scorecardresearch

Tamil news Highlights: மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் : வானதி சீனிவாசன்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today – 21 May 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

vanathi srinivasan
வானதி சீனிவாசன்

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 365-வது நாளாக விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கினால் பெரும் ஆபத்துகளை சந்திக்க நேரிடும்என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை.

பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?

ஐ.பி.எல் 2023 போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று நடைபெறும் போட்டிகளில் 4-வது அணியாக பிளே ஆஃப்க்கு நுழைவது யார் எனக் கடும் போட்டி நிலவுகிறது. மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை- ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் குஜராத்- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 4-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Read More
Read Less
Live Updates
22:41 (IST) 21 May 2023
பாரில் மது அருந்திய இருவர் மரணம் – ஆட்சியர் பேட்டி

தஞ்சாவூர், கீழ அலங்கம் பகுதியில் அரசு மதுபானக் கடை ஒட்டிய அரசு பாரில் மது அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவத்தில், இறந்தவர்களின் உடல் கூறு ஆய்வில் சயனைடு விஷம் உள்ளதாக தகவல் வந்திருக்கிறது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும், இருவர் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக இது நடைபெற்றதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் சிறப்பு குழு அமைத்து விசாரித்து வருகிறோம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்

21:30 (IST) 21 May 2023
பொதுமக்களிடம் இருந்து சால்வை, மாலைகள் பெற மாட்டேன்: சித்த ராமையா

கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா ட்விட்டரில், “பொதுமக்களிடம் இருந்து நாளை முதல் சால்வைகள், மாலைகள் பெற வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.

இது எனது வீடு மற்றும் அலுவலகத்துக்கும் பொருந்தும். அன்பையும் மரியாதையையும் காணிக்கையாகக் காட்ட விரும்புவோர் புத்தகங்களைக் கொடுக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

20:35 (IST) 21 May 2023
புதுவையில் இருந்து விழுப்புரத்திற்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்திய மூவர் கைது

புதுவையில் இருந்து விழுப்புரத்திற்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 200 மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

20:04 (IST) 21 May 2023
ஐபிஎல் 2023 தொடரில் இருந்து வெளியேறியது ராஜஸ்தான் அணி

ஐபிஎல் 2023 தொடரில் இருந்து ராஜஸ்தான் அணி வெளியேறியது. மும்பை அணியின் வெற்றியை அடுத்து தொடரில் இருந்து ராஜஸ்தான் அணி வெளியேறியது

19:22 (IST) 21 May 2023
வடபழனி முருகன் கோயிலுக்கு புதிதாக சூரிய மின் சக்தி நிலையம்

சென்னை, வடபழனி முருகன் கோயிலுக்கு புதிதாக சூரிய மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 25.20 லட்சம் மதிப்பிலான நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்

18:54 (IST) 21 May 2023
டாஸ்மாக் மரணங்கள் தொடர்கின்றன: செந்தில் பாலாஜி மீது சட்ட நடவடிக்கை: அண்ணாமலை வலியுறுத்தல்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில், மதுக் கடை திறப்பதற்கு முன்னரே, கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மது வாங்கிக் குடித்த குப்புசாமி என்ற முதியவர் மரணமடைந்துள்ளார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மரணித்துவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது.

கள்ளச் சாராயத்தைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன.

இந்த போலி மதுபானத்தை உற்பத்தி செய்த ஆலையின் உரிமையாளர், டாஸ்மாக் நிர்வாகத்தினர் மற்றும் இந்தத் துறையின் அமைச்சரான திரு செந்தில் பாலாஜி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள மதுக் கடையின் முன்பு @BJP4TamilNadu தொண்டர்களுடன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதே கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற வேண்டுமா என்பதை @mkstalin தான் முடிவு செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்லாது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

18:33 (IST) 21 May 2023
பப்புவா நியூ கினி பிரதமருடன் மோடி சந்திப்பு

பப்புவா நியூ கினி நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடியை வரவேற்று, அவரது காலில் விழச்சென்ற அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராபே-ஐ பிரதமர் மோடி தட்டிக்கொடுத்து தடுத்தார்.

18:13 (IST) 21 May 2023
கேரளாவில் சாலையில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாலையில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்தது. திருமண நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டார் புக் செய்திருந்த வாகனம் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சில நொடிகளில் மளமளவென பரவிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

18:02 (IST) 21 May 2023
நிதிஷ் குமாருக்கு பா.ஜ.க அறிவுரை

பிகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், பிரதமர் கனவில் கவனம் செலுத்துவதை மறந்துவிட்டு மக்கள் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா கூறினார்.

17:42 (IST) 21 May 2023
சின்னசாமி ஸ்டேடியத்தில் மழை நின்றது

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மழை நின்றதால் குஜராத்-கர்நாடகா ஐ.பி.எல் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

17:25 (IST) 21 May 2023
டெல்லி அரசியலில் நாட்டம் இல்லை: அண்ணாமலை

டெல்லி அரசியலில் நாட்டம் இல்லை. 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

16:59 (IST) 21 May 2023
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி: ராகுல் காந்திக்கு மெகபூபா புகழாரம்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தான் கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு அடித்தளமிட்டது என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சர் மெகபூபா முஃப்தி கூறியுள்ளார்.

16:47 (IST) 21 May 2023
குஜராத்தில் பேருந்து சேவை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 321 பேருந்துகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

16:28 (IST) 21 May 2023
கிரிக்கெட் போட்டியை தொடங்கிவைத்த அன்புமணி

தர்மபுரியில் அதியமான் கிரிக்கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியை அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

16:22 (IST) 21 May 2023
பெங்களூருவில் மழை: ஐ.பி.எல் போட்டி நடக்குமா?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், பெங்களூரு vs குஜராத் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

16:04 (IST) 21 May 2023
‘தளபதி 68′ திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68ஆவது படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

15:35 (IST) 21 May 2023
தஞ்சாவூரில் மது குடித்த இருவர் உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் மது குடித்த விவேக்(36) மற்றும் குப்புசாமி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய சென்ற வட்டாட்சியர் சிறைபிடிக்கப்பட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

14:38 (IST) 21 May 2023
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14:35 (IST) 21 May 2023
விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 9 பேர் டிஸ்சார்ஜ்

விஷச்சாராயம் குடித்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; தற்போது 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்!

14:18 (IST) 21 May 2023
ரூ. 2000 நோட்டுகள் மாற்ற வங்கிகளில் எந்த ஆவணமும் தேவையில்லை – எஸ்.பி.ஐ வங்கி உத்தரவு

ரூ. 2000 நோட்டுகளை மாற்ற வங்கிகளில் எந்த ஆவணமும் தேவையில்லை என வங்கி கிளைகளுக்கு எஸ்.பி.ஐ வங்கி உத்தரவிட்டுள்ளது.

13:38 (IST) 21 May 2023
ஜூன் 20ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு

ஜூன் 20ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார். “கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 2023 ஜூன் 3 தொடங்கி, 2024 ஜூன் 3 வரை ஓராண்டு காலத்திற்குத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

13:07 (IST) 21 May 2023
சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னையில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

13:06 (IST) 21 May 2023
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு . சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'

12:37 (IST) 21 May 2023
நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறக்க கூடாது

நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறக்க கூடாது. குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் – ராகுல்காந்தி

12:36 (IST) 21 May 2023
கலைஞர் கோட்டம் திறப்பு

திருவாரூரில் ஜூன் 20ஆம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார்

12:36 (IST) 21 May 2023
கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும்” திமுக உயர்நிலை செயல் திட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

12:10 (IST) 21 May 2023
குடிநீர் விற்பனையிலும் இறங்குகிறது ஆவின்

பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையிலும் இறங்குகிறது ஆவின். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு ஏற்பாடு. முதற்கட்டமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரையிலான குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய முடிவு. நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யவும் ஆவின் நிர்வாகம் இலக்கு

11:41 (IST) 21 May 2023
செந்தில் பாலாஜியை நீக்கவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம்.

விஷச்சாராய மரணம் குறித்து விசாரணை நடத்தவும் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். ஆளுநரை சந்தித்த பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

11:40 (IST) 21 May 2023
கலந்தாய்வு தள்ளிவைப்பு

நாளை நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைப்பு

11:14 (IST) 21 May 2023
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள், செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு கருணாநிதி நூற்றாண்டு விழா, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை என தகவல் .

10:53 (IST) 21 May 2023
பப்புவா நியூ கினியா புறப்பட்டார் பிரதமர் மோடி

ஹிரோஷிமாவில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பப்புவா நியூ கினியா புறப்பட்டார் பிரதமர் மோடி

ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்தார் பிரதமர் மோடி

10:49 (IST) 21 May 2023
ஆளுநரிடம் அண்ணாமலை நேரில் மனு

சென்னை, கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

விஷச்சாராய மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட ஆளுநரிடம் அண்ணாமலை நேரில் கோரிக்கை

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குமாறும் ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு

10:10 (IST) 21 May 2023
கணினிமயமாகும் கிராம ஊராட்சிகள்

கிராம ஊராட்சிகளில் நாளை முதல் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் முறை அமல்

வீடு, சொத்து, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என உத்தரவு

09:41 (IST) 21 May 2023
இடிதாக்கி இருவர் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இடிதாக்கி இருவர் உயிரிழப்பு

09:40 (IST) 21 May 2023
ஆன்லைன் மூலமாக வரிகள் பெறப்பட வேண்டும்

கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் செலுத்தும் வரிகள் அனைத்தும் நாளை முதல் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும்.

நாளை முதல் ஆன்லைன் மூலமாக கட்டணம் பெறப்படும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

08:23 (IST) 21 May 2023
மதுராந்தகம் டி.எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

செங்கல்பட்டில் விஷச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரம்

மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

மதுராந்தகம் புதிய டி.எஸ்.பி.யாக சிவசக்தி நியமனம்

08:23 (IST) 21 May 2023
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம்

டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி அஞ்சலி செலுத்தினர்

08:01 (IST) 21 May 2023
தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலத்தில் காலை நடைபெறுகிறது.

Web Title: Tamil news today live petrol diesel price russia ukraine war ipl playoff

Best of Express