பெட்ரோல்- டீசல் விலை
சென்னையில் 38வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதிய கட்டங்களை திறந்து வைக்கும் முதல்வர்
திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். வேலூரில் ரூ.53.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மின்வாரிய பணியாளர்கள்; சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அலுவலகத்துக்கு கேஷுவல் உடை அணிந்து வர கூடாது என்றும் பெண்கள் சேலை, சுடிதார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம் என்று கூறப்படுள்ளது. வேட்டி, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடைகளை ஆண்கள் அணியலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. நாளை மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன் தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் என்று நடிகர் சூர்யா ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் 🙏🏽 @mkstalin https://t.co/hkqUGRTCmV
— Suriya Sivakumar (@Suriya_offl) June 29, 2022
தமிழகத்தில் 1827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு இன்று உயிரிழப்பு இல்லை கொரோனாவுக்கு 10,033 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சென்னையில் இன்று மேலும் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 4,300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் செங்கல்பட்டில் மேலும் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,738 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. நாளை மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில். 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு நிலுவையில் இருக்கும் போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவது சட்டவிரோதம் என சிவசேனா தரப்பு கூறியுள்ளது.
கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான செயல்பாடுகள் குறித்து பேசிய போது பொழுது போகவில்லை என்றால், நிதி ஒதுக்குவது, சட்டம் இயற்றுவது, டெல்லிக்கு படையெடுப்பது என இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடை பணியாளர்கள் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரத்தினை அனுப்ப தமிழ்நாடு வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசை கண்டித்து வரும் ஜூலை 5ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிப்பது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில கடிதம் எழுதியுள்ளார். மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2% பேரை தேர்வு செய்து ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளார்
வேலூரில நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், என்னைத் தாங்கி நிற்கும் தூண் துரைமுருகன் என்று உருக்கமாக பேசியுள்ளார். வேலூர் கோட்டையில் நடத்திய புரட்சி தான் சுதந்திர போருக்கு முதன்மையானது அமைச்சர் துரைமுருகனின் மாவட்டம் என்பதால் இங்கு வருவதில் கூடுதல் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் மதுரையில் நடக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: சோலார் வாட்டர் ஹீட்டர்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% லிருந்து 12% சதவீதமாக உயர்த்தபடுகிறது. எல்இடி விளக்குகள் மீதான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 18% சதவீதமாக உயர்த்தப்படுகிறது. பேப்பர், கத்தி, பென்சில் ஷார்ப்பனர், பிளேடு மீதான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 18% ஆக உயர்த்தப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழுவை சேர்ந்த 2441 பேரின் ஆதரவு பிராமண பத்திரம் இ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக அழைக்கப்பட்டதை தொடர்ந்து PRIDE OF INDIAN CINEMA (இந்திய சினிமாவின் பெருமிதம்) என்ற வார்த்தைகளுடன் சூர்யாவை ரசிகர்கள் ட்விட்டரில் புகழ்ந்து வருகின்றனர்
வரும் ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்றும், ஜூலை 5 முதல் 19ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
ரமலான் பண்டிகைக்காக வசூலிக்கப்பட்ட பணத்தை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில், என்.ஐ.ஏ மற்றும் மாநில அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மார்ச் 4,5,6 ம் தேதிகளில் நடைபெற்ற குரூப் -1 எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஜூலை 13,14,15ம் தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது
வரும் 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும். ஓ.பி.எஸ் பின்னால் இருந்து தி.மு.க செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்
இன்று கோயம்பேட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 7000 கிலோ ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், 500 கிலோ ரசாயனம் பயன்படுத்தப்பட்ட வாழைப்பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
சென்னை, முகப்பேர் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ஸ்ரீதர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் மகளிர் போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி ஊர்வலம் சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடங்கியது
முதல்வர் ஸ்டாலினை நாளை சந்தித்து, குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கோருகிறார் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா
சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
அட்டர்னி ஜெனரலாக மேலும் 3 மாதங்களுக்கு கே.கே.வேணுகோபால் பணி நீடிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரது பணி நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்பேட்டில் ரசாயனம் தடவி விற்பனை செய்யப்பட்ட 6 டன் மாம்பழம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் ஆதமங்கலம் கீழகண்ணாப்பூரில் சாராய கடையை பெண்கள் அடித்து உடைத்துள்ளனர். காவல்நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி பெண்கள் ஆவேசத்தால் சாராய கடையை நொறுக்கியுள்ளனர். சாராய வியாபாரி ஓட்டம் பிடித்து விட்டுள்ளார்
எதிர்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், போலீசாரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து கூட்டம் சேர்ப்பது ஏற்கத் தக்கதல்ல என்று பிரபல ரவுடி கட்டை ராஜா வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
நளினியை விடுதலை செய்ய கோரிய வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் கூறியதாக பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் தீர்ப்பில் இருந்து நீக்கம். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அமர்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53.13 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையம் 9.25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்காலில் அரசு பள்ளியில் ரேஷன் அரிசி கையாடல் செய்த விவகாரத்தில், தலைமை ஆசிரியர் விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கண்ணனிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
உடல் நலக்குறைவால் உயிரிழந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகை மீனாவின் கணவர் நேற்று இரவு உடல் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் திரைத்துறைனர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாத்ரூம் சுத்தம் செய்யும் ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி, அவரது குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்புக்கு எதிரான பொதுநல மனுவை திரிபுரா உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது..
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சி.வி.சண்முகம், தங்கமணி, இன்பதுரை ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தாலும், தீவிர கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 5% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நுபுர் சர்மா ஆதரவாளர் கொலையான சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் உள்ளதா என முழுமையாக விசாரிக்க, என்.ஐ.ஏ. விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரவில் நாளை மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக சிவசேனாவின் மனுவை இன்று மாலை 5 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
ரூ.110 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆட்சியர் அலுவலகத்தில் 200 பேர் அமரும் வகையில் பெரிய கூட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 300 இருக்கைகள் கொண்ட குறை தீர்வுக் கூட்ட அரங்கம்,3 சிறிய கூட்டரங்கங்கள், நீரூற்றுடன் கூடிய பூங்கா, மழைநீர் வடிகால் வசதிகளும் உள்ளன.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் தலைமைக் கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விருதுநகர் : ராஜபாளையம் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரூ.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்-ன் மனுவிற்கு இபிஎஸ் பதில் மனு அளித்துள்ளார். ஓபிஎஸ் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் என்றும் பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் பதில் மனுவில் இபிஎஸ் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் கொஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். நாளை நடைபெறும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.