100% ஹெல்மெட் விழிப்புணர்வை முன்னெடுத்து கோவையில் சிறப்பு முகாம் நடத்தி தணிக்கை செய்து ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதித்து போக்குவரத்து பயிற்சி பூங்காவில் சிறப்பு வகுப்பு எடுத்தனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சாலை போக்குவரத்து தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த வாரம் சாலை பாதுகாப்பு வார விழா விமர்சையாக அனுசரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
மாநகர காவல் துறை அதன் ஒரு பகுதியாக 100 % ஹெல்மெட் என்ற விழிப்புணர்வை முன்னெடுத்து என்று மாநகரில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
அதாவது ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதித்து நாள் முழுவதும் சாலை போக்குவரத்து தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என மாநகர காவல் துறை கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த வகையில் கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் 15 இடங்களில் இன்று சிறப்பு தணிக்கை முகாம் நடத்தப்பட்டது. 400 காவலர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வளர்கள் தணிக்கை பணியில் ஈடுபட்டனர் .
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் தணிக்கை செய்து பிடிக்கப்பட்டு ஆங்காங்கே இருந்த முகாம்களிலேயே அமர வைக்கப்பட்டு ஹெல்மட் முக்கியத்துவம் குறித்தும், சாலை விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இளைஞர்கள் சிலர் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள “குழந்தைகள் போக்குவரத்து பயிற்சி பூங்கா” விற்கு அழைத்துச் செல்லப்பட்டு சாலை விதிகள் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இது போன்ற சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான்
கோவை மாவட்டம்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 250-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பழனி கோயில் குடமுழுக்கு விழா
16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம். குடமுழுக்கு விழாவை நேரில் காண முன்பதிவு செய்த 2000 பேருக்கு மட்டும் அனுமதி. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பு.
நியூசிலாந்து – இந்தியா முதல் டி20
நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
தெலுங்கு சினிமாவின் பிரபல பின்னணி குரல் கலைஞர் சீனிவாச மூர்த்தி சென்னையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்த தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில், தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம் பிடித்தது சாம்பியன் கோப்பையுடன் அணியினரை நேரில் அழைத்து டி.ஜி.பி.சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்தார்
கும்பகோணம் அருகே ரவிச்சந்திரன் என்பவரது பைக்கின் எஞ்சினுக்குள் புகுந்த நல்ல பாம்பு குட்டியை, தீயணைப்புத் துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர். மெக்கானிக் ஒருவரை வரவழைத்து, ஒவ்வொரு பாகங்களாக கழற்றி, பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்!
குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் விதித்த உத்தரவை ரத்து உயர்நீதிமன்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் நாம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தினேம்; அதன் பிறகு காஷ்மீரில் யாரும் இறப்பதில்லை, எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை. அவர்களுக்கு நாம் யார்? என்ன செய்வோம் என்பது தெரிந்து விட்டது என ஆளுநர் ரவி கூறியுள்ளார்
ஜனவரி 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.727 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்து 573.727 பில்லியன் டாலராக உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டெல்லி பல்கலைகழகத்தில் வெளி ஆட்கள் புகுந்துள்ளதாகவும் அவர்கள் பிபிசியின் மோடி தொடர்பான ஆவணப் படத்தை திரையிட முயன்றதாகவும் பல்கலைக்கழக பதிவாளர் விகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
திருப்பூரில், வடமாநில இளைஞர்கள் சிலரை தாக்குவதாக வெளியான வீடியோ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று வடமாநில தொழிலாளர்கள் சிலரை தாக்குவது போன்ற வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் அடுக்கு மாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். டான்ஸர் ரமேஷ் டிக் டாக்கில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி பதிவேற்றி வந்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார். அவரின் தற்கொலை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பிபிசியின் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ஆவணப் படத்தை திரையிட இருந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக இங்கு ஆவணப் படத்தை திரையிட பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாமில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாணவர்கள் சாப்பிட்ட உணவு, தனியார் கேட்டரிங் சர்வீஸில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.
மலைப் பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்திய நிலையில் பணிகள் சிறப்பாக உள்ளது என மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்றுவரும் சூழலில் ரஷ்யாவுக்கு கொரோனா தடுப்பூசி, ரோபோக்கள் ஏற்றுமதி செய்ய ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது.
சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் தமிழ்நாடு அரசை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடுசெய்யும் வகையில் நாளை சனிக்கிழமை (ஜன.28) சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸின் முன்னாள் மூத்தத் தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங் மராட்டிய மாநில ஆளுனராக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸில் இருந்து விலகி பின்னர் தனியாக கட்சித் தொடங்கி அந்தக் கட்சியை பாஜகவுடன் இணைந்தவர் ஆவார்.
மராட்டிய ஆளுனர் பகத்சிங் கோஷ்யாரி ஆளுனர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.
இந்திய கிரிக்கெட்டர் அக்ஷர் பட்டேல், மேகா பட்டேல் திருமணம் இன்று நடைபெற்றது.
இதில் நட்சத்திரங்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பி.பி.சி. தயாரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ஆவணப் படத்தை திரையிட டெல்லி பல்கலைக்கழகத்தில் அனுமதி இல்லை.
அதையும் மீறி படத்தை திரையிட துணிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாக ஒழுங்குகுழு அதிகாரி அபி அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இன்று பாரத் ஜோடோ யாத்திரையை கைவிட்டார். இது தொடர்பாக அவர், “பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றிலும் சரிந்துள்ளதாக எனது பாதுகாவலர்கள் கூறினார்கள்.
நான் எனது பாதுகாவலர்களுக்கு எதிராக எதுவும் கூற இயலாது. இன்று நான் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்திவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் 135 பேர் உயிரிழந்த மோர்பி பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணத்தை கொட்டி தேர்தலில் வெற்றி பெற முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
நடிகர் சிம்பு கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க இருந்தார். இந்தப் படத்தில் இருந்து தற்போது அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு கடைசியாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
உலக பணக்காரர் பட்டியலில் கௌதம் அதானி 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி அறிக்கை வெளியான நிலையில் அதானி பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
வெள்ளிக்கிழமை அதிகாலை வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் வரை சந்தை மூலதனத்தை இழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் 29 வயதான சிவபிரசாத் என்பவர் போட்டியிடுகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும் – சென்னை வானிலை மையம் தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – அதிமுகவில் கூடுதலாக மேலும் 6 பேரை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்து ஈபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக ஆலோசனை
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா(86) காலமானார் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜமுனா
சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை – சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 44 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக சிபிசிஐடி தரப்பு தகவல் போலீசார் தரப்பில் அவகாசம் கோரியதால் விசாரணையை பிப்.24ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம். புலன் விசாரணைக்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது;ஆதாரம் சேகரிக்க கால அவகாசம் தேவை என போலீசார் தரப்பில் கோரிக்கை
இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடிய இ.பிஎஸ். ஈரோடு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால்,விரைந்து விசாரிக்க கோரிக்கை. திங்கட்கிழமை முறையிட இ.பி.எஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.
சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் மீது இடிந்து விழுந்ததால் பரபரப்பு
கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மதுரையை சேர்ந்த பிரியா என்பவர் உயிரிழப்பு
கலையுலகிலும், அரசியல் உலகிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியவர் ஜூடோ ரத்னம்
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் – முதல்வர் ஸ்டாலின்
திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
ஜூடோ ரத்னத்தின் உதவியாளர்கள் நிறைய பேர் சண்டை பயிற்சியாளராக இருக்கிறார்கள்
சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்னம்
உதவியாளர்களின் பாதுகாப்பை எப்போதும் கவனத்தில் கொண்டு சண்டை பயிற்சி மேற்கொள்வார்
93 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளார்; அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் – ரஜினி
பிரதமர் மோடி குறித்த பி.பி.சி ஆவணப்படம் திரையிட சென்னை பல்கலைக்கழகம் அனுமதி மறுப்பு
பிரதமர் மோடி குறித்தான பி.பி.சி ஆவணப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழகம் அனுமதி மறுப்பு. பல்வேறு உயர்கல்வி நிலையங்களிலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் ஆவணப்படத்தை திரையிட முடிவு செய்திருந்த நிலையில் அறிவிப்பு
16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்று சாமி தரிசனம்.
ஹெலிகாப்டரில் இருந்து கோபுர கலசங்கள் மீது மலர்கள் தூவப்பட்டது. பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் சுவாமி தரிசனம்
தமிழில் மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்
பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் சுவாமி தரிசனம்
16 ஆண்டுகளுக்கு பிறகு, பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்.
இன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறுகிறது.
பாதுகாப்பிற்காக 3000 போலீசார், 300 சிசிடிவி கேமராக்கள், 50 கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு