பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63, காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பலி எண்ணிக்கை 23,000-ஆக அதிகரிப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,000-ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்துக்கு இதுவரை துருக்கியில் 20,213 பேரும், சிரியாவில் 3,553 பேரும் உயிரிழந்ததாக தகவல்.
இலங்கை அணி த்ரில் வெற்றி
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றி. முதலில் பேட் செய்த இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது. தென்னாப்ரிக்க அணியால் 20 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததால், 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு மாணவி பவித்ரா மல்லர்கம்பம் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்
விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பண்ணை முற்றிலும் எரிந்தது. இதில் பண்ணையிலிருந்த சுமார் 2500 கோழி குஞ்சுகள் உடல்கருகி இறந்தது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்
துருக்கி, சிரியாவில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25000ஐ தாண்டியுள்ளது
துருக்கியின் மாலத்யாவில் இடிபாடுகளில் இருந்து இந்தியர் ஒருவரின் உடலை மீட்புக் குழு சனிக்கிழமை மீட்டதாக துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு, துருக்கியில், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான ஆலை பொறியாளர் விஜய் குமார் காணாமல் போனார். ஒரு மாத கால அலுவலக பயணமாக அங்கு சென்ற அவர், இந்த மாத இறுதியில் திரும்பி வருவார் என டேராடூனில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர். இந்தநிலையில், அவரது உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது
தவறான சிகிச்சையால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணுக்கு ரூ. 40 லட்சம் வழங்க வேண்டும் என ஜி.ஜி. மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “நாடாளுமன்றத்தில் நான் பேசிய சில வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. நாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், பஞ்சாப் மாநிலத்திலும் உலகிலேயே சிறந்த அரசு கல்வியை ஆம் ஆத்மி அரசு வழங்குகிறது என என டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ள சர்வதேச விமான கண்காட்சிக்கான சாகச ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது.
வானில் வட்டமடித்து சாகசம் புரிந்த விமானங்களை பொதுமக்கள் வெகுவாக ரசித்தனர்.
பிபாவின், 2022ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்ஸி, கிலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இது காலபந்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக கை சின்னத்தில் கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வாக்கு சேகரித்தார்.
அப்போது, “வாக்களிப்பது நம்முடைய சுய நலத்திற்காக. நாம் வாழும் பகுதி நன்றாக இருக்க வேண்டும். அதற்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
கடந்த முறை போன்று குறைவாக வாக்குகள் பதிவாக கூடாது” என்றார்.
காங்கிரஸூம் இடதுசாரிகளும் (சிபிஐ மற்றும் சிபிஎம்) கேரளத்தில் குஸ்தியில் ஈடுபடுகின்றனர். திரிபுராவில் நண்பர்களாக இருக்கின்றனர்.
இது எப்படி? என ராதாகிஷோர்பூர் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பினார். மேலும் நாடு முழுக்க பாஜகவினர் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகின்றனர்” எனவும் கூறினார்.
மராட்டியத்தில் செய்தியாளர் சசிகாந்த் வரிசி ரத்னகிரியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என துணை முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுவான கட்டமைப்பின் மூலம் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜி20 நாடுகளுடன் விவாதித்து வருகிறோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கிரிப்டோகரன்சி வணிகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சியில் பிட்காயின் உள்ளிட்டவை முன்னணியில் உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த, போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ஈரோடு கிழக்கில் பிப்.27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. களத்தில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசும், நாம் தமிழர் சார்பிலும் சரண்யாவும் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டது. ஆட்சிக்கு வரும்முன்பு மக்களோடு கைகோர்ப்போம் என்றார்.
தற்போது மத்திய அரசுக்கு பயந்து பரந்தூர் விமான நிலையத்துக்கு சரி சொல்கின்றனர் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 9 கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை 2 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
“மதுரை எய்ம்ஸ்-க்கு நிலப்பிரச்னை இல்லை; நிதி பிரச்சனைதான் உள்ளது; கட்டுமானப் பணிகளை தாமதப்படுத்துவது ஒன்றிய அரசு தான்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!
சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 42 பணிகளை மேற்கொள்ள, ₹98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
“ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் பூட்டப்பட்டு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது” – ஜவாஹிருல்லா கண்டனம்!
பார்டர் – கவாஸ்கர் முதல் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை மீறியதாக எழுந்த புகாரை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டிக் கட்டணத்தில் 25% அபராதமாக கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்காசி, இலஞ்சி அருகே இளம்பெண் குருத்திகா கடத்தப்பட்டதாக தொடர்ந்த வழக்கு. செங்கோட்டை நீதிமன்றத்தில் குருத்திகா சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்
இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பிறகு தான் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என்று சென்னை, ஆயிரம்விளக்கில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் – 2வது இன்னிங்சிலும் இந்தியா தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது
ஆஸ்திரேலிய அணி, 23 ஓவர்கள் முடிவில் 68 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்,.
கிருஷ்ணகிரி, ஓசூரில் பெயிண்ட் கம்பெனிக்கு அருகே உள்ள காலி இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் பேரல்களில் தீ பற்றி எரிந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெயிண்ட் பேரல்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
“ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறு வழிச்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்” என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 24,000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
சிங்கார சென்னை 2.0 திட்ட த்தின் கீழ் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை, மாட்டுத்தாவணி மார்க்கெட்டில், கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ள நிலையில் ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை ரூ. 2,500க்கு விற்பனையாகிறது.
ஓசூரில் எருது விடும் விழாவில் ஏற்பட்ட கல்வீச்சு தாக்குதல் தொடர்பான புகாரில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தனிப்பிரிவில் பணியாற்றிய 30 காவலர்கள் பணியிட மாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் உத்தரவிட்டுள்ளார்,
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராம மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ரூ. 42,720க்கு விற்பனை ஆகவும், ஒரு கிராம் தங்கம் 5,340 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இளங்கோவனை ஆதரித்து கமல் 3 நாள் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ம.நீ.ம தலைவர்
கமல்ஹாசன் 3 நாள் பிரச்சாரம். பிப்ரவரி 19 முதல் 21-ம் தேதி வரை இளங்கோவனுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : வரும் 19-ம் தேதி மநீம தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம்
அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் வானில் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்க போர் விமானம். அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் போர் விமானத்தில் சென்ற ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனி மத்திய படை வீரர்கள் ஈரோடு வந்தடைந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மொத்தம் 180 வீரர்கள் வந்துள்ளனர்.