பெட்ரோல். டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 260-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
வாணி ஜெயராம் உடலுக்கு இறுதிச் சடங்கு
பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் நேற்று மரணமடைந்தார். 19-க்கும் மேற்பட்ட மொழிகளில் 1000 திரைப்படங்களில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் எனப் பலர் இவரது மறைவுக்கு இரங்கல்
தெரிவித்தனர். வாணி ஜெயராம் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூசம் – பக்தர்கள் முருகன் தரிசனம்
முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு கோயில்களில் தேரோட்டம் நடைபெற இருக்கிறது. முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசம் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள பார்ப்பனர்கள் கூட்டத்தில் வெளிப்படுத்திய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக பகைமையை ஊக்குவித்ததாகவும், மத உணர்வுகளை சீற்றம் ஏற்படுத்தியதற்காகவும் யோகா குரு ராம்தேவ் மீது ஞாயிற்றுக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே லட்சுமி என்ற பெண்ணை கடனாக பெற்ற பணத்தை திருப்பி தராததால் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றதால் லட்சுமியின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்
அ.தி.மு.க வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஏறக்குறைய 85 % பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கணக்கிடும் பணி முடிந்த பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கடிதம் நாளை காலை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கபடும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்
ஜாக்கி ஷெராப் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டரை ஜெயிலர் பட குழுவெளியிட்டுள்ளது
காந்தாரா இரண்டாம் பாகம் குறித்து ரிஷப் ஷெ்ட்டி பேசுகையில், “2022-ல் நீங்கள் பார்த்தது காந்தாரா இரண்டாம் பாகம். முதல் பாகம் இனிதான். முதல் பாகத்தில் முன்னோர்கள், தெய்வம் உண்டான வரலாறு தொடர்பாக கதைக் களம் இருக்கும்” என்றார்.
ஒவ்வொன்றையும் பா.ஜ.க.,விடம் அ.தி.மு.க கேட்டு செய்வதற்கு பா.ஜ.க- வோடு அ.தி.மு.க.,வை இணைத்திடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அனுப்பிய கடிதம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பியுள்ள கடிதம் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த கடிதத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு” என்று சுட்டிக் காட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள், மழை காரணமாக நீரில் மூழ்கியதால் பாதிப்புகளை போக்கும் வகையில், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகளை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு திமுகவின் எஃகு கோட்டை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தொடர்ந்து அவர், “ஈரோடு மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பது தவறு. அது தி.மு.க.வின் எஃகு கோட்டை.
பொதுமக்கள் காங்கிரஸின் கை சின்னத்துக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 1.5 ஆண்டுகால சாதனைகளால் வெற்றி பெறுவோம்” என்றார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் த.மோகன். இவர், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதானி மீதான புகார்கள் குறித்து எந்த விதமான விசாரணையும் நடத்தாத நரேந்திர மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் நாளை நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளது.
அதானி நிறுவனம் பங்குகளில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா பலூனை சுட்டு வீழ்த்தியது 'சர்வதேச நடைமுறையின் தீவிரமான விதி மீறல் என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்தக் கடிதம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள செட்டிப்பட்டு முருகன் கோயிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.
இந்தத் தைப்பூச விழாவில், சாமியாருக்கு மிளகாய் அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் தரிசனத்துக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் பாடகி வாணி ஜெயராம் உடல், தகனம் செய்யப்பட்டது.
ஏராளமானோர் அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர். வாணி ஜெயராம் நேற்று அவரது வீட்டில் காலமானார்.
இன்றைய சூழலில் இடைத்தேர்தல் அவசியம் அற்றது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் அன்புமணி ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
பெசன்ட் நகர் மின் மயானத்தில் வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அதிமுக சார்பில் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
காவிரி டெல்டா பகுதிகளில் பருவம் தவறிப் பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின; நெல் கொள்முதல் விதிகளில் தேவையான தளர்வுகளை வழங்கிட பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில், பள்ளி தாளாளர் நஜீம் (47) போக்சோவில் கைது . இதற்கு உடந்தையாக இருந்ததாக நஜீமின் மனைவி, பள்ளி முதல்வர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு
மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி அஞ்சலி.
பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி. சென்னை, நுங்கம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அண்ணாமலை அஞ்சலி. வாணி ஜெயராமுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது – அண்ணாமலை
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவ தளபதியுமான பர்வேஸ் முஷரஃப் (79) உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழப்பு.
ஈரோடு, கிருஷ்ணம்பாளையம் பகுதியில் அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்குசேகரிப்பு
இடைத்தேர்தலில் காங். வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று பிரசாரம்
புகழ்பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டம் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு
பிரபல நடிகரும், இயக்குநருமான டி.பி. கஜேந்திரன் மறைவு
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி
எனது கல்லூரி நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவு வருத்தமளிக்கிறது
கலையுலகிற்கு தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர் டி.பி.கஜேந்திரன்
அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கல் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே 21 வயது இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இளம்பெண் அனுமதி
இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி. கஜேந்திரன் (68) மரணம்
சென்னையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்
வடலூர் தர்ம ஞான சபையில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம்
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
'அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை' என கை கூப்பி ஜோதியை தரிசிக்கும் பக்தர்கள்