பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
குடியரசு தின விழா அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தின விழா அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’ , திருவள்ளுவர் ஆண்டு மற்றும் தமிழ்நாட்டின் சின்னம் இடம்பெற்றுள்ளது. பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம் என்று குறிப்பிட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது ‘தமிழ்நாடு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டில் உயிரிழப்பு: அரசு நிதியுதவி
ஜல்லிக்கட்டின் போது 3 பார்வையாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நானே போட்டியிட வாய்ப்பு உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தி.மு.க-விற்கு இடைத்தேர்தலில் மக்கள் தக்க பதிலடி தருவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எஸ்.எஸ்.பிள்ளை மார்கெட் பகுதியில், போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இந்தத் தகவலின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், யூரியா உரம் மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து பொடியாக்கி ஹெராயின் என விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ரீகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 கிலோ போலி போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். ஹெராயின் என யூரியாவை பொடியாக்கி விற்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. விரைவில் வேட்பாளர் தேர்வு நடைபெறும். அ.தி.மு.க-வில் இப்போது ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது; இரட்டை இலை உறுதியாக எங்களுக்கே கிடைக்கும். நாங்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் நிலை உள்ளது; எடப்பாடி பழனிசாமி தாமாக முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததால், ஒரே ஒரு பதவியாக ஒருங்கிணைப்பாளர் பதவிதான் உள்ளது.” என்று கூறினார்.
ஓ.பி.எஸ் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் சுமார் 3 மணி நேரம் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை வானிலை மையத்தின் அறிக்கையின்படி இன்றிரவு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகளை பொதுமக்கள் தேர்ந்தெடுக்காத வரை, அரசாங்கங்களின் விஷயத்த்தில் மாற்றுவது போல, மக்களால் நீதிபதிகளை மாற்ற முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
உயர் நீதித்துறைக்கு நீதிபதிகள் நியமனம் செய்வது தொடர்பான விவாதத்தின் மற்றொரு படியாக, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீதிபதிகள் தேர்தலில் போராட வேண்டியதில்லை அல்லது பொதுமக்களிடமிருந்து எந்த கேள்வியையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று திங்கள்கிழமை கூறினார்.
நீதிபதிகளை பொதுமக்கள் தேர்ந்தெடுக்காததால், அரசு விஷயத்தில் தங்களால் இயன்றவரை நீதிபதிகளை மாற்ற முடியாது என்றும் அவர் கூறினார். “இருப்பினும், பொதுமக்கள் நீதிபதிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்கள் தீர்ப்பு, உங்கள் வேலை செய்யும் முறை, நீங்கள் நீதி வழங்கும் விதம் போன்றவற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்… அவர்கள் மதிப்பீடு செய்து கருத்துக்களையும் தெரிவிக்கிறார்கள். சமூக ஊடக யுகத்தில், எதையும் மறைக்க முடியாது” என்று கிரண் ரிஜிஜு கூறினார்.
அமைச்சர் முத்துசாமி: “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவித்திருப்பதில் அதிருப்தி எதுவும் கிடையாது; அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளனர். தேர்தலில் போட்டியிட வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவார்கள். அப்படி சிலர் ஆசைப்படுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முதல்வர் ரங்கசாமி இணைந்து தொடங்கி வைத்தனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது நேரில் சந்தித்து ஆதரவு கோரிய நிலையில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், “பா.ஜ.க இருக்கும் பக்கம் நான் இருப்பேன். பா.ஜ.க எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். பா.ஜ.க பக்கம்தான் இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பி.எஸ் தலைமையில் அவருடைய ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம நடைபெற்று வருகிறது. மாவட்ட செயலாளர்கள் 87 பேர், தலைமை கழக நிர்வாகிகள் 114 பேர் பங்கேற்றுள்ளனர்.
பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா என்பவர் 2012ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன், மீனாட்சி, முருகன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட சலூன் கடை ஒன்றில் திறப்பு விழா சலுகையாக ரூ.1க்கு முடிதிருத்தம் செய்யப்பட்டது.
மேலும் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.
தனது திருமணம் குறித்து பேசிய ராகுல் காந்தி, “தனது வருங்கால மனைவி இந்திரா காந்தி போன்றும் தனது தாயாரின் குணநலன்களையும் ஒத்து இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
திருவல்லிக்கேணி உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ரூ.40,000 லஞ்சம் வாங்கிய நிலையில் பாஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்துவருகிறது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் ட்விட்டரில், “இன்று ராயப்பேட்டையில் இருந்து Whatsappல் வந்த புகாரை உயர் அலுவலர்களைக் கொண்டு விசாரித்ததில் தவறு நடந்திருப்பது உண்மை என நிரூபிக்கப்பட்டதால் திருவல்லிக்கேணி பகுதி உணவு பாதுகாப்புஅலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி, வணிக நோக்கங்களுக்காக செயற்கை அருவிகளை உருவாக்குவோர் மீது குற்றவியல் நடவடிக்கை என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரித்துள்ளது.
மேலும், “இது தொடர்பாக துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில், விமான பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அந்தச் சோதனையில், அவரது கால்களில் 2 கிலோ தங்கப் பசையை மறைத்து வைத்திருந்ததை சுங்கத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த காணொலிக் காட்சிகள் வைரலாக பரவிவருகின்றன.
பெண்களுக்கான பாதுகாப்பு & முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 25 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மலையேறும் வீராங்கனை ஆஷா மால்வியா.
இவர் இன்று தமிழ்நாடு வந்துள்ளார். இந்த நிலையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்தார்.
மகாராஷ்டிரா மாநில ஆளுனர் பொறுப்பில் இருந்து விலக பகத்சிங் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மும்பை வந்திருந்தபோது அவர் விலக விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டது. 5வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது போலவும், பணியாளர்களை காப்பாற்றுவது போலவும் ஒத்திகை செய்யப்பட்டது. ஒத்திகையில் 54 மீட்டர் உயரம் வரை செல்லக்கூடிய ஸ்கை லிஃப்டர் பயன்படுத்தப்பட்டது. 52 தீயணைப்பு வீரர்கள், 6 தீயணைப்பு வாகனங்கள் ஒத்திகை நிகழ்வில் பங்கேற்றனர்
தமிழ்நாடு – ஆந்திரா இடையே புதிய 6 வழிச்சாலைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது
இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் குழு அமைத்து அமைச்சர் அனுராக் தாகூர் உத்தரவிட்டுள்ளார்
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அதிமுகவினர் கொடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட அதிமுகவினர் சிலர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட விருப்பம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு சார்பிலும் விருப்ப மனு வழங்கப்பட்டுள்ளது
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பு, அண்ணாமலை ஆகியோர் எங்களை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இன்றைய நிலையில், தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை. தேமுதிக வேட்பாளரை ஆதரிக்க அதிமுக, பாஜக, தமாகா முன்வந்தால் வரவேற்போம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்
இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடுகிறது. தே.மு.தி.க.,வின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக போட்டி வேட்பாளராக ஈரோடு மாவட்ட செயலாளர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்திய பின் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளேன்;- சென்னை விமானநிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பேட்டி
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்துக் கொண்டு இருக்கிறோம். கூட்டம் முடிந்த பிறகு, முடிவினை அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தன்னை சந்தித்த பிறகு ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பேட்டி
கமல்ஹாசனின் இரத்தத்தில் தேசியமும், காங்கிரசும் கலந்திருக்கிறது. காங்கிரசையும், கமல்ஹாசனையும் யாராலும் பிரிக்க முடியாது. எனவே எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டோம். கொள்கை ரீதியாக தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறோம். எனவேதான், மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினோம். திமுக தலைமையிலான கூட்டணிக்கு அவர் ஆதரவு அளிப்பார் என்றே நான் உறுதியாக நம்புகிறேன் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
அந்தமான் நிக்கோபரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை, பிரதமர் மோடி சூட்டினார்
ஈரோடு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக மதிமுக தீவிர பிரசாரம் செய்யும் – துரை வைகோ
ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு கோரி, காங்கிரஸ் வேட்ட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கமல்ஹாசனை இன்று நேரில் சந்தித்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனிடம் ஆதரவு கோரும் காங்கிரஸ் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், எம்.எல்.ஏ அசன் மௌலானா கமல்ஹாசன் உடன் சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன், காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் சந்திப்பு
எனது வழி தனி வழி: இரு பெரும் தலைவர்கள் வழியில் நேர்மையாக நான் பயணிக்கிறேன்” தேனி, அதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின் இபிஎஸ் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு
உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக மாநில மொழிகளை அறிவித்தால் மக்கள் பயன்பெறுவார்கள் எனவும் ட்விட்டரில் கருத்து.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு கட்டாயம் வரவேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கேட்டுக் கொண்டோம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பிரசாரம் செய்வதற்கு நன்றி தெரிவித்தோம்.
கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.
– ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அண்ணா அறிவாலயத்தில் பேட்டி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து
பேருந்தில் பயணித்தவர்களில் 15க்கும் மேற்பட்டோருக்கு தலை, கை, கால்களில் காயம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தலைவர் சரத்குமார் நாளை ஆலோசனை
காணொலி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் சரத்குமார்
ஆலோசனைக்கு பிறகு இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து சரத்குமார் அறிவிக்க உள்ளார்
2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம்பெற்றிருந்தார் சரத்குமார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கம் நீதி மய்யத்தின் ஆதரவை கேட்க உள்ளோம். தொலைப்பேசி மூலம் கமல்ஹாசனை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி
எப்போதும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.
இடைத்தேர்தலில் வென்றாக வேண்டும் என்ற நோக்கில், அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்தேன்.
பெரிய கட்சி என்பதால் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவில் கிரேன் சாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னசாமி என்பவரும் உயிரிழப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் தே.மு.தி.க போட்டியிடுமா?
கட்சி நிர்வாகிகளோடு இரண்டு கட்சிகளும் இன்று ஆலோசனை
பழனி முருகன் கோயிலில் வரும் 27-ம் தேதி குடமுழுக்கு விழா
பழனி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலாகர்சன வைபவம் நடைபெற்றது
89 உப சன்னதிகளில் கும்பாபிஷேக புனித நீர் பூஜிக்கப்பட்டு, யாகசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது