/tamil-ie/media/media_files/uploads/2023/05/M-K-Stalin.jpg)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மின் வாரியம் எச்சரிக்கை
மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மின் வாரியம் எச்சரிக்கை
அசையா சொத்து இல்லை
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது. ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு செயல்படுகிறோம்- அறக்கட்டளை அறங்காவலர் பாபு
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:11 (IST) 30 May 2023தங்க பதக்கத்தை ஆற்றில் வீசிய முகம்மது அலி
பிரபல குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி ஒருமுறை இனவெறியை எதிர்த்து தான் வென்ற தங்கப் பதக்கத்தை ஒகியோ ஆற்றில் வீசினார்.
இந்த துணிச்சல் நிகழ்வு வரலாற்றில் இன்றளவும் நினைவுக் கூறப்படுகிறது.
- 21:11 (IST) 30 May 2023தங்க பதக்கத்தை ஆற்றில் வீசிய முகம்மது அலி
பிரபல குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி ஒருமுறை இனவெறியை எதிர்த்து தான் வென்ற தங்கப் பதக்கத்தை ஒகியோ ஆற்றில் வீசினார்.
இந்த துணிச்சல் நிகழ்வு வரலாற்றில் இன்றளவும் நினைவுக் கூரப்படுகிறது.
- 21:07 (IST) 30 May 2023வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட 471 கிலோ குட்கா பறிமுதல்
கோவை: போத்தனூர் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட 471 கிலோ குட்கா பொருட்கள் பிடிபட்டது குட்கா பொருட்களை கடத்தி வந்த அப்துல் ஹக்கீம் என்பவரை கைது செய்த போலீசார் ₹44000 பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்
- 20:51 (IST) 30 May 2023தங்க பதக்கத்தை ஆற்றில் வீசிய முகம்மது அலி
பிரபல குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி ஒருமுறை இனவெளியை எதிர்த்து தான் வென்ற தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசினார்.
- 20:42 (IST) 30 May 2023தங்க பதக்கத்தை ஆற்றில் வீசிய முகம்மது அலி
பிரபல குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி ஒருமுறை இனவெறியை எதிர்த்து தான் வென்ற தங்கப் பதக்கத்தை ஒகியோ ஆற்றில் வீசினார்.
இந்த துணிச்சல் நிகழ்வு வரலாற்றில் இன்றளவும் நினைவுக் கூறப்படுகிறது.
- 20:35 (IST) 30 May 2023மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு: பாரபட்சமற்ற விசாரணை நடத்த சர்வதேச அமைப்பு வலியுறுத்தல்
மல்யுத்தத்திற்கான உலகளாவிய நிர்வாக அமைப்பான UWW, மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பு குறித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “இந்தியாவின் நிலைமை குறித்து ஐக்கிய உலக மல்யுத்தம் மிகுந்த கவலையுடன் பின்தொடர்கிறது.
போராட்ட அணிவகுப்பு நடத்தியதற்காக மல்யுத்த வீரர்களை காவல்துறை கைது செய்து தற்காலிகமாக காவலில் வைத்தது மிகவும் மோசமான நிகழ்வு.
ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடமும் அகற்றப்பட்டுள்ளது.
UWW மல்யுத்த வீரர்களின் சிகிச்சை மற்றும் காவலில் வைக்கப்படுவதை கடுமையாக கண்டிக்கிறது. இதுவரை நடந்த விசாரணைகளின் முடிவுகள் இல்லாதது குறித்தும் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளது.
- 20:27 (IST) 30 May 2023பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம் நிறுத்தம்: டெல்லி திரும்பும் வீரர்கள்
கங்கையில் பதக்கங்களை மூழ்கடிக்கும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி திரும்புகின்றனர். அவர்கள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
- 20:26 (IST) 30 May 2023மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக அணில் கும்ளே
மே 28 அன்று நம் மல்யுத்த வீரர்கள் தாக்கப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சரியான பேச்சுவார்த்தை மூலம் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியும். இந்த பிரச்சனையில் கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அணில் கும்ளே தெரிவித்துள்ளார்.
- 20:15 (IST) 30 May 2023கிணற்றுக்குள் மண் சரிவு- ஒருவர் உயிருக்கு போராட்டம்
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே செங்கனூரில் கிணற்றுக்குள் மண் சரிவு- ஒருவர் சிக்கி தவிப்பு கிணற்றில் உள்ள முட்புதர்களை அகற்றி, தூர் வார யோகன்னான் என்பவர் உள்ளே இறங்கியபோது விபரீதம்
- 20:06 (IST) 30 May 2023மல்யுத்த வீரர்களுக்கு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ஆதரவு!
மல்யுத்த வீரர்களிடம் இருந்து பதக்கங்களை வாங்கிக் கொண்டு பிரச்னையை தீர்க்க உதவுவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் உறுதியளித்துள்ளார்.
மேலும் பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் இப்போதைக்கு கங்கையில் பதக்கங்களை மூழ்கடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 20:01 (IST) 30 May 2023மல்யுத்த வீரர்களுக்கு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ஆதரவு!
மல்யுத்த வீரர்களிடம் இருந்து பதக்கங்களை வாங்கிக் கொண்டு பிரச்னையை தீர்க்க உதவுவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் உறுதியளித்துள்ளார்.
மேலும் பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் இப்போதைக்கு கங்கையில் பதக்கங்களை மூழ்கடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 19:42 (IST) 30 May 2023"அப்போது ‘மகள்கள்'.. இப்போது பாராமுகம்..?
ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசி எறிய முடிவு செய்தது ஏன்? என்பது குறித்து பேசிய சாக்ஷி மாலிக் சர்சதேச போட்டிகளில் பதக்கம் வென்றபோது தனது மகள்கள் என்று பெருமிதம் கொண்ட பிரதமர் மோடி இப்போது நாங்கள் போராடிக்கொண்டிருக்கும்போது எங்களை கண்டுகொள்ளவில்லை. ஒரு பெண்ணாக இருந்தும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக வீராங்கனைகள் குறித்து குடியரசுத்தலைவர் கவலைப்படவில்லை. நீதி கேட்டு போராடும் எங்களை கண்டுகொள்ளாத பிரதமருக்கும் குடியரவு தலைவருக்கும் ஏன் பதக்கங்கள் கொடுக்க வேண்டும் என்பதால் தான் சர்வதேச பதக்கங்களை கங்கையில் வீச முடிவு செய்தோம் என்று சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.
- 19:05 (IST) 30 May 2023பதக்கங்களை கங்கையில் மூழ்கடிப்போம்: மல்யுத்த வீரர்கள் அறிக்கை
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 30, 2023
நாட்டுக்காக வென்ற பதக்கங்களை கங்கையில் மூழ்கடிப்போம் என பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
- 19:05 (IST) 30 May 2023பதக்கங்களை கங்கையில் மூழ்கடிப்போம்: மல்யுத்த வீரர்கள் அறிக்கை
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 30, 2023
நாட்டுக்காக வென்ற பதக்கங்களை கங்கையில் மூழ்கடிப்போம் என பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
- 19:02 (IST) 30 May 2023கண்ணீரில் மல்யுத்த வீராங்கனைகள்.. பதக்கங்களை கங்கையில் வீச ஆயத்தம்
This is how our champions are being treated. The world is watching us! #WrestlersProtest pic.twitter.com/oVUqseMPNC
— Sakshee Malikkh (@SakshiMalik) May 28, 2023பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், வீராங்கனைகள் நாட்டுக்காக தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச முடிவு செய்தனர்.
அதன்படி அவர்கள் கங்கை அருகே கூடியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
- 18:58 (IST) 30 May 2023கண்ணீரில் மல்யுத்த வீராங்கனைகள்.. பதக்கங்களை கங்கையில் வீச ஆயத்தம்
This is how our champions are being treated. The world is watching us! #WrestlersProtest pic.twitter.com/oVUqseMPNC
— Sakshee Malikkh (@SakshiMalik) May 28, 2023பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், வீராங்கனைகள் நாட்டுக்காக தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச முடிவு செய்தனர்.
அதன்படி அவர்கள் கங்கை அருகே கூடியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
- 18:56 (IST) 30 May 2023கோப்பைக்கு சிறப்பு பூஜை
5வது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற நிலையில், தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் கோப்பையை வைத்து சிஎஸ்கே நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்தனர்.
- 18:51 (IST) 30 May 2023கத்தியை காட்டி ரீல்ஸ்: கோவையில் சிறுவன் கைது
கோவையில் கத்தியை வைத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சி.எம்.சி. காலனி பகுதியைச் சேர்ந்த17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
- 18:35 (IST) 30 May 2023பிரிஜ் பூஷண் மீது புகார்: பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீராங்கனைகள் வருகை
பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராடிய மல்யுத்த வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கையில் வீச சென்றுள்ளனர்.
- 18:19 (IST) 30 May 2023காட்டு யானை தாக்கி உயிரிழப்பு: ரூ.5 லட்சம் நிவாரணம்
தேனியில் அரிசிகொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்.
பால்ராஜ், கம்பம் நகரில் கடந்த 27ம் தேதி காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
- 17:59 (IST) 30 May 2023ஸ்பாவில் விபசாரம்: 7 இளம்பெண்கள் மீட்பு
ஓசூர் பகுதிகளில் மசாஜ் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியது போலீஸ் வேட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் 2 இடங்களில் நடத்திய சோதனையில் 7 இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தரகர்களாக செயல்பட்ட ஒரு பெண் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
- 17:58 (IST) 30 May 2023ஸ்பாவில் விபசாரம்: 7 இளம்பெண்கள் மீட்பு
ஓசூர் பகுதிகளில் மசாஜ் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியது போலீஸ் வேட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் 2 இடங்களில் நடத்திய சோதனையில் 7 இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தரகர்களாக செயல்பட்ட ஒரு பெண் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
- 17:43 (IST) 30 May 2023சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு: 2 பேர் கைது
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த மேலும் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் முதலில் இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து கொடுத்துள்ளனர்.
- 17:33 (IST) 30 May 2023திமுக கூட்டணி துரைசாமிக்கு பிடிக்கவில்லை: வைகோ
திமுகவுடன் கூட்டணி வைத்தது துரைசாமிக்கு பிடிக்கவில்லை. துரைசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையல்ல. மேலும், திருப்பூர் துரைசாமி விலகியதற்கான காரணங்கள் குறித்து எனக்கு தெரியாது என மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகிய நிலையில் அக்கட்சியின் நிறுவனர் வைகோ தெரிவித்துள்ளார்.
- 16:49 (IST) 30 May 2023மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வேதனை கருத்து
சிஎஸ்கே அணி, தோனிக்கு வாழ்த்துக்கள். தங்களுக்கு உரிய அன்பையும், மரியாதையையும் சில வீரர்கள் பெறுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் எங்களுக்கு நீதிக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது என பாலியல் குற்றச்சாட்டில் பாஜக எம்.பி ப்ரிஜ் புஷனுக்கு எதிராக போராடி வரும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வேதனையுடன் தெரிவித்துள்ளார்
- 16:46 (IST) 30 May 2023செந்தில் பாலாஜி சகோதரருக்கு ஐ.டி. மீண்டும் சம்மன்
செந்தில் பாலாஜி சகோதர் அசோக்குமாருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது
- 16:10 (IST) 30 May 2023ஐபிஎல் அடுத்த சீசனிலும் விளையாட தோனி விரும்புகிறார் - சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ
ஐபிஎல் அடுத்த சீசனிலும் விளையாட தோனி விரும்புகிறார். ஐபிஎல் கோப்பையை ஊர்வலமாக கொண்டு செல்வது குறித்து திட்டமிட்டபின் அறிவிக்கப்படும் என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்
- 15:57 (IST) 30 May 2023டெல்லியில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
டெல்லியில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ₨10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்
- 15:36 (IST) 30 May 2023ஜப்பான் ஒம்ரான் ஹேல்த்கேர் ரூ.128 கோடி முதலீட்டில் தொழிற்சாலை நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர், தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் தொழிற்சாலை நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவிட முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
- 15:16 (IST) 30 May 2023வெற்றி கோப்பையுடன் சென்னையில் சிஎஸ்கே அணி வீரர்கள்
5வது முறையாக ஐபிஎல் தொடரை வென்று, வெற்றி கோப்பையுடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்த சிஎஸ்கே அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
- 15:00 (IST) 30 May 2023ரூ. 5 லட்சம் நிதியுதவி
தேனி கம்பம் பகுதியில் அரிக்கொம்பன் யானையைப் பார்த்த அதிர்ச்சியில் டூவிலரில் இருந்து உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- 14:58 (IST) 30 May 2023வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கப்பட்ட விவகாரம்
கரூரில் சோதனையிட சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைதானவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவின் கீழும் காவல்துறை வழக்குப் பதிந்தது.
- 14:34 (IST) 30 May 2023பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- 14:09 (IST) 30 May 2023பொன்முடி பேட்டி
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை தொடங்கியது; நாளை மறுநாளில் இருந்து மதிப்பெண் அடிப்படையில் திறந்த பிரிவு கலந்தாய்வு நடைபெறும்; அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் காரணமாக மகளிர் சேர்க்கை அதிகரித்துள்ளது- சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி
- 13:39 (IST) 30 May 2023புதுச்சேரியிலும் ஜூன் 7-ம் ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
- 13:38 (IST) 30 May 2023பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
- 13:20 (IST) 30 May 2023கரூரில் தொடரும் வருமான வரித்துறை சோதனை
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. 2 கார்களில் வந்த 6 அதிகாரிகள், அலுவலகத்தின் முன்பக்க கேட்டை மூடிவிட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- 13:20 (IST) 30 May 2023செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், கரூர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன்அனுப்பியுள்ளது.
ஆஜராக கால அவகாசம் கேட்டு, அசோக் குமார் தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
- 13:14 (IST) 30 May 2023கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 12:35 (IST) 30 May 2023திறந்தவெளி விவசாய நிலத்தில் தரையிறங்கிய பயிற்சி விமானம்
கர்நாடகாவில் மாநிலம் பெலகாவியின் ஹொன்னிஹாலில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் தரையிறங்கிய பயிற்சி விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கம் விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உட்பட இருவர் காயம்
- 12:04 (IST) 30 May 2023மிளகாய் பொடி தூவி ரூ.1.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
நெல்லையில் நகை வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி ரூ.1.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம். நாங்குநேரி டிஎஸ்பி ராஜு தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைப்பு
- 12:01 (IST) 30 May 2023முக அங்கீகார செயற்கை நுண்ணறிவு குறித்தும் ஆலோசனை
டோக்கியோவில் NEC Future Creation Hub-ஐ பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான முக அங்கீகார செயற்கை நுண்ணறிவு குறித்தும் ஆலோசனை
- 11:41 (IST) 30 May 2023குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன், காங்கிரஸ் குழு சந்திப்பு
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான குழு சந்திப்பு மணிப்பூர் வன்முறை தொடர்பாக குடியரசு தலைவரிடம் மனு வன்முறை காரணமாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
- 11:23 (IST) 30 May 2023மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு . ஜூன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 2 வாரங்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்த அறிவுறுத்தல்
- 11:22 (IST) 30 May 2023மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்
மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல். மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என அண்மையில் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதிரடி முடிவு கட்சியில் துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், விலகுவதாக அறிவிப்பு.
- 10:48 (IST) 30 May 2023அரிக்கொம்பனை பிடிக்க களமிறங்கும் பழங்குடியினர்
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உலா வரும் அரிக்கொம்பன் யானையை பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் மூலம் பிடிக்க நடவடிக்கை
முதுமலையை சேர்ந்த பழங்குடியினர்களான பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் தேனி விரைகின்றனர்
- 10:45 (IST) 30 May 2023தொடரும் ஐ.டி சோதனை
தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒப்பந்ததாரர் சுந்தர பரிபூரணம் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
- 10:34 (IST) 30 May 2023தொழிற் சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் தொழிற் சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திய நிலையில் அழைப்பு
- 09:54 (IST) 30 May 2023வைகாசி விசாகம் - வடபழனியில் தேரோட்டம்
வைகாசி விசாகத்தையொட்டி, வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது
- 09:54 (IST) 30 May 2023திருநள்ளாறு: 5 தேர்கள் ஒரே நேரத்தில் வீதியுலா
திருநள்ளாறு கோயில் பிரமோற்சவம் - 5 தேர்கள் ஒரே நேரத்தில் வீதியுலா
திருத்தேரில் எழுந்தருளிய தியாகராஜர், நீலோத்பலாம்பாள்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்
- 09:53 (IST) 30 May 2023பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி
ஜம்மு-காஷ்மீர்: அமிர்தசரஸில் இருந்து கத்ரா சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு. பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி
- 09:11 (IST) 30 May 2023ஜனாதிபதி முர்மு சென்னை வருகை எனத் தகவல்
ஜூன் 15-ம் தேதி சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்
- 09:10 (IST) 30 May 2023அரிக்கொம்பன் யானை தாக்கியவர் பலி
தேனி மாவட்டம் கம்பம் நகரில் அரிக்கொம்பன் யானை தாக்கியதில் ஒருவர் பலி
கடந்த மே 27ஆம் தேதியன்று யானையால் தாக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்த பால்ராஜ், மருத்துவமனையில் உயிரிழந்தார்
தலையில் காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உயிர் பிரிந்தது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.