Advertisment

Tamil news Today: கர்நாடகா ஹிசாப் தடை: இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil news Today: கர்நாடகா ஹிசாப் தடை: இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

கேரள நரபலி சம்பவம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நேற்று வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் ஐப்பசி மாத பூஜைக்கான வரும் 17ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி அளிக்க தேவசம் போர்டு ஏற்பாடு

தேசிய விளையாட்டு போட்டிகள் நிறைவு

குஜராத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பதக்க பட்டியலில் 56 தங்க பதக்கங்களுடன் 121 பதக்கங்கள் பெற்று சர்வீசஸ் அணி முதலிடம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:28 (IST) 12 Oct 2022
    இந்தி திணிப்பை கண்டித்து அக். 15-ம்தேதி தி.மு.க இளைஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் 15-ம் தேதி தி.மு.க இளைஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 22:08 (IST) 12 Oct 2022
    அமெரிக்காவில் சட்ட விரோதமாக ஊடுருவ முயற்சிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

    இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 16,290 இந்தியர்கள் அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018-இல் 8,997 இந்தியர்கள் கைதாகியுள்ள நிலையில், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனாவால் கைது எண்ணிக்கை குறைந்தது.



  • 22:04 (IST) 12 Oct 2022
    தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜ.க முன்னேற்றம் - இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி

    சிவகாசி அருகே திருத்தங்கலில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பேச்சு: “தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக முன்னேறிக் கொண்டிருக்கிறது; வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.



  • 22:02 (IST) 12 Oct 2022
    சென்னை - மும்பை ஏர் இந்தியா விமானம் திடீர் ரத்து

    சென்னையில் இருந்து மும்பைக்கு இரவு 9.40 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்-இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், முன்பதிவு செய்த பயணிகள் மாற்று விமானம் கேட்டு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



  • 21:20 (IST) 12 Oct 2022
    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு செல்கிறார் ஸ்டாலின்

    ராமநாதபுரம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 30ம் தேதி பயணம் செய்கிறார்.

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்துகிறார்.



  • 20:18 (IST) 12 Oct 2022
    தி.மு.க தொழிலாளர்களுக்கு எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை - சி.ஐ.டி.யு தலைவர் சௌந்தரராஜன் விமர்சனம்

    சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன்: “தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதியின் படி தொழிலாளர்களுக்கு என எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.



  • 20:13 (IST) 12 Oct 2022
    இந்தியாவின் சில்லரை பணவீக்கம் 7.41% ஆக உயர்வு

    இந்தியாவின் சில்லரை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 7% ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 7.41% ஆக உயர்ந்துள்ளது.

    உணவுப் பொருட்கள், காய்கறிகளின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துவருவதை பணவீக்க மதிப்பு உயர்வு சுட்டிக்காட்டியுள்ளது.



  • 19:38 (IST) 12 Oct 2022
    டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும்; கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் கடிதம்

    டெல்லியில் விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில் கொண்டு, பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிவகாசியை சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 19:00 (IST) 12 Oct 2022
    சிவகார்த்திகேயன் படத்துக்கு யூ சான்றிதழ்

    சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.



  • 18:55 (IST) 12 Oct 2022
    டெல்லியில் கடும் மழைப்பொழிவு

    டெல்லியில் கடந்த 66 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:52 (IST) 12 Oct 2022
    ஈரோடு லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

    ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தார்.ஈரோடு லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

    இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • 18:40 (IST) 12 Oct 2022
    ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பனங்காட்டு படை கட்சி தலைவராக ராக்கெட் ராஜா மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.



  • 18:36 (IST) 12 Oct 2022
    சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தீக்குளிப்பு.. தாமாக முன்வந்து வழக்கை எடுத்த உயர் நீதிமன்றம்

    சாதி சான்றிதழ் வழங்க கோரி உயர் நீதிமன்ற வளாகத்தில் வேல்முருகன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக் கொண்டது.

    வழக்கறிஞர் சூரியபிரகாசம் செய்த முறையீட்டில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.



  • 18:05 (IST) 12 Oct 2022
    ரூ.400 கோடியை கடந்த பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வம் ரூ.400 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அமரர் கல்கியின் எழுத்து நடையில் உருவாகியிருந்த நாவலை மையப்படுத்தி எடுத்த இந்தப் படத்தை மணி ரத்னம் இயக்கியிருந்தார்.



  • 17:46 (IST) 12 Oct 2022
    சட்டவிரோத குவாரிகள்- தமிழக அரசுக்கு அவகாசம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தாக்கல் செய்ய ஒரு வார காலம் அவகாசம் வழங்கி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 17:24 (IST) 12 Oct 2022
    சேலம்-கோவை பயணிகள் ரயில் ரத்து

    சேலம் - கோவை பயணிகள் ரயில் 15 நாள்களுக்கு ரத்த செய்யப்பட்டது.



  • 17:17 (IST) 12 Oct 2022
    சேலம்-கோவை பயணிகள் ரயில் ரத்து

    சேலம் - கோவை பயணிகள் ரயில் 15 நாள்களுக்கு ரத்த செய்யப்பட்டது.



  • 17:08 (IST) 12 Oct 2022
    கேரளத்தில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அன்புமணி கோரிக்கை

    கேரளத்தில் தமிழ் பெண் உள்பட இருவர் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில், தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.



  • 16:54 (IST) 12 Oct 2022
    2023ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் அறிவிப்பு

    2023ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 நாட்களை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது



  • 16:26 (IST) 12 Oct 2022
    ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

    ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது



  • 16:10 (IST) 12 Oct 2022
    ஐகோர்ட் உத்தரவுப்படி பணப்பலன் வழங்காததை எதிர்த்த வழக்கு; பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

    உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவுப்படி பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், பணப்பலன்கள் வழங்க உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது. முழு அமர்வு உத்தரவுப்படி தமக்கு பண பலன்கள் வழங்கவில்லை எனக்கூறி ஹரிஹரன் என்ற ஆசிரியர் வழக்கு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    2013ம் ஆண்டிலிருந்து வழக்கு தொடர்ந்துள்ளதால், எப்போது நிவாரணம் வழங்கப்படும் என விளக்கமளிக்க வேண்டும் என்றும், பலமுறை அவகாசம் அளித்தும் விளக்கம் அளிக்காததால் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்



  • 15:34 (IST) 12 Oct 2022
    இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்; தமிழகத்தில் அமைக்க மு.க.ஸ்டாலின் அனுமதி

    இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழகத்தில் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் சரணாலயம் அமைய உள்ளது



  • 15:24 (IST) 12 Oct 2022
    விஜயின் 'தளபதி 70' படத்தை தோனி தயாரிக்கவுள்ளதாக தகவல்

    விஜய் நடிப்பில் உருவாகும் 'தளபதி 70' படத்தை கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனிக்கு '7' விருப்பமான எண் என்பதால் விஜய்யின் 70வது படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது



  • 15:09 (IST) 12 Oct 2022
    முதியவர்களை அடித்து துன்புறுத்தியதாக புகார்; கருணை இல்லத்திற்கு சீல் வைக்க உத்தரவு

    வேலூர் அருகே கருணை இல்லத்தில் முதியவர்களை அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்த நிலையில், கருணை இல்லத்திற்கு சீல் வைக்க காட்பாடி வட்டாட்சியர் ஜெகனுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்



  • 14:41 (IST) 12 Oct 2022
    தொடர் பால் நிறுத்த போராட்டம்

    ஒரு லிட்டர் பசும்பால் ரூ.42-க்கும், எருமை பால் ரூ.51-க்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்து, தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது.



  • 14:07 (IST) 12 Oct 2022
    கனிமொழி பேட்டி

    கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் அல்ல. அது அலங்காரமாக இருந்தாலும் சரி, ஆடையாக இருந்தாலும் சரி என்று கூறினார்.



  • 14:06 (IST) 12 Oct 2022
    80 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழருக்கே

    தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 14:03 (IST) 12 Oct 2022
    அமைச்சர் சக்கரபாணி பேட்டி

    22% சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி உள்ளோம். ஒப்புதல் பெறுவதற்காக துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி செல்ல உள்ளார் என சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்தார்.



  • 13:20 (IST) 12 Oct 2022
    16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை,கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:20 (IST) 12 Oct 2022
    நடிகர் அர்ணவ்-க்கு போலீஸ் சம்மன்

    சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்ணவ்-க்கு போலீஸ் சம்மன். நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியது போரூர் அனைத்து மகளிர் காவல்துறை



  • 12:20 (IST) 12 Oct 2022
    5 இளைஞர்களை கைது

    சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் 3000 போதை மாத்திரை, ஊசிகள் பறிமுதல் 5 இளைஞர்களை கைது செய்தது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான குழு தனியார் கல்லூரி எதிரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞர்கள்



  • 12:19 (IST) 12 Oct 2022
    உடல் சதைகளை வெட்டி சாப்பிட்டதாக விசாரணையில் தகவல்

    கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் சதைகளை வெட்டி சாப்பிட்டதாக விசாரணையில் தகவல். ஷாபியின் அறிவுறுத்தலின்படி, தம்பதிகள் நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாக கைதான லைலா அதிர்ச்சி வாக்குமூலம்



  • 11:03 (IST) 12 Oct 2022
    சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

    பள்ளி மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து 'குட்டி காவலர்' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்வர் வாசிக்க 'குட்டி காவலர்' திட்டத்திற்கான உறுதிமொழியை பள்ளி மாணவர்கள் ஏற்றனர் ஊஞ்சல், தேன்சிட்டு ஆகிய சிறுவர் பத்திரிகைகளையும், 'கனவு ஆசிரியர்' என்ற பத்திரிகையையும் முதல்வர் வெளியிட்டார்.



  • 11:02 (IST) 12 Oct 2022
    வருமான வரித்துறை சோதனை

    துக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை என்பவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை. நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராக பாண்டித்துறை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது



  • 10:05 (IST) 12 Oct 2022
    ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் விபத்து

    ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் படுகாயம்



  • 09:47 (IST) 12 Oct 2022
    நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் - நிர்மலா சீதாராமன்

    இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.

    எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம் உள்ளது.

    நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்



  • 09:46 (IST) 12 Oct 2022
    உணவில் பூரான் கிடந்ததாக புகார் - 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

    நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.

    அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேர் அனுமதி. மாணவிகள் சாப்பிட்ட உணவில் பூரான் கிடந்ததாக புகார்



  • 09:40 (IST) 12 Oct 2022
    கோவை தங்கம் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

    வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மாற்றுக் கட்சியில் இருந்தபோதும் தி.மு.க-வில் இணைந்த பின்பும் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் கோவை தங்கம்.

    கோவை தங்கத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 08:27 (IST) 12 Oct 2022
    சென்னையில் இளைஞர் உயிரிழப்பு

    சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்

    கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் வேல்முருகன் உயிரிழப்பு



  • 08:25 (IST) 12 Oct 2022
    முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மரணம்

    முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம்(74) மாரடைப்பு காரணமாக காலமானார்.

    வால்பாறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கோவை தங்கம்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment