Advertisment

Tamil news Today : நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 30 September 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Marital rape SC to hear pleas arising out of Delhi HCs split verdict on September 16

உச்ச நீதிமன்றம்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

வந்தேபாரத் ரயில்சேவை

காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந்தேபாரத் ரயில்சேவை திட்டத்தை பிரதமர் மோடி இன்று கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

அனில் சவுகான் இன்று பொறுப்பேற்பு

முப்படைகளின் தலைமைத் தளபதியாக அனில் சவுகான் இன்று பொறுப்பேற்கிறார். ராணுவ விவகாரங்களுக்கான மத்திய அரசின் செயலாளராகவும் அனில் சவுகான் பதவி வகிப்பார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் மரணமடைந்த நிலையில் அந்த பதவிக்கு அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாளை முதல் நடைமேடை கட்டணம் உயர்வு

பண்டிகை காலத்தையொட்டி சென்னை கோட்டத்தில் 8 முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை (பிளாட்பாரம்) டிக்கெட் கட்டணம் ரூ,10இல் இருந்து ரூ,20 ஆக உயர்வு. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ரயில் நிலையங்களில் நாளை (அக்டோபர் 1) முதல் புதிய நடைமேடை கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:54 (IST) 30 Sep 2022
    காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் : மல்லிகார்ஜுன் கார்கே வேட்புமனு தாக்கல்

    காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் பெரும் குழப்பங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே - கடைசி நிமிடத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன் மூலம், அவர் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் மற்றும் ஜார்கண்ட் எம்எல்ஏ கேஎன் திரிபாதி ஆகியோடன் போட்டியிடுகிறார் .

    கார்கேவுக்கு ஆதரவாக 14 பரிந்துரைகளும், தரூர் 5 பேரும், திரிபாதி ஒருவரும் பரிந்துரை செய்துள்ளனர்.


  • 22:49 (IST) 30 Sep 2022
    ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் : முக்கிய முடிவெடுக்கும் பா.ஜ.க

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால் அடுத்த முதல்வராக சச்சின் பையலட் அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்களன் ராஜினாமா கடிதம் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

    இது தொடர்பாக தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டுமா என்பதை பாரதிய ஜனதா கட்சி ( பாஜக ) தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து முடிவு செய்வார்கள் என்று ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார்.


  • 20:07 (IST) 30 Sep 2022
    தேவரியம்பாக்கம் எரிவாயு குடோன் தீவிபத்து : ஊராட்சி மன்ற தலைவர் கைது

    காஞ்சிபுரம் தேவரியம்பாக்கம் எரிவாயு குடோன் தீப்பிடித்து வெடித்த சம்பவத்தில் குடோன் நடத்த உரிமை வாங்கியதாக தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படுகாயமடைந்த 12 பேரில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்


  • 19:09 (IST) 30 Sep 2022
    கட்டணத்தை குறைத்துள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

    பண்டிகை காலங்களுக்கான பேருந்து கட்டணத்தை 10 - 22% குறைத்துள்ளோம். சென்னையில் இருந்து கோவை வரை ஏசி அல்லாத பேருந்துகளில் துவக்க நிலை கட்டணம் ரூ.1,815 சென்னையில் இருந்து கோவை வரை வால்வோ ஸ்லீப்பரில் கட்டணம் ரூ. ரூ.3,025

    குறைக்கப்பட்ட கட்டண விவரங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கப்பட்டது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


  • 18:54 (IST) 30 Sep 2022
    68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

    சூரரை போற்று படத்திற்காக அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றார் தயாரிப்பாளர் ஜோதிகா. சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் நடிகர் சூர்யா. சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெற்றார் இயக்குநர் சுதா கொங்கரா. சூரரைப் போற்று படத்திற்காக பின்னணி இசைக்கான தேசிய விருது பெற்றார் ஜி.வி.பிரகாஷ்

    சிறந்த தமிழ் திரைப்படம் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்திற்காக தேசிய விருது பெற்றார் இயக்குநர் வசந்த்


  • 16:40 (IST) 30 Sep 2022
    ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் பதற்றத்தில் இருக்கிறார் இ.பி.எஸ் - அமைச்சர் மனோதங்கராஜ் விமர்சனம்

    அமைச்சர் மனோதங்கராஜ்: “எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் பதற்றத்தில் உள்ளார்; ஒரு புறம் சனாதனம்,மனுநீதி பேசுகின்றவர்கள் உடன் கைகோர்த்து கொண்டு, மறுபுறம் திராவிடம் என பேசுகிறார்” என்று விமர்சித்துள்ளர்.


  • 16:10 (IST) 30 Sep 2022
    நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி - ஐகோர்ட் உத்தரவு

    அக்டோபர் 2-ம் தேதிக்குப் பதிலாக நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால் காவல்துறை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 15:42 (IST) 30 Sep 2022
    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளுக்கு தடை

    கோவையில் காந்தி ஜெயந்தி அன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


  • 15:25 (IST) 30 Sep 2022
    மோடி நாளை 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் - மத்திய அரசு தகவல்

    பிரதமர் நரேந்திர மோடி, தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை சனிக்கிழமை (அக்டோபர் 1) தொடங்கி வைக்கிறார். இந்தியா மொபைல் காங்கிரஸ் 2022 இன் ஆறாவது பதிப்பை புது டெல்லியில் தொடங்கி வைக்கிறார் என்று அரசாங்கம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது


  • 14:40 (IST) 30 Sep 2022
    காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு மல்லிகார்ஜுன் கார்கே வேட்புமனு தாக்கல்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை அசோக் கெலாட், திக்விஜய சிங், பிரமோத் திவாரி, பி.எல்.புனியா, ஏ.கே. ஆண்டனி, பவன் குமார் பன்சால் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் முன்மொழிந்தனர். ஜி23 தலைவர்கள் ஆனந்த் சர்மா மற்றும் மணீஷ் திவாரி ஆகியோரும் கார்கேவின் வேட்புமனுவை முன்மொழிந்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களில் கார்கே ஒரு தலித் தலைவர் என்றும் திவாரி கூறினார்.


  • 13:43 (IST) 30 Sep 2022
    அண்ணா பல்கலை.. கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை

    அண்ணா பல்கலை, உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு, ஆயுதபூஜையை ஒட்டி நாளை முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


  • 13:43 (IST) 30 Sep 2022
    சி.வி.சண்முகம் பேட்டி

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. அதிமுக வழக்கில் இறுதி தீர்ப்பு வந்தபிறகே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உறுதி அளித்தோம் என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.


  • 13:00 (IST) 30 Sep 2022
    திமுக தலைமை அறிவிப்பு

    அக்.9ல் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.


  • 13:00 (IST) 30 Sep 2022
    உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் உறுதி

    ஓபிஎஸ் மேல்முறையீடு மனுவை விசாரித்து தீர்ப்பு அளிக்கும்வரை பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடைபெறாது என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.


  • 12:59 (IST) 30 Sep 2022
    9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 12:10 (IST) 30 Sep 2022
    ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகம் தயாரிக்கும் நவீன ஆலை திறப்பு

    ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகம் தயாரிக்கும் பெகாட்ரானின் நவீன ஆலை செங்கல்பட்டில் திறக்கப்பட்டது. ஸ்டாலின் மற்றும் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் ஆலையை திறந்து வைத்தனர்


  • 12:10 (IST) 30 Sep 2022
    தலைமை நீதிபதியாகிறார் எஸ்.முரளிதர்

    ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது.


  • 11:51 (IST) 30 Sep 2022
    8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு

    தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1 ம் தேதி முதல் 2023 ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரை நடைமேடை கட்டணம் பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் , எழும்பூர் ரயில் நிலையம், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது


  • 11:09 (IST) 30 Sep 2022
    ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து

    நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள், மருமகன் நவீன் குமார் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


  • 10:51 (IST) 30 Sep 2022
    காந்திநகர் - மும்பை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    குஜராத், காந்திநகர் - மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்


  • 10:10 (IST) 30 Sep 2022
    டெல்லியில் இன்று தேசிய திரைப்பட விருது விழா

    டெல்லியில் இன்று தேசிய திரைப்பட விருதுகளை வழங்குகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு. நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு


  • 09:13 (IST) 30 Sep 2022
    சேலம் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் உணவுத்துறை அதிகாரிகள் ரெய்டு

    சேலத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. குளிர்பானம் தயாரிக்க வைத்திருந்த பாலில் பூச்சிகள் மிதந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி. குளிர்பானங்கள் மற்றும் பூச்சி விழுந்த பாலை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை


  • 08:54 (IST) 30 Sep 2022
    ரயில்கள் தாமதம்

    சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கமாக செல்லும் புறநகர் ரயில்கள் அரை மணி நேரம் தாமதம் சிக்னல் கோளாறு காரணமாக அரை மணி நேரம் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்


  • 08:45 (IST) 30 Sep 2022
    63 ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை

    இந்தியாவில் பல்வேறு ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 63 ஆபாச இணையதளங்களை மத்திய அரசு உடனடியாக தடை செய்துள்ளது.


  • 08:44 (IST) 30 Sep 2022
    'பொன்னியின் செல்வன் - 1' - உலகம் முழுவதும் வெளியானது

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம்.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் வெளியானது.


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment