH4uqwyY
— ANI (@ANI) May 10, 2023
பெரம்பலூரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பாப்பாத்தி வேலை வேண்டி கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலை வாய்ப்பு வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் ஓஏவாக பணிபுரிவதற்கான ஆணையினை வழங்கினார்
தூத்துக்குடி: முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை, 2 மாதங்களில் விசாரித்து முடிக்க, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நேரில் பரிசளிக்கவுள்ளார் நடிகர் விஜய் . 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை சென்னைக்கு அழைத்து பரிசளிக்கவுள்ளார்.
ர்நாடக சட்டப்பேரவை தேர்தல் – வருணா தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 14ஆம் தேதி 'DMK FILES' என்ற பெயரில் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டது குறித்து அவதூறு வழக்கு முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்- மனு
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக 200 புதிய வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
கோவை, வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனாரின் சிலையை காணொலி மூலம் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
எங்களைப் போன்ற வயதானவர்கள் காலை 6 மணிக்கே வந்து வாக்குகளை செலுத்தியுள்ளோம். எங்களைப் பார்த்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இன்போசிஸ் சுதா மூர்த்தி – கர்நாடகா தேர்தல்
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக 200 புதிய வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில், இந்துக் கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சிக்கமகளூர் மாவட்டம் மூடிகீரே சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்கோனஹல்லி பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த பெண்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வு
ஒரு கிராம் தங்கம் ரூ. 5,742க்கும், சவரன் ரூ. 45,936க்கும் விற்பனை
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே வேலவன் புதுக்குளத்தில் தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22,500 கிலோ கஞ்சா பறிமுதல் – 7 பேர் கைது
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்
தனது சொகுசு காரின், சாவி தொலைந்து போய்விட்டதாக புகார் அளித்துள்ளார்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பெங்களூரு, ஜெயநகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார் வாக்குப் பதிவு
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா
தனது சொந்த தொகுதியான சிகாரிபுராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்
நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். காலை வணக்கம் கர்நாடகா. நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக, 40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன். உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் என ட்விட் பதிவிட்டுள்ளார்.