பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 200 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிறது. நிதி மசோதாக்கள் உள்பட 25 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்.
டெல்லி மாநகராட்சி தேர்தல்
டெல்லி மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
2-வது ஒரு நாள் கிரிக்கெட்
இந்தியா – வங்கசேதம் அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. டாகாவில் நடக்கும் இரண்டாவது போட்டி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்
சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி புறப்பட்டார். அரசு விழாவில் பங்கேற்க ரயிலில் தென்காசி பயணம் செய்கிறார் ஸ்டாலின்
கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் கரை திரும்பவும் மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அறிவுறுத்தியுள்ளது
மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க சென்ற 543 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக உள்ளன ஆந்திர பிரதேச கடற்பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற 43 படகுகளில், உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு இதுவரை 31 படகுகள் கரை சேர்ந்துள்ளன
10 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
திண்டுக்கல்லில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து 25 பள்ளிக் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மதுரையில் ரீல்ஸ் மோகத்தில் பீர் பாட்டிலுடன் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் அட்டகாசம் செய்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவிவரும் நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து நோட்டீஸ் அடித்து ஒட்டிய வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் குருமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நோட்டீஸ் அடித்து கொடுத்ததாக அச்சக உரிமையாளர் மணிகண்டன் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
சேலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் சக்தி வேல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக சேலம் உருக்காலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்திவருகின்றனர்.
இந்தோனேசியாவில் திருமணமாகாதவர்கள் பாலியல் உறவு கொள்ள தடை விதிக்கப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்தச் சட்டம் வெளிநாட்டினருக்கும் பொருந்தும் என்பதால் அந்நாட்டின் சுற்றுலா வருமானம் பாதிக்கும் என எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஜெர்மன் அரசு சட்டம் இயற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி வயது வந்த ஒருவர் அதிகப்பட்சமாக 30 கிராம் வரை பயன்படுத்தும் வகையில் இந்தச் சட்டம் அனுமதிக்கும் எனவும் கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் இருந்து ஓடும் ரயிலில் எண்ணெய் திருடப்பட்ட காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.
1-9 வரையிலான சிறுபான்மை மாணவர்களின் நிறுத்தப்பட்ட கல்வி உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள கடலோர தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறும் என்பதால் வருகிற 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து திருத்துறைப்பூண்டிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
ஆடி கார்களின் விலை 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 1.7 சதவீதம் உயர்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுக்க 166 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வந்த ரயிலில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம், வைர நகைகளை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீசார் சோதனையில் பிடிபட்ட சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த கோபால் என்ற பயணியிடம் சோதனை செய்ததில், பணம் மற்றும் நகைகளுக்கு முறையான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கான அனுமதி சீட்டு 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 2000 ரூபாய்க்கு அனுமதி சீட்டு விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு வழங்காமல் விற்பனை செய்தது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வனத்துறை காவலர்கள் ரோந்து சென்றபோது, வனவிலங்குகளை வேட்டையாடிய 5 பேர் கொண்ட கும்பலை பிடிக்க முயற்சி
செய்தனர். அப்போது, அவர்கள் வனத்துறை காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி பிடிக்க முயன்ற வனத்துறையினர். அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீட்டாவிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி:
ஜல்லிக்கட்டு புகைப்படங்களை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தது யார்?
விதிமுறைகள் மீறல் தொடர்பாக எங்கேனும் புகார் அளித்தீர்களா?
புகைப்படங்களின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா? என்று உச்ச நீதிமன்றம் பீட்டாவிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் பாபா படம் டிசம்பர் 10ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படுகிறது.
இந்தப் படம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக உமர் பரூக், பெரோஸ் கான், தவ்ஃபிக் ஆகிய மூன்று பேரை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்: “ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும்; ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?
விளையாட்டிற்கு முன்பு ஐல்லிக்கட்டு காளைகள் மருத்துவர்களால் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றன;
கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, பல சிறந்த நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பிறகே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஐல்லிக்கட்டிற்கு முன்பு கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும் காளைகள், ஐல்லிக்கட்டிற்கு பிறகு பரிசோதனை செய்யப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, “ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) பெரும்பான்மையை கடந்து வெற்றி பெற்ற நிலையில், ஆம் ஆத்மியின் வெற்றிக்கு டெல்லிக்கு நன்றி தெரிவித்துள்ள துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, உலகின் மிகப்பெரிய மற்றும் எதிர்மறையான” கட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) புதன்கிழமை மதியம் 2.10 மணியளவில் 131 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.
இதுவரை வந்த முடிவுகள்:
ஆம் ஆத்மி கட்சி – 131
பாஜக – 99
INC – 7
சுயேச்சை – 3
டெல்லி மாநகராட்சி MCD 250 வார்டுகளைக் கொண்டுள்ளது, ஒரு கட்சி வெற்றிபெற 126 வார்டுகள் தேவை. ஆம் ஆத்மி கட்சி, இதுவரை 121 இடங்களை கைப்பற்றி, வெற்றியை நெருங்கி வருகிறது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; பாஜக இதுவரை 87 இடங்களைப் பெற்றுள்ளது
ஆம் ஆத்மி 109 வார்டுகளிலும், பாஜக 90 வார்டுகளிலும் முன்னிலை
சென்னை, கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் தீ அணைக்கு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ்
அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி உடன் இருந்தனர்
இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடர்: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிய பிறகான கூட்டத்தொடர் இது”
இளைய உறுப்பினர்களுக்கு சபையில் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் – நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டி விகிதம் 0.35% அதிகரிப்பு
ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு
மத்திய பிரதேசத்தில் 55 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரம்
சிறுவனை மீட்கும் பணியில் 16 மணி நேரமாக மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்
ஆம் ஆத்மி கட்சி – பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மாநில தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி, பா.ஜ.க 114 இடங்களில் முன்னிலையில் உள்ளது, ஆம் ஆத்மி 113 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் வெறும் 12 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பின்தங்கியுள்ளது.
தபால் வாக்குகள், இவிஎம் உள்ளிட்ட மொத்தம் 23 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் இரண்டு வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜக வேட்பாளர் அல்கா ராகவ் லட்சுமி நகர் தொகுதியில் வெற்றி பெற்றார், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) சரிகா சவுத்ரி தர்யாகஞ்சில் வெற்றி பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் (SEC) அறிவித்துள்ளது.
டெல்லி மாநகராட்சி தேர்தல் 250 வார்டுகளுக்கான முன்னிலை நிலவரம்
ஆம் ஆத்மி – 122, பாஜக – 117, காங்கிரஸ் – 9, மற்றவை – 2 வார்டுகளில் முன்னிலை
வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது.
புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
நாளை காலை புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
மதுரையில் 2 மணி நேரம் தாமதமாக ஆவின் பால் விநியோகம்
ஒப்பந்த ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதால் பால் விநியோகத்தில் தொடர்ந்து நீடிக்கும் சிக்கல்
காலை 5 மணிக்கு விநியோகம் செய்ய வேண்டிய பால் 7 மணிக்கு விநியோகம்
ஆவின் பால் தாமதமாக விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி
மதுராந்தகம் அருகே விபத்தில் பலியானவர்கள் சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர்கள். விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழப்பு
நான்கு பேர் படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று இரவு தென்காசி புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தென்காசியில் நாளை நடைபெறும் நலத்திட்ட விழாவில் முதல்வர் பங்கேற்பு
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி பெரும் விபத்து
டாட்டா ஏஸ்ஸில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – போலீசார் விசாரணை