Advertisment

Tamil news today : இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது

Tamil Nadu News, Tamil News , Petrol price Today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் தேர்வு

Advertisment

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஜூலை 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரும், துணை செயலாளராக அக்ரி எஸ் கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோ- டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் -ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் – ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   

கொரோனா இதுவரை

உலகளவில் இதுவரை 56.81 கோடி பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 53.95 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 63.88 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

987 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்? என்று 987 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாக்குதலை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


  • 21:59 (IST) 19 Jul 2022
    கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மறுபிரேத பரிசோதனை நிறைவு; மாணவி வீட்டுக்கு நோட்டீஸ்

    கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மறுபிரேத பரிசோதனை முடிந்ததற்கான நோட்டீஸ் மாணவி வீட்டில் ஒட்டப்பட்டது. பிரேத பரிசோதனை குறித்து தகவல் அனுப்பியும் நீங்கள் வரவில்லை; பிரேதப் பரிசோதனை முடிந்தது, உடலை பெற்றுக்கொள்ள வருமாறு நோட்டீஸில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 21:01 (IST) 19 Jul 2022
    நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரம்; 5 பேர் கைது

    கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள், 2 பெர் கல்லூரி ஊழியர்கள் என போலீசர் தகவல் தேரிவித்துள்ளனர். தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.


  • 20:37 (IST) 19 Jul 2022
    நபிகள் குறித்த சர்ச்சை: நூபுர் ஷர்மாவை கைது செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்

    தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது நபிகள் நாயகம் குறித்து பேசியதாக பல மாநிலங்களில் தொடுக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மீது அடுத்த விசாரணை தேதி வரை “கட்டாய நடவடிக்கை எடுக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

    ஜூலை 1 ஆம் தேதி இதே உச்ச நீதிமன்ற அமர்வு நூபுர் ஷர்மாவின் மனுவை ஏற்க மறுத்துவிட்டது. அவருக்கு வார்த்தைகளை விடுவதாகவும் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கு அவர் ஒருவரே பொறுப்பு என்றும் கூறியது.


  • 19:48 (IST) 19 Jul 2022
    நீட் தேர்வு: மாணவியின் உள்ளாடை அகற்ற சொன்ன விவகாரம்; உண்மை கண்டறியும் குழு அமைப்பு

    கேரளா, கொல்லத்தில் நீட் தேர்வின் போது மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன விவகாரத்தில்,

    தேசிய தேர்வு முகமின் சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.


  • 19:45 (IST) 19 Jul 2022
    நீட் தேர்வு: மாணவியின் உள்ளாடை அகற்ற சொன்ன விவகாரம்; உண்மை கண்டறியும் குழு அமைப்பு

    கேரளா, கொல்லத்தில் நீட் தேர்வின் போது மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன விவகாரத்தில்,

    தேசிய தேர்வு முகமின் சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.


  • 18:54 (IST) 19 Jul 2022
    உணவுப் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி. - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய விளக்கம்

    பேக்கிங் செய்யாமல் விற்பனை செய்யப்படும் அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட 14 உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி இல்லை; மேற்கண்ட பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தால் 5% ஜி.எஸ்.டி கட்டாயம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.


  • 18:37 (IST) 19 Jul 2022
    தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை - அண்ணாமலை

    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: “மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை; மத்திய அரசிடம் பணம் வாங்க வேண்டுமென்றால் மின் வாரியம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்; நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


  • 17:43 (IST) 19 Jul 2022
    நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது - பிரபு, ராம்குமார்

    நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என்று நடிகர்கள் ராம்குமார், பிரபு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளனர். சொத்து விவகாரத்தில் சகோதரர்கள் ஏமாற்றியதாக சிவாஜியின் மகள்கள் தொடர்ந்த வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.


  • 17:04 (IST) 19 Jul 2022
    அதிமுக கட்சி அலுவலக கலவரம் : ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமின்

    அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைதான ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் பொன்னேரி காவல் நிலையத்தில் 15 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


  • 16:24 (IST) 19 Jul 2022
    உயிரிழந்த பள்ளி மாணவி உடலின் மறுபிரேத பரிசோதனை தொடங்கியது

    கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த பள்ளி மாணவி உடலின் மறுபிரேத பரிசோதனை தொடங்கியது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த மருத்துவக்குழு மறுபிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகிறது


  • 16:23 (IST) 19 Jul 2022
    கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடமாற்றம்

    கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய ஆட்சியராக ஸ்ரவன் குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மாவட்ட எஸ்.பி. பணியிட மாற்றத்தை தொடர்ந்து, தற்போது ஆட்சியரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 15:59 (IST) 19 Jul 2022
    மின் கட்டண உயர்வு - 30 நாட்கள் காலஅவகாசம்!

    மின் கட்டண உயர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மின்சார வாரிய இணையதளங்களில் மின்சார கட்டண விவரங்கள் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது.


  • 15:58 (IST) 19 Jul 2022
    அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

    "அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம். லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


  • 15:57 (IST) 19 Jul 2022
    முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து: நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்காலத் தடை!

    முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக பதிவு செய்துள்ள வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரிய நுபுர் சர்மாவின் மனு மீதான விசாரணையில் மத்திய அரசு, டெல்லி காவல்துறை, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகம், ஜம்மு-காஷ்மீர், அசாம் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


  • 14:35 (IST) 19 Jul 2022
    நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

    பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளி செய்தனர். மேலும், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டனர். இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது


  • 14:33 (IST) 19 Jul 2022
    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் - சூறையாடப்பட்ட தனியார் பள்ளியில் சிபிசிஐடி விசாரணை

    கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழு சூறையாடப்பட்ட தனியார் பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறது.


  • 12:52 (IST) 19 Jul 2022
    வன்முறையை ஏற்க முடியாது- கமல்ஹாசன்

    “போராட்டம் என்ற பெயரில் வன்முறை நிகழ்ந்துள்ளதை ஏற்க முடியாது. மாணவியின் பெற்றோர் கூறிய குற்றச்சாட்டுகளையும் அலட்சியப்படுத்தியிருக்கக் கூடாது. மாணவி மரணத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    தொடர்ந்து, அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவுகிறதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.


  • 12:30 (IST) 19 Jul 2022
    வேட்புமனு தாக்கல் செய்தார் மார்கரெட் ஆல்வா!

    குடியரசுத் துணை தலைவர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மார்க்கரெட் ஆல்வா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், வைகோ மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


  • 10:55 (IST) 19 Jul 2022
    கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.


  • 10:00 (IST) 19 Jul 2022
    சென்னை திரும்பினார் இளையராஜா

    அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் இசையமைப்பாளர் இளையராஜா . மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக சென்னை வருகை . சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.


  • 09:21 (IST) 19 Jul 2022
    அரியலூர் மாவட்டம் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை

    அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விடுமுறை அறிவிப்பு.


  • 09:20 (IST) 19 Jul 2022
    பள்ளி நிர்வாகிகள் சிறையில் அடைப்பு

    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் சிறையில் அடைப்பு. 5 பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 09:07 (IST) 19 Jul 2022
    மெரினாவில் போலிசார் குவிப்பு

    சென்னை, மெரினா கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் ஏராளமானோர் கூடப்போவதாக தகவல் பரவியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரப்பிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  • 08:59 (IST) 19 Jul 2022
    பள்ளிக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வளாகத்தில் 3வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவி தற்கொலையை தொடர்ந்து வெடித்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. 3வது நாளாக பள்ளி வளாகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


  • 08:56 (IST) 19 Jul 2022
    மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று

    இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment