பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்
2023-24 நிதியாண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்குகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்றுகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
வேட்பு மனுத்தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. பல்வேறு கட்டுபாடுகளுடன் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
வரவு செலவு தொடர்பான விவரங்கள் அளிக்க கோரிய வழக்கில், PM Cares நிதியானது இந்திய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்த குடிநீரை குடித்த கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலககோப்பை வெற்றிக்கு பிறகு இன்ஸ்டாவில் ரசிகர்கள் அனுப்பிய செய்திகளால் தனது இன்டாகிராம் கணக்கு நில நாட்கள் முடக்கி வைத்திருந்ததாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கூறியுள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து திரிகோணமலைக்கு 250 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. முன்னதாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், தற்போது மணிக்கு 7 கி.மீ. என வேகம் குறைந்தது
2011ஆம் ஆண்டு திமுக நகரச் செயலாளர் சுரேஷ் என்பவரை கொலை செய்ய முயன்றதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில் வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் இன்று விடுவிக்கப்பட்டார்.
நடிகர் விஜய்யின் 67ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் லோகேஷின் விருப்ப நடிகரான மன்சூர் அலிகான் நடிக்கிறார். அதேபோல் இயக்குனர் மிஷ்கினும் இணைந்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில், “சொத்து இருந்தால்தான் நான்கு பேர் மதிப்பார்கள் என்கிறார்கள். அந்த 4 பேர் மதிக்காவிட்டாலும் என்ன?
தங்கத் தட்டில் சாப்பிட்டாலும், இலையில் சாப்பிட்டாலும் சோற்றின் ருசி ஒன்றுதான்” எனத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்திய பிரிட்டன் அசீவர்ஸ் அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்திய பிரிட்டன் அசீவர்ஸ் அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது.
விருத்தாச்சலத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றில் என்ஜினீயரிங் மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.யின் மூத்த சகோதரி பவுனம்மாள் (87) உடல்நலக்குறைவால் இன்று மன்னார்குடியில் காலமானார்; இறுதிச்சடங்குகள் நாளை மாலை (பிப்ரவரி 1) சொந்த ஊரான தளிக்கோட்டையில் நடக்க உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியில்லை
சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு
பா.ஜ.க ஆதரவு யாருக்கு என்பதை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை அறிவிக்கிறார்.
2016 தேர்தலின்போது பல்வேறு தொகுதிகளுக்கு வழங்க, ரூ.7 கோடியை சேகர் ரெட்டிக்கு வழங்கியதாக எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வருமானவரித் துறையின் நோட்டீசை எதிர்த்து வேலுமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு; நோட்டீசுக்கு தடைவிதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
போலி இணையதளங்களை முடக்க வேண்டும். கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா நினைவுநாளையொட்டி தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “நமது அன்னை நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பெருமகன்… தாய்க்குப் பெயர் சூட்டிய பெருமை படைத்த தனயன், பேரறிஞர் அண்ணா; அண்ணா என்றும் வாழ்கிறார்; இன்றும் ஆள்கிறார்; இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
காவிரியிலிருந்து கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதாக தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்துள்ளது. காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு மீறுகிறது. இதனை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை காங்கிரஸ் எழுப்பும் என்று டெல்லி விமானநிலையத்தில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த புகாரில், மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா, ஜனவரி 7ம் தேதி அன்று பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.
பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கபடவில்லை. ஓரிடு நாட்களில் எங்களது முடிவு தெரிவிக்கப்படும். அ.தி.மு.க-வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும்; அது பற்றி கவலை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் – தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெங்களூரு குடிநீர் திட்டத்திற்கு காவிரியிலிருந்து நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
சிறுமி வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு வாலிபரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் துரத்தி அடித்தனர். ஒரு மாணவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் மாநிலம் காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபு தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியா? கூட்டணி கட்சிக்கு ஆதரவா ? பாஜக நிலைப்பாடு குறித்து மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது
விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் நலம் விசாரித்தார். “என் உயிரை நான் சந்தித்த போது” என குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
இலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா, மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தூய்மை பணியாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவருந்தினர்
ரூ.7986.32 கோடி வரி செலுத்த வேண்டுமென டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் யாதவ், ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் தலைநகரை விசாகப்பட்டினம் ஆக மாற்றி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவிப்பு வெளியிட்டார்
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை மாற்றம் காரணமாக, பிப். 2ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்.1ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
வருமான வரி வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15 வரை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்திப்பு!

சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய கூட்டத்தில் திமுக, அதிமுக ஆதரவாளர்கள் இடையே கடும் அமளி ஏற்பட்டது.
பேனா நினைவுச்சின்னம் அமைக்க சீமான் எதிர்ப்பு. 13 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும்: சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன் என கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்.
தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்த கடுமையான நிலைப்பாடை பற்றி உலக நாடுகள் புரிந்துகொள்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா சொல்ல வருவதை உலக நாடுகள் கேற்கிறது- குடியரசு தலைவர் திரெளபதி முர்மு
மழைக்காலங்களில் பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு விழா மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் – முதல்வர் ஸ்டாலின்
கொரோனா காலத்தில் உலகம் முழுவதிலும் உள்ள ஏழை மக்கள் உணவின்றி தவித்தனர். ஆனால் இந்தியாவில் ஏழை மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கொரோனா காலத்தில் ஒரு ஏழைகூட வெறும் வயிற்றோடு உறங்கவில்லை- குடியரசு தலைவர் திரெளபதி முர்மு
எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஒபிசி மக்களின் கனவுகளை நினைவாக்கி உள்ளது மத்திய அரசு. அவர்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்துள்ளது. தற்போது அவர்கள் புதிய கனவுகளை காணலாம்-
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு
2024-ஆம் ஆண்டுக்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக திகழ வேண்டும். அனைவருக்கும் வளர்ச்சி என்ற விதத்தில் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. 9 ஆண்டுகளில் இந்தியா மீதான உலக நாடுகள் பார்வை மாறியுள்ளது. – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு
காஷ்மீர் 370-வது சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் ஒழிப்பு வரை முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்று குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
தேசிய கல்விக் கொள்கை மூலம் அனைவருக்கும் மிகவும் தரமான கல்வியை கொடுத்து வருகிறோம். புதிய கல்விக் கொள்ளை மூலம் இந்தியாவில் அனைவருக்கும் சமமான, தரமான கல்வி வழங்கப்படுகிறது – ஐஐடி இயக்குநர் காமகோடி
பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவது நாட்டுக்கே பெருமை. மிகப்பெரிய கவுரவம். எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம் – நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 203 புள்ளிகள் சரிந்து 56,296 புள்ளிகளில் வர்த்தகம். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52 புள்ளிகள் சரிந்து 17, 596 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் 3 நாட்கள் நடக்கும் ஜி-20 கல்வி கருத்தரங்கம் தொடங்கியது. பிப்ரவரி 2 வரை நடக்கும் கருத்தரங்கில் ஜி-20 நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று (ஜனவரி 31) மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல தடை