Advertisment

Tamil news today: மீன்வளத்துறை அனுமதி: நாகை, கடலூர், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Boat

மீனவர்கள் மீது தாக்குதல்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கிறது

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை வலுவிழக்கிறது. தமிழக-புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து டி20

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 3-வது டி20 போட்டி நேப்பியரில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. டி-20 தொடரை வெல்ல இந்திய அணியும், தொடரை சமன் செய்ய நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. இந்தியா தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

கால்பந்து உலகக்கோப்பை

ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நடைபெற உள்ள இன்றைய ஆட்டங்கள். பிற்பகல் 3.30 மணிக்கு அர்ஜென்டினா - சவுதி அரேபியா அணிகள் மோதல். மாலை 6.30 மணிக்கு டென்மார்க் - துனிசியா அணிகள் மோதல். இரவு 9.30 மணிக்கு மெக்சிகோ - போலாந்து அணிகள் மோத உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 04:31 (IST) 23 Nov 2022
    அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத்திருவிழா

    அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கலைத்திறனை வளர்ப்பதற்காக நம்பவர் 23 முதல் முதல் கலைத் திருவிழா தொடக்கம்; ஓவியம், கவிதை, கட்டுரை, மிமிக்ரி என பல பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன.

    பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் போட்டிகள் நடக்கும்; இறுதியாக வெல்பவர்கள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.



  • 22:30 (IST) 22 Nov 2022
    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது; மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி - கடலூர் மீன்வளத்துறை

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதனால், நாளை (நவம்பர் 23) முதல் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு அனுமதி - கடலூர் மாவட்ட மீன்வளத்துறை.



  • 21:14 (IST) 22 Nov 2022
    சபரிமலைக்கு விமானத்தில் செல்லும்போது இருமுடிக்குள் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி

    ஐயப்ப பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, சபரிமலைக்கு விமானத்தில் செல்லும்போது இருமுடிக்குள் தேங்காய் கொண்டு செல்ல விமான போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது.



  • 20:34 (IST) 22 Nov 2022
    தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளர்கள் போராட்டம்

    தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி சரியான தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்கள் அலுவலகம் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தியதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.



  • 19:33 (IST) 22 Nov 2022
    உலகக்கோப்பை கால்பந்து போட்டி அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி.

    உலகக்கோப்பை கால்பந்து போட்டி அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி. அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் சவுதி அரேபியா 2-1 என வெற்றி பெற்றது.



  • 18:56 (IST) 22 Nov 2022
    சாரையில் மாடுகள் சுற்றித் திரிந்தால் ரூ.3 ஆயிரம் அபராதம்

    சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தால், மாடுகளை பறிமுதல் செய்து ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஓசூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.



  • 18:44 (IST) 22 Nov 2022
    கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும்.. அமைச்சர் சேகர் பாபு

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் படிப்படியாக விஜபி தரிசனம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    மேலும், கோவில்களில் பாகுபாடு கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.



  • 18:38 (IST) 22 Nov 2022
    கப்பலூர் சுங்கசாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் இல்லை

    மதுரை திருமங்கலம் கப்பலூர் சுங்க சாவடியில் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் இன்றி செல்லலாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    சுங்க சாவடி நிர்வாகத்திடம் நடத்திய பேச்சுவார்த்தைய தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



  • 18:24 (IST) 22 Nov 2022
    2026இல் எய்ம்ஸ் எப்படி கட்டி முடிக்கப்படும்.. மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வி

    2026இல் எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி கட்டி முடிக்கப்படும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வியெழுப்பியுள்ளது.



  • 18:21 (IST) 22 Nov 2022
    கிறிஸ்டியன் மைக்கேல் மனு நவ.28 விசாரணை

    அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை நவம்பர் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.



  • 17:32 (IST) 22 Nov 2022
    கருவுற்ற நாய் கொலை.. 4 மாணவர்கள் கைது

    டெல்லியில் கருவுற்ற நாய் ஒன்றை கொன்ற வழக்கில் டான் போஸ்கோ டெக்னிக்கல் இன்ஸ்ட்டியூட் கல்வி நிறுவனத்தில் பயிலும் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.



  • 17:17 (IST) 22 Nov 2022
    12 பைசா உயர்ந்த இந்திய பணம்

    இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா உயர்ந்தது.



  • 17:01 (IST) 22 Nov 2022
    அவ்வை நடராசன் இறுதி சடங்கு

    அவ்வை நடராசன் உடலுக்கு சென்னை மயிலாப்பூர் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.



  • 16:58 (IST) 22 Nov 2022
    கர்நாடகாவில் பரபரப்பு.. காங்கிரஸில் இணைந்த எடியூரப்பா ஆதரவாளர்

    சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள கர்நாடகாவில் திடீர் திருப்பமாக பி.எஸ். எடியூரப்பா ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பணாகர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.



  • 16:39 (IST) 22 Nov 2022
    அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 16:08 (IST) 22 Nov 2022
    காயத்ரி ரகுராம் வேதனை

    உண்மையை பேசினேன், அதனால் நீக்கப்பட்டு உள்ளேன். தனிப்பட்ட முறையில் என்னை தாக்கியவர்களுக்கு, நேரடியாக பதிலடி கொடுத்தேன். என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமில்லை. என்னால் பாஜகவிற்கு களங்கம் என சொல்வது வேதனை அளிக்கிறது என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.



  • 15:29 (IST) 22 Nov 2022
    கன்னியாகுமரியில் அறிவியல் அருங்காட்சியகம்

    கன்னியாகுமரியில், இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறியுள்ளார்.



  • 15:19 (IST) 22 Nov 2022
    பள்ளி மாணவி மாடியில் இருந்து விழுந்தது தொடர்பாக பள்ளி நிர்வகத்திற்கு நோட்டீஸ்

    திண்டுக்கல்லில் 11-ம் வகுப்பு மாணவி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில், முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது இந்த வழக்கு தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோரும் விரிவான பதில் அளிக்க உத்தரவ பிறப்பிக்கபட்டுள்ளது.



  • 14:32 (IST) 22 Nov 2022
    முன்னாள் துணைவேந்தர் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

    பேராசிரியர் நியமனத்துக்கு லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கல்வி நிலையங்கள் மீது நம்பகத்தன்மையை குறைக்கும் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 14:22 (IST) 22 Nov 2022
    ஆட்டோ வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய ஷாரிக், குறித்து முக்கிய தகவல்

    மங்களூரு ஆட்டோ வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய ஷாரிக், செல்போன் பழுதுநீக்கும் பயிற்சி கற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது மைசூரில் 20 நாட்கள் தங்கியிருந்து செல்போன் பழுதுநீக்கும் பயிற்சியை கற்றுக்கொண்டதாக செல்போன் ரிப்பேர் பயிற்சி மைய உரிமையாளர் பிரசாத் போலீசில் தகவல் தெரிவித்துள்ளார்.



  • 14:18 (IST) 22 Nov 2022
    புதுச்சேரி அரசு மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

    அரசு பொது மருத்துவமனைகளை தனியார்மயமாக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.



  • 14:16 (IST) 22 Nov 2022
    இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் - காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.



  • 13:38 (IST) 22 Nov 2022
    தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக நீதிபதிகள் வேதனை

    தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



  • 13:37 (IST) 22 Nov 2022
    254 உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செல்லாது என்ற உத்தரவுக்கு தடை

    பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரியின் 254 உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.



  • 13:35 (IST) 22 Nov 2022
    மேகதாது அணை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்க மனு

    மேகதாது அணை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் "மேகதாது அணை திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமில்லை" என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.



  • 13:14 (IST) 22 Nov 2022
    காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வு பகுதியாக வலுவிழந்தது - வானிலை ஆய்வு மையம்

    வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. தொடர்ந்து மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா - வட தமிழகம் நோக்கி செல்லும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 13:04 (IST) 22 Nov 2022
    கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் இடையே மோதல்

    கால்பந்து உலகக்கோப்பை தொடரையொட்டி கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற பேரணியில் பிரேசில், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • 12:57 (IST) 22 Nov 2022
    பா.ஜ.க.,வின் உண்மையான தொண்டராக செயல்படுவேன் - காயத்ரி ரகுராம்

    கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினாலும், பாஜகவின் உண்மையான தொண்டராக செயல்படுவேன் என பாஜக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்



  • 12:55 (IST) 22 Nov 2022
    வாட்ஸ் அப் முகப்பு படத்தில் ஈஷா யோகா புகைப்படத்தை ஷாரிக் வைத்திருந்தது கண்டுபிடிப்பு

    வாட்ஸ் அப் முகப்பு படத்தில் ஈஷா யோகா மைய புகைப்படத்தை ஷாரிக் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேம் ராஜ் என்ற பெயரில், ஷாரிக் வாட்ஸ் அப்பில் செயல்பட்டு வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது



  • 12:44 (IST) 22 Nov 2022
    பா.ஜ.க நிர்வாகி காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் நீக்கம்

    பா.ஜ.க நிர்வாகி காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, நீக்கம் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்



  • 12:31 (IST) 22 Nov 2022
    திருச்சி சூர்யா சிவா மீது பா.ஜ.க நடவடிக்கை; அண்ணாமலை அறிவிப்பு

    பாஜக பெண் உறுப்பினர் டெய்சி சரண், சூர்யா சிவா இருவரின் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் சம்பவத்தை விசாரித்து கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்



  • 12:21 (IST) 22 Nov 2022
    ராணி மேரி கல்லூரியை இடிக்க கடந்த கால அ.தி.மு.க அரசு முயன்றது - ஸ்டாலின்

    ராணி மேரி கல்லூரியை இடிக்க கடந்த கால அதிமுக அரசு முயன்றது. அதை எதிர்த்து போராடிய கல்லூரி மாணவிகளுக்கு திமுக சார்பில் நேரில் ஆதரவு அளித்தேன். மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக என்னை போலீசார் கைது செய்தனர். ராணி மேரி கல்லூரிக்காக போராடியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று என ராணி மேரி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்



  • 12:00 (IST) 22 Nov 2022
    இந்தியாவில் உள்ள முதல்வர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் மு.க.ஸ்டாலின் - பொன்முடி பெருமிதம்

    இந்தியாவில் உள்ள முதல்வர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 33 மாணவிகளுடன் துவங்கப்பட்ட கல்லூரியில், இன்று 5000 மாணவிகள் படிக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. இந்த பட்டத்தோடு நின்றுவிடாமல், இன்னும் பல பட்டங்கள் பெற்று உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி உரையாற்றியுள்ளார்



  • 11:40 (IST) 22 Nov 2022
    71,056 பேருக்கு பணி நியமன ஆணைகள்; காணொலி வாயிலாக வழங்கினார் பிரதமர் மோடி

    இந்திய அளவில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் 2ம் கட்டமாக 71,056 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக வழங்கினார்



  • 11:34 (IST) 22 Nov 2022
    இராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழா; மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    சென்னை, இராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்



  • 11:28 (IST) 22 Nov 2022
    மங்களூரு சம்பவம்; ஷாரிக் உடன் மற்றொரு நபர் பேருந்தில் பயணம்; போலீசார் தீவிர விசாரணை

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் கைதான ஷாரிக் உடன் மைசூரில் இருந்து மங்களூருக்கு மற்றொரு நபர் பேருந்தில் பயணம் செய்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்



  • 11:07 (IST) 22 Nov 2022
    ஜாமினில் வெளிவந்த நெல்லை மாவட்ட பா.ஜ.க தலைவருக்கு ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு

    சிறையில் இருந்து வெளி வந்த நெல்லை மாவட்ட பா.ஜ.க தலைவருக்கு ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு

    அரசு கட்டுப்பாட்டில் இருந்த மாடுகளை அத்துமீறி அவிழ்த்துவிட்ட புகாரில் கைதாகி சிறை சென்றார்

    ஜாமினில் வெளிவந்த பா.ஜ.க மாவட்ட தலைவருக்கு பசு மாட்டுடன் திரண்டு வந்து வரவேற்பு

    செண்டை மேளம், கரகாட்டம் என உற்சாகத்துடன் வரவேற்ற பா.ஜ.கவினர்

    பாளையங்கோட்டை சிறை முன்பு திரண்டு மலர் தூவி வரவேற்ற பா.ஜ.கவினர்



  • 11:04 (IST) 22 Nov 2022
    கருக்கலைப்பு மருந்து சாப்பிட்ட பெண் உயிரிழந்த வழக்கில் விசாரணை

    கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு மருந்து சாப்பிட்ட பெண் உயிரிழந்த வழக்கில் விசாரணை

    விசாரணை தொடர்பாக அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

    மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

    மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை பெற வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்



  • 10:43 (IST) 22 Nov 2022
    காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி

    மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜனின் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செய்யப்படும்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



  • 09:38 (IST) 22 Nov 2022
    அவ்வை நடராஜன் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

    மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

    சென்னை, அண்ணாநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்

    அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் நேரில் அஞ்சலி



  • 09:17 (IST) 22 Nov 2022
    மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம்

    மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் நடைபெறுகிறது



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment