Advertisment

Tamil news Today: 26 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 05 October 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Chennai Rain

Tamil News updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 137வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

விஜயதசமி மாணவர் சேர்க்கை

நவராத்திரி நிறைவடையும் நிலையில் இன்று விஜயதசமி கொண்டாட்டம். கல்வி, தொழில்கள் தொடங்க உகந்த நாள். இதையொட்டி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒரு ஆசிரியராவது இருந்து மாணவர் சேர்க்கை நடத்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இமாச்சல் செல்லும் பிரதமர்

பிரதமர் மோடி இன்று இமாச்சலப் பிரதேச மாநிலம் செல்கிறார். அங்கு பிலாஸ்பூரில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். குலுவில் நடைபெறும் தசரா நிகழ்ச்சிகளிலும் பிரதமர் பங்கேற்கிறார்.

தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி

இந்தியா- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியிடையே 3ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:31 (IST) 05 Oct 2022
    மதுராந்தகத்தில் மின்கம்பம் உடைந்து விழுந்து 6-ம் வகுப்பு மாணவிக்கு கையில் பலத்த காயம்

    செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் மின்கம்பம் உடைந்து விழுந்து 6ம் வகுப்பு மாணவிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது



  • 20:42 (IST) 05 Oct 2022
    ஹரியானா; தசரா விழாவில் விபத்து - சிலர் காயம்

    ஹரியானாவில் யமுனாநகரில் நடந்த தசரா விழாவில் விபத்து நிகழ்ந்துள்ளது. ராவணனின் உருவ பொம்மை எரிக்கும்போது அருகில் நின்றவர்கள் மீது உருவ பொம்மை விழுந்த விபத்தில் சிலர் காயம் அடைந்துள்ளனர்



  • 20:00 (IST) 05 Oct 2022
    செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

    செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது



  • 19:23 (IST) 05 Oct 2022
    இந்தியாவுக்கு மக்கள் தொகைக் கொள்கை தேவை – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

    மக்கள் தொகைக் கட்டுப்பாடு மற்றும் மத அடிப்படையிலான மக்கள் தொகை சமநிலை புறக்கணிக்க முடியாத விஷயம். இந்தியாவுக்கு மக்கள் தொகைக் கொள்கை தேவை. அது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்



  • 19:05 (IST) 05 Oct 2022
    'பொன்னியின் செல்வன் - 1' தமிழகத்தில் ரூ.100 கோடி வசூல்

    தமிழகத்தில் 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படம் வெளியான 5 நாளில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது



  • 18:24 (IST) 05 Oct 2022
    திருப்பதி பிரமோற்சவம்; 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம்

    திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ. 20 கோடியே 46 லட்சம் வசூலாகியுள்ளது



  • 17:42 (IST) 05 Oct 2022
    அரசு கட்டடங்களின் தரம் மற்றும் ஆயுட்காலங்களை குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டடங்களின் தரம் மற்றும் ஆயுட்காலங்களை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க கோரிய பொதுநல வழக்கு தமிழக அரசு மனுவை பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளார்.



  • 17:12 (IST) 05 Oct 2022
    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த உதவி காசாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

    மனநல காப்பக முன்னாள் உதவி காசாளர் வருமானத்துக்கு அதிகமாக ₨20 லட்சம் சொத்துக்கள் குவித்த வழக்கு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



  • 17:09 (IST) 05 Oct 2022
    விவாகரத்தை கைவிடும் தனுஷ் ஐஸ்வர்யா

    17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா, பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்த நிலையில், தற்போது விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 16:10 (IST) 05 Oct 2022
    100 அடி உயர இடிதாங்கி டவர் மீது ஏறி அமர்ந்து இளைஞர் போராட்டம்

    தனது ஆட்டோவை, அவரது நண்பர் எடுத்து சென்றதாக கூறிய இளைஞர் ஒருவர் ஆட்டோவை மீட்டு தரக்கோரி 100 அடி உயர துணை மின் நிலைய இடிதாங்கி டவர் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.இளைஞரிடம் தீயணைப்புத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



  • 16:08 (IST) 05 Oct 2022
    டிவி வெடித்து விபத்து : சிறுவன் மரணம்

    உத்தர பிரதேசத்தில் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த போது எல்.இ.டி. டிவி வெடித்து விபத்தக்குள்ளானதில், 16 வயது சிறுவன் பலியானார். மேலும மூவர் படுகாயம் அடைந்த நிலையில், டிவி எதனால் வெடித்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 15:38 (IST) 05 Oct 2022
    வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

    நடப்பு ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கரோலின் பெர்ட்டோசி, பேரி ஷார்ப்லெஸ், டென்மார்க்கை சேர்ந்த மார்ட்டன் மெல்டல் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.



  • 15:02 (IST) 05 Oct 2022
    'புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வாய்ப்பு இல்லை' - ஆர.செல்வம்

    புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர.செல்வம், “தமிழக கல்வி கொள்கையை பின்பற்றி வருவதால் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வாய்ப்பு இல்லை. புதுச்சேரிக்கு தனியான கல்வி கொள்கை அமல்படுத்தினால் மட்டுமே புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.



  • 14:50 (IST) 05 Oct 2022
    சென்ட்ரல் ரயில் நிலைய வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது!

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பரபரப்பை கிளப்பிய விவகாரத்தில் ஆர்கே நகர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்(34) கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 14:48 (IST) 05 Oct 2022
    மெட்ரிக் பள்ளிகளுக்கு 9ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு - இயக்குனர் அறிவிப்பு!

    தசரா பண்டிகை விடுமுறை குறித்த குழப்பம் நீடித்த நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கு 9ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.

    சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை முதல் பள்ளி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:53 (IST) 05 Oct 2022
    'திருமாவளவன், சீமான் தேச துரோகிகள்' - எச்.ராஜா!

    மதுரையில் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, “திருமாவளவன்,சீமான் இருவரும் தேச துரோகிகள். முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர்; ஆனால் ஸ்டாலினுடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள். விசிக,நாதக-வை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 13:47 (IST) 05 Oct 2022
    தமிழகம் - புதுச்சேரியில் வரும் 9ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும், தமிழகம் - புதுச்சேரியில் வரும் 9ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:25 (IST) 05 Oct 2022
    நடிகர் லோகேஷ் தற்கொலை!

    மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட 90'ஸ் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்த நடிகர் லோகேஷ் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 13:24 (IST) 05 Oct 2022
    வள்ளலார் முப்பெரும் விழா - தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.

    சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில், வள்ளலார் இலச்சினை, தபால் உறை, சிறப்பு மலரை வெளியிட்டார்.

    மேலும், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கும் தமிழக அரசு தெரிவித்த அவர் ஓராண்டுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறினார் முதலமைச்சர் ஸ்டாலின்.



  • 13:20 (IST) 05 Oct 2022
    'மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது' - எச்.ராஜா!

    மதுரையில் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, "சட்டப்படி தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றச் செயல்; 11ம் தேதி திருமாவளவன் நடத்தும் மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது” என்று தெரிவித்துள்ளார்.



  • 12:38 (IST) 05 Oct 2022
    36வது தேசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் ஆடவர் அணிக்கு தங்கபதக்கம்!

    36வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் உள்ள 4 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஸ்குவாஷ் போட்டியில் கலந்து கொண்ட ஆடவர் அணியில் அபய் சிங்,வேலவன் செந்தில்குமார், ஹரிந்தர் பால் சிங் சந்து, நவநீத் பிரபு ஆகிய 4 பேர் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.



  • 12:35 (IST) 05 Oct 2022
    'எதிர்காலத்தில் ஆங்கிலம் முக்கியம் என்பது கட்டுக்கதை' - ஆர்எஸ்எஸ் தலைவர்

    "கோயில், தண்ணீர், சுடுகாடு அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அற்ப விஷயங்களுக்கு நாம் சண்டையிடக் கூடாது"

    எதிர்காலத்தில் ஆங்கிலம் முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக்கொள்கை மாணவர்களை பண்பட்டவர்களாக, தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களாக மாற்ற வேண்டும். இது அனைவரின் விருப்பம். இதற்கு சமூகம் ஆதரவளிக்க வேண்டும்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் தெரிவித்துள்ளார்.



  • 12:32 (IST) 05 Oct 2022
    பிலாஸ்பூர் எய்ம்ஸ்: திறந்து வைத்த பிரதமர் மோடி!

    இமாச்சல பிரதேசம் மாநிலம் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கடந்த 2017 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மருத்துவமனை ரூ. 1,470 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.



  • 12:20 (IST) 05 Oct 2022
    பெண்களுக்கு வேலை செய்ய சுதந்திரம், சம உரிமை கொடுங்கள்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆண்டு தசரா விழாவில் கலந்துகொண்டு பேசிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், “பெண்களுக்கு வேலை செய்ய சுதந்திரம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் சம உரிமை வழங்க வேண்டியது அவசியம்.

    எனவே, நமது சொந்த குடும்பங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களுடன் தொடங்கி, அதை அமைப்பின் மூலம் சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பெண்களின் சம பங்களிப்பை உறுதி செய்யும் வரை, நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட முயற்சிகள் வெற்றியடையாது, ”என்று கூறியுள்ளார்.



  • 11:46 (IST) 05 Oct 2022
    பேனா நினைவுச்சின்னம் - சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் - சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு

    மெரினாவில் கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் விவகாரம்.

    சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு.

    முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு அனுமதி கோரி இருந்த நிலையில் உத்தரவு



  • 11:19 (IST) 05 Oct 2022
    திமுக அரசு ஆன்மீகத்துக்கு எதிரானது அல்ல - ஸ்டாலின்

    திமுக அரசு ஆன்மீகத்துக்கு எதிரானது மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது என பரப்புகிறார்கள் - வள்ளலார் முப்பெரும் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து திமுக அரசு செயல்படுகிறது.

    வள்ளலாரை போற்றுவது திமுக அரசின் கடமை.

    வடலூரில் ரூ. 100 கோடி மதிப்பில் வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் - ஸ்டாலின்



  • 11:00 (IST) 05 Oct 2022
    ஜம்மு காஷ்மீர் - 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீர் - சோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை



  • 10:58 (IST) 05 Oct 2022
    விசாரணை முடியும் வரை பொதுக்குழு கூடாது - இபிஎஸ்

    அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. விசாரணை முடியும் வரை பொதுக்குழு கூடாது என உத்தரவாதம் அளித்துள்ளோம்.

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.



  • 10:56 (IST) 05 Oct 2022
    தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தேசிய அளவில் கால் பதிக்கிறது

    தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தேசிய அளவில் கால் பதிக்கிறது

    பாரத ராஷ்டிரிய சமிதி எனும் கட்சியை இன்று அறிவிக்க இருக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.



  • 10:27 (IST) 05 Oct 2022
    ஆபரண தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு. சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 38,680க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,835க்கு விற்பனை. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் 1,040 ரூபாய் அதிகரிப்பு



  • 10:24 (IST) 05 Oct 2022
    சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

    சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

    நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை



  • 10:21 (IST) 05 Oct 2022
    பி.ஆர்க் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

    பி.ஆர்க் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



  • 09:26 (IST) 05 Oct 2022
    கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

    கூத்தனூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற சரஸ்வதி கோவிலில், வித்யாரம்பம் நிகழ்ச்சி

    நெல்மணியில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான அகரம் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்.



  • 09:26 (IST) 05 Oct 2022
    குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா

    குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.

    முளைப்பாரியை தலையில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர்கள். காளி, குறவன், குறத்தி, காவலர்கள் வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்திய ஆண் பக்தர்கள்.



  • 09:25 (IST) 05 Oct 2022
    கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

    கூத்தனூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற சரஸ்வதி கோவிலில், வித்யாரம்பம் நிகழ்ச்சி

    நெல்மணியில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான அகரம் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்.



  • 08:44 (IST) 05 Oct 2022
    திருப்பதி பிரம்மோற்சவம் - சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி.

    ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் நடைபெற்றது தீர்த்தவாரி உற்சவம். சக்கரத்தாழ்வாரை தெப்பக்குளத்தில் மூழ்கி எடுத்த திருப்பதி கோயில் அர்ச்சகர்கள்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment