பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகிறது. மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்.
கடைசி டெஸ்ட் போட்டி – பிரதமர்கள் வருகை
பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் பார்க்க வருகை தரவுள்ளனர். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
தமிழ்நாடு பா.ஜ.க ட்வீட்: “திராவிட கட்சிகளை நம்பித்தான் பா.ஜ.க இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாகக் கூறி வந்தனர். ஆனால், இப்போது பாருங்கள். பா.ஜ.க-வை நம்பி திராவிடக் கட்சிகள் உள்ளன.” என்று பதிவிட்டுள்ளது.
திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன.- மாநில தலைவர் திரு.@annamalai_k#annamalai pic.twitter.com/PBCg9FruGx
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 9, 2023
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி நிர்ணயித்த 106 ரன்கள் இலக்கை மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 15 ஒவர்களில் எட்டியது.
போட்டி போட்டு சத்து மாத்திரைகள் விழுங்கிய 4 மாணவிகள்: ஒரு மாணவி பலி
சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழப்பு.
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்குள், கழிவறையில் புகைப்பிடித்ததால் கைதான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் பிரியங்கா (24 கைது செய்யப்பட்டார். இவர் சிகர்ட் புகையை அணைக்காமல் கழிவறையில் போட்டுவிட்டு வந்த நிலையில், புகை நெடி விமானம் முழுக்கப் பரவியதால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். விமானத்திற்குள் விதிகளை மீறி செயல்பட்டதால் பிரியங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். புதிய மதுபான வரி கொள்கை வழக்கில் ஏற்கெனவே சி.பி.ஐ கைது செய்த நிலையில், திகார் சிறையில் உள்ள மணிஷ் சிசோடியாவை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.
நடிகர் கமல்ஹாசன் சிம்புவின் 48ஆவது படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுனர் திருப்பி அனுப்பியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த ரகுபதி, “”தமிழ்நாடு ஆளுனர் அண்ணாமலையா? ரவியா? ஆளுனர் என்ன விளக்கம் கேட்டார் என்பது அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? என விமர்சித்தார்.
நேபாளத்தின் புதிய அதிபராக நேபாள காங்கிரஸின் ராம் சந்திர பௌடல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்மை காலமாக நேபாளத்தில் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகிறது. இதனால் தலைவர்கள் மாறி மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா 1 ஏவுகணையை கடலை நோக்கி ஏவி சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்து உள்ளது.
வடகொரியா சில மாதங்களாக ஏவுகணை சோதனையை நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் சோதனையை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கலால் கொள்கை வழக்கில் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத் துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஜெகஜால கில்லாடி' படத்தை தயாரிக்க வாங்கிய கடனை திருப்பி தரவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் பேரன் துஷ்யந்த் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் பின்தங்கியுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த எம்.பி. ஆ.ராசா “பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசாங்கம் ஒழித்துகட்டி விட்டு தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது, அதில் ஒன்றுதான் பிஎஸ்என்எல் நிறுவனம் என கூறியுள்ளார்.
பரமக்குடி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் அதிமுக கவுன்சிலர் உட்பட இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்
பரமக்குடி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் அதிமுக கவுன்சிலர் உட்பட இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! கூட்டத்தில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல்!
அரசுப் பேருந்து சேவை தொடர்பான தகவல் பெற, சேவை தொடர்பான புகார்கள் அளிக்க இலவச எண் ’18005991500’ மற்றும் பிரத்யேக இணையதளம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்
மணீஷ் சிசோடியா மற்றும் சத்தியேந்தர் ஜெயின் ராஜினாமா செய்த நிலையில், டெல்லி அமைச்சரவையில் சவுரவ் பரத்வாஜ் மற்றும் அதிசி ஆகியோர் இன்று ஆளுநர் முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அதிசி கல்வித்துறை அமைச்சராகவும், சவுரவ் பரத்வாஜ் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
சென்னை, திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபான விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. சம்பள நிலுவை தொகை வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உறுதி அளித்ததால், லாரிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெற பட்டது. முன்னதாக வேலை நிறுத்தத்தால் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகம் தடைப்பட்டது
திண்டுக்கல் அருகே வத்தலக்குண்டு காவலர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக புகார் கூறி பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதான் சபா நோக்கி பேரணி மேற்கொண்ட பாஜகவினரை தண்ணீர் பீய்ச்சி அடித்து போலீசார் விரட்டினர்
சென்னை, திருமழிசையில் மதுபானம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. திருவள்ளூர், காஞ்சி, சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. லாரிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான சம்பள நிலுவை பிரச்சினையால் வேலைநிறுத்தம் ஏற்பட்டுள்ளது
குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கேரளா-கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா ஊழியரே தங்க கடத்தலில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வயநாட்டை சேர்ந்த சபி என்ற விமான கேபின் ஊழியர் ஒன்றரை கிலோ தங்கத்தை பசையாக்கி கைகளில் கட்டிக் கொண்டு கடத்த முயற்சித்த போது பிடிபட்டார்
தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
என்எல்சி, அரசின் அடக்குமுறையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11ம் தேதி பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஈரோடு கிழக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; இது போன்ற செயல்களை ஊக்கப்படுத்தாமல் பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும்- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெறும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆன்லைன் டிக்கெட் விற்பனை 13ம் தேதியன்றும்; நேரடி டிக்கெட் விற்பனை 18ம் தேதி காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி தொடர்கிறது- எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; இது போன்ற செயல்களை ஊக்கப்படுத்தாமல் பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும்- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு . அதிமுக கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல். நாடாளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைக்கவும் இ.பி.எஸ் அறிவுறுத்தல்
பொள்ளாச்சி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் உயிரிழப்பு. பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் கட்சியில் இருந்து நீக்கம் – ஓபிஎஸ் அறிவிப்பு
பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். ஈரோடு கிழக்குப் தொகுதி தேர்தல் தொடங்கியது முதல் அதிமுகவுக்கும் பாஜகவுக்கு இடையே மோதல் போக்கு தொடங்கியது. தேர்தலில் பணம்த்தால்தான் வெற்றி கிடைத்தது என்று இ.பி.எஸ். சொன்னபோது. தேர்தல் முடிவை ஏற்படதாக அவர் கூறினார்.
கால்நடை, மீன்வளத் துறைகள் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஒரே மின் இணைப்பு எண்ணாக மாற்ற வேண்டும் என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை . எத்தனை மின் இணைப்பு பெற்றிருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
பாஜகவினரிடம் சகிப்புத்தன்மை இல்லை.அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா ? மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது – செல்லூர் ராஜு
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – கோவை மாவட்ட தொழில் துறையினருடன் ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஆலோசனை
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை படத்தை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக நேற்று கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் உருவப் படத்தை எரித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2022-23-ம் ஆண்டு நிதி மேலாண்மையை சிறப்பாக அரசு கையாண்டுள்ளது
2023 -24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தொகை ரூ.11,500 கோடியாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார்
தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம்
5 மாணவர், மாணவிகளை 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவு
சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட்
இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு டெஸ்ட் கேப் வழங்கிய பிரதமர் மோடி
பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர்: கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு
கிரிக்கெட்டில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 75வது ஆண்டு நல்லுறவை குறிக்கும் விதமாக இரு நாட்டு பிரதமர்களும் போட்டியை காண வந்தனர்.
“உங்களில் ஒருவன் பதில்கள்” – பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
என்னை தலைவராக தேர்ந்தெடுத்து அழகு பார்த்ததைவிட பெரிய பிறந்தநாள் பரிசு இல்லை. தோள் கொடுப்பான் தோழன் என்பதற்கு அடையாளமாக எங்கள் கூட்ணி கட்சித் தலைவர்கள் உள்ளனர். ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு காதுகள் இல்லை என்பது தெரிகிறது.
பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் போட்டியை நேரில் காண அகமதாபாத் மைதானத்திற்கு பிரதமர் மோடி வருகை
பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட்
சென்னை வளசரவாக்கத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு
ஆற்காடு சாலையில் உள்ள மதுக்கடைக்கு வந்த நபர், மதுபோதையில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கேயே நின்றுள்ளார் – போலீசார் விசாரணை.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத்திலிருந்து 259 கி.மீ தொலைவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.4ஆகப் பதிவு.
WPL கிரிக்கெட் போட்டி – பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி
202 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி