பெட்ரோல், டீசல் விலை
336-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகை
நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையையொட்டி பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
ஐ.பி.எல் டி20
ஐ.பி.எல் டி20 தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது. லக்னோவில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ – குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மும்பை – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ இணைத்துக் கொள்வது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்ய வேண்டும். முடிவு எடுப்பதற்கு அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி திரும்பி வர வேண்டும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்
டப்பிங் யூனியன் பொதுக்குழு கூட்டத்தில், தன்னை ஆபாசமாக பேசி தாக்கியதாக பெண் உறுப்பினர் புகார் அளித்துள்ள நிலையில், நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதியதாக 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3676 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி குறித்து வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை. புள்ளிவிவரங்களும் சரியானவை. எனவே மன்னிப்பு கோர முடியாது. ரூ.50 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்வதாக கூறியது எனது குரலை அடக்கும் முயற்சி என அமைச்சர் உதயநிதிக்கு அண்ணாமலை பதில் கடிதம் எழுதியுள்ளார்
ராணிப்பேட்டை மாவட்டம் கூட்ரோடு பகுதியில் செயல்படும் அரசு இல்லத்திலிருந்து 4 சிறார்கள் தப்பி ஓடியுள்ளனர். குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் தப்பி ஓடிய சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
விழுப்புரம், செஞ்சி ராஜா கோட்டைக்கு செல்ல 10 நாட்கள் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி. நாளை மறுநாள் முதல் மே 3ம் தேதி வரை இலவசமாக சுற்றி பார்க்க அனுமதி. மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் ஆலய ரத உற்சவ திருவிழாவை முன்னிட்டு தொல்லியல்துறை உத்தரவு
மடோன் அஷ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படம், ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு வருகிறது – ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விருதுநகர், சிவசங்குப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ₨3 லட்சம் நிதியுதவி பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தென்காசி, பாவூர்சத்திரம் அருகே அரசுப் பேருந்து மோதி 6ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் போலீசார் தீவிர விசாரணை
திருவள்ளூர்: பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தில் மின்னல் தாக்கி விவசாயி சரவணன் (43) உயிரிழப்பு; பச்சைப் பயிறு மூட்டைகள், மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடச் சென்றபோது மின்னல் தாக்கிய சோகம்!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2024ம் ஆண்டு பிப்ரவரியில் ககன்யான் திட்டத்தின் முழுமையான சோதனை மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தியதாக சென்னையை சேர்ந்த அம்ஜத்கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஊழல் வழக்கில் மத்தியப் புலனாய்வுத் துறையின் (சிபிஐ) சம்மன் பெற்ற ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் இன்று மதியம் டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் காவல் நிலையத்துக்குச் சென்றார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவல்களை மறுத்த டெல்லி காவல்துறை தனது சொந்த விருப்பத்தின் பேரில் அவர் காவல்நிலையத்திற்கு வந்ததாக அறிக்கை வெளியிட்டது. தற்போது அவர் விசாரணை முடிந்து காவல்நிலையத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு.
தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு.
கொல்கத்தாவில் நடந்த ரமலான் கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜீ பேசியுள்ளார்.
“எங்களுக்கு கலவரம் வேண்டாம்; நாங்கள் அமைதியை விரும்புகிறோம். நாட்டில் பிளவுகள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை; என் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால், நாட்டை பிரிக்க விடமாட்டேன்”, என்று கூறியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி., சி.55 ராக்கெட், சிங்கப்பூரை சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான 'டெலியோஸ்- 2' மற்றும் 16 கிலோ எடை கொண்ட லூமிலைட்- 4 ஆகிய செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.
தமிழக அமைச்சரவை கூட்டம் மே 2ஆம் தேதி நடைபெற உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், அமைச்சரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
இந்தோனேசியா நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆகப் பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் இந்தோனேசியாவின் வடக்கே ஜாவா தீவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது மொலுக்கா தீவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும் சேதம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஆருத்ரா பண மோசடி வழக்கில் இதுவரை 13 பேரை கைது செய்துள்ளது காவல்துறை
முடக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட சொத்துக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. அடுத்த 6 மாதத்திற்குள் மக்கள் இழந்த பணத்தை திருப்பி கொடுக்க வாய்ப்பு- போலீசார் தகவல்
கோவையில் நடைபெற்ற பெண் காவலருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பெண் காவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர்.
போட்டியில் காவல் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான 'Blue Fighters' அணி அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கோப்பையை வழக்கினார்.
20 21 வரையிலான அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோரப்பட்ட டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது. கணினி மூலம் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் தாக்கல் செய்ததன் மூலம் ஒப்பந்தப்புள்ளியில் விதிமீறல் நடந்துள்ளது; அதிமுக ஆட்சியில் அம்பலப்படுத்திய இ-டெண்டர் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய கொடி, யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை.” என்று திருச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
“வரும் 24ஆம் தேதி திட்டமிட்டப்படி திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடைபெறும்” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சூடான் தலைநகர் கார்ட்டூமில் தொடரும் ராணுவ மோதலால் மின்சாரம், தண்ணீர் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். ஆதாரங்கள் அடிப்படையில் தூதரகக் குழு தமிழர்களை தொடர்பு கொள்கிறது என்று சூடான் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து, முகநூலில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போரூர் காவல்நிலையத்தின் முதன்மை காவலர் கோபிகண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
12 மணி நேர வேலை சட்ட திருத்தம் தொடர்பாக வருகிற 24ஆம் தேதி தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
“அதிமுக கொடியை நாங்கள் சட்டையாகக் கூட தைத்து போட்டுக் கொள்வோம்” என்று அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
“அதிமுக கொடியை பயன்படுத்தும் ஓபிஎஸ் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமாரிடம் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் பாதி சிலைகள், சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடமிருந்து பெறப்பட்டதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கற்சிலைகள் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67,556 ஆக உயர்ந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 26ஆம் தேதி டெல்லி செல்கிறார். அதிமுக பொதுச்செயலாளராக இ.பி.எஸ்ஸை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், அமித்ஷா உடன் சந்திப்பு நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு புதிதாக சிங்கம் வருகை
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருகை
இதற்கு பதிலாக வண்டலூர் பூங்காவில் இருந்த வெள்ளைப்புலி கர்நாடகா சென்றது
அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கிடம் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி
கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் அவர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு
ஓ.பி.எஸ் வேட்பாளர்கள் மனு ஏற்பு: கர்நாடக தேர்தல் அதிகாரிக்கு இ.பி.எஸ் கடிதம்
ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர்களின் மனு ஏற்பு – அதிமுக எதிர்ப்பு
கர்நாடக தேர்தலில் 2 தொகுதிகளில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அ.தி.மு.க கடிதம். தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களின் மனுவை ஏற்றுள்ளார் என அதிமுக கடிதம்
ஆந்திரா ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி தளத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி சி55 ராக்கெட். சிங்கப்பூரின் 2 செயற்கைக் கோள்களுடன் பிற்பகல் 2.19 மணிக்க விண்ணில் பாய்கிறது. 750 கிலோ எடை கொண்ட டெலியோஸ் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை ராக்கெட் சுமந்து செல்கிறது.
இன்று ரம்ஜான் பண்டிகை: தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகை
கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
அமைதி, ஆரோக்கியம், சமாதானம் போன்றவை வலியுறுத்தி சிறப்பு தொழுகை
காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம்
மானியக் கோரிக்கையை விமர்சித்து முகநூலில் மீம் வீடியோ பதிவிட்ட தேனாம்பேட்டை தலைமை காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம்
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு
ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஈகைத்திருநாளாம் ரமலான் திருநாள் வாழ்த்துகள் – ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 44,840க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5,605க்கு விற்பனை
அட்சய திருதியை நாளில் தங்கம் விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி