Advertisment

Tamil news today: இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பு

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 20 JULY 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today: இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பு

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகிய நிலையில், தற்காலிக அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சேவின் மீதமுள்ள பதவிக் காலமான 2024, நவம்பர் வரை புதிய அதிபர் பதவி வகிப்பார்.

Advertisment

மேகதாது அணை விவகாரம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை20) நடந்தது.
அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியம் விவாதிக்கலாம், ஆனால் முடிவெடுக்கக் கூடாது என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை ஜூலை 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை தேர்தல்

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.  ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 3 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். டலஸ் அழகப்பெருமவுக்கு சஜித் பிரேமதாசா, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுக அலுவலகத்திற்கு சீல் இன்று உத்தரவு

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil


  • 21:41 (IST) 20 Jul 2022
    பாரதியாரின் பாடலை பாடிய மாணவிகளுக்கு பிரதமர் மோடி தமிழில் பாராட்டு

    பாரதியாரின் பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாடலை இந்தியாவின் அருணாச்சலபிரேதேச மாநிலத்தை சேர்ந்த 2 மாணவிகள் தமிழில் பாடி அசத்தியுள்ளர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள் என தமிழில் பதிவிட்டுள்ளார்.


  • 20:14 (IST) 20 Jul 2022
    சென்னையில் மேலும் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு

    சென்னையில் மேலும் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு 5,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில், மேலும் 285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு 2,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


  • 20:12 (IST) 20 Jul 2022
    உளவுத் துறை புதிய ஐ.ஜி செந்தில் வேலன்; ஆசியம்மாள் இடமாற்றம்

    தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது . இதில் உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்


  • 19:11 (IST) 20 Jul 2022
    புதுச்சேரியில் விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் - ஆளுநர் தமிழிசை

    புதுச்சேரியில் விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். புதிய கல்விக்கொள்கையில் எந்த மொழியையும் திணிப்பதாக இல்லை தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்று தமிழிசை கூறியுள்ளார்.


  • 18:52 (IST) 20 Jul 2022
    டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை குறைகளை திருத்த வசதி

    டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது தவறான விவரங்களை பதிவு செய்வதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை விண்ணப்பங்களில் உள்ள குறைகளை சரிசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடைசி நாள் முடிந்த பிறகு 4 நாட்கள் கழித்து, மீண்டும் 3 நாட்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது


  • 18:51 (IST) 20 Jul 2022
    டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை குறைகளை திருத்த வசதி

    டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது தவறான விவரங்களை பதிவு செய்வதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை விண்ணப்பங்களில் உள்ள குறைகளை சரிசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடைசி நாள் முடிந்த பிறகு 4 நாட்கள் கழித்து, மீண்டும் 3 நாட்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது


  • 18:07 (IST) 20 Jul 2022
    வாழை தோப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 3 பேர் பலி

    மரக்காணம் அருகே வாழை தோப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்


  • 17:33 (IST) 20 Jul 2022
    ‘அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் பெரும்பான்மைபினர் முடிவு’ - ஐகோர்ட்

    பொதுக்குழு கூட்டட்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் கட்சியின் பெரும்பான்மையினர் முடிவு; அவற்றை உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்யாத வரை, அந்த முடிவே மேலோங்கி நிற்கும். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தலைமை அலுவலக கட்டடத்தின் மீது அவர் உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 17:02 (IST) 20 Jul 2022
    ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் - ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் திருமாறன்

    ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் திருமாறன்: “எதிர்த்து தாக்கல் செய்த 3 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு ஒரு பகுதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மனு அனுமதிக்கப்பட்டு அதிமுக தலைமைக் கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரிவு 145 மற்றும் 146 இன் படி கொடுக்கப்பட்ட அறிவிப்புகள் செல்லாது என்று முக்கியமான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. ஆர்.டி.ஓ-வின் உத்தரவை நேரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மேல்முறையீடு செய்ய தகுந்த வழக்கு, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும்” என்று கூறினார்.


  • 16:18 (IST) 20 Jul 2022
    கும்பகோணத்தில் பல நூறு கோடி மதிப்புள்ள 6 கடவுள் சிலைகள் பறிமுதல்

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தனியார் சிலை தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பல நூறு கோடி

    மதிப்புள்ள 6 கடவுள் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள்

    தென் ஆப்பிரிக்காவுக்கு கடத்த திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


  • 16:07 (IST) 20 Jul 2022
    விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயார் - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

    மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி: விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இடத்தில் உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த பிறகு முறையான விவாதம் நடைபெறும் என்று கூறினார்.


  • 15:24 (IST) 20 Jul 2022
    அ.தி.மு.க அலுவலக ஐகோர்ட் உத்தரவு – இ.பி.எஸ் வீட்டின் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்

    எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டத்தையடுத்து, அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


  • 15:24 (IST) 20 Jul 2022
    அ.தி.மு.க அலுவலக ஐகோர்ட் உத்தரவு – இ.பி.எஸ் வீட்டின் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்

    எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டத்தையடுத்து, அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


  • 15:12 (IST) 20 Jul 2022
    ஆர்.டி.ஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு - ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்

    அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் சீலை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் கூறியுள்ளார்


  • 14:46 (IST) 20 Jul 2022
    இலங்கை அதிபர் தேர்தலில் அரசியல் தலையீடு? இந்திய தூதரகம் மறுப்பு

    பிறநாடுகளின் உள் விவகாரம் மற்றும் ஜனநாயக நடைமுறையில் இந்தியா தலையிடுவதில்லை என இலங்கை அதிபர் தேர்தலில் அரசியல் தலையீடு குறித்து பரவும் தகவல்களுக்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது


  • 14:27 (IST) 20 Jul 2022
    இ.பி.எஸ் தரப்புக்கு அ.தி.மு.க தலைமை அலுவலகம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

    அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கில், சீலை அகற்றி இ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது


  • 14:16 (IST) 20 Jul 2022
    அ.தி.மு.க.,வில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் குறித்து இ.பி.எஸ் முடிவெடுப்பார் - தமிழ்மகன் உசேன்

    அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் குறித்து இடைக்கால பொதுச்செயலாளர் இ.பி.எஸ் முடிவெடுப்பார். அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்


  • 13:52 (IST) 20 Jul 2022
    தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


  • 13:42 (IST) 20 Jul 2022
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மாற்றம்!

    இலங்கையில் இந்தாண்டு நடைபெறவிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர்கள் அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 1984,1998 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 13:40 (IST) 20 Jul 2022
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 2 ஆவது நாளாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

    கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியில் 2-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • 12:42 (IST) 20 Jul 2022
    நடிகை சித்ரா தற்கொலை: ஹேம்நாத்துக்கு எதிராக நண்பர் மனு

    சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கல் சாட்சியம் அளித்தற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என ஹேம்நாத்தின் நண்பர் சையத் ரோகித் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

    அந்த மனுவில் ஹேம்நாத்துக்கு அளிக்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


  • 11:50 (IST) 20 Jul 2022
    பி.டி., உஷா பதவியேற்பு

    நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி..யான தடகள வீராங்கனை பி.டி., உஷா இன்று பதவியேற்றுக்கொண்டார்.


  • 11:48 (IST) 20 Jul 2022
    இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு

    இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) தொடங்கியது. கடும் பொருளாதார சிக்கல், உள்நாட்டு குழப்பம், மக்கள் தன்னெழுச்சி போராட்டம் என இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மை இன்றி காணப்படுகிறது.

    இந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தற்போது புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.


  • 11:25 (IST) 20 Jul 2022
    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை - தமிழக அரசு


  • 10:53 (IST) 20 Jul 2022
    தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை. என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கானுன்கோ தலைமையிலான குழு வரும் 27ம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்துகிறது


  • 09:15 (IST) 20 Jul 2022
    கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம்

    கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் . மாவட்ட கல்வி அலுவலர் செயல்பாடுகள் திருப்தி இல்லாததால் கல்வித்துறை நடவடிக்கை.


  • 09:12 (IST) 20 Jul 2022
    பள்ளி மீட்பு நடவடிக்கைக்கு அதிகாரிகள் நியமனம்

    கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம் . 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


  • 09:08 (IST) 20 Jul 2022
    இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் நிபந்தனை ஜாமினில் விடுவிப்பு

    சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக வன்முறை தொடர்பான வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.


  • 09:06 (IST) 20 Jul 2022
    குட்கா வழக்கு- வழக்கு பதிய அனுமதி கோரும் சிபிஐ

    குட்கா முறைகேடு வழக்கு- முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய அனுமதி கோரும் சிபிஐ. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படையில் கடிதம் என சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.


  • 09:05 (IST) 20 Jul 2022
    அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை.


  • 08:37 (IST) 20 Jul 2022
    சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதமாக வருவதாக தகவல்

    சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு தாம்பரம் வழியாக புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தி வருவதால், தாமதமாக ரயில்கள் வருவதாக பயணிகள் அவதியடைந்துள்ளனர்.  செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக தற்போது வண்டலூர் ரயில் நிலையத்தில் நிற்கிறது . சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பீச் ஸ்டேஷனில் இருந்து செல்லக்கூடிய புறநகர்ரயிலும் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து வரக்கூடிய ரயில்களும் குறிப்பிட்ட அட்டவணை நேரப்படி இல்லாமல் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது.


Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment