கோவையில் வருகிற 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ‘ரோடு ஷோவுக்கு’ அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
பாதுகாப்புக் காரணங்களுக்காக பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்திருந்தது காவல்துறை. அனுமதி கோரி கோவை மாவட்ட பாஜக தலைவர் ஜெ.ரமேஷ்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
-
Mar 15, 2024 22:23 ISTஇந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கி அவசர செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கட்சியில் தலைவரின் முழு அதிகாரமும் பொதுச் செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது. இவரின் தலைமையிலேயே கட்சி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 15, 2024 21:34 ISTஅ.தி.மு.க. கொடி, சின்னம் பயன்படுத்துவது தொடர்பாக வழக்கு: திங்கள்கிழமை தீர்ப்பு
அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
-
Mar 15, 2024 21:21 ISTமயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் கைது
தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்ததாக அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அகோரத்தின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
-
Mar 15, 2024 20:45 ISTதமிழக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யலாம்
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்ய இனி 60 நாடகளுக்கு முன்னர் முன்படிவு செய்யலாம். 30 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்யும் நடைமுறை 60 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. பணிகள் www.tnstc.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
-
Mar 15, 2024 19:54 ISTசென்னை; மார்ச் 17ல் 44 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. -
Mar 15, 2024 19:02 ISTதமிழ்நாட்டில் பா.ஜ.க. தோற்கும்; கே. பாலகிருஷ்ணன்
"நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து துடைத்தெறியப்படக்கூடிய கட்சி பாஜகவாகத்தான் இருக்கும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
Mar 15, 2024 18:52 ISTஇரட்டை இலை சின்னம் வழக்கு; நாளை உத்தரவு
இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை (மார்ச் 16) டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
-
Mar 15, 2024 18:15 ISTதெலங்கானா முன்னாள் முதலவர் சந்திரசேகர் ராவ் மகள் கைது : அமலாக்கத்துறை நடவடிக்கை
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மகள், கவிதாவின் இல்லத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Mar 15, 2024 17:48 ISTகோவையில் பிரதமர் பேரணிக்கு அனுமதி : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பிரதமர் பேரணிக்கு அனுமதி கோரி கோவை மாவட்ட பாஜக தலைவர் ஜெ.ரமேஷ் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். பாதுகாப்பு காரணங்களால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாஜக சார்பில் வழக்கு கோவை மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
-
Mar 15, 2024 17:47 ISTமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டி
-
Mar 15, 2024 17:46 ISTபிரதமர் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து வழக்கு :
கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை விளக்கம் அளித்திருந்த நிலையில, எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளது. கோவை மாவட்ட பா.ஜ.க மனுதாக்கல் செய்துள்ளது.
-
Mar 15, 2024 17:08 ISTமதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக மீண்டும் சு.வெங்கடேசன்?
மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிட உள்ளதாகவும், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
Mar 15, 2024 17:05 ISTசி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Mar 15, 2024 16:29 ISTபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
மானாமதுரை அருகே, பள்ளி மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்த நிலையில், மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Mar 15, 2024 16:26 ISTநடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சையாக பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Mar 15, 2024 15:49 ISTஇ.டி அதிகாரி அங்கித் திவாரி வழக்கு: 2வது முறையாக தள்ளுபடி
லஞ்ச வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு 2ஆவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. "சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டிய அமலாக்கத் துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது" என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
Mar 15, 2024 15:49 ISTஇ.டி அதிகாரி அங்கித் திவாரி வழக்கு: 2வது முறையாக தள்ளுபடி
லஞ்ச வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு 2ஆவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. "சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டிய அமலாக்கத் துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது" என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
Mar 15, 2024 15:47 ISTஅ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி இன்றே இறுதி
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி இன்றே இறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா. ஆலோசனைக்குப் பின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர்.
-
Mar 15, 2024 15:43 ISTகோவையில் மோடி ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி மறுப்பு!
கோவையில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க மேல்முறையீடு செய்துள்ளது. SPG அதிகாரிகளுடன் காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
-
Mar 15, 2024 14:53 IST"பா.ஜ.க வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்" - மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
-
Mar 15, 2024 14:51 ISTவேங்கைவயல் விவகாரம்: சி.பி.சி.ஐ.டி மனு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் மூன்று நபர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனு அளித்துள்ளனர்.
-
Mar 15, 2024 13:55 IST'மோடி ஞானியாக மாறியுள்ளார்': அண்ணாமலை பேச்சு
"குமரியில் 1995ல் ஏக்தா யாத்திரை துவங்கிய போது பிரதமர் மோடிக்கு முக்கிய பங்கு இருந்தது. 1892ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார்.
தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார். தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் மோடி பிரதமர் ஆவார்" என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
Mar 15, 2024 13:53 ISTநகைச்சுவை நடிகர் மருத்துவமனையில் அனுமதி
பிரபல நகைச்சுவை நடிகர் சேசு, மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
-
Mar 15, 2024 13:53 ISTதமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம்
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்கிறது.
-
Mar 15, 2024 12:51 ISTஎடியூரப்பா மீதான போக்சோ வழக்கு: சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற உத்தரவு
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை, குற்றப் புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி) விசாரணைக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவு
-
Mar 15, 2024 12:49 ISTமக்களவை தேர்தல் தேதி: நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும்
மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்
-
Mar 15, 2024 12:42 ISTநமோ செயலி மூலம் தமிழியில் பேசும் மோடி
பொதுகூட்டம் முடிந்த பிறகு, மோடி பேசியது ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, எக்ஸ் தளத்தில் வீடியோவாக வெளியாகும். மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் பேசும் எல்லா உரையையும் இனி ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.
-
Mar 15, 2024 12:37 ISTஇந்தியா கூட்டணி பெண்களை வஞ்சிக்கிறது- மோடி
தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும்; வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும்; இந்தியா கூட்டணி பெண்களை வஞ்சிக்கிறது. பா.ஜ.க அரசு பெண்களின் முன்னேற்றதிற்காக உழைக்கிறது.- மோடி
-
Mar 15, 2024 12:30 ISTமீனவ மக்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது
கன்னியாகுமரி மக்களை பாஜக நேசிக்கிறது; திமுக காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது; மீனவ மக்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது; தமிழ்நாட்டில் துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது” - மோடி
-
Mar 15, 2024 12:29 ISTதமிழ்நாட்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது
“தமிழ்நாட்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது; ரூ.70,000 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன; ரயில்வே பணிகளுக்காக ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”-பிரதமர் நரேந்திர மோடி
-
Mar 15, 2024 12:28 ISTநாட்டை பிளவுபடுத்த நினைத்தால் மக்கள் தூக்கி எறிந்துவிடுவர் - பிரதமர் மோடி
நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பியிருக்கிறது. நாட்டை பிளவுபடுத்த நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். மோடி
-
Mar 15, 2024 11:53 ISTடி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் பங்கேற்கவில்லை
பா.ஜ.க-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
-
Mar 15, 2024 11:27 ISTதமிழக வந்த பிரதமர் மோடி
ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி, சாலை வழியாக, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார்.
-
Mar 15, 2024 11:21 ISTகன்னியாகுமரி பா.ஜ.க பொதுக் கூட்டம் : ரத்குமார், ராதிகா சரத்குமார் வகை
குமரியில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார் மேடைக்கு வந்தனர்
-
Mar 15, 2024 11:17 ISTதேர்தல் பத்திர விவகாரத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
தேர்தல் பத்திர விவகாரத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தேர்தல் பத்திர எண்களை வெளியிட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு .தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி.
-
Mar 15, 2024 10:59 ISTஎடியூரப்பா பேட்டி
என் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன். புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது -
போக்சோ வழக்கு குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேட்டி
-
Mar 15, 2024 10:36 ISTதயாநிதி மாறன் பேட்டி
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளின் போது வராத பிரதமர் நரேந்திர மோடி தற்போது வருகிறார் என்பது வருந்தத்தக்க கூடிய செயல்;
மேலும் பிரதமர் மோடியின் சுயநலத்தை காட்டுகிறது;
மக்களவைத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக மட்டுமே தமிழ்நாடு வருகிறார் மற்றபடி மக்கள் மீது அக்கறை இல்லாதவர் பிரதமர் மோடி”
- சென்னை யானை கவுனி பகுதியில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பேட்டி
-
Mar 15, 2024 10:36 ISTதங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
ஒரு கிராம் தங்கம் ரூ.6,125க்கும், சவரன் ரூ.49,000க்கும் விற்பனை
-
Mar 15, 2024 10:13 ISTகாலை 11 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையர்கள் கூட்டம்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில், புதியதாக பொறுப்பேற்ற 2 தேர்தல் ஆணையர்கள், ஆணைய செயலர்கள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்
-
Mar 15, 2024 09:39 ISTஅதிகமாக ரூ.1368 கோடி நன்கொடை அளித்த நிறுவனம்
தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் வழங்கிய தரவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு
Future Gaming and Hotel services நிறுவனம் மிக அதிகமாக ரூ.1368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது
Mega Engineering and infrastructure limited நிறுவனம் 821 கோடி ரூபாயும், வேதாந்தா நிறுவனம் ரூ.375.65 கோடியும் வழங்கி உள்ளன
Haldia Energy Limited ரூ.377 கோடியும், Quick Supply chain private Limited ரூ.410 கோடியும் வழங்கி உள்ளன
-
Mar 15, 2024 09:29 ISTதமிழக மீனவர்கள் கைது
நாகையைச் சேர்ந்த 15 மீனவர்கள் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Mar 15, 2024 09:00 ISTபிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருவதை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மீனவர்கள் மீன் பிடிக்க தடை
7 கடற்கரை கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடலுக்கு செல்லவில்லை
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைப்பு
-
Mar 15, 2024 08:58 ISTமீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா? ப.சிதம்பரம்
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று கடந்த வாரம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தேன். அது இன்று செய்யப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு (மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்) விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா?
எல்பிஜி சிலிண்டரின் விலையை பாஜக அரசு ரூ.700 உயர்த்தி, தேர்தலுக்கு முன்பு ரூ.100 குறைத்தது. பெட்ரோல், டீசல் விஷயத்திலும் இதே மாதிரியான கையாடல்தான் கடைப்பிடிக்கப்படுகிறது
-ப.சிதம்பரம்
-
Mar 15, 2024 08:35 ISTபாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்ற கட்சிகள்
தேர்தல் நன்கொடை பத்திரங்கள் அளித்த விவரத்தில், அதானி, அம்பானியின் நிறுவனங்கள் இடம்பெறவில்லை.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானைச் சேர்ந்த HUB Power company என்ற நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளன.
-
Mar 15, 2024 08:13 ISTஎடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் நடவடிக்கை
-
Mar 15, 2024 07:38 ISTகன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி இன்று வருகை
மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி இன்று காலை கன்னியாகுமரி வருகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு காலை 11 மணி அளவில் வரும் பிரதமர், அங்கிருந்து காரில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
-
Mar 15, 2024 07:37 ISTதேர்தல் பத்திரம்- மார்ட்டின் நிறுவனம் முதலிடம்
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கியதில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் முதலிடம்
ரூ.1,368 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது, மார்ட்டினின் Future Gaming and Hotel services நிறுவனம்
-
Mar 15, 2024 07:34 ISTபாமக அறிவிப்பு
தைலாபுரத்தில் இன்று நடைபெற இருந்த பாமகவின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருந்தது
-
Mar 15, 2024 07:34 ISTஅது எப்படி என்பது பரம ரகசியம்- ஓபிஎஸ்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதி; அது எப்படி என்பது பரம ரகசியம்
- ஓ.பன்னீர்செல்வம்
-
Mar 15, 2024 07:33 ISTதிருப்பதியில் நிலஅதிர்வு
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் நேற்று இரவு 8.43 மணி அளவில் நிலஅதிர்வு;
ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவு
- தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.