பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 227-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கர்நாடக ஆளுநர், மகாராஷ்டிர முதல்வர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம். திருச்சி<br>ஸ்ரீரங்கம் கோயில் உள்பட பல பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த வரைவு விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்: “அ.தி.மு.க ஒரு அசைக்க முடியாத இயக்கம். எத்தனை வழக்கு போட்டாலும் அ.தி.மு.க பயந்துவிடாது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.” என்று கூறினார்.
சென்னை மெட்ரோ ரயிலில், 2022-ஆம் ஆண்டில் 6.09கோடி பயணங்கள் மேற்கொள்ளபட்டுள்ளது. மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட 7 ஆண்டுகளில் புதிய உச்சம் தொட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சபரிமலை கோயில் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 3 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை வளரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74,36 கோடி மதிப்பீட்டில் 2 உயர் மட்ட பாலங்கள் அமைக்க அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. சின்ன நொளம்பூர் பகுதியில் ரூ. 42.71 கோடி மதிப்பீட்டிலும், சன்னதி முதலாவது குறுக்கு தெருவில் ரூ. 31.65 கோடி மதிப்பிலும் உயர்மட்ட பாலங்கள் அமைய உள்ளன.
கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் பொருண்மைக்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா கால செவிலியர்களின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணியமர்த்த வேண்டும்; உருமாறிய கொரோனா அச்சுறுத்தும் சூழலில் செவிலியர்களின் பணி மிகவும் தேவை என்று தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
பண்ருட்டி அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. வீட்டின் பின்பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளம் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2021-ல் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்த வழக்கில் 11வது நபராக, கோபி என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபாட்டில் வாங்க ரூ. 500 தந்தால் போதும் எனக் கூறி கொள்ளைக் கும்பலில் இணைந்த கோபிக்கு ரூ. 25,000 பணத்தை அக்கும்பல் கொடுத்துள்ளது.
பொங்கல் பரிசு தொகையை பயனாளர்களின்
வங்கி கணக்கில் செலுத்த இயலுமா? இது குறித்து உரிய விளக்கம் தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கோவில் நிர்வாகங்களை ஆய்வு செய்ய 4 துணை ஆட்சியர்களை கொண்ட பறக்கும் படை அமைத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பழங்குடியினர், பட்டியலினத்தவர் எனக் கூறி
போலி சாதிச் சான்றிதழ்கள் பெறுவதை தடுக்க
விதிகளை வகுக்க வேண்டும். 8 வாரங்களில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி67 படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. நடிகர் மனோபாலா படப்பிடிப்பு தளத்தில் லோகேஷ் மற்றும் விஜய்யை சந்தித்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கிராமத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டிருந்த பட்டாசு கழிவுகளில் திடீரென தீப்பற்றியதில் 2 மாணவர்கள் காயமடைந்தனர். இருவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அதிமுக இல்லையென்றால் பாமகவிற்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமே கிடைத்திருக்காது. அன்புமணி எம்.பி ஆனதே அதிமுகவால் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திருச்செந்தூர் பகுதியில் பள்ளிக்கு வெளியே திடீர் வெடி சத்தம் கேட்டதால், அதிர்ச்சியில் பள்ளி மாணவன் சுருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மயங்கிய மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த வெடிச்சத்தம் தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தது பருத்தி துறை நீதிமன்றம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா மீது SC/ST பிரிவு உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை, மாற்றுசமூகத்தை சேர்ந்த கல்பனா, போலி சான்றிதழ் அளித்து வெற்றி பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது
*காரில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததால் டி.டி.எஃப் வாசன் வந்த காரை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் போக்குவரத்து போலீசார்.
பழனி முருகன் கோயிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பக்தர்கள் பாதிப்படைந்துள்ளனர். தொழிலாளர்களை கோயில் அதிகாரிகள் கண்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில், 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம். அரசு விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னையில் வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. புத்தக கண்காட்சிக்கு ரூ. 6.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேடில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது விளக்கம். அவ்வகையில், வருகிற ஜன.16ல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கான ஆயத்த பணிகள் பூஜையுடன் தொடங்கியது
பாலமேடு பேரூராட்சி நிர்வாகம், கிராம பொது மகாலிங்க மடத்துக் கமிட்டியினர் இணைந்து, பாலமேடு வாடிவாசலில் சிறப்பு பூஜை செய்து பணியை தொடங்கினர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தை சுத்தம் செய்யும் பணி மற்றும் பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரிக்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கதக்கது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
2019 – 2020ம் ஆண்டில் கடந்த அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரிய வழக்கில், புதிய தேர்வு குழு அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட த்தில் புத்தாண்டை முன்னிட்டு ரூ.9.25 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட டாங்கிரி கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கிச்சூட்டில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரில் யாருக்கும் BF.7 பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற நீதிபதி கவாய் தீர்ப்பிலிருந்து மாறுபடுவதாக நீதிபதி நாகரத்னா அறிவித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்தவில்லை, செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய அவகாசம் வழங்கவில்லை என கூறி, நீதிபதி பி.வி. நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற கவாய் தீர்ப்பிலிருந்து மாறுபடுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கூறியுள்ளார்.
மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நலம் 365 எனும் யூடியூப் சேனலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
கடந்த 2016 நவம்பரில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான 57 ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தீர்ப்பு அளித்தார்.
பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் முதல்முறையாக சாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்கள்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்ட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சாமி தரிசனம்.
கார் விபத்தில் படுகாயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்கு மருத்துவ சிகிச்சைக்குப் பின் நீண்ட ஓய்வு தேவை என்பதால் இந்தாண்டு நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார் எனத் தகவல். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும். ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என வெளியிட்ட அரசாணைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
புத்தாண்டு தினத்திலும் போராட்டத்தை கைவிடாத பரந்தூர் கிராம மக்கள்
விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 159வது நாளாக நீடித்த போராட்டம்
புதுச்சேரியில் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர்.
கொரோனா பரவல் எதிரொலியால், பொதுவெளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என புதுச்சேரி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் ரஜோரி அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் பலி. சித்ரா பகுதியில் டிசம்பர் 28-ம் தேதி நடத்தப்பட்ட என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் துப்பாக்கிச் சூடு.
ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 8 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம் புரண்டு விபத்து.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
மார்வார் சந்திப்பிலிருந்து ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களில் ரயில் விபத்திற்கு உள்ளானதாக பயணி ஒருவர் தெரிவித்தார்.