ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 368-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பெங்களூருவில் ஆஸ்திரேலிய தூதரகம்
பெங்களூருவில் ஆஸ்திரேலிய தூதரகம் அமைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அறிவிப்பு. ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஐ.பி.எல்- எலிமினேட்டர் சுற்று
ஐபிஎல் 2023 போட்டியில் சென்னையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் லக்னோ – மும்பை அணிகள் மோதல். இன்று வெற்றி பெறும் அணி நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணியுடன் 2-வது குவாலிஃபையர் சுற்றில் மோதவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தை திறந்து வைக்காதது, விழாவிற்கு அழைக்காதது உயரிய அரசியலமைப்பு பதவியை அவமதிக்கும் செயல் என ராகுல் காந்தி கூறியுள்ளார்
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
தென்காசி, சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வாகனம், கார் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு *காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழப்பு
கடல் கடந்து சிங்கப்பூர் வந்த சிங்கப்பூர் வந்த உணர்வே இல்லை. தமிழ்நாட்டில் இருப்பது போலவே உணர்கிறேன். தமிழால் இணைந்த நம்மை மதமோ, ஜாதியோ ஒருபோதும் பிளவு படுத்திட முடியாது என்று சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகள் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சில் பேசியுள்ளார்.
சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்சசியில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
சிவகங்கையில் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு. 350 கிலோ கெட்டுப்போன இறைச்சி, மீன்கள் பறிமுதல். 1000 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
தமிழ்நாட்டின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், சிங்கப்பூரை சேர்ந்த Hi-P INTERNATIONAL Pvt. Ltd. நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். ₨312 கோடி முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஷச்சாராய மரணம் தொடர்பாக சித்தாமூர், அச்சரப்பாக்கத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 கொலை வழக்குகள் பதிவு செய்தனனர். விஷச்சாராய மரணம் தொடர்பாக, மேலும் 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற விசாரணை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்.ஐ. உட்பட 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல்கள் கிடைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் வந்ததையடுத்து, கண்ணமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. அருள், தானிப்பாடி காவல் நிலைய தலைமை காவலர்கள் யூஜின் நிர்மல், சிவா பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கீழ் கொடுங்கலூர் காவல் நிலைய தலைமை காவலர் ஹரி, செங்கம் காவல் நிலைய தலைமை காவலர் சோலை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் நேற்று வரை 270 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிய 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அமைத்த சிறப்பு குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளை ஜூன் 1ம் தேதியில் இருந்து 15 நாட்கள் கழித்து திறக்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி. ராஜா இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கரகாட்டம், கபடி உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கில் அனுமதி கோரினால், 7 நாட்களுக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியும் உத்தரவிட்டது.
சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து, வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன் உடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பசுமை டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். செமி கன்டக்டர்கள், எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். மேலும், சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனுடன் மு.க.ஸ்டாலின் சந்தித்து, சென்னையில் அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத்தலைவரை அழைக்காதது, இந்திய அரசியலமைப்பின் உட்சபட்ச பதவியை அவமதிக்கும் செயல்; ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல நாடாளுமன்றம், அது இந்திய அரசியலமைப்பின் மாண்பினால் கட்டப்பட்டது- ராகுல்காந்தி ட்வீட்
பெண் ஆதிவாசி குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு, நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் அழைப்பு இல்லை; நாடாளுமன்றம் வெறும் செங்கல், சிமிண்ட் இல்லை பிரதமரே. ஜனநாயகத்தின் சின்னம்; 19 எதிர்க்கட்சிகளின் கண்டனம் தேசத்தின் குரல்- மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் ட்வீட்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 28ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் யுபிஎஸ்சி சிவில் தேர்வில் இந்திய அளவில் 361வது இடம் பிடித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யலாம். 5 வயது முதல் 12 வயது வரை அரை டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டது.
கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு, இன்று முதல் படகுகள் சேவை தொடக்கம் அமைச்சர்கள் எ.வ.வேலு, மனோதங்கராஜ் ஆகியோர் படகுகள் சேவையை தொடங்கி வைத்தனர்
சென்னை அருகே சேலையூரில் ஜாக்கி மூலம் கட்டிடத்தை தூக்க முயன்ற போது மேற்கூரை சரிந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு .
அதிமுக ஆட்சியில் கபட நாடகம் நடத்திச் “சுற்றுலா” சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா? தொழில்முதலீடு பெற்று, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கச் சென்றுள்ள முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி தவறாக பேசுவதா? அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக புறக்கணிக்க முடிவு
வரும் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவை புறக்கணிப்பதாக திமுக எம்.பி., திருச்சி சிவா அறிவிப்பு
கேரளா, கண்ணூரில் 2வது திருமணம் செய்து ஒரு வாரமே ஆன தம்பதி 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாங்களும் தூக்கிட்டு தற்கொலை
32 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ஹெலிகாப்டர் மூலம் கலசங்கள் மீது மலர் தூவி வழிபாடு
யாகசாலை பூஜையில் பங்கேற்று தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து இருவர் பலி
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் சோகம்
கிருஷ்ணகிரி, ஓசூர் அருகே பசவனதொட்டி பகுதியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை காண ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானிஸ்க்கு பிரதமர் மோடி அழைப்பு
உலககோப்பை தொடரின் போது தீபாவளி பண்டிகையின் கொண்டாட்டத்தையும் காண ஆஸி. கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்
சிங்கப்பூர் நாட்டின் முன்னணி தொழில் அதிபர்களுடன் சந்திப்பு
டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டலாண்ட் இன்வஸ்மன்ட் (CaptiaLand Investment) நிறுவன அதிகாரிகளை சந்தித்தார்
தமிழ்நாட்டின் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு