பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 329-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலம் அமல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்தது. மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஜூன் மாதம் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
ஐ.பி.எல் டி20
ஐ.பி.எல் டி20 தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் பெங்களூரு- டெல்லி அணிகள் மோத உள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் லக்னோ- பஞ்சாப் அணிகள் மோதல். இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தி வயர் நிறுவனத்திற்கு வெள்ளிக்கிழமை கரண் தாபருக்கு அளித்த பேட்டியில், ஆகஸ்ட் 2018 முதல் அக்டோபர் 2019 வரை ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்த சத்ய பால் மாலிக், சி.ஆர்.பி.எஃப் தனது பணியாளர்களை அழைத்துச் செல்வதற்காக ஐந்து விமானங்களை வழங்க உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது, இதன் விளைவாக ஏராளமான பாதுகாப்புப் பணியாளர்கள் சாலை வழியாக வாகனத் தொடரணியில் நகர்ந்து கொடிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகினர் என்று கூறினார்
பிப்ரவரி 14, 2019, புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் தொடர்பில் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியுள்ளார், மேலும் சில குறைபாடுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார் என்று அவர் கூறியுள்ளார்.
பிப்ரவரி 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலை 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக மாற்றிய காங்கிரஸ், தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் “தோல்வியை” சுட்டிக்காட்டி, மாலிக்கின் கருத்துக்கள் எழுப்பிய பிரச்சினைகள் மற்றும் கேள்விகள் குறித்து பதிலளிக்குமாறு அரசாங்கத்திடம் கோரியது.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகன் மற்றும் அடைக்கலம் கொடுத்த தனது தாய் இருவரையும் கொலை செய்த தண்டபாணி சிக்கினார். தற்கொலைக்கு முயன்ற நிலையில் போலீசார் கைது செய்தனர்
மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் இல்லை என அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது
'பாரில் யாரும் அடிமையில்லை என்று கூற வா' என்ற 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டது
எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலை பேசியதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்; அரசியலில் அடிப்படைத் தன்மை பற்றி தெரிந்திருக்க வேண்டும். தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி பேசுபவர். முதிர்ந்த தலைவர்கள் பேசினால் அதைப் பற்றி கேளுங்கள்.” என்று கூறினார்.
அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்று குறித்து பேசியது, எடப்பாடி பழனிசாமி, “முதலில் அவர் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா என தெரியவில்லை. சொத்து பட்டியல் வெளியிட்டார் என்றுதான் செய்திகள் வெளியாகி இருக்கிறது. முதலில் அவருடைய ஊழல் பட்டியல் வெளியிடப்படட்டும், லண்டனில் உள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிடட்டும் .தி.மு.க அன்றைய தினமே செய்தி வெளியிட்டது. அதனால், லண்டனில் உள்ள சொத்துக்களைக் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும்.” என்று கூறினார்.
மோடியும், அமித்ஷாவும் எங்களுக்கானவர்கள் என நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் OBC மக்கள் என திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ட்வீட்: “தருமபுரி அருகே தந்தையே மகனை ஆணவப் படுகொலை செய்ததாகவும், மருமகளை கொடூரமாகத் தாக்கியதாகவும் வெளியாகி உ ள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் இரண்டு ஆணவப் படுகொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால், சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூறியதை முதல்வரான பின்னர் மறந்துவிட்டாரோ, என்று கருதத் தோன்றுகிறது. தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அல்லாத அனைத்து முதல்வர்களுக்கும் அனுப்பிய கடிதத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தமிழக அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், மாநில அரசுகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க மத்திய அரசும் இந்திய குடியரசுத் தலைவரும் காலக்கெடு நிர்ணயம் செய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
சிவகாசி விளாம்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், பட்டாசு ஆலை போர் மேன் சதீஷ் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள உரிமையாளர் பிரவீன்ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூரில் நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு. உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து – போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் வடுகப்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுமார் 6 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. அருவி போல் வெளியேறும் தண்ணீரில் இளைஞர்கள் உற்சாகமாக குளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
திமுக சொத்து பட்டியல் தொடர்பாக வரும் வியாழக்கிழமை சிபிஐயில் புகார் அளிக்க உள்ளேன் “சிபிஐ அதிகாரிகளை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்” சொத்து பட்டியல் குறித்து யாரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
கடந்த 75 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சியைப் போல வேறு எந்த அரசியல் கட்சியும் குறிவைக்கப்படவில்லை. ஏனெனில் இந்த கட்சி நாட்டு மக்களுக்கு மாற்றத்தின் நம்பிக்கையை அளித்தது. “இந்த நம்பிக்கையை பிரதமர் மிதிக்க விரும்புகிறார், கடந்த 75 ஆண்டுகளாக நடந்து வரும் கொள்ளையை நிறுத்த அவர் விரும்பவில்லை. “கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றால், உலகில் யாரும் நிரபராதிகள் இல்லை என்று மோடிஜியிடம் நான் சொல்ல விரும்புகிறேன்… நான் செல்கிறேன்; நான் ஒரு திருடன் என்றால், இந்த உலகில் யாரும் நேர்மையானவர்கள் இல்லை என்பதை பிரதமருக்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், ”என்று அவர் கூறினார்.
ஏப்ரல்14ஆம் தினமான நேற்று, நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் ரசீது, எனது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் கல்விக் கடன் விவரங்களுடன் திமுகவினரால் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தேன். அவற்றின் விவரங்கள் https://enmannenmakkal.com என்கிற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். எனது செயல்களுக்குப் பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி, என் நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன். திசை மாறிச் சென்றுள்ள தமிழக அரசியலில், இதைத் தவிர, வேறு சரியான வழி எனக்குத் தெரியவில்லை. தமிழகத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றமும், அரசியல்வாதிகளிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் வெளிப்படைத்தன்மையும், திமுக போன்ற ஊழல் கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை சாத்தியமில்லை.
திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் மக்களால், மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற பொறுப்பை இனியாவது உணர வேண்டும். எனவே, இன்று முதல், திமுகவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம். மக்களுக்கான எங்கள் கேள்விகளுக்கு உரிய பதில்களையும் திமுகவிடமிருந்து எதிர்பார்க்கிறோம்
இந்தியாவின் உயரமான அம்பேத்கர் சிலையை நிறுவிய தெலங்கானா முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி ரூ100 கோடி மோசடி நடந்துள்ளது. சென்னை, வானகரத்தில் உள்ள வீட்டை முற்றுகையிட்டு முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வானகரத்தை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
“ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நான் எழுதிய கடிதத்தின் விளைவாக, ஆயுதப்படை காவலர் தேர்வு, மாநில மொழிகளில் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது!” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
“புல்வாமா தாக்குதல் நம்முடைய தவறால் நடந்தது என பிரதமரிடம் கூறினேன்; இதுகுறித்து, பொதுவெளியியில் வாயை திறக்க வேண்டாம் என அவர் கூறிவிட்டார்” என்று புல்வாமா தாக்குதல் நடந்தபோது காஷ்மீர் கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய திமுக சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது மற்றும் முன்னாள் ஆளும் கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று அவர் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் ”திமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது நல்ல விஷயம். அதேநேரம், தற்போது திமுக பற்றி மட்டுமே கூறியிருக்கிறார், அண்ணாமலை அதிமுக சொத்துப்பட்டியல் என்று முன்னாள் அமைச்சர்கள் அல்லது அதிமுக சார்ந்தவர்களின் சொத்துப்படியலை வெளியிட்டாள் அனைத்தையும் சந்திக்க தயாராக உள்ளோம். அதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆட்கள் நாங்கள் இல்லை. மறைமுகமாக மிரட்டும் வேலை எல்லாம் எங்களிடம் நடக்காது. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
திருப்பூர், பல்லடம் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் இயல்பைவிட 2 – 4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே ஆணவக் கொலை சம்பவம் தொடர்பாக தந்தை தண்டபாணி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்ததால் மகனை தந்தை கொன்றார். தற்போது அவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மத்திய ஆயுதப் படையினருக்கான தேர்வை தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
ராகுல் காந்தியின் பதவி பறிப்பைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மற்றும் சிவகாசிக்கு அருகே உள்ள மாரனேரி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2 பேர் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் உதகைக்கு இடையே கோடைக்கால கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்குகிறது.
இந்த சிறப்பு ரயிலில் முதல் வகுப்பிற்கு ரூ.1,575 ஆகவும், இரண்டாம் வகுப்புக்கு ரூ.1,065ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று கொரோனா பாதிப்பு 11,109 பேருக்கு என்று பதிவுசெய்யப்பட்ட நிலையில், இன்று 10,753 ஆக குறைந்துள்ளது.
இதில், 53,720 பாதிக்கப்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
விழுப்புரத்தில் புவனேஸ்வர் விரைவு ரயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்.
ராகுல் காந்தியின் பதவி பறிப்பு விவகாரத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
புதுக்கோட்டையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர்
போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுப்புகள் அமைத்து நிறுத்திய போலீசார்
சித்திரை விஷூ பண்டிகை- கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு
கண்ணாடி மூலம் விஷூ கனியை கண்ட பக்தர்கள், மனம் குளிர ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
கனி காண கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 45,200க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கம் ரூ. 5,650-க்கு விற்பனை
திமுக செய்தி தொடர்பு துணை செயலாளராக, முன்னாள் அதிமுக நிர்வாகி கோவை செல்வராஜ் நியமனம்
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மீனவர் அணி துணை தலைவராக நியமனம்
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பேசிக்கொண்டிருந்த இடத்தில் திடீர் குண்டுவெடிப்பு
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். பிரதமரை பத்திரமாக வெளியேற்றிய பாதுகாப்பு வீரர்கள்
பிரதமர் கிஷிடாவை நோக்கி வெடிகுண்டு வீசிய நபர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கோபோலி பகுதியில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழப்பு, 25 பேர் படுகாயம்.
ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பாக, தமிழகம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம்
சென்னை எழும்பூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்கிறார்