Advertisment

Tamil news Highlights: வடகிழக்கு பருவமழை அக். 4வது வாரத்தில் துவங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 06 October 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil news today : தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu Weather Forecast

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 138வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

அரசு பேருந்து - பள்ளி சுற்றுலா பேருந்து மோதி விபத்து

கேரளா மாநிலம் பாலக்காடு வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதி விபத்து. இதில் 9 பேர் உயிரிழந்தனர். கோர விபத்தில் 41 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

தேசிய விளையாட்டு போட்டி - தமிழக வீரர் வெற்றி

36வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது. டென்னிஸ் இறுதி போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மகாராஷ்டிர வீரரை வீழ்த்தி தமிழக வீரர் மனீஷ் வெற்றி.

மகாராஷ்டிர வீரர் அர்ஜுன் காதேவை 2 - 6, 6 - 1, 6 - 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:03 (IST) 06 Oct 2022
    சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை தொடக்கம்

    சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5ஜி சேவைக்காக சிம் கார்டை மாற்ற தேவையில்லை என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது



  • 20:29 (IST) 06 Oct 2022
    திருவாரூர்: சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி மயக்கம்

    திருவாரூர் அருகே சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. 6 பேருக்கு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • 20:14 (IST) 06 Oct 2022
    பாலியல் புகார்; நேபாள கிரிக்கெட் வீரர் கைது

    17 வயது சிறுமி அளித்த பாலியல் புகாரில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே கைது செய்யப்பட்டுள்ளார்



  • 19:21 (IST) 06 Oct 2022
    வடகிழக்கு பருவமழை அக். 4வது வாரத்தில் துவங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4வது வாரத்தில் துவங்க வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 19:11 (IST) 06 Oct 2022
    புதிய 2 கிலோ மற்றும் 5 கிலோ இலகு ரக சிலிண்டர்கள் அறிமுகம்

    சென்னை - தேனாம்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய 2 கிலோ மற்றும் 5 கிலோ இலகு ரக சிலிண்டர்கள் அறிமுக விழா நடைபெற்றது. தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலம் சிறு வியாபாரிகளுக்கு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார்



  • 18:47 (IST) 06 Oct 2022
    கூட்டுறவுத்துறை மூலம் சிறு வியாபாரிகளுக்கு சிலிண்டர் வழங்கும் திட்டம் தொடக்கம் - ஐ பெரியசாமி

    சென்னை - தேனாம்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய 2 கிலோ மற்றும் 5 கிலோ இலகு ரக சிலிண்டர்கள் அறிமுக விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் பெரியசாமி தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலம் சிறு வியாபாரிகளுக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.



  • 18:05 (IST) 06 Oct 2022
    அ.தி.மு.க-வுக்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு கட்சியில் 100% இடமில்லை - இ.பி.எஸ் பேட்டி

    எடப்பாடியில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி: அ.தி.மு.க-வுக்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு கட்சியில் 100% இடமில்லை; அ.தி.மு.க-வை முடக்க வேண்டும் என நினைப்பவர்கள் காற்றில் கரைந்து போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.



  • 17:42 (IST) 06 Oct 2022
    ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தடை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் - இ.பி.எஸ் வலியுறுத்தல்

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி: ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தடை சட்டத்தை உடனே நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



  • 17:13 (IST) 06 Oct 2022
    இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரான்சை சேர்ந்த எழுத்தாளர் அன்னீ எர்னாக்ஸ்-க்கு அறிவிப்பு

    இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்சை சேர்ந்த எழுத்தாளர் அன்னீ எர்னாக்ஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:14 (IST) 06 Oct 2022
    காப்பகத்தில் உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பலி

    திருப்பூரில், காப்பகத்தில் உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சமூக நல பாதுகாப்பு துறை இயக்குனர் வளர்மதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே "காப்பகத்தில் இருந்த குழந்தைகள் பாதிபேர் உணவை குப்பை தொட்டியில் கொட்டியுள்ளனர். "உணவை சாப்பிட்ட சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது" என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் கூறியுள்ளார்.



  • 15:53 (IST) 06 Oct 2022
    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி : இந்தியா பந்துவீச்சு

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. மழையின் காரணமாக போட்டி தாமதமாக துவங்கிய நிலையில் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.



  • 15:52 (IST) 06 Oct 2022
    காப்பகத்தில் உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பலி

    திருப்பூரில், காப்பகத்தில் உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சமூக நல பாதுகாப்பு துறை இயக்குனர் வளர்மதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே "காப்பகத்தில் இருந்த குழந்தைகள் பாதிபேர் உணவை குப்பை தொட்டியில் கொட்டியுள்ளனர். "உணவை சாப்பிட்ட சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது" என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் கூறியுள்ளார்.



  • 15:01 (IST) 06 Oct 2022
    தனியார் காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு

    திருப்பூர் திருமுருகன் பூண்டியில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உணவு அருந்திய 3 குழந்தைகள் உயிரிழந்தனர். 14 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் காப்பகம் முன்பு பல்வேறு தரப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



  • 14:48 (IST) 06 Oct 2022
    கனிமொழிக்கு திமுகவில் புதிய பொறுப்பு

    கனிமொழிக்கு திமுகவில் புதிய பொறுப்பு வழங்குவது தொடர்பாக திமுக தலைவர் முடிவெடுப்பார் என்று திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.



  • 14:25 (IST) 06 Oct 2022
    துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு

    தாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். முன்னாள் காவல்துறை அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 13:59 (IST) 06 Oct 2022
    மழலையர் பள்ளிகள் தொடர்ந்து இயங்க அனுமதி

    தமிழகத்தில், மழலையர் பள்ளிகள் கைவிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2381 மழலையர் பள்ளிகள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ரூ. 5000 தொகுப்பூதியத்தில் 2381 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என கல்வித்துறை அறிவித்துள்ளது.



  • 13:17 (IST) 06 Oct 2022
    தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு

    தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 4,266 பேருக்கு டெங்கு பாதிப்பு என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு கொசு வலையை பயன்படுத்தி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.



  • 11:47 (IST) 06 Oct 2022
    இந்தியாவின் 4 இருமல் மருந்துகளுக்கு தடை

    இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளால் காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் பலி. இந்தியாவின் 4 இருமல் மருந்துகளுக்கு தடை விதித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



  • 11:25 (IST) 06 Oct 2022
    மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி

    மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி., கனிமொழி நியமனம். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி.,



  • 10:58 (IST) 06 Oct 2022
    அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் கடத்தப்பட்ட சம்பவம்

    அமெரிக்கா - கலிஃபோர்னியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 4 பேர் கடத்தப்பட்ட சம்பவம்

    கடத்தப்பட்டவர்கள் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கலிஃபோர்னியா காவல்துறை தெரிவித்துள்ளது



  • 10:32 (IST) 06 Oct 2022
    தமிழகத்தில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

    ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

    வட தமிழ்நாடு மாவட்டங்கள், வட தமிழ்நாடு உள் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்



  • 09:44 (IST) 06 Oct 2022
    கர்நாடகாவில் ராகுலுடன் சோனியா காந்தி நடைபயணம்

    கர்நாடகாவில் ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையில் சோனியா காந்தி பங்கேற்பு

    விஜயதசமியையொட்டி 2 நாள் ஓய்வெடுத்த ராகுல்காந்தி, கர்நாடகாவில் தனது 5-வது நாள் பயணத்தை தொடங்கினார்.



  • 09:13 (IST) 06 Oct 2022
    அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி. மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் நோயாளிகள் வேறு வார்டிற்கு மாற்றம்



  • 08:26 (IST) 06 Oct 2022
    மேற்கு வங்கம் விஜயதசமி: மால் ஆற்று வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி

    மேற்கு வங்கம் ஜல்பைகுரியில் விஜயதசமி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மால் ஆற்றில் சிலை கரைக்கும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. அப்போது இரவு 8.30 மணியளவில் ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.



  • 08:10 (IST) 06 Oct 2022
    கேரளா: அரசு பேருந்து - பள்ளி சுற்றுலா பேருந்து மோதி விபத்து

    கேரளா மாநிலம் பாலக்காடு வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதி விபத்து. இதில் 9 பேர் உயிரிழந்தனர். கோர விபத்தில் 41 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



  • 08:06 (IST) 06 Oct 2022
    26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 26 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

    சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment