Advertisment

Tamil news today: துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 23,000-ஆக அதிகரிப்பு

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 10 February 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
One Indian missing in earthquake-hit Turkiye

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 265வது நாளாக பெட்ரோல். டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63, காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்

இஸ்ரோவின் சிறிய ரக SSLV-D2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. EOS-07 உள்பட 3 செயற்கைக் கோள்களை சுமந்து செல்கிறது.

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடக்கம்

ஐ.சி.சி மகளிர் டி20 உலகக்கோப்பை இன்று தொடக்கம். முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/


  • 23:06 (IST) 10 Feb 2023
    கொள்ளை கும்பல் காரில் தப்பிச்செல்லும் வீடியோ காட்சி

    சென்னை பெரம்பூரில் 9 கிலோ தங்கம், 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், கொள்ளை கும்பல் காரில் தப்பிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது கொள்ளையை அடுத்து கோயம்பேடு, மதுரவாயல் வழியாக பூந்தமல்லி நோக்கி காரில் தப்பிச் சென்றுள்ளனர்


  • 20:51 (IST) 10 Feb 2023
    வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை தக்க வைக்கும் - நிதியமைச்சர்

    அதிவேகத்தில் பொருளாதாரம் வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை தக்க வைக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


  • 20:15 (IST) 10 Feb 2023
    காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

    அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும் முன் நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் 12 வாரங்களில் இந்த நடைமுறையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


  • 20:11 (IST) 10 Feb 2023
    பிபிசிக்கு தடை கோரி மனு - உச்சநீதிமன்றம் காட்டம்!

    பிபிசி சேனலுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, பிபிசி-ஐ தடை கோரி எப்படி உங்களால் நீதிமனறத்தை அனுக முடிகிறது. இந்த மனு தவறான புரிதலுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று காட்டமாக பதில் அளித்துள்ளது.


  • 20:10 (IST) 10 Feb 2023
    பிபிசிக்கு தடை கோரி மனு - உச்சநீதிமன்றம் காட்டம்!

    பிபிசி சேனலுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, பிபிசி-ஐ தடை கோரி எப்படி உங்களால் நீதிமனறத்தை அனுக முடிகிறது. இந்த மனு தவறான புரிதலுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று காட்டமாக பதில் அளித்துள்ளது.


  • 19:39 (IST) 10 Feb 2023
    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் ட்விட்

    ஒரு படி முன்னே... ஒரு படி வலிமையாக...ஒரு படி மேன்மையாக... உடல் நலம் குணமடைந்து வருவது குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் ட்விட்டரில் பதிவு


  • 19:01 (IST) 10 Feb 2023
    இந்திய குடியுரிமையை துறந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

    கடந்த காலங்களை காட்டிலும் இந்திய குடியுரிமையை துறந்தோர் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது.

    2022-ல் மட்டும் 2 லட்சத்து 25 ஆயிரத்து 620 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்.


  • 18:46 (IST) 10 Feb 2023
    உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் உத்தரவுக்கு தடை

    அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்த தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


  • 18:25 (IST) 10 Feb 2023
    இரட்டை இலை வேல்.. பழனிசாமிக்கு அளிப்பு

    மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை வேல் வழங்கப்பட்டது.

    ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 18:06 (IST) 10 Feb 2023
    பெங்களூரு மேம்பாட்டு அலுவலகத்தில் லோக் அயுக்தா அதிகாரிகள் சோதனை

    பெங்களூரு வளர்ச்சி மேம்பாட்டு அலுவலகத்தில் லோக் அயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    லஞ்சப் புகார்கள் எழுந்த நிலையில் லோக் அயுக்தா அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.


  • 17:43 (IST) 10 Feb 2023
    பசு கட்டிப்பிடி தினம் வாபஸ்

    பிப்.14ஆம் தேதி பசு கட்டிப்பிடி தினமாக அறிவித்து விலங்குகள் நல வாரியம் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது.

    இந்த அறிக்கைக்கு இளசுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்ப பெற்றுக் கொண்டது.


  • 17:25 (IST) 10 Feb 2023
    கோழிப் பண்ணையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேசிய ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் கோழிப் பண்ணையாளர்கள் 5 மணி நேரத்துக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.

    முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடிகள் உள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


  • 17:13 (IST) 10 Feb 2023
    கேலோ இந்தியா 2023; விண்கலம் வென்ற விழுப்புரம் மாணவி

    மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா மல்லர்கம்மம் தனிநபர் பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த மாணவி பவித்ரா வெண்கலம் வென்றார்.


  • 17:00 (IST) 10 Feb 2023
    சுயேச்சை சின்னங்களின் பட்டியலில் டார்ச் லைட்

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு கடந்த காலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட டார்ச் லைட் சின்னம் தற்போது சுயேச்சைகளுக்கான பட்டியலில் உள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் திமுக, காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு கொடுத்துள்ளது.


  • 16:48 (IST) 10 Feb 2023
    ஈரோடு இடைத் தேர்தல்.. குக்கர் சின்னம் சுயேச்சைக்கு ஒதுக்கீடு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் டி.டி.வி தினகரன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  • 16:16 (IST) 10 Feb 2023
    மும்பை- சோலாப்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை

    மும்பை - சோலாப்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    இந்நிகழ்வில் மராட்டிய முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உடன் இருந்தார்.


  • 16:03 (IST) 10 Feb 2023
    பாஜக ஆதரவோடு அதிமுக வெற்றி பெறும்.. நயினார் நாகேந்திரன்

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவோடு அதிமுக வெற்றி பெறும் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.


  • 15:35 (IST) 10 Feb 2023
    கடந்தாண்டு பட்ஜெட்-ஐ வாசித்த முதல் அமைச்சர்

    ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, கடந்தாண்டு பட்ஜெட்-ஐ 7 நிமிடங்கள் வாசித்தார்.

    பின்னர் சுதாரித்துக் கொண்டு புதிய பட்ஜெட்-ஐ வாசிக்க தொடங்கினார்.


  • 14:59 (IST) 10 Feb 2023
    பி.பி.சி ஆவணப் படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

    பிரதமர் மோடி குறித்த பி.பி.சி ஆவணப் படத்திற்கு தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


  • 14:56 (IST) 10 Feb 2023
    ஈரோடு கிழக்கு தொகுதியை அபகரித்துள்ளது அ.தி.மு.க - கே.எஸ். அழகிரி

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, “அ.தி.மு.க ஏன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியை தா.மா.கா-விடம் இருந்து அ.தி.மு.க அபகரித்துள்ளது. இதைவிட கூட்டணி தர்மத்திற்கு உலை வைக்கிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.


  • 14:38 (IST) 10 Feb 2023
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 6 பேர் வேட்புமனு வாபஸ்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போது வரை அ.ம.மு.க வேட்பாளர் சிவபிரசாந்த் உள்பட 6 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது; இதனை தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடக்க உள்ளது.


  • 14:02 (IST) 10 Feb 2023
    மத்திய அரசு கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை - ஜோதிமணி பேச்சு

    மக்களவையில் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி பேச்சு: “உலகில் 3வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை மத்திய அரசு 5வது இடத்திற்கு தள்ளியது. மத்திய அரசு கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை” என்று கூறினார்.


  • 13:51 (IST) 10 Feb 2023
    அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுக்கு அடிமை சாசனமாக எழுதி வைத்துவிட்டார் இ.பி.எஸ் - தங்கம் தென்னரசு விமர்சனம்

    ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காப்பாற்றி வைத்த அ.தி.மு.க-வை எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வுக்கு அடிமை சாசனமாக எழுதி வைத்துவிட்டார்” என்று விமர்சித்துள்ளார்.


  • 13:18 (IST) 10 Feb 2023
    உத்தர பிரதேசத்தின் மீது எனக்கு தனி பாசம், சிறப்பு பொறுப்பு - முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பேச்சு

    உத்தர பிரதேசத்தில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு உத்தர பிரதேசத்தின் மீது எனக்கு தனி பாசமும், சிறப்பு பொறுப்பும் உள்ளது என்று கூறியுள்ளார்.


  • 13:17 (IST) 10 Feb 2023
    உத்தர பிரதேசத்தின் மீது எனக்கு தனி பாசம், சிறப்பு பொறுப்பு - முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பேச்சு

    உத்தர பிரதேசத்தில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு உத்தர பிரதேசத்தின் மீது எனக்கு தனி பாசமும், சிறப்பு பொறுப்பும் உள்ளது என்று கூறியுள்ளார்.


  • 13:03 (IST) 10 Feb 2023
    ரோகித் ஷர்மா சதம் விளாசல்!

    பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்டில் ரோகித் ஷர்மா சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 9வது சதத்தை எட்டினார்.


  • 13:02 (IST) 10 Feb 2023
    ஆப்கானின் ஃபாசியாபத் பகுதியில் நிலநடுக்கம்!

    ஆப்கானிஸ்தானின் ஃபாசியாபத் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது.


  • 12:27 (IST) 10 Feb 2023
    கலை கூடல் நிகழ்ச்சி: இளையராஜா எம்.பி!

    கலை கூடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மேடையில் இருந்தபடியே ஸ்டூடியோவில் நடைபெறும் ரெக்கார்டிங் பணிகளை இளையராஜா எம்.பி கண்காணித்தார். ஸ்டூடியோவில் நடைபெறும் இசை பணிகளை மாணவர்களுக்கு நேரலையில் காண்பித்தார்.


  • 12:25 (IST) 10 Feb 2023
    சென்னை நகை கடை கொள்ளை: 9 தனிப்படைகள் அமைப்பு!

    சென்னை, பெரம்பூரில் உள்ள நகை கடையில் 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 3 உதவி ஆணையர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


  • 11:56 (IST) 10 Feb 2023
    விழுப்புரம்: 24ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் வரும் 24ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் பழனி.

    இந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் மார்ச் 3ம் தேதி பணி நாளாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


  • 11:48 (IST) 10 Feb 2023
    இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட்: 2ம் நாள் உணவு இடைவேளை!

    பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா - 85*, விராட் கோலி - 12* ரன்களுடன் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் இந்திய அணி 26 ரன்கள் பின்னடைவு.


  • 11:40 (IST) 10 Feb 2023
    ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 7 மாணவிகள் காயம்; ட்ரைவர் பலி!

    ராமநாதபுரம், கமுதி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்துள்ளர். 7 மாணவிகள் காயம் அடைந்துள்ளனர். ஆட்டோவின் குறுக்கே காட்டுபன்றி வந்ததால் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.


  • 11:38 (IST) 10 Feb 2023
    ஆர்.எஸ்.எஸ்: 45 வழக்குகளில் ஐகோர்ட்டு உத்தரவு!

    ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 45 வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது.


  • 11:36 (IST) 10 Feb 2023
    'காலத்தால் கரையாத காட்சிகள்' புகைப்படக் கண்காட்சி!

    சென்னையில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'காலத்தால் கரையாத காட்சிகள்' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


  • 11:23 (IST) 10 Feb 2023
    நகை கடையில் கொள்ளை - போலீசார் விசாரணை!

    சென்னை, பெரம்பூரில் உள்ள நகை கடையில் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடந்த்தி வருகின்றனர்.


  • 11:02 (IST) 10 Feb 2023
    கருணாநிதி பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது

    திமுக துணை அமைப்பாக இளைஞரணியை உருவாக்கினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி

    இளைஞரணிக்கு தலைவராக தம்மை நியமிக்க வேண்டும் என கூட்டத்தில் அனைவரும் பேசினார்கள்.

    கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது - முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் திருமண நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


  • 11:01 (IST) 10 Feb 2023
    அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை - இ.பி.எஸ்

    அ.தி.மு.க தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது - எடப்பாடி பழனிசாமி

    அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது

    அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? - ஈபிஎஸ்


  • 10:45 (IST) 10 Feb 2023
    3 செயற்கை கோள்களும் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது

    3 செயற்கை கோள்களும் சரியான புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

    கடந்த முறை இருந்த தவறுகளை சரி செய்து SSLV-D2 ராக்கெட்டை வெற்றிகரமாக நிலைநிறுத்திய குழுவினருக்கு வாழ்த்துக்கள் - சோம்நாத்


  • 10:44 (IST) 10 Feb 2023
    தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்தது

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.42,560க்கு விற்பனை

    ஒரு கிராம் தங்கம் ரூ.5,320 ரூபாய்க்கு விற்பனை


  • 09:46 (IST) 10 Feb 2023
    ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா? இந்திய அணி மறுப்பு

    இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா பந்தை சேதப்படுத்தவில்லை என இந்திய அணி நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது. ஜடேஜா பந்தை சேதப்படுத்துவது போல் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் விளக்கம்.


  • 08:50 (IST) 10 Feb 2023
    துருக்கி, சிரியா நிலநடுக்கம் - 21,000 பேர் பலி

    துருக்கி, சிரியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 21,000 ஆக அதிகரிப்பு

    துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 3 தினங்களுக்கு முன் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடம், வீடுகள் இடிந்து தரைமட்டனாது. இடிப்பாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,000 ஆக அதிகரித்துள்ளது.


  • 08:02 (IST) 10 Feb 2023
    புதுச்சேரியில் 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை

    புதுச்சேரியில் இன்று 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

    முத்து மாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு


  • 08:01 (IST) 10 Feb 2023
    இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான, இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 3 மணிக்கு வெளியீடு


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment