scorecardresearch
Live

Tamil news Today : லெய்செஸ்டரில் இந்திய சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக்கு இந்தியா கண்டனம்

Tamil Nadu News, Tamil News , Petrol price Today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news Today : லெய்செஸ்டரில் இந்திய சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக்கு இந்தியா கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

பிரிட்டன் ராணி எலிசபெத் உடல் இன்று நல்லடக்கம்

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி 96 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது

வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு ராணியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மதியம் 3.30 மணிக்கு இறுதிச் சடங்கு ஆராதனை நடைபெறுகிறது. இறுதிச் சடங்கு நிகழ்வில் உலக நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், பிரதமர்கள், மன்னர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.

தைவானுக்கு அமெரிக்கா பாதுகாப்பு

தைவான் மீது சீனா போர் நடவடிக்கையில் ஈடுப்பட்டால் தைவானுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது – அமெரிக்க அதிபர் பைடன்

மேலும், அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததாக அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
21:44 (IST) 19 Sep 2022
லெய்செஸ்டரில் இந்திய சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக்கு இந்தியா கண்டனம்

இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் “லெய்செஸ்டரில் இந்திய சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை மற்றும் இந்து மதத்தின் வளாகங்கள் மற்றும் சின்னங்களை சேதப்படுத்தியதை” கண்டித்துள்ளது.

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “நாங்கள் இந்த விஷயத்தை இங்கிலாந்து அதிகாரிகளிடம் கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளோம், மேலும் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

20:54 (IST) 19 Sep 2022
திருநள்ளாறு கோவிலுக்கு வந்த ஆந்திரா சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு

காரைக்கால்: திருநள்ளாறு கோவிலுக்கு வந்த ஆந்திரா சிறுமி கீர்த்தனா (12) நள தீர்த்த குளத்தில் குளிக்கும் போது வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு; உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

20:03 (IST) 19 Sep 2022
தி.மு.க ஆட்சியில் 4 முதல்வர்கள்… இ.பி.எஸ் பேச்சுக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி

தி.மு.க ஆட்சியில் 4 முதல்வர்கள்… இ.பி.எஸ் பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மு.க. ஸ்டாலின், “தி.மு.க ஆட்சியில் 4 முதல்வர்கள் என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். 4 அல்ல யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை வழங்கி அவை செயல் வடிவம் பெறுகிறதோ, அவர்கள் எல்லோரும் சேந்துதான் இந்த ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

19:41 (IST) 19 Sep 2022
பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் உள்கட்சி பிரச்னை நடைபெறும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை இன்றிரவு சந்தித்து பேசுகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

19:19 (IST) 19 Sep 2022
தொற்றுக் காய்ச்சல் பரவல்: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சீமான் கோரிக்கை

தமிழ்நாட்டில் தொற்று காய்ச்சல் பரவும் நிலையில், அதிலிருந்து குழந்தைகள் பாதுகாக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

19:07 (IST) 19 Sep 2022
ஆவின் பாலகம்- மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை

ஆவின் பாலகம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு வாடகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் எனக் கூறிய மு.க. ஸ்டாலின், உங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் எனப் பெயர் சூட்டியவர் கலைஞர் எனவும் கூறினார்.

19:05 (IST) 19 Sep 2022
திமுக ஆட்சி மீது அவதூறு பரப்புகிறார்கள்- மு.க. ஸ்டாலின்

திமுக ஆட்சி மீது அவதூறு பரப்புகிறார் என மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

19:04 (IST) 19 Sep 2022
கி. ரா. நூற்றாண்டு விழா அடிக்கல் நாட்டு விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கி.ரா.வின் நூற்றாண்டு விழா மற்றும் நினைவு விழாவில் அடிக்கல் நாட்டு விழா இடைச்செவலில் நடந்தது.

இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.

18:26 (IST) 19 Sep 2022
அதிக குற்றம் பதிவான நகரம்

இந்தியாவில் அதிக குற்றங்கள் பதிவான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் 2021ஆம் ஆண்டு 18,596 குற்றங்களோடு டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.

18:12 (IST) 19 Sep 2022
அஜித் படத்துக்கு துணிவே துணை எனத் தலைப்பு?

அஜித் குமாரின் புதிய படத்துக்கு துணிவே துணை எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17:58 (IST) 19 Sep 2022
கேப்டன் அமரீந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்.

17:52 (IST) 19 Sep 2022
இங்கிலாந்து ராணி இறுதி ஊர்வலம்

இங்கிலாந்து ராணியின் உடல் தேவாலயத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. உலக தலைவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

17:39 (IST) 19 Sep 2022
பன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்- மா.சு

தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சல் குறித்து பயம் வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

17:23 (IST) 19 Sep 2022
தனுஷ் படத்தில் பிரியங்கா மோகன்

நடிகர் தனுஷின் புதிய படமான கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறா் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

17:11 (IST) 19 Sep 2022
கேரள படகு போட்டி: துடுப்பு போட்ட ராகுல்

கேரளத்தில் நடந்த படகுப் போட்டியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

பாரத் ஜோடா யாத்திரையின் போது ராகுல் காந்தி படகுப் போட்டியில் பங்கெடுத்துள்ளார்.

16:38 (IST) 19 Sep 2022
மணல் குவாரி விதிகளை மாற்றும் தமிழக அரசு – ஐகோர்ட் கிளை

அரசு தரப்பில் மணல் குவாரிக்கு விதிக்கப்பட்ட விதிகள் குறித்து தகவல் தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மணல் குவாரி அனுமதி தொடர்பாக நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அரசு விதிகளை மாற்றி புதிய விதிகளை உருவாக்கியுள்ளது என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது

16:07 (IST) 19 Sep 2022
எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கு தொடக்கம்

பிரிட்டனின் மிக நீண்ட காலம் அரசியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தொடங்கியது. மன்னர் சார்லஸ் மற்றும் பிற மூத்த பிரிட்டிஷ் அரச குடும்பங்கள் திங்களன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ராணி எலிசபெத்தின் சவப்பெட்டியைப் பின்தொடர்ந்து, உலகத் தலைவர்கள் மற்றும் மன்னர்களுடன் சேர்ந்து, தனது 70 ஆண்டுகால ஆட்சியின் மூலம் தேசத்தை ஒருங்கிணைத்த ஒரு அன்பான நபரிடம் விடைபெற்றனர்.

15:49 (IST) 19 Sep 2022
வெஸ்ட்மின்ஸ்டர் அபே-க்கு கொண்டு வரப்பட்ட ராணி எலிசபெத் உடல்

வெஸ்ட்மின்ஸ்டர் அபே-க்கு ராணி எலிசபெத் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது. ராணிக்கு இறுதி மரியாதை செலுத்த உலக தலைவர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-வில் காத்திருக்கின்றனர்

15:20 (IST) 19 Sep 2022
இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து; உச்ச நீதிமன்றம் உத்தரவு

இபிஎஸ், ஓபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. புகழேந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கியது எப்படி அவதூறாகும்? என புகழேந்திக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

15:05 (IST) 19 Sep 2022
இபிஎஸ், ஓபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து

புகழேந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

14:30 (IST) 19 Sep 2022
இ.பி.எஸ் இன்றிரவு டெல்லி பயணம்

இ.பி.எஸ் இன்று இரவு டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும், கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

13:45 (IST) 19 Sep 2022
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம்

சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரை தேர்ந்து எடுக்க சோனியா காந்திக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

13:41 (IST) 19 Sep 2022
சென்னை மூழ்கும் அபாயம்

சென்னை காலநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கையில், வெள்ள பாதிப்புகள் மற்றும் கடல் நீர்மட்ட உயர்வால் சென்னைக்கு அடுத்த 5 ஆண்டிற்குள் 7 செ.மீ கடல் நீர்மட்ட உயர்வால் 100 மீட்டர் கடற்கரை பகுதிகள் கடலில் மூழ்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13:24 (IST) 19 Sep 2022
இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

13:24 (IST) 19 Sep 2022
தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. 2021 இறுதியில் நடைபெற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து கே.சி.பழனிசாமி வழக்கு . கே.சி.பழனிசாமியின் வழக்கை நிராகரிக்க கோரிய ஈபிஎஸ்-ன் மனுவை ஏற்றது உயர் நீதிமன்றம் . கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது – ஈ.பி.எஸ்

12:58 (IST) 19 Sep 2022
சூப்பில் ஈ கிடந்ததால் அதிர்ச்சி

திருவண்ணாமலையில் பிரபல உணவகத்தில் வாங்கிய சூப்பில் ஈ கிடந்ததால் அதிர்ச்சி.பொறியலில் எலி தலை, சிக்கனில் புழு என திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் புகார்கள்.

12:58 (IST) 19 Sep 2022
பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்

சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும். பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தென் மாவட்டங்களில் கல்வியறிவை அதிகப்படுத்த நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

12:57 (IST) 19 Sep 2022
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் . குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு . செப்டம்பர் 22 முதல் தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதி ராஜா கவனிப்பார் என உத்தரவு.

11:34 (IST) 19 Sep 2022
எஸ்.பி.வேலுமணி வழக்கு: நாளை விசாரணை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள். விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில் தமிழக அரசின் முறையீட்டை ஏற்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணை.

11:32 (IST) 19 Sep 2022
பாஞ்சாகுளத்தில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தை சுட்டிக்காட்டி ; ஓபிஎஸ் வலியுறுத்தல்

தீண்டாமை என்னும் கொடிய நோயை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஞ்சாகுளத்தில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தை சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தல்.

11:32 (IST) 19 Sep 2022
திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளார் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு

11:29 (IST) 19 Sep 2022
தீண்டாமை புகார்; கல்வி அலுவலர் கபீர் ஆய்வு

தென்காசி : தீண்டாமை புகார் எழுந்த பாஞ்சாகுளம் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆய்வு. பாஞ்சாகுளம் பள்ளியில் எஸ்.சி மாணவர்கள் தரையில் உட்கார வைக்கப்படுவதாக புகார்.

11:16 (IST) 19 Sep 2022
மறுசீரமைப்பு பணி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீண்டும் திறக்க முடிவு

கள்ளக்குறிச்சி, மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி . 68 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டு மறுசீரமைப்பு பணிகளில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

10:58 (IST) 19 Sep 2022
சட்டப்பேரவை நோக்கி சமாஜ்வாடி கட்சி பேரணி

உத்தர பிரதேசம் : லக்னோவில் சட்டப்பேரவை நோக்கி அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சி பேரணி

மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் இருந்து சட்டசபை நோக்கி பேரணி

10:58 (IST) 19 Sep 2022
சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு 24ம் தேதி வரை விடுமுறை

பஞ்சாப், சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 24ம் தேதி வரை ஒரு வாரம் விடுமுறை

சக மாணவிகளின் குளியல் காட்சிகளை மாணவி ஒருவர் இணையத்தில் கசியவிட்டதால் நேற்று போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிப்பு

10:56 (IST) 19 Sep 2022
லடாக் கார்கில் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

லடாக், கார்கில் பகுதியில் காலை 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

09:38 (IST) 19 Sep 2022
பிரபல ரவுடி பிரசாந்த் தற்கொலை

சென்னை, சூளைமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி பிரசாந்த் தற்கொலை. மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்த பின் நேற்று தற்கொலை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழப்பு.

09:37 (IST) 19 Sep 2022
பேரூராட்சி அலுவலகத்தில் இரவு நேர காவலர் சடலமாக மீட்பு

நாமக்கல் : ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு நேர காவலர் பரமசிவம் என்பவர் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை

08:32 (IST) 19 Sep 2022
கனியாமூர் பள்ளி மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி, கனியாமூர் கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி. 68 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மறுசீரமைப்பு பணிகள் துவக்கம்

Web Title: Tamil news today live petrol diesel price queen elizabeth ii funeral america covid 19 ends joe biden taiwan china