பெட்ரோல், டீசல் விலை
359-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தலைமைக்கு அதிகாரம்
கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் தலைமையே முடிவு செய்யும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
ஐ.பி.எல் டி20
ஐ.பி.எல் 2023 இன்றைய ஆட்டத்தில் குஜராத் – ஹைதராபாத் அணிகள் மோதல். இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்கும் போட்டியில் குஜராத் – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களில் நடைபெற்ற சாராய வேட்டை இதுவரை 1,842 வழக்குகள் பதிவு, 1,558 பேர் கைது – 19,028 லிட்டர் சாராயம் பறிமுதல் ஒரு நான்கு சக்கர வாகனம், 7 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் – காவல்துறை தகவல்
விழுப்புரம் மாவட்ட டிஐஜியாக, சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம் காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ்-க்கு, விழுப்புரம் எஸ்.பி-யாக கூடுதல் பொறுப்பு தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவு
சர்வதேச மல்லர் கம்பம் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற ஹேமச்சந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது! கடந்த 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை அசாம் மாநிலத்தில் சர்வதேச மல்லர் கம்ப போட்டி நடைபெற்றது!
கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவார் என தகவல் வௌியாகியுள்ளது. சித்தராமையாவுக்கு வாழ்த்துகள் எனக் கூறி டி.கே.சிவக்குமார் பேட்டியளித்துள்ளதால், முதலமைச்சராக அவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
“நான் போர்க்கொடியும் தூக்கவில்லை. யாரையும் மிரட்டவுமில்லை. முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடமே விட்டுவிட்டேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள்” கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் டெல்லி பயணம் ரத்து. உடல்நிலை சரியில்லை எனக்கூறி வீடு திரும்பிய டி.கே.சிவக்குமார் அவசியத் தேவை என்றால் டெல்லி அழைக்கட்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
விழுப்புரத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு: “டாஸ்மாக் விலை அதிகமானதால் கள்ளச் சாராயம் குடிக்கப் போகிறார்கள். கள்ளச் சாராய விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. கள்ளச் சாராய மரணத்திற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சென்னையில் தி. நகர் பேருந்து நிலையம் – மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைமேடையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாலை திறந்து வைக்கிறார்.
சட்டவிரோத பணப்பறிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி. ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மதுவிலக்கு டி.எஸ்.பி பழனி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு எஸ்.பி பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு டி.எஸ்.பி துரைபாண்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 11 பேர் உயிரிழந்த நிலையில், ஆப்ரகாம் என்பவர் உயிரிழந்தார்.
கள்ளச் சாராயம் மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி-க்களையும் பணியிடை நீக்கம் செய்து முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி சத்துணவு கூடங்களில், குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமெரிக்க வாழ் பெண் மென் பொறியாளர் வீட்டில் இருந்து 14 பழங்கால உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரசிற்பங்கள் ஆகியவற்றை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே இதே வீட்டில் 2 முறை சோதனை செய்து, சுமார் 72 சிலைகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது
கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். கள்ளச்சாராய விற்பனை யார் செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்க தவறியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நலம் விசாரித்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். யார் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என விழுப்புரத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலம் குறித்து , பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விசாரித்து வருகிறார்.
கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் பட்டியலும் காங்கிரஸ் தலைமைக்குழு வெளியிட்டது.
விழுப்புரம் எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜவேல் (38) உயிரிழந்தார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 10 மாவட்டங்களில் 410 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8,748 லிட்டர் கள்ளச்சாரயம் மற்றும் 4,720 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது- டிஜிபி அலுவலகம் அறிக்கை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (மே15) முதல் மே 19ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு . சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 அவதூறு வழக்குகள் தாக்கல். அவதூறு பரப்பும் வகையில், தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி வருவதாக குற்றச்சாட்டு . ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக புகார்
கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், விழுப்புரம் புறப்பட்டார் டிஜிபி சைலேந்திர பாபு
விழுப்புரம் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக முதல்வர் விழுப்புரம் செல்கிறார் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் தெரிவிக்க உள்ளார் முதல்வருடன் அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ.வேலு ஆகியோரும் பயணம்
விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு ஏற்கனவே 8 பேர் உயிரிழந்த நிலையில், கேசவவேலு(70) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன்- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் விழுப்புரம் செல்கிறார் . கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் விழுப்புரம் பயணம்
காரைக்காலில் காலதாமதமாக பணிக்கு வரக்கூடாது என்ற நிர்வாக சீர்திருத்த துறை சுற்றறிக்கையை காற்றில் பறக்க விட்ட அரசு அதிகாரிகள் . இன்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதிகாரிகள் நேரத்திற்கு வராததால் பொதுமக்கள் அவதி .
சென்னையில் ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இல்லை ஒரு கிராம் தங்கம் ரூ. 5,715க்கும், சவரன் ரூ. 45,720க்கும் விற்பனை
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி நீடிக்கும் நிலையில், இன்று டெல்லி செல்கிறார் முன்னாள் முதல்வர் சித்தராமையா
இன்று பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார் சித்தராமையா
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற தீவிர கள்ளச்சாராய வேட்டையில் 46 பேர் கைது. எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நடைபெற்ற சோதனையில் 44 வழக்குகள் பதிவு.
கள்ளச் சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 12 பேர் உயிரிழந்ததன் எதிரொலி
கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு
தமிழ்நாட்டில் 13 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் பகுதிகளில் சதம்
நாகை, பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.
சென்னையில் நேற்றை விட இன்று வெயில் அதிகமாக இருக்கும் – பிரதீப் ஜான்
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே கார் – லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து
சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது
கள்ளச்சாராயம் விற்றதாக 88 பேர் மீது வழக்குப்பதிவு – மாவட்ட காவல்துறை
செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து – 10 பேர் காயம்
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு இன்று பிறந்தநாள்
தனியார் ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் கேக் ஊட்டி, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் சித்தராமையா
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன் என்பவர் உயிரிழப்பு