பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் விசாரணை
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணைய குழு இன்று வேங்கைவயல் சென்று நேரில் விசாரணை நடத்துகிறது.
உக்ரைனுக்கு ஆயத உதவி
உக்ரைன் நாட்டிற்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை மீண்டும் வழங்கியது அமெரிக்கா. ரஷ்யா உடனான போர் ஓராண்டு கடந்தும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
எந்த பிரச்னையும் இன்றி தமிழ்நாட்டில் இருப்பதாக பீகார் தொழிலாளர்கள் தெரிவித்தனர்” புலம்பெயர் தொழிலாளர் விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர், பீகார் அதிகாரிகள் குழு செய்தியாளர் சந்திப்பு!
மேலும் “சமூகவலைதளங்களில் பரவும் போலி வீடியோக்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்; தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கினர்” -பீகார் அதிகாரிகள் குழு
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியில் தானாக நகர்ந்து வந்த டிராக்டர், ஒரு கடையின் மீது மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; டிராக்டர் எப்படி தானாக நகர்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்!
புலம்பெயர் தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய இந்தி நாளிதழ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி!
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்பிய 2 பத்திரிக்கையாளர்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட பீகார் மாநிலக்குழு தமிழகம் வந்தது.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட பீகார் மாநிலக்குழு தமிழகம் வந்தது.
நெல்லை : திசையன்விளை அருகே அணைக்கரை பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து இதில் அங்கு வேலை பார்த்து வந்த ராஜ்குமார் என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு
சென்னை மாநகராட்சியில் பதவிக்கு வந்த ஓராண்டு நிறைவை மேயர் பிரியா ராஜன் அவரது அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்
கோவையில் ரயில்வே மேம்பால பணிகளுக்கு எதிராக தொடரப்பட்ட 3 வழக்குகளை தலா ரூ. 1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
புதுக்கோட்டை, ராசாபட்டி கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
கலால் கொள்கை வழக்கில் சனிக்கிழமை மேலும் இரண்டு நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நீதிமன்றத்தில் தினமும் பல மணிநேரம் “ஒரே கேள்விகளை” கேட்டு ஏஜென்சி தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நீண்ட நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால், நாகை படகுகளை விடுவிக்க, திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படகுகளை காரைக்கால் கொண்டு வர படகின் உரிமையாளர்கள் இலங்கைக்கு சென்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகு விடுவிக்கப்படுவது இதுவே முதல்முறை
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்க்கு உட்பட்ட மசினகுடி வன பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
மார்ச் 9ல் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ் தலைமையில் கூட்டம் நடைபெறும். நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். போலி வீடியோக்களை நம்ப வேண்டாம் என்று வட மாநிலத்தவர்களிடம் தெரிவித்துள்ளோம் என கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்
வடமாநிலத்தவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், பீகார் குழு ஆய்வு செய்யும் போது மேலும் நம்பிக்கை அதிகரிக்கும். வட மாநிலத்தவர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம். வாட்ஸ் அப் குரூப் மூலமும் வட மாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு. வட மாநிலத்தவர்களின் இடங்களுக்கே சென்று நம்பிக்கை ஊட்டுகிறோம். வதந்தி தொடர்பாக வட மாநில டிஜிபிக்களுடனும் பேசியுள்ளேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
“கூலி வேலைக்கு வரும் வடமாநிலத்தவர்களை அடித்து விரட்டுவோம் என கூறுவது ஏற்புடையதல்ல. வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு முதலீட்டு வடிவில் தமிழ்நாட்டில் இருக்கிறது.” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். “தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.
தஞ்சாவூர், மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்று விட்டு வெளியே ஓடி வந்த காளை பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மற்றும் நாகை படகுகளை விடுவிக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.2/2 pic.twitter.com/SpaoNUtuTw
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 4, 2023
வடமாநில தொழிலாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 'வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் நேராது' என பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் தொலைபேசியில் உறுதியளித்துள்ளார்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்வதாக வடமாநில தொழிலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள் – டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை
பீகார், ஜார்க்கண்ட் மாநில அதிகாரிகள் குழு, தமிழ்நாடு வரவுள்ள நிலையில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அமைச்சர் சி.வி.கணேசனுடன், மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குனர் ராஜு ஹரிஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பூர் மாவட்டங்களில் வதந்தி பரப்பியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
0421-2203313 | 9498101300 | 9498101320 இந்த தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
நாகை மாவட்டம் நாகூரில் கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில், நவீன இயந்திரங்கள் மூலம், கச்சா எண்ணெயை அகற்ற சிபிசிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பீகார் மாநிலக் குழு, இன்று மாலை 4:30 மணிக்கு சென்னை வருகிறது. மாலை 5:30 மணிக்கு தலைமைச்செயலகத்தில், வடமாநில தொழிலாளர்களின் நிலை மற்றும் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் பாதுகாப்பு குறித்து, அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
சென்னை: நாமக்கல் கவிஞர் மாளிகையில் வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை 2023 – 2024 குறித்து உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை, தாம்பரம் அருகே ஆன்லைன் ஆப் மூலமாக கடன் பெற்ற வினோத் குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை
ரூ.20 லட்சம் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாததால் மன உளைச்சலில் தற்கொலை – போலீசார் விசாரணை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.42,008க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ.5,251க்கு விற்பனை
தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு
பீகாரைச் சேர்ந்த 4 பேர் கொண்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்ப அம்மாநில அரசு முடிவு
சென்னை, பெரம்பூரில் கடந்த மாதம் நகைக்கடையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
பெங்களூரைச் சேர்ந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
திருச்செந்தூரில் விமரிசையாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தின விழா
அதிகாலையில் நடைபெற்ற தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நிகழ்ச்சிகள்
அவதார பதிக்கு அழைத்துவரும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் வரும் 8-ம் தேதி இந்தியா வருகை
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்
சிபிசிஐடி போலீசார் 90க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்ததில் பலர் முன்னுக்குப் பின் முரணாக பதில்
வாக்குமூலங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, உண்மை கண்டறியும் சோதனை செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்
சென்னை தாம்பரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 20 லட்சத்தை இழந்த மருந்து நிறுவன பிரதிநிதி வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை. வினோத்குமார் பல லோன் ஆப்களில் ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடி வந்துள்ளார்.
6 மாதங்களுக்கு பிறகு திருச்சி காவிரி பாலம் முழுமையான போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. ரூ. 6.84 கோடியில் சீரமைக்கப்பட்ட காவிரி பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்.
சிவகங்கை : காரைக்குடி அருகே பள்ளத்தூர் அரசு டாஸ்மாக் கடையில் 2-வது முறையாக பெட்ரோல் குண்டு வீச்சு
– ஒருவர் படுகாயம்
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் விற்பனையாளர் அர்ஜுனன் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி.
அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததால் வாலிபர் வெறிச்செயல் – போலீசார் விசாரணை
சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில்களும் இன்று காலை முதல் வழக்கம்போல் சீரான நேரத்தில் இயக்கம்,
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து, 20 மணி நேரத்திற்கு பிறகு ரயில் சேவை சீரானது.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தலைமைச் செயலக அலுவலர் ரவி கைது.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை.
தரகராக செயல்பட்ட விஜய் என்பவரையும் கைது செய்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை.
கைது செய்யப்பட்ட ரவி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.