பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை தீபத் திருவிழா
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் கோயிலை ஒட்டியுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
6 மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை
தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை. சென்னை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழு விரைகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைகொண்டுள்ளதால், நாகை மற்றும் காரைக்காலில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்க்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்
அம்பேத்கர் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சாயம் பூச மாட்டேன். விபூதி, குங்குமம் பூச மாட்டேன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அர்ஜூன் சம்பத் உத்தரவாதம் அளித்துள்ளார்
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்களின் அரோகரா கோசத்துடன் மலையில் மகா தீபம் ஜொலிக்கிறது. திருவண்ணாமலை மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்
நீதிபதி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட புகாரில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் பட இயக்குனர் அக்னிகோத்தாரி மன்னிப்பு கோரியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அவர் வருகிற 16ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளார்.
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக நடிகை பார்வதி புகார் அளித்த நிலையில் அவரது வீட்டு பணியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை பார்வதி தனது வீட்டில் தங்க நகைகள் திருடுபோய் இருந்தன என்று ஏற்கனவே புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள சினிமா பட விநியோகஸ்தர் அலுவலக ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச.7ஆம் தேதியான நாளை தொடங்குகிறது.
இந்தக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி டிச.29ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் நிலையில் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திற்பரப்பு அருவியை அம்மாவட்டத்தின் குற்றாலம் என மக்கள் அழைப்பார்கள் குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை 2,668 அடி உச்சியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மகா தீபம் இன்று (டிச.6) மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது.
பக்தர்கள் பக்தி பரவசத்தில் அண்ணாமலையாருக்கு அரோகரா எனக் கோஷமிட்டு வணங்கினர்.
உதகை அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தை ஊருக்குள் உலாவுவது தொடர்பான புகைப்படங்கள், காணொலிகள் பரவிவருகின்றன.
மதுரை பெண் போலீசிடம் நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த சந்திர சேகர், சையது இப்ராகிம் ஆகிய இருவரும் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
வல்லூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி இன்று தொடங்கப்பட்டது.
கும்பகோணத்தில் அம்பேத்கருக்கு விபூதி அணிந்து நோட்டீஸ் ஒட்டியதாக இந்து முன்னணி நிர்வாகி குருமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா உற்சாகமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
ஜல்லிக்கட்டு வழக்கில்”பிரியாணிக்காக விலங்குகளை பலியிடுவது கலாச்சாரமாகும்” அசைவப் பிரியர்களை கறி சாப்பிடக்கூடாது என தடுக்க முடியுமா? “விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலும் தடுக்க முடியாது” என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்துள்ளது.
கும்பகோணத்தில் அம்பேத்கரின் படத்தை வைத்து சர்ச்சைக்குரிய வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர் காரணமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகி குருமூர்த்தியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை, களக்காடு அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறையில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு உடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் சந்தித்து பேசியுள்ளார். கனமழை தொடர்பாக தமிழகத்தில் வானிலை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை நடத்தினோம் என பாலசந்திரன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க, மனு தாக்கல் செய்யுமாறு இபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், ஆஜராக வேண்டிய மூத்த வழக்குரைஞர் இல்லாததால் விசாரணையை தள்ளி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பாஜக உடனான உறவை முடித்து கொள்வதாக சூர்யா சிவா அறிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட 15 மாவட்டங்களில் வரும் 9ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களை சப்ளை செய்த 5 நிறுவனங்களில் நடந்த சோதனையில் சுமார் ரூ. 290 கோடி அளவுக்கு வருவாயை மறைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
“தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிகட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது” ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
அம்பேத்கர் உருவச்சிலையினை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார் அம்பேத்கர் உருவச்சிலையினை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தலைமை செயலர் உள்ளிட்டோரும் பங்கேற்பு
“மக்களால் தேர்ந்தெடுத்த அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பதில்லை” “தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை” நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
விலங்குவதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு அதிகாரமுண்டு. உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதம்
நடிகை பார்வதி நாயரின் 2வது புகார் மீதும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு
தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்
தனது புகைப்படத்தை பொதுவெளியில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் பார்வதி நாயர் புகார்
குஜராத் சட்டமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி வாக்களிக்க பேரணியாக சென்றது திட்டமிட்ட செயலில்லை. பொதுமக்கள் தாமாக குவிந்துள்ளனர்.
வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி RoadShow நடத்தியதாக எதிர்கட்சிகள் புகாரளித்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்.
தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுப்பு
நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்
8-ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்திற்கு 'ஆரஞ்ச்' அலர்ட்
தமிழகத்தில் வரும் 8-ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுப்பு
நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலூரில் கடும் கடல் சீற்றம்
இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை
திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, குவியும் பக்தர்கள்
வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார்
ஓ.பி.எஸ் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் தி.மு.க-வில் இணைகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை காலை தி.மு.க-வில் இணைகிறார்.