பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தி.மு.க சாதனை விளக்க பொதுக் கூட்டம்
தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்ட பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கம். மதுரையில் பொதுக் கூட்டத்தில் பேசுவோர் பட்டியலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் இடம் பெறவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான முதல் பட்டியலில் பி.டி.ஆர் பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மொய்தீன் பாய் ஆட்டம்
லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மே 8 நள்ளிரவு 12 மணக்கு வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன்படி அறிவிக்கப்பட்டது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 00:06 (IST) 09 May 2023இ.பி.எஸ் துரோகி, தி.மு.க எங்கள் எதிரி - டி.டி.வி. தினகரன் பேட்டி
ஓ.பி.எஸ் உடனான சந்திப்புக்குப் பின் டி.டி.வி. தினகரன் பேட்டி: “கடந்த காலங்களை மறந்து இணைந்துள்ளோம். இ.பி.எஸ் துரோகி, தி.மு.க எங்கள் எதிரி.” என்று கூறினார்.
- 21:55 (IST) 08 May 2023அ.தி.மு.க-வை மீட்க ஒன்றிணைந்துள்ளோம் - டி.டி.வி. தினகரன்
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்: “அ.தி.மு.க-வை மீட்க ஒன்றிணைந்துள்ளோம்; இருவரிடையே மனதளவில் பகை உணர்வு இல்லை; இந்த இணைப்பில் சுயநலம் இல்லை. ஆணவத்துடன் அரக்கர்கள் செயல்படும் நபர்களிடம் இருந்து அ.தி.மு.க-வை மீட்க உள்ளோம். அ.தி.மு.க-வை மீட்டு ஜெயலலிதா தொண்டர்களிடம் ஒப்படைக்க இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
- 21:49 (IST) 08 May 2023சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளேன் - ஓ.பி.எஸ் பேட்டி
ஓ.பி.எஸ் - டி.டி.வி தினகரன் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு: “இருவரும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்; அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு; அதிமுகவை காப்பாற்ற இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்தனர்.
ஓ.பி.எஸ்: “சசிகலா வெளியூரில் இருப்பதால் ஊருக்கு வந்தவுடன் அவரையும் சந்திக்க உள்ளேன். தொண்டர்கள், மக்களை மனதில் வைத்துக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
- 21:41 (IST) 08 May 2023சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சொன்ன வார்த்தை ஆளுநர் ரவிக்குதான் - பீட்டர் அல்போன்ஸ்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கருத்து: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன வார்த்தை, ஆளுநர் ரவிக்கு சொன்ன வார்த்தையாகவே நான் பார்க்கிறேன்; முதலமைச்சரின் பல்லாவரம் பொதுக்கூட்ட பேச்சை கல்வெட்டாகவே பதிக்கலாம்” என்று கூறினார்.
- 21:20 (IST) 08 May 2023ஓ.பி.எஸ் - டி.டி.வி இணைந்து செயல்பட முடிவு; சாதிய நோக்கு கே.சி.பழனிசாமி விமர்சனம்
ஓ.பி.எஸ் - டி.டி.வி இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது குறித்து, முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி பேச்சு: “இது ஒரு சாதிய நோக்கத்தோடு ஒரு சாதிய ஒருங்கிணைப்பாக மட்டுமே பார்க்கப்படும்” என்று கூறினார்.
- 21:18 (IST) 08 May 2023ஓ.பி.எஸ் - டி.டி.வி இணைந்து செயல்பட முடிவு; கூட்டாக அறிவிப்பு
ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி: இருவரும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்; அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிவித்தனர்.
- 20:13 (IST) 08 May 2023டி.டி.வி தினகரன் - ஓ.பி.எஸ் அணி இணைந்து செயல்பட முடிவு; கூட்டாக அறிவிப்பு
டி.டி.வி தினகரன் - ஓ.பி.எஸ் கூட்டாக செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் அணி இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி. தினகரன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்தனர்.
- 19:17 (IST) 08 May 2023டி.டி.வி. தினகரன் - ஓ.பி.எஸ் சந்திப்பு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். டிடிவி தினகரனின் அடையாறு இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார்.
- 19:15 (IST) 08 May 2023‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை; மம்தா பானர்ஜியின் மே.வ அரசு உத்தரவு
தி கேரளா ஸ்டோரி சர்ச்சை: "எந்தவொரு வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவத்தைத் தவிர்க்கும் முயற்சியில்" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
‘தி கேரளா ஸ்டோரி’ அதன் ட்ரெய்லர் வெளியான காலத்திலிருந்தே, திரைப்படம் கடுமையான ஆன்லைன் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டது. இது ஒரு பிரச்சாரப் படம் என்று பல அரசியல் தலைவர்களால் கடுமையான ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டது.
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, “எந்தவொரு வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவத்தையும் தவிர்க்கும்” முயற்சியில் சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தைத் தடை செய்ய முடிவு செய்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
“வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியைப் பேணவும்” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். “காஷ்மீர் கோப்புகள் என்றால் என்ன? அது ஒரு பிரிவை அவமானப்படுத்துவது. ‘தி கேரளா ஸ்டோரி என்றால் என்ன?’... இது ஒரு திரிக்கப்பட்ட கதை,” என்று அவர் கூறினார்.
- 18:33 (IST) 08 May 2023டி.டி.வி தினகரனை சந்திக்கிறார் ஓ.பி.எஸ்
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார். இன்று மாலை 7 மணிக்கு டி.டி.வி. தினகரனின் அடையாறு இல்லத்தில் நடைபெறும் சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரனும் பங்கேற்க உள்ளார்.
- 18:01 (IST) 08 May 2023மோக்கா புயல்; இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை
மோக்கா புயல் காரணமாக இந்தியாவுக்கு பாதிப்ப இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் நாளை மறுதினம் வலுவடைய வாய்ப்புகள் உள்ளன. இந்தப் புயல் வங்க தேசம், மியான்மர் நாடுகளை நோக்கி நகர்கிறது.
- 17:46 (IST) 08 May 2023கே.எல். ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷான்
கே.எல். ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷான் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து கே.எல். ராகுல் விலகினார்.
- 17:25 (IST) 08 May 2023மேற்கு வங்கத்தில், “தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை?
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மே 5ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
- 17:12 (IST) 08 May 2023கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்; பி.எஸ். எடியூரப்பா
கர்நாடகத்தில் பாஜக 130 முதல் 135 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் எடியூரப்பா கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறுகிறது.
- 16:52 (IST) 08 May 2023ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மாற்றம்?
பாகிஸ்தானில் இருந்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை மாற்றக் கோரும் முடிவில் பி.சி.சி.ஐ உறுதியாக உள்ளது.
இந்த முடிவுக்கு இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.
- 16:32 (IST) 08 May 2023தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 16:19 (IST) 08 May 2023சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.
- 15:57 (IST) 08 May 2023பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு
நெல்லையில், பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே பல்வீர் சிங் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு புதிய வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சூர்யா அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
- 15:48 (IST) 08 May 2023அரசு விரைவு பேருந்தில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு
படுக்கை வசதி உள்ள அரசு விரைவு பேருந்தில் பெண்களுக்கு 4 முன்பதிவு படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருக்கை மட்டும் உள்ள பேருந்தில் 4 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருக்கை,படுக்கை வசதி உள்ள பேருந்து-2 இருக்கை,2 படுக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது
- 15:29 (IST) 08 May 2023ரூ.137 கோடியில் கருர் - கோவை தேசிய நெடுஞ்சாலை
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை பணிகள் ரூ.137 கோடி மதிப்பில் ஓராண்டுக்குள் முடிவடையும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்
- 15:10 (IST) 08 May 2023தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் மரணம்
நெல்லை சுத்தமல்லி அருகே, தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது சென்னையைச் சேர்ந்த அருண், சிவராம் என்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- 14:58 (IST) 08 May 2023ஆளுநர்களை மரியாதை குறைவாக மற்றவர்கள் பேச கூடாது - தமிழிசை
மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரங்கள் இருப்பதைப்போல், ஆளுநருக்கும் சில அதிகாரங்கள் உள்ளது. ஆளுநர்களை மரியாதை குறைவாக மற்றவர்கள் பேச கூடாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்
- 14:45 (IST) 08 May 2023அ.தி.மு.க சார்பில் 314 நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி
அ.தி.மு.க சார்பில், மே தினத்தையொட்டி கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை கழகம், எம்.ஜி.ஆர் மாளிகையில் வழங்கப்படும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
- 14:45 (IST) 08 May 2023தேர்தல் ஆணையத்தில் சோனியா காந்தி மீது பா.ஜ.க புகார்
கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தில் சோனியா காந்தி மீது பா.ஜ.க புகார் அளித்துள்ளது. பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது
- 14:30 (IST) 08 May 2023அ.தி.மு.க சார்பில் 314 நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி
அ.தி.மு.க சார்பில், மே தினத்தையொட்டி கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை கழகம், எம்.ஜி.ஆர் மாளிகையில் வழங்கப்படும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
- 14:13 (IST) 08 May 2023கேப்டன் மில்லர் படப்பிடிப்பு: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
நீர்நிலைகளை ஆக்கிரமித்து தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. யார் இந்த அனுமதியை கொடுத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
- 14:10 (IST) 08 May 2023விஜயகாந்த் வாழ்த்து!
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்சி பெறாத மாணவ - மாணவிகள் தோல்வியை, வெற்றியின் ஒரு பங்குகென கருதி செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- 14:02 (IST) 08 May 202312ம் வகுப்பு மாணவன் தற்கொலை!
சென்னை, ஆவடியில் 12ம் வகுப்பு மாணவன் தேவா (16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 13:57 (IST) 08 May 2023கடந்த ஆண்டைவிட தேர்ச்சி அதிகரித்ப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ்!
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், "கடந்த ஆண்டைவிட தேர்ச்சி அதிகரித்துள்ளது; ஆசிரியர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மதிப்பெண்கள் குறித்து மாணவர்களிடம் பெற்றோர்கள் கேட்க வேண்டாம். சக மாணவர்களோடு ஒப்பிட்டு பேச வேண்டாம்." என்று கூறியுள்ளார்.
- 13:32 (IST) 08 May 2023இந்திய விமானப்படையின் விமானம் விபத்து: 3 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான், ஹனுமங்கர் பகுதியில் இந்திய விமானப்படையின் மிக் -21 ரக விமானம் விபத்துக்குள்ளானது. விமானி தப்பித்த நிலையில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு ராஜஸ்தானின் பார்மர் மாவட்டம் அருகே மிக்-21 போர் விமான விபத்தில் 2 விமானிகள் பலியானது குறிப்பிடத்தக்கது
- 13:15 (IST) 08 May 2023கேரளா படகு விபத்து: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!
கேரளா படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
- 13:13 (IST) 08 May 2023அவதூறு வீடியோ: மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி!
வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோக்கள் வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரிய மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா?" - என்று யூடியூபர் மணிஷ் காஷ்யப்பிற்கு கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
- 12:58 (IST) 08 May 2023வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 10ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும்.
புயலானது 11ஆம் தேதி காலை மத்திய கிழக்கு வங்க கடல் பகுதி நோக்கி நகர்ந்து, வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நெருங்கும். புயல் உருவானால் "மோக்கா" என பெயரிடப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 11:55 (IST) 08 May 2023திருவண்ணாமலை அருகே பிளஸ்டூ மாணவன் தற்கொலை
திருவண்ணாமலை அருகே பிளஸ்டூ மாணவன் தற்கொலை . பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுவன் . வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹரி மாணவனின் உடலை கைப்பற்றி தானிப்பாடி போலீசார் விசாரணை.
- 10:36 (IST) 08 May 2023கர்நாடகாவில் இன்று பிரச்சாரம் நிறைவு
பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி
கர்நாடகாவில் இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது
- 10:24 (IST) 08 May 2023தங்கம் சவரனுக்கு ரூ. 144 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 உயர்வு
ஒரு கிராம் தங்கம் ரூ.5,710க்கும், சவரன் ரூ.45,680க்கும் விற்பனை
- 09:40 (IST) 08 May 2023நீட் தேர்வு - மாணவிக்கு நேர்ந்த அவலம்
சென்னையில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன அவலம் - மயிலாப்பூர் தேர்வு மையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
- 08:56 (IST) 08 May 2023இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
வங்கக் கடலில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.