பெட்ரோல், டீசல் விலை
308வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24
காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ராகுல் பத்திரிகையாளர் சந்திப்பு
அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து டெல்லியில் இன்று பிற்பகல் 1 மணிக்கு
ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.
பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக உள்ளது
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக உள்ளதாக உறவினர்கள் தகவல். லண்டனில் இசை நிகழ்ச்சிக்கு சென்றபோது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
- 22:17 (IST) 25 Mar 2023சென்னையில் ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை மார்ச் 27ம் தேதி ஆரம்பம்
சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 27ம் தேதி தொடங்கும். மார்ச் 27ம் தேதி காலை 9.30 மணி முதல் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்பனை நடைபெறும் என சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்துள்ளது
- 21:38 (IST) 25 Mar 2023திண்டுக்கல் ஐ.லியோனி எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ஸ்டாலின்
திண்டுக்கல் ஐ.லியோனி எழுதிய "வளர்ந்த கதை சொல்லவா" நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. "வளர்ந்த கதை சொல்லவா" புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் திண்டுக்கல் லியோனி எழுதியுள்ள புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று கூறினார். இதுவரை தான் வளர்ந்த கதையை பேச்சில் சொல்லிவந்த லியோனி தற்போது எழுதி வெளியிட்டுள்ளார்
- 20:30 (IST) 25 Mar 2023தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நாளை சத்தியாகிரக போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சத்தியாகிரக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் மகாத்மா காந்தி சிலை முன்பு ஒரு நாள் சத்தியாகிரக அறப்போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்
- 20:24 (IST) 25 Mar 2023தர்மபுரியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் சாலையில் நின்று அட்டகாசம்
தர்மபுரி, அரூரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடி சாலையில் நின்று அட்டகாசம் செய்தார். சாலையில் சென்ற வாகனங்களை மறித்து தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
- 19:45 (IST) 25 Mar 2023வாணியம்பாடி அருகே மூடாமல் விட்ட குழியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை மரணம்
திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே மூடாமல் விட்ட குழியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் அருகே இருந்த குழியில் மழையால் தண்ணீர் தேங்கி இருந்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது
- 19:24 (IST) 25 Mar 2023உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்; இந்தியாவுக்கு தங்கம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிது கங்காஸ் (48 கிலோ) இப்போது உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்ற வீராங்கனையாகவும், மங்கோலியாவின் லுட்சைகான் அல்டான்செட்செக்கை 5-0 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டியில் போட்டியில் வென்றார். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆறாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை நிது பெற்றுள்ளார்.
- 18:55 (IST) 25 Mar 2023புதுக்கோட்டையில் வீட்டிற்குள் கிரேன் புகுந்து விபத்து
புதுக்கோட்டையில் வீட்டிற்குள் கிரேன் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேனில் ஹேண்ட் பிரேக் போடாததால் கிரேன் புகுந்து வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
- 18:26 (IST) 25 Mar 2023ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து திருச்சியில் காங். கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக ஜன சதாப்தி விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்று வருகிறது
- 18:00 (IST) 25 Mar 2023போதைப்பொருள் ஒழிப்பதில் கைக்கோர்த்திடுவோம் - மு.க.ஸ்டாலின்
போதைப்பொருள் ஒழிப்பதில் அனைவரும் கைக்கோர்த்திடுவோம். போதைப்பொருட்கள் ஒழிப்பில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரப்புரைகளையும் செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
- 17:32 (IST) 25 Mar 2023திருச்சி காவிரி மேம்பாலத்தில் இளைஞர்கள் பைக் வீலிங் செய்து அட்டகாசம்
திருச்சி காவிரி மேம்பாலத்தில் இளைஞர்கள் பைக் வீலிங் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்
- 17:19 (IST) 25 Mar 2023ராகுல்காந்தி பதவி நீக்கம்: கருப்புத்துணி கட்டி காங்கிரஸ் போராட்டம்
ராகுல்காந்தி எம்.பி.,பதவி தகுதிநீக்கத்தை கண்டித்து நாடுமுழுவதும் காங்கிரஸ் போராட்டம்.
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புத் துணி கட்டி போராட்டம்.
- 17:19 (IST) 25 Mar 2023காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது போல் கனவு கண்டு கொண்டிருக்கிறது; மோடி
காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது போல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. மக்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது என கர்நாடகாவில் விஜய் சங்கல்ப யாத்ரா நிறைவு விழா பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி கூறினார்
- 17:08 (IST) 25 Mar 2023போதைப்பொருட்களை எதிராக ஆவணப்பட போட்டி: முதல்வர் வாழ்த்து
"போதைப்பொருட்கள் ஒழிப்பில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளைச் செய்திட வேண்டுமெனத் தொடர்ந்து கூறிவருகிறேன்.
இத்தகைய குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். பாராட்டுகள்!
போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம்!", என்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளார்.
- 16:47 (IST) 25 Mar 2023'சிறையில் போட்டாலும் அதானி பற்றி கேள்வி எழுப்புவதை நிறுத்த மாட்டேன்'- ராகுல் காந்தி
AICC தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல்காந்தி, "இந்த நாட்டில் ஜனநாயகம் முடிந்துவிட்டது. நாட்டு மக்கள் தங்கள் மனதில் உள்ளதை பேச முடியாது, நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அந்த தாக்குதலின் வழிமுறை நரேந்திர மோடிக்கும் அதானிக்கும் இடையிலான உறவு. அதுதான் அடித்தளம்,'' என்றார்.
- 16:02 (IST) 25 Mar 2023கொரோனா பரிசோதனை அதிகரிக்க வேண்டும்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சுவாசப் பிரச்சனை அதிகம் உள்ளது. இந்தியாவில் கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா, மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நொய்யலிகளின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பதால் கொரோனா பரிசோதனை அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.
- 15:21 (IST) 25 Mar 2023என்.எல்.சி.யால் உடல் உபாதைகள் ஏற்படும்: அன்புமணி ராமதாஸ்
என்.எல்.சி.,யில் பயன்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு கீழே சென்றுள்ளது.
என்.எல்.சி.யினால் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 14:12 (IST) 25 Mar 2023"ஜனநாயகத்துக்காக தொடர்ந்து போராடுவேன்": ராகுல் காந்தி!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அதற்கான உதாரணங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? அவர்கள் என் குரலை அடக்கி, என்னை ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தலாம் என்று நினைத்தால், அவர்களால் அதைச் செய்ய முடியாது. நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன், ஜனநாயகத்துக்காக தொடர்ந்து போராடுவேன்.
அதானி விவகாரத்தில் தொடர்ந்து கேள்விகள் கேட்பேன், தகுதி நீக்கம் செய்தும், சிறையில் அடைத்தும் என்னை பயமுறுத்த முடியாது. நான் பின்வாங்க மாட்டேன்.
- 14:02 (IST) 25 Mar 2023"நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன்" - ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரை நீக்கப்பட்டது, பின்னர் மக்களவை சபாநாயகருக்கு விரிவான பதில் எழுதினேன். நான் வெளிநாட்டு சக்திகளிடம் உதவி கேட்டதாக சில மந்திரிகள் என்னைப் பற்றி பொய் சொன்னார்கள். ஆனால் நான் அப்படி எதுவும் செய்யவில்லை. நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன், பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவை தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்.
- 13:48 (IST) 25 Mar 2023"அரசியல் நீதி என்பது எனது ரத்தத்தில் கலந்துள்ளது" - ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மோடி அதானி தொடர்பு குறித்து நடாளுமன்றத்தில் கேள்வி கேட்டேன். நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதன் எதிரொலியை உணர்கிறேன். அதானியில் ஷெல் நிறுவனங்களில் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்தது யார். அரசியல் நீதி என்பது எனது ரத்தத்தில் கலந்துள்ளது.
- 13:32 (IST) 25 Mar 2023ஜனநாயகம் மீது தாக்குதல் - ராகுல்காந்தி!
"இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அதானி பற்றி கேள்வி எழுப்பியதால் பிரச்னை தொடங்கியது. அதானி விவகாரத்தை திசை திருப்பவே ஒட்டுமொத்த நாடகமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
- 13:01 (IST) 25 Mar 2023ஏப்ரல் மாத தரிசன டிக்கெட்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாத தரிசன டிக்கெட் வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் கோயில் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
- 12:26 (IST) 25 Mar 2023ஆன்லைன் ரம்மியால் ஒருவர் தற்கொலை
திருச்சியில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த விரக்தியில் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் ரவிசங்கர் தற்கொலை செய்த சம்பவத்தில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- 11:43 (IST) 25 Mar 2023பாமக நிறுவனர் ராமதாஸ்
கச்சத்தீவில் புத்தர் சிலையா? மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயலை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். இந்திய அரசு தலையிட்டு கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணையிட வேண்டும்- ராமதாஸ்
- 11:25 (IST) 25 Mar 2023அன்புமணி ராமதாஸ் அறிக்கை
என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக தமிழ்நாடு அரசு ஓர் அங்குலம் நிலத்தைக் கூட கையகப்படுத்தாது என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்; என்எல்சியை வெளியேற்றவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
- 10:35 (IST) 25 Mar 2023ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,400க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கம் ரூ.5,550க்கு விற்பனை
- 10:34 (IST) 25 Mar 2023கொல்லங்கோடு பங்குனி மாத மீனபரணி தூக்கத்திருவிழா தொடக்கம்
புகழ்பெற்ற குமரி கொல்லங்கோடு பங்குனி மாத மீனபரணி தூக்கத்திருவிழா
திருமண வரம், குழந்தை வரம் வேண்டி கிடைக்கப்பெற்றவர்கள் நேர்த்திக் கடன் நிறைவேற்றம்
நிவர்த்தி செய்யப்பட்டு வரும் 1352 பச்சிளம் குழந்தைகளின் நேர்ச்சை
கோயிலில் குவிந்துள்ள தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள்
2 வில்களில் அந்தரத்தில் தொங்கியபடி பச்சிளம் குழந்தைகளை சுமந்து வலம் வரும் தூக்ககாரர்கள்
- 10:32 (IST) 25 Mar 2023மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவை எதிர்த்து மனு
எம்.பிக்கள், எம்.எல்.ஏ-களை தகுதி நீக்க செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு
பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன்
எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சட்டப்பிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
- 09:30 (IST) 25 Mar 2023மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு
வேலூர், கே.வி.குப்பம் வேப்பங்கநேரி பகுதியில் வேரோடு சாய்ந்த மரம் தானகவே நிமிர்ந்து நின்றதாக கூறி வழிபாடு
50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் மழையால் சரிந்து விழுந்த நிலையில் மீண்டும் நிமிர்ந்து நின்ற அதிசயம்
மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பக்தி பரவசத்துடன் மக்கள் வழிபாடு
- 09:29 (IST) 25 Mar 202370 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சீல்
சென்னை, எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள 70 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்
சொத்துவரி நிலுவை தொகையை செலுத்த முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கியும் செலுத்தாத நிலையில் நடவடிக்கை
- 09:28 (IST) 25 Mar 2023திருவாரூர் : கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை
திருவாரூர், நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியில் கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை
மனைவி தற்கொலை செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் கணவரும் தூக்கு போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
- 08:32 (IST) 25 Mar 2023கர்நாடகா: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
முதற்கட்டமாக 124 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டி
முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டி
மார்ச் 27-ம் தேதி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.