பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தாக்கல்
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் இன்று மீண்டும் தாக்கலாகிறது. முதல்வர் ஸ்டாலின் மசோதாவை தாக்கல் செய்து பேசுகிறார். ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு அளித்த பதில்களை பேரவையில் விளக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. பேரவையில் 2-வது முறையாக மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனவர்கள் 12 பேர் கைது
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே 2 விசைப்படகுகளில் சென்று மீன் பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் 12 பேர் கைது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மோசமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி உடன் நிற்பதாக கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டில் நீதி கிடைக்கும் எனவும் கமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
மணிப்பூர், மொய்ராங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது
உளுந்தூர்பேட்டை அருகே கூத்தனூர் மற்றும் வடகுரும்பூர் கிராமங்களில் சுமார் அரை மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை அப்பகுதி மக்கள் உற்சாகமாக ரசித்தனர். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளும் காங்கிரஸ், ராகுல் காந்திக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தும்.
ராகுல் காந்தி தனது அவதூறு பேச்சுக்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மகாராஷ்டிரா பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார்.
அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவளிப்பதாக டெலிபோனில் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரை மற்றும் கோரிக்கை நிராகரிப்பு; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாநில அரசின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளாததால், ஏற்றுக்கொள்ளவில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்தார்.
இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 348(1)-ன் கீழ் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழி ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்; ஆனால், சட்டப்பிரிவு 348(1)(a)-ன் கீழ் மாநில உயர் நீதிமன்றங்கள் உரிய அனுமதி பெற்று வழக்காடு மொழியை பிராந்திய மொழிகளில் மாற்றிக்கொள்ளலாம்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார்.
மத்திய அரசு அலுலகங்களில் இந்தியை 100% அமல்படுத்துவதை வலியுறுத்தி தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழிக்கு அமலாக்க குழுவின் கூட்டத்தில் செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியில் இந்தி கற்றுக்கொள்வதற்கான வசதிகள் மற்றும் இந்தி இலக்கணம், இலக்கியம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரமான பேச்சைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தாது என்று சூரத் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து மாநகராட்சியில் அளித்தால், பாட்டிலுக்கு ரூ. 1 வழங்கப்படும் சோதனை முயற்சியாக நெல்லை டவுன் பகுதிகளில் மட்டும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து பணம் பெறலாம் என்று நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ண மூர்த்தி அறிவித்துள்ளர்.
2006 முதல் வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு, 2021 நவம்பரில் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்து சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.
சி.வி.சண்முகத்தின் மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவல்துறை பாதுகாப்பை மறு ஆய்வு செய்த போது அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை பதில் அளித்துள்ளது.
தாம்பரம் புறவழிச்சாலையில், மழைக்காக இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர் நாகராஜ்(29) மீது அரசு பேருந்து மோதியதில் காவலர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு! பெங்களூரு – கோயம்பேடு அரசு பேருந்து ஓட்டுநர் காளிதாஸ் கைது!
“கல்வி சுற்றுலா, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” கல்வி சுற்றுலா- உயர்நீதிமன்றம் அதிரடி
நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது செங்கல்பட்டு நீதிமன்றம் கடந்த வருடம் கார் விபத்து வழக்கில் யாஷிகா ஆஜராகாததை தொடர்ந்து பிடிவாரண்ட்
“கோயில் அறங்காவலர்கள் தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்” சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோவை ரயில் நிலையம் முன்பு 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு – வாகன ஓட்டிகள் அவதி மறியலில் ஈடுபட்ட காங். கட்சியினரை கைது செய்து வரும் போலீசார்
காரைக்கால் பகுதியில் போலி நகை விற்பனை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட 4 பேருக்கு 3 நாட்கள் காவல் துறை விசாரணை – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
விழுப்புரம் அன்பு இல்லம் ஆசிரம நிர்வாகிகள் 7 பேர் ஜாமின் கோரிய மனு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட, 28 மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வடமலை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.
எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாக கொண்டது. உண்மையே கடவுள், அதை அடைய அகிம்சையே வழி- அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மகாத்மா காந்தியின் வாக்கை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி ட்வீட்
ராகுல் காந்திக்கு எதிராக சூரத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், கும்பகோணத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி. தற்போதைக்கு என் தலைமையிலான கூட்டணிக்கு யாரும் வரமாட்டார்கள். பாஜகவை வர விடாமல் தடுக்க மாநில கட்சிகள் இணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும் – சீமான் பேட்டி
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதா மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றியிருப்பதை வரவேற்கிறேன் டிடிவி தினகரன் ட்வீட்
தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கூட்டணி கட்சிகளை வளர்க்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். அரசியலை பொறுத்த வரை யாரும் நண்பர்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டால் தான் பாஜகவுக்கு வளர்ச்சி. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என் மீது வைக்கும் விமர்சனங்களை வரவேற்கிறேன்.
பாஜக வளர்ச்சியை அவர்கள் ரசிக்கவில்லை, அவர்கள் கட்சி வளர்ச்சியை நாங்கள் தடுக்கிறோம் என நினைக்கிறார்கள்- டெல்லி செல்லும் முன் அண்ணாமலை சென்னையில் பேட்டி
டெல்லி, பீகார்,
சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீது ஓ.பி.எஸ் பேசியதற்கு இ.பி.எஸ் எ.திர்ப்பு . சட்டப்பேரவையில் அதிமுக சார்பாக என்று ஓபிஎஸ் பேசியதற்கு ஈபிஎஸ் எதிர்ப்பு . கட்சிக்கு ஒருவரை தான் பேச அனுமதிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை. குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு . மேல் முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு ஜாமின் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் சூதாட்டத்தால் 41 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கனத்த இதயத்துடன் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். 'என் தற்கொலை கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த சுரேஷ் கடிதம் எழுதி வைத்துள்ளார்'. தற்கொலையை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசிடம் உள்ளது.
கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவியை திருமணம் செய்த கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகன் கடந்த 21ம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக பெண்ணின் தந்தையான அதிமுக கிளை செயலாளர் சங்கர்
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் மீண்டும் தாக்கல்
ஏற்கனவே தமிழக அரசு அனுப்பிய மசோதாவை, ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், மீண்டும் தாக்கல்
மசோதா மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு இன்றே நிறைவேற்றப்பட உள்ளது
மசோதா குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்விகள், அதற்கு அரசு அளித்த விளக்கம் பற்றி எடுத்துரைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
பட்டாசு ஆலைகள் லாப நோக்கில் செயல்படுவதால் விபத்து ஏற்படுகிறது
காஞ்சிபுரம் விபத்து தொடர்பாக இழப்பீடும், உரிய சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது- சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம்
பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார்.
அதிமுகவின் புதிய விதிகள் செல்லாது, எம்ஜிஆர் வகுத்த அதிமுக விதிகள் தான் செல்லும்- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
காஞ்சிபுரம் பட்டாசு குடோன் வெடி விபத்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு
சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.44,320க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கம் ரூ. 5,540க்கு விற்பனை
ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்
சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கலாக உள்ள நிலையில் டெல்லி பயணம்
காஞ்சிபுரம், குருவிமலை பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை
பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் விடுமுறை அறிவிப்பு
அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து கடலூர் அழைத்து வரப்பட்ட 5 பேர் தப்பி ஓட்டம்
தப்பி ஓடிய 5 பேரை போலீசார் உதவியுடன் தேடி வரும் தனியார் தொண்டு நிறுவனம்
பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம்
மத்திய, மாநில அரசு வேலை கிடைக்க பல்வேறு வழிகள் உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்கிறார்
வருகிற 26-ம் தேதி சந்திக்க இருந்த நிலையில், முன்கூட்டியே இன்று சந்திக்க உள்ளார்