பெட்ரோல் – டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் வெள்ளப்பெருக்கு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து உயர்ந்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாரதிராஜா- முதல்வர் நலம் விசாரிப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பாரதிராஜாவின் மனைவியிடம் தொலைபேசியில் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சென்னை விமான நிலையத்தில் மழை காரணமாக 2வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் 178 பயணிகளுடன் வந்த சிங்கப்பூர் விமானம் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது
மதுரை மாநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்கள் விற்பனை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. 0452-2520760 மற்றும் 83000 21100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் அறிவித்துள்ளார்
ஜார்கண்ட்டில் ராஞ்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
காங்கிரஸ் கட்சி சார்பில் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கும் நடைபயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்த நடைபயணத்துக்கு ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார்.
சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் நடிகர் விக்ரம் கலந்துகொண்டார்.
முன்னதாக மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கோப்ரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது நினைவு கூரத்தக்கது.
நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை பாஜக பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகத் மரண வழக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் விவரங்கள் தேவைப்பட்டால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறினார். சோனாலி போகத் கோவாவில் இருந்தபோது மரணித்தார்.
முன்னதாக, இவரது மரணம் தொடர்பாக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
சச்சின் தெண்டுல்கர், 2003ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் படத்தை பகிர்ந்து , ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் உள்நாட்டு போர்டிங் பாஸ் பெற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாஸ்களை நான்கு வாயில்களிலும் நிறுத்தப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தெதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் தேர்தலுக்கு ஒப்புதல் அளித்தார்.
மதுரை மாவட்டத்தின் சார்பாக தமுக்கம் கலை அரங்கத்தில் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் 13 தேதி வரை நடைபெற இருந்த புத்தகக் கண்காட்சி தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களினால், ஒத்திவைக்கப்படுகிறது. புத்தகக் கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.
நொய்டா இரட்டை கோபுர கட்டங்களில் 20,000 இடங்களில் வெடிமருந்து வைக்கப்பட்டு நொடிப்பொழுதில் தரைமட்டமாக்கப்பட்டது. நொய்டா இரட்டை கோபுரங்களைத் தகர்ப்பதற்கு ரூ. 20 கோடி செலவிடப்பட்டது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2 கட்டடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
டெல்லி அருகே நொய்டாவில் விதியை மீறி கட்டப்பட்டுள்ள சூப்பர் டெக் என்ற இரட்டை கட்டிடங்களை இடிக்க கவுண்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. கட்டடத்தை தகர்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக, பிரத்யேக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இரட்டை கட்டடத்தை சுற்றியுள்ள கட்டடங்கள், வீடுகளில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பணத்தை கொடுத்து ஆள் பிடிக்கும் பணியில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருகிறார். ஒபிஎஸ் சசிகலா தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிப்பில் சிவாஜி ரஜினியை தோற்றடிப்பார் ஒபிஎஸ் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி, அரியலூர் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை தஞ்சை, கோவை திருப்பூர் நீலகிரி உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாற்று இடங்கள் வழங்கிய பின்னரே, நீர்நிலை ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற வேண்டும் பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து ஆக்கிரமிப்பை விட்டு வெளியேற வேண்டும்
வரும் காலங்களில் நீர்நிலைகளில் வீடு கட்ட அரசு அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம், கல்வி கடன் ரத்து என்ற எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை – ஈபிஎஸ்
சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு இவைதான் திமுக ஆட்சியின் சாதனைகள் – ஈபிஎஸ்
நிதி இல்லாதபோது ரூ. 80 கோடிக்கு எழுதாத பேனா அவசியமா? – திருச்சியில் ஈபிஎஸ் பேச்சு
ரூ. 80 கோடிக்கு 6.5 கோடி மக்களுக்கும் பேனா வாங்கி கொடுத்து விடலாம் – ஈபிஎஸ்
நொய்டா இரட்டைக் கோபுர தகர்ப்புக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம். தயார் நிலையில் 560 போலீசார், 100 ரிசர்வ் படைகள், 4 என்டிஆர்எஃப் குழு.
பாதுகாப்பு நடவடிக்கையாக போக்குவரத்து மாற்றம்
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக 5 பேர் கைது. 4 நாட்டு வெடிகுண்டுகள், மூலப் பொருட்கள், 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்
குஜராத், புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கடந்த 2001ல் புஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஸ்மிருதி வன நினைவிடம் அமைப்பு
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை
திமுக தலைவராக பொறுப்பேற்ற தினத்தையொட்டி மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை. திமுக தலைவராக பொறுப்பேற்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் .
இன்று பிற்பகலில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் வெளியேற்றம்.
நொய்டாவில் விதி மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரம் இன்று தகர்க்கப்படுகிறது. பிரமாண்ட கட்டடத்தை வெடிவைத்து தகர்ப்பதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. கோபுரங்களை இடிக்க 3,700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் .காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசனை . வெளிநாட்டில் உள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி காணொலி வாயிலாக பங்கேற்பு.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித் இன்று இந்தியா வருகிறார். 2 நாள் சுற்றுப்பயணத்தில் குடியரசு தலைவர் உள்ளிட்டோரை சந்திக்கிறார் .