பெட்ரோல் -டீசல் விலை
சென்னையில் 19வது நாளாக பெட்ரோல் டீசக் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஹெல்மெட் கட்டாயம்
வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுகிறது. விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் இன்று வாக்குப்பதிவு
கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், மகாரஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கு இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில் மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தியாவில் விலங்குக்கான தடுப்பூசி அறிமுகம்
விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாந்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அறிமுகப்படுத்தினார் . நாய், பூனை, சிங்கம், சிறுத்தை, எலி, முயல்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க அனோகோவாக்ஸ் தடுப்பூசி அறிமுகம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், நடிகை நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் வரும் 13-ந் தேதி நியாய விலைக்கடை ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துளள நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,081 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,329 ஆக உயர்ந்துள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கும் முறை அமல்படுத்தப்படும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஸ முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறவால் பதிக்கப்பட்டுள்ள அவர், துபாயில் உள்ள மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆவணங்களுடன் ஆஜராகுமாறு சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் பாரதிராஜா, ப்ரியா பவானிசங்கர் ஆகியோரின் கதாபாத்திர பெயர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 106-வது நாளாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக உக்ரைன் – ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
அதேவேளை, போர் தொடங்கியது முதல் பல்வேறு மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவில் செயல்பட்டு வரும் தங்கள் கிளைகளை மூடியுள்ளன. கார் உற்பத்தியில் இருந்து, உணவகம் வரை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறியுள்ளன.
இந்நிலையில்,” ரஷியாவில் இருந்து வெளியேறியதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் வருத்தப்படும் என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ரஷியா மிகுந்த சந்தை மதிப்பு கொண்ட நாடு. ரஷியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியது மேற்கத்திய நாடுகள் மற்றும் பொருளாதாரத்தில் அமெரிக்கா எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு ஆதாரமாகும். ரஷியாவை விட்டு வெளியேற வேண்டும் என கட்டாயத்தால் பல நிறுவனங்கள் வருத்தப்படுகின்றன. சுயமாக முடிவெடுக்க முடியாத நாடுகளின் வெளிப்பாடே இது” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2வது விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு தாக்கல் செய்தது. அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் அளித்து வழக்கு விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
முகமது நபி குறித்த முன்னாள் பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவின் விமர்சனம் செய்த நிலையில், வட மாநிலங்களில் பல நகரங்களில் நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உத்திர பிரதேச மாநில பிரயாக்ராஜ் நகரில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. சுமார் 5000 ஊழியர்கள் பயனடைவார்கள் என தொழிலாளர் நலத்துறை தகவல் அளித்துள்ளது.
சேத்துக்குளி பகுதியில் ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். பாட்டியுடன் துணி துவைக்க சென்ற சிறுமிகள் ஆற்றில் விளையாடிய போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட பாமக தான் காரணம். இப்போதும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கும் பாமக தான் காரணம்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
இலங்கைக்கு வழங்குவதற்காக 40,000 மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்ததால், வழக்கை மனுதாரர் திரும்ப பெற்றார்.
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிரான புகார் ஆணையத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், “விசாரணை கைதிகளை இரக்கமில்லாமல் உயிரிழக்கும் வரை தாக்குவதா?, காவல்துறையின் பேதலித்த மனநிலையையே இது காட்டுகிறது என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழுவை நியமிக்க அரசு அஞ்சுகிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் தொடர்புடைய 25 இடங்களில் நடைபெற்ற 3 நாள் சோதனை இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இந்த சோதனையில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையிலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியில் கூறினார்.
தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 14 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில நயன்தாரா – விக்னேஷ் சிவன் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை, வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்திய திடீர் ஆய்வின் போது பணியில் இல்லாத மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 38,200 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.4,775க்கும் விற்பனையாகிறது.
1,456 மருத்துவ மேற்படிப்பு இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளது. சிறப்பு கலந்தாய்வு கோரி மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 1,456 மருத்துவ இடங்கள் கலியாக இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கண்டம் தெரிவித்த நிலையில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மத விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது எனவும் எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஆதின விவகாரங்களில் தமிழ்நாடு அரசு மூக்கை நுழைக்க முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,24,747 பேர் கொரோனா பாதிப்பால் உயிழிந்துள்ளனர். ஒரே நாளில் 3,569 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 32,489லிருந்து 36,267 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் தொடங்கியது. இன்று மாலை 4 மணி வரை நடைபெற உள்ள தேர்தலில் எம்எல்ஏக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் தண்டவளாத்தில் போதையில் படுத்து உறங்கிய இருவர் மீது சரக்கு ரயில் ஏறியதில் அவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம்.