பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாள் தேதி மாற்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும். அதற்கான ஹால்டிக்கெட், http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. முன்பு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை
புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு. சில மாநிலங்களில் வேறு வடிவில் வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. இனி நாடு முழுவதும் ஒரே சீரான வாக்காளர் அட்டை இருக்கும் வகையில் அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன – தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தில் கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது, இந்து முன்னணி அமைப்பினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்காக நாமக்கல் சென்ற அமைச்சர் உதயநிதிக்கு, திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோயில் பகுதியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்
திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஹிஜாப் அணிந்து மசூதிக்கு சென்ற புகைகப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை “பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” நடிகர் ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு
பிபிசி ஆவணப்படத்திற்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டக்களத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக யுவ மோர்ச்சாவின் தஜிந்தர் சிங் திவானா, “இந்தியாவுக்கு எதிரான படம் தவறான நோக்கத்துடன் திரையிடப்பட உள்ளது. இது குறித்துநிறுவன அதிகாரிகளால் எங்கள் கவலைகளுக்கு திருப்திகரமான பதிலை வழங்க முடியவில்லை. நாங்கள் போராட்டத்தை தொடர்வோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தொடர் பிபிசி ஆவணப்படத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கல்லூரி மாணவர்கள் தங்களது லேப்டாப்பில் ஆவணப்படத்தை பார்த்து வருகின்றனர்.
என் தலைவரை (மு.க ஸ்டாலின்) அல்லது ஐயாவை (திராவிடர் கழகம் கி. வீரமணி) தொட்டால் யாருடைய கையையும் வெட்டத் தயங்க மாட்டேன். இதுவே என் தர்மம்.
இது சரியல்ல என்று நீங்கள் நினைத்தால், நீதிமன்றத்திற்குச் சென்று முறையிடலாம். ஆனால் அதற்குள் அந்தச் செயலை செய்திருப்பேன்” என திமுக மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான டி.ஆர். பாலு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்தியாவின் நேரம் வந்துவிட்டது, இன்று உலகம் முழுவதும் நம் நாட்டை நோக்கிப் பார்க்கிறது, இதற்குப் பெரிய காரணம் இந்தியாவின் இளைஞர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் வீட்டின் சுவற்றில் தாமரை சின்னத்துக்கு அமித் ஷா வண்ணம் பூசினார்.
இந்தக் காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வந்தே பாரத் ரயிலின் உள்ளே பயணிகள் வீசிச்சென்ற ப்ளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் தொடர்பான புகைப்படத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி அவனிஷ் ஷரன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் டவுன் போர்டோவாலி தொகுதியில் முதல்வர் மாணிக் சாஹா பாஜக வேட்பாளராக களம் காண்கிறார்.
2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் தயாராக வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு வெளியே ஜனவரி 27 அன்று நடந்த குழப்பத்தை விசாரிக்க டெல்லி பல்கலைக்கழகம் 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
ராகுல் காந்தியின் யாத்திரை காஷ்மீரில் புதிய காற்றை சுவாசிப்பது போல் வருகிறது. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு காஷ்மீர் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வெளியே வருவது இதுவே முதல் முறை. அவருடன் நடப்பது மிகப்பெரிய அனுபவம்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் கார்டனின் பெயர் அமிர்த உதயன் (amrit udyan) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவைத் தொடர்ந்து சில என்சிசி கேடட்கள் மத கோஷங்களை எழுப்பியதாகக் காணொலிக் காட்சிகள் பரவின.
இந்த வீடியோ தொடர்பாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் பயணத்தின்போது ராகுல் காந்தி, புல்வாமா தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மரியாதை செலுத்தினார்.
காஷ்மீரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பிரியங்கா காந்தி, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, அவரது மகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள 882 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓ.பி.எஸ் அணி தரப்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் இடம்பெற்றுள்ளனர்
போதைப்பொருள் விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்களை விசாரித்தபோது தமிழ்நாடு அரசை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பாராட்டினார்
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பிப்ரவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் முதற்கட்டமாக வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
அ.தி.முக பொதுக்குழு தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய கோரி இ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு பட்டியலில் இடம்பெற்றதால் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
சர்வதேச ஜி20 மாநாடு காரணமாக, பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர உள்ளதால், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் 31ஆம் தேதி சென்னை தி.நகரில் ஆலோசனை நடைபெறள்ளது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு ஓ.பி.எஸ். தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க போட்டியிடாவிட்டால் ஓ.பி.எஸ் தரப்பில் வேட்பாளர் நிச்சயம் களமிறக்கப்படுவார் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர் கூறியுள்ளார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக முத்துசாமி, செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 அமைச்சர்கள் திண்டல் அருகே மேட்டுக்கடை தனியார் மஹாலில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்தும். அ.தி.மு.க-வில் அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்படுகிறோம். ஆனால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க தனித்தே களம் காண்கிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
அண்ணா சாலையில் சுவர் இடிந்து இளம் பெண் பத்மப்ரியா மரணம் அடைந்த விவகாரத்தில், குற்றவாளிகளை கைது செய்வோம் என காவல்துறை உறுதி அளித்ததை தொடர்ந்து உடலை வாங்கி செல்ல பெற்றோர் ஒப்புதல் அளித்தனர்.
ஈரோடு கிழக்கில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்ரவரி 3ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
மத்திய பிரதேச மாநிலம் மொரீனாவில் பயிற்சியின்போது விமான படைக்கு சொந்தமான 2 போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் இந்திய விமானபடைக்கு சொந்தமான ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து ரூ. 42,800 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,350 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கே.கே.நகரில் அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கே.கே.நகரில் ரூ. 28 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையம் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
முதல்வர் மோதல்களை தவிர்ப்பவரே தவிர, மோதலுக்கு தயாராக இருப்பவர் அல்ல
ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றது குறித்து முரசொலியில் விளக்கம்
சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டடத்தை இடிக்கும்போது சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், கட்டடத்தை இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என கட்டட உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ். மறு உத்தரவு வரும் வரை பணியை தொடங்க கூடாது எனவும் உத்தரவு. கட்டடத்தை இடிக்க உரிய அனுமதி பெறவில்லை என ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரில் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபேயின் சசோதரர் நிர்மல் சவுபேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் உரிய சிகிச்சை பெற முடியாமல் ஐசியூவில் உயிரிழப்பு. சவுபேவின் உறவினர்கள், மருத்துவமனை மீது குற்றச்சாட்டு வைத்த நிலையில் 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்
பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஜியோ நிறுவனத்துடன் இணைந்து
'Sri TT Devasthanams' என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தரிசன பதிவு, தங்கும் அறைகள் உள்ளிட்ட சேவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.