scorecardresearch

Tamil news update: அதிமுக பொதுக்குழு வழக்கு.. இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today – 22 August 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news update: அதிமுக பொதுக்குழு வழக்கு.. இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை

இன்றைய பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை சிறையில் விசாரணைக் கைதி மரணம்

புதுக்கோட்டை சிறையில் விசாரணைக் கைதி திடீரென உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரை கிராமத்திற்கு காவல்துறை பாதிகப்பு போடப்பட்டுள்ளது. தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்ததாக இதுவரை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மேலும் அவர் மாரட்டைப்பால் இறந்துள்ளதாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை – விமான சேவை பாதிப்பு. துபாய், பக்ரைன் மற்றும் லக்னோ விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்ற விமானங்களும் தாமதம்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
22:34 (IST) 22 Aug 2022
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய வழக்கில் 6 பேருக்கு ஜாமின்

மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய வழக்கு பாஜகவினர் 6 பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கைதான 9 பேரில் தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

21:33 (IST) 22 Aug 2022
மாணவி ஸ்ரீமதியின் உடற்கூராய்வு குறித்த ஜிப்மர் ஆய்வு அறிக்கை தாக்கல்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடற்கூராய்வு குறித்த ஜிப்மர் ஆய்வு அறிக்கை விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கையும் கடந்த 1ம் தேதி ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

21:32 (IST) 22 Aug 2022
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3 – 0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி

21:29 (IST) 22 Aug 2022
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு்ளளது. இந்த புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது. இதன்படி முதல் 3 செமஸ்டர்களுக்கு 5 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டள்ளது. இதில் முதற்கட்டமாக 2ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

19:59 (IST) 22 Aug 2022
சென்னை சூப்பர் கிங்ஸ் காணொலி

சென்னை தினததை முன்னிட்டு சென்ஸ் சூப்பர்கிங்ஸ் சிறப்பு காணொலி கிளிக் வெளியிட்டுள்ளது.

19:13 (IST) 22 Aug 2022
நட்சத்திரம் நகர்கிறது இசை வெளியீட்டு விழா

பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.

18:56 (IST) 22 Aug 2022
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவிதொகை எப்போது? அன்புமணி கேள்வி

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுப்போம் என்ற வாக்குறுதியை புதுச்சேரி அரசு நிறைவேற்றி விட்டது.

தமிழ்நாடு அரசு நிறைவேற்றுவது எப்போது என அன்புணி ராமதாஸ் ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.

18:47 (IST) 22 Aug 2022
உலக அழகி போட்டி விதிகளில் திருத்தம்?

உலக அழகி போட்டிகளில் திருமணமான மற்றும் குழந்தை பெற்றெடுத்த பெண்களும் கலந்துகொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18:23 (IST) 22 Aug 2022
சென்னை: மாலையில் கனமழை

சென்னையில் இன்று மாலை கனமழை கொட்டி தீர்த்ததால் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவோர் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

18:00 (IST) 22 Aug 2022
அந்நிய மரக்கன்றுகளுக்கு தடை

தமிழ்நாட்டில் உள்ள நர்சரிகளில் அந்நிய மரக்கன்றுகள் வளர்க்க தடை விதிக்க மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

17:18 (IST) 22 Aug 2022
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் மோதல்

கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பாஜகவினர் சாவர்க்கர் படத்தை ஒட்டிச் சென்றதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக அலுவலகத்தில் திப்பு சுல்தான் படம் ஒட்டப்படும் என காங்கிரஸார் எச்சரித்துள்ளனர்.

17:00 (IST) 22 Aug 2022
கள்ளக்குறிச்சி வன்முறை: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை வழக்கில் ஜெயவேல் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

16:49 (IST) 22 Aug 2022
3வது ஒருநாள் போட்டி; ஜிம்பாப்வே அணிக்கு 290 ரன்களை இலக்கு

3வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு 290 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது

16:35 (IST) 22 Aug 2022
ரூ.70 கோடி நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது – செந்தில் பாலாஜி

ரூ.70 கோடி நிலுவைத் தொகை மத்திய அரசுக்கு மின்வாரியம் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சார சட்டதிருத்த மசோதாவிறகு பாஜக ஆளும் மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்

16:23 (IST) 22 Aug 2022
அ.தி.மு.க பிரிவினைக்கு ஓ.பி.எஸ் தான் காரணம் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிமுகவின் பிரிவினைக்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்றும், அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நியாயமான தீர்ப்பு வரும் என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்

16:13 (IST) 22 Aug 2022
அர்ஜுன மூர்த்தி மீண்டும் பா.ஜ.க.,வில் ஐக்கியம்

நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டு, ரஜினி கட்சி தொடங்காததால், பின்னர் தனிக்கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி மீண்டும் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

15:58 (IST) 22 Aug 2022
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை திட்டம்

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி அளிக்கும் திட்டம் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

15:52 (IST) 22 Aug 2022
திருச்சியில் உள்ள சிறப்பு இலங்கை முகாமில் கைதிகள் போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு இலங்கை முகாமில் கைதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் செல்போன்களை பறிமுதல் செய்த நிலையில், மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

15:29 (IST) 22 Aug 2022
டெல்லி நிர்வாக அதிகாரம் தொடர்பான வழக்கு – அரசியல் சாசன அமர்வு அமைப்பு

டெல்லியில் நிர்வாகம் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது

15:13 (IST) 22 Aug 2022
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது

இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா வர புறப்பட்டபோது ரஷ்ய உளவுத்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான ஐ.எஸ். பயங்கரவாதி மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர் என ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ளது

14:54 (IST) 22 Aug 2022
, இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை

எண்ணி ஏழு நாள் என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

14:29 (IST) 22 Aug 2022
மோடிக்கே துரோகம் செய்த இபிஎஸ்

ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர், பிரதமர் மோடி நட்பு ரீதியாக, கட்சியை பார்த்துக்கொள்ள இருவரையும் சமரசம் செய்து வைத்தார். ஆனால் இபிஎஸ், பிரதமர் மோடிக்கே துரோகம் செய்யும் அளவிற்கு வந்து விட்டதாக கூறினார்.

14:03 (IST) 22 Aug 2022
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவோம்

திமுக கட்சியை கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவோம் என செய்தியாளர்களிடம் கூறினார்.

14:00 (IST) 22 Aug 2022
குட்கா வைத்திருந்ததாக கைதானவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் 72 கிலோ குட்கா வைத்துள்ளதாக கைது செய்யப்பட்ட சின்னதுரை, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

13:44 (IST) 22 Aug 2022
பள்ளி வாகனம் மீது லாரி மோதி விபத்து

மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் பள்ளி வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 11 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

13:42 (IST) 22 Aug 2022
ராமர் பாலம் வழக்கு

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்கக்கோரி பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது

13:42 (IST) 22 Aug 2022
அர்ஜூன மூர்த்தி பாஜகவில் இணைந்தார்

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூன மூர்த்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், இன்று பாஜக-வில் இணைந்தார்.

13:17 (IST) 22 Aug 2022
4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13:09 (IST) 22 Aug 2022
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் வழக்கு

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கு, மனுதாரர் ரத்தினம் கோரிக்கையை ஏற்று, வேறு அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அமர்வு பரிந்துரைத்தது.

13:09 (IST) 22 Aug 2022
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

12:15 (IST) 22 Aug 2022
கருக்கலைப்பு திருத்த சட்டம் – ஒப்புதல்

மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

12:10 (IST) 22 Aug 2022
பழனி திருமஞ்சன பூஜை வழக்கு தள்ளுபடி

பழனி முருகன் கோவில் திருமஞ்சன பூஜைக்கான தொகையில் பங்கு கேட்டு குருக்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் – நீதிமன்றம்

12:08 (IST) 22 Aug 2022
அமித்ஷாவை சந்தித்த ஜூனியர் என்.டி.ஆர்

மத்திய அமைச்சர் அமித்ஷா, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு

11:36 (IST) 22 Aug 2022
அதிமுக பொதுக்குழு – ஈபிஎஸ் மேல் முறையீடு

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி மேல் முறையீடு

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல் முறையீட்டை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு.

11:35 (IST) 22 Aug 2022
ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தொடக்கம்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

11:08 (IST) 22 Aug 2022
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு

கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு. தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் 6 பேர் கொண்ட குழு ஆய்வு .

11:08 (IST) 22 Aug 2022
தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும்

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் .விதிகளை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு .ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதிகள் அமர்வு உத்தரவு. ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை கண்டறிய 5 பேர் கொண்ட குழு நியமிக்க உத்தரவு

11:07 (IST) 22 Aug 2022
தமிழுக்கு செம்மொழி கௌரவத்தை பெற்று தந்தவர் கருணாநிதி

தமிழுக்கு செம்மொழி கௌரவத்தை பெற்று தந்தவர் கருணாநிதி .பிற மொழி உதவியின்றி தனித்து இயங்கக் கூடியது தமிழ் மொழி .செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

11:06 (IST) 22 Aug 2022
செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தமிழ் மொழி ஆய்வு, மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தி வருகிறது – முதல்வர் ஸ்டாலின்

10:39 (IST) 22 Aug 2022
தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 38,520க்கு விற்பனை.ஒரு கிராம் தங்கம் ரூ.4,815க்கு விற்பனை.

09:28 (IST) 22 Aug 2022
சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல்

சென்னை, ஆவடி அருகே அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நாளை முக சீரமைப்பு அறுவை சிகிச்சை. சிறுமிக்கான சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் அமைச்சர் நாசர் . சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல்

08:38 (IST) 22 Aug 2022
கோவில் அர்ச்சகர்கள் நியமனம்

கோவில் அர்ச்சகர்கள் நியமன விதிகள் தொடர்பாக அரசு அறிவிப்புகளை எதிர்த்த வழக்குகளில் இன்று தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

08:28 (IST) 22 Aug 2022
செம்மொழித் தமிழாய்வு ; விருது விண்ணப்பம்

2023ம் ஆண்டுக்கான கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிப்பு. இந்தியா மற்றும் வெளிநாட்டில் வாழும் சிறந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருது தொடர்பான முழு விவரங்களை http://cict.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

08:27 (IST) 22 Aug 2022
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு

கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு. தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று மீண்டும் 6 பேர் கொண்ட குழு ஆய்வு

08:26 (IST) 22 Aug 2022
மின்சார கட்டணங்கள் உயர்வு: கருத்துக்கேட்பு கூட்டம்

சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் மின்சார கட்டணங்களை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில் கருத்துக்கேட்பு.

08:25 (IST) 22 Aug 2022
உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

கிரிப்டோ கோப்பை செஸ் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. பிரதான போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை. நடப்பாண்டில் 3வது முறையாக உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

08:14 (IST) 22 Aug 2022
பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் வழக்கு : இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்கு . சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

08:13 (IST) 22 Aug 2022
இன்று குரூப் 1 தேர்வு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று

Web Title: Tamil news today live petrol diesel price pudukkottai arrested person death chennai rain