பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு
ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மணிப்பூர் வன்முறை- நிவாரணம் அறிவிப்பு
மணிப்பூரில் வன்முறையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என முதல்வர் பைரேன் சிங் அறிவிப்பு. இந்த வன்முறையில் 60 பேர் உயிரிழந்த நிலையில் 8 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து சமூக மக்களின் கருத்துகளும் கேட்டபின் முடிவு எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்.
ஐ.பி.எல் டி20
இன்று ஐ.பி.எல் டி20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு. நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் டி.ஆர்.பி. ராஜாவுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் வரும் 11ம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.
பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு. நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
“பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப்பட்டுள்ளது” என இந்திய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இன்று (மே 9) முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். அவர் அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியுற்ற பின்னர் அவர் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் உதயநிதி ட்வீட்: “சவுதி அரேபியாவிலுள்ள பள்ளிகளில் 3 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. அங்கு தமிழ் பாடநூல்கள் கிடைப்பதில்லை என்பதால், கழக அயலக அணியின் முன்னெடுப்பில், தி.மு.க இளைஞரணி அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமிருந்து 700 தமிழ் மொழிப்பாடநூல்களை ரூ.79,250-க்கு வாங்கினோம். அவற்றை, சவுதியில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் வண்ணம் அயலக அணி நிர்வாகிகளிடம் இன்று ஒப்படைத்தோம். மாணவர்களுக்கு வாழ்த்துகள் – திக்கெட்டும் தமிழ் பரவட்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பணியற்றும் அம்மாநில தொழிலாளர்களுக்கு நாளை (மே 10) ஊதியத்துடன் விடுமுறை அளிக்குமாறு தொழிலளர் ஆணையத்தின் உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
100% வாக்கு பதிவை உறுதி செய்யும் விதமாக நீலகிரி மாவட்ட தொழிலாளர் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளதாக தகவல்!
“சூடான் நாட்டில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா?”. உறுதிப்படுத்த வேண்டும் என விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதார துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி செலுத்தாவிட்டால், மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே. சிவக்குமார், சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து சூடம் காட்டி பூஜை செய்தார்.
மதுரை தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. தகவல் அறித்த தீயணைப்பு மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், முறிந்து விழுந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உணவு டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைன் உணவு டெலிவரி போர்வையில் கஞ்சா டெலிவரி செய்ததாக பத்மநாபன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு மே 11ம் தேதி முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வரவழைக்கப்பட்ட மேலும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளது. மத்திய பிரதேசம், குனோ தேசிய பூங்காவில் இந்தப் பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது. கடந்த 3 மாதங்களில், 3 சிறுத்தைகள் மரணம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தின் தென்காசி, நெல்லை, குமரி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 4% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து பேசி வருவதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை நீதிமன்றத்தின் முன் இருக்கும் போது, இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடக்கூடாது, இதுபோன்ற அரசியலை நாங்கள் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்தினா அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது
தமிழகத்தில் 6 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையில் ஆயுதங்கள், சட்டவிரோத ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார் ராணுவத்தை விமர்சித்து பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் இம்ரான்கான் கைது செய்யப்பட்டபோது வழக்கறிஞர்கள் – காவல்துறையினர் இடையே மோதல்
வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் சான்றிதழ்களை, மாணவ – மாணவிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்” சாதி, இருப்பிடம், வருமானச் சான்றிதழ்களை முன்னுரிமை கொடுத்து வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல். காலதாமதமின்றி சான்றிதழ்களை வழங்கிட வருவாய் வட்டாட்சியர், கோட்டாட்சியர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவு
“ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு மேலும் ஓராண்டு விளையாடுவேன்” என்று தோனி தன்னிடம் கூறியதாக நிகழ்ச்சி ஒன்றில் சென்னை முன்னாள் வீரர் ரெய்னா கூறியுள்ளார்.
தெற்காசியாவின் உற்பத்தி மையமாகத் தமிழ்நாட்டை உயர்த்தும் நமது முயற்சிகளின் முக்கிய நகர்வாக, உலகின் முன்னணி மின்னணுவியல் நிறுவனமான மிட்சுபிஷியின் Air Conditioners மற்றும் Compressors ஆலையைத் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினேன். 1891 கோடி ரூபாய் முதலீட்டில் ஈராயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவுள்ள இத்தொழிற்சாலையால் கும்மிடிப்பூண்டி பகுதியின் வளர்ச்சி வேகம் பெறும்
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுரூஷ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது; இத்திரைப்படம் வரும் ஜூன் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநரை சந்திக்கவில்லை. அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் முடிவெடுப்பார் – அமைச்சர் துரைமுருகன்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெறுகிறது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ல் துணைத்தேர்வு துவங்கும் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்து, ரூ. 45,736க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,717க்கும் விற்பனையாகிறது,
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்; மணிப்பூர் அரசு மற்றும் தமிழ் சங்க பிரதிநிதிகள் மூலம் மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
+2 பொதுத்தேர்வு முடிவில் 600/600 பெற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி நந்தினி, 'படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்' எனப் பேட்டியில் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன்; எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள் தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
ஆவினில் செறிவூட்டப்பட்ட பசும் பால் அறிமுகம். வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட பசும் பால் இன்று முதல் அறிமுகம் . செறிவூட்டப்பட்ட பால் பர்ப்பிள் நிற பாக்கெட்டில் கிடைக்கும் – ஆவின் நிர்வாகம்
சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். எந்த காலத்திலும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படமாட்டார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சாமி தரிசனம்.
ஜப்பான் நிறுவனத்தின் முதலீடு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. புதிதாக அமையவுள்ள தொழிற்சாலையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் 60% முன்னுரிமை- முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி . உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதல்வர் கூறினார். மாணவி நந்தினி தந்தி டிவிக்கு பேட்டி
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு இன்று முதல் வரும் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழப்பு
50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் கோடை விடுமுறை காலத்திலும் தனியார் பள்ளி செயல்படுவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு
சசிகலாவை கூடிய விரைவில் சந்திப்பேன் – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு
இந்து கடவுகளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார்
தடை செய்யப்பட்டுள்ள பிஎஃப்ஐ அமைப்பின் மதுரை மண்டல தலைவரை கைது செய்த என்.ஐ.ஏ
நேற்று முன் தினம் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் இருந்து 165 கேள்விகள் கேட்பு
மொத்தமுள்ள 200 கேள்விகளில் 165 கேள்விகள் தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் இருந்து கேட்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும்.
அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு
லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை வென்றார் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி
லாரஸ் விருதை 2வது முறையாக வென்றார் லியோனல் மெஸ்ஸி
லாரஸ் உலகின் சிறந்த அணிக்கான விருது அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு வழங்கப்பட்டது
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும்
வடமேற்கு நோக்கி நகர்ந்து 12ம் தேதி காலை வங்கதேசம் – மியான்மர் கடற்கரை நோக்கி நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது – வானிலை மையம்
தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்பான இடங்களில் என்.ஐ.ஏ மீண்டும் சோதனை
சென்னை, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை