பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 350-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
3-ம் சார்லஸ்க்கு முடிசூட்டு விழா
பிரிட்டன் மன்னராக 3-ம் சார்லஸ்-க்கு இன்று முடிசூட்டு விழா. லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் முடிசூட்டு விழா ஏற்பாடுகள் தீவிரம். பிரிட்டன் மன்னர் முடிசூட்டு விழாவில் உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்பு. இந்திய அரசு சார்பில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்
சி.எஸ்.கே – மும்பை மோதல்
ஐ.பி.எல் போட்டி தொடரில் சென்னை- மும்பை அணிகள் மோதும் எல் கிளாசிகோ போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. சென்னையில் இன்று மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளதால் போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு.
டெல்லி – பெங்களூரு மோதல்
ஐ.பி.எல் மற்றொரு போட்டியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சென்னை கொருக்குப்பேட்டையில் குறி கேட்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்
“பூனைக்குட்டி வெளியே வந்தது.. சபரீசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு..” என ஓபிஎஸ் – சபரீசன் சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்வீட் செய்துள்ளார்
சென்னையில், ஐபிஎல் போட்டியின் போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் சந்தித்து பேசிக்கொண்டனர்
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள நிலையில் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அறிவித்துள்ளது
ஐபிஎல் போட்டிகளின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது
சேப்பாக்கத்தில் மும்பை-சென்னை போட்டியை நடிகர் தனுஷ், மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேரில் கண்டு ரசித்தனர்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்
மணிப்பூரில் தற்போது நடைபெற்ற வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது
மன்னர் சார்லஸின் மனைவி கமிலா பிரிட்டனின் ராணியாக முடிசூடினார். ராணி கமிலாவுக்கு வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் சூட்டப்பட்டது
ஆயிரம் ஆண்டுகால தொன்மையை காத்து மன்னர் 3ம் சார்லஸ் முடிசூடினார். மன்னர் சார்லஸ்-க்கு செயின்ட் எட்வர்ட் கிரீடம் சூட்டப்பட்டது. மன்னர் சார்லஸ் அனைத்து அரச ஆபரணங்களையும் அணிந்து அரியணையில் அமர்ந்துள்ளார். 17ம் நூற்றாண்டில் இருந்து 6 பேர் இந்த மணிமுடியை அணிந்துள்ளனர்
தமிழகத்தில் கடலோர கிராமங்களில், கடல் அரிப்பை தடுக்க செயற்கை பாறை அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து மும்பை – சென்னை போட்டியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டு ரசித்து வருகிறார்
ஒடிசாவில் அரசு பல்கலைகழக ஆடிடோரியத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியபோது திடீர் மின்தடை கேட்போர் கூடத்துக்குள் மின்சார விநியோகம் தடைப்பட்ட போதிலும், இருளில் உரையைத் தொடர்ந்த குடியரசுத் தலைவர்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவானது. வரும் 8ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் – வானிலை மையம்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிப்பு. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு
அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் 'க்யூ ஆர் கோடு' வசதி – அமைச்சர் சக்கரபாணி
இந்த மாதத்திற்குள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 'QR CODE ' வசதி நடைமுறைப்படுத்தப்படும் – அமைச்சர் சக்கரபாணி
வேங்கை வயல் விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. டி.என்.ஏ பரிசோதனை நாளை நடைபெற உள்ளது – வேங்கைவயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அமைத்த தனிநபர் ஆணைய தலைவர் சத்தியநாராயணா பேட்டி
மத்திய பிரதேசத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவிப்பு
2024 மக்களவை தேர்தலுக்காக 'திப்பு' என்ற படம் தயாராகிக் கொண்டிருக்கிறது – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காவலர் குழந்தைகளுக்கான பள்ளியை திமுக அரசு மூட துடிப்பதா? – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மேலக்கோட்டையூரில் அதிமுக ஆட்சியில் காவலர் குழந்தைகள் பள்ளி அமைக்கப்பட்டது
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் மேலக்கோட்டையூர் காவலர் பள்ளி வளாகத்திற்கு மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு காவலர் குழந்தைகளுக்கான பள்ளியை தரம் உயர்த்தி தொடர்ந்து நடத்திட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
திராவிட மாடல் என்றால் என்ன என கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல போவதில்லை, மக்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் பதில்; எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல்.
சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது, மக்களுக்கு சம்பந்தமில்லாத பொறுப்பில் உள்ளவர்களுக்கு திராவிட மாடல் என்றால் தெரியாது – மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்களுக்கு சம்மந்தமில்லாத பதவியில் இருப்பவர்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை-ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி.
இரண்டு ஆண்டுகளை முடித்துவிட்டு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். எட்டு கோடி மக்களும் நன்மை அடையும் ஆட்சியாக திமுக அரசு அமைந்துள்ளது – ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
மேகமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அரிகொம்பன் யானை நடமாட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மேகமலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரிகொம்பன் நடமாட்டம் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுக அரசின் இரண்டாண்டு சாதனை தொடர்பான கண்காட்சி தொடக்கம்
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் அருகே விபத்துக்குள்ளான துருவ் ஹெலிகாப்டர் செயல்பாடு நிறுத்தம்
ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவிப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.664 குறைவு
ஒரு கிராம் தங்கம் ரூ.5,692க்கும், சவரன் ரூ.45,536க்கும் விற்பனை
வேங்கை வயல் வழக்கில் நேரடி விசாரணையை தொடங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா
நேரடி விசாரணையை தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
கத்தாரில் நடைபெறும் தோஹா டையமண்ட் லீக் தொடரில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
ஈட்டி எரிதலில் 88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அசத்தல்
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது
நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று திரையரங்குகள் முற்றுகை
சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார்
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், அரசமைப்பு சட்டப் பிரிவு 355 அமல்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசமைப்பு சட்டப் பிரிவு 355-ஐ அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.
இதுவரை 20,000க்கும் மேற்பட்டோர் மணிப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 600க்கும் மேல் அண்டை மாநிலங்களான அசாம், மிசோரத்துக்கு தப்பித்து சென்றுள்ளனர்.
சட்டப் பிரிவு என்பது உள்நாட்டு வன்முறைகளை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் பிரிவாகும்.
டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்தும் திட்டம் அமல்
ரயில்களில் டிக்கெட் பரிசோதனையின் போது வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்தும் திட்டம் சோதனை முறையில் அமலானது. முதற்கட்டமாக மும்பையில் 50 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகார்களில் யார் மீது தவறு உள்ளது என்பதை கண்டறிய முடியும் எனவும், விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தகவல்.