பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை
உச்ச நீதிமன்றத்திற்கு இன்று முதல் 2 வாரங்களுக்கு குளிர்கால விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி முதல் வழக்கம்போல் அமர்வுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3-வது இடம் யாருக்கு?
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்தை பிடிக்க குரோஷியா – மொராக்கோ அணிகள் இன்று பலப்பரீட்சை. ஏற்கனவே இவ்விரு அணிகளும் குரூப் சுற்றில் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
திண்டுக்கல், பழனி முருகன் கோவிலுக்கு சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப் காரில் சென்ற போது திடீரென ஏற்பட்ட மின் தடையில் ரோப் கார் அந்தரத்தில் சிக்கியது. இதனால் அமைச்சர் அதில் மாட்டிக்கொண்ட நிலையில், சில நொடிகளில் மின்தடை சரியானதை தொடர்ந்து அமைச்சர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே திடீரென மர்ம பொருள் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில் வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தபடும் பலூன் என தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
மராட்டிய ஆளுனரை திரும்ப பெறக் கோரி மும்பையில் மகா விகாஷ் அகாதி கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
திமுக பாஜக கூட்டணி அமையும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “அவர் பாஜகவில் சேர்ந்துவிட்டாரா? கடந்த 4 நாள்களாக கமலாலயம் செல்லவில்லை. சொல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் அருகே சொத்தவிளையில் செக்யூரிட்டி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இவர் கணேசபுரத்தை சேர்ந்தவர் ஆவார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவ செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை (டிச.19) அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை (டிச.19) அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “ராகுல் காந்தி இந்திய ராணுவத்தை அவமதித்துள்ளார். அவர் காங்கிரஸிற்கு மட்டும் பிரச்னை அல்ல. நாட்டுக்கே அவமானம். இந்திய ராணுவத்தை நினைத்து மக்கள் பெருமைப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன் முறையாக புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த மாபெரும் புத்தக கண்காட்சியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் முதலில் மகேஷ் பாபுவுக்காக தயார் செய்யப்பட்டது என்றும் அவர் பிஸியாக இருந்தால் மற்ற ஹீரோக்களிடம் கதை பேசப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கதைக்கு 30 நிமிடங்களில் விஜய் ஒகே சொல்லிவிட்டார் என்றும் அவர் கூறினார்.
மும்பையில் மருத்துவமனை அருகில் இருந்த பீட்சா ரெஸ்டாரெண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 பேர் காயமுற்றனர்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற வாகன கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
நடிகை குஷ்பூவின் சகோதரர் உயிரிழந்துள்ளார். இதனை அவர் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
பில்கிஷ் பானு வழக்கில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
யூடியூபர் சூர்யாதேவி அளித்த புகாரில் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும் 21ம் தேதி நடைபெறும் என ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
நீதித்துறையை விமர்சனம் செய்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
சபரிமலைக்குச் சென்ற சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த பக்தர்களின் வாகனம் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்து தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க கேரளா அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
“ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 9 மாதத்தில் மட்டும் 3 முறை ஆவின் நெய் விலையை உயர்த்தியுள்ளது தமிழக அரசு. எளிய மக்களுக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி, இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வுகளைக் கண்டித்து நாகர்கோவிலில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது
நீதித்துறை குறித்து அவதூறாக யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த வழக்கில் ஜாமினில் உள்ள சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் நிறுவனங்களின் 3 ஆண்டு பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி தர வேண்டும். மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
தமிழக கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நாட்டு இன காளைகளை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. காளைகளின் உயிர் மற்றும் நலவாழ்வை உறுதி செய்யும் விதமாக அனைத்து வழிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டின் போது எந்த விதிமீறலும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக தனது வாதத்தை தாக்கல் செய்துள்ளது
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 4வது நாள் உணவு இடைவேளையில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் சேர்த்துள்ளது. வங்கதேச தொடக்க வீரர்கள் ஷாண்டோ – 64, ஹசன் – 55 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வங்கதேச அணியின் வெற்றிக்கு இன்னும் 394 ரன்கள் தேவை
மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாக குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை டிசம்பர் 18ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தேர்தலுக்கான கூட்டணி, வியூகங்கள் வகுப்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
4 இடங்களில் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கிய 'ரெட் ஜெயன்ட்'
சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஆற்காடு ஆகிய இடங்களில் 'ரெட் ஜெயன்ட்' வெளியிடுகிறது.
வரும் 24-ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை
ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
இன்று 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெறுகிறது
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா சிறப்பு புகைப்பட கண்காட்சி
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வாரிசு அரசியல் அல்ல கருணாநிதியின் குடும்பத்திற்கு திமுகவினர் எப்போதும் நன்றி விசுவாசமாக இருப்போம். அதன் அடிப்படையில் உதயநிதிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி மட்டுமல்ல அவரது மகன் வந்தாலும் ஆதரிப்போம் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் டிச.20, 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 30 நாட்களில் 19.38 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 21,71,452 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், 19,38, 452 பேர் ஐயப்பனை தரிசித்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்ப முயன்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் இன்று பள்ளிகள் இயங்கும்
கடந்த வாரம் மாண்டஸ் புயலுக்காக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டுவதாக அறிவிப்பு.
முதுமலை புலிகள் காப்பக பகுதியில் பெண் புலி உயிரிழப்பு.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 11 வயது மதிக்கத்தக்க பெண் புலி சேற்றில் சிக்கி இறந்து கிடந்ததை அடுத்து, அதே இடத்தில் புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது.
வயது முதிர்வு, நுரையீரல் பாதிப்பு காரணமாக புலிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் குழு தகவல்.