பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக பாரம்பரிய தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி நம்மைச் சுற்றியுள்ள கலாச்சார பாரம்பரிய சின்னங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.
ஐ.பி.எல் டி20
ஐ.பி.எல் டி20 தொடரில் இன்று ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இரவு 7.30க்கு தொடங்கும் போட்டியில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் போட்டி நடைபெறுகிறது. 2 அணிகளும் ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பெறும் முனைப்பில் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
விருதாச்சலம் அருகே மங்கலம் பேட்டையில் டீ கடையில் தானாக தண்ணீர் எடுத்து குடித்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குப்பன் என்பவரை தாக்கிய கடை உரிமையாளர் அண்ணா துரை (59) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும். 5446 பணியிடங்கள் கொண்ட குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும். குரூப் 8, குரூப் 7 பி தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது
ஐபிஎல் 2023 போட்டியில் ஹைதராபாத் அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது
ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின், கர்நாடகா மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள ₹11.04 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 3 அசையும் சொத்துகள், ஒரு அசையா சொத்துகளைச் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருணபதி கிராமத்தில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக ஆட்சியர் தீபக் ஜேக்கப், காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோரை ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
வன்கொடுமை நிகழும் கிராமங்கள் என காவல்துறை மூலம் கண்டறியப்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ரூ200 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருமணமாகாத பெண்கள் தங்கள் தந்தையிடமிருந்து திருமணச் செலவுகளைப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு என தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் சில பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது என்று கூறி, நீதிமன்ற உத்தரவு படி ஆக்கிரமிப்புகளை அகற்றாத அம்பாசமுத்திரம் தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
ஆளுநர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி. மாநில சுயாட்சியை பறிக்கும் எந்த முயற்சிக்கும் எதிராக தமிழ்நாடும், கேரளாவும் அரண். ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிரான போரிலும் வெற்றி பெறுவோம் என முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்
காசோலை மோசடி வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதாக நடிகர் விமலுக்கு ரூ. 300 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்லை அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், உயர்மட்ட விசாரணைக் குழு அதிகாரி அமுதா ஐஏஎஸ் தலைமையில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற 2ம் கட்ட விசாரணை நிறைவடைந்தது. இதுவரை 14 சாட்சியங்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு: “சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியுள்ளார். சட்ட மசோதாவில் சில திருத்தங்களை செய்யக் கோரி உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
அ.திமு.க பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கக் கோரிய எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை பற்றி நாளை (ஏப்ரல் 19) தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உத்தரவிட்டு கடந்த 12-ம் தேதி வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
“எனது கடிதத்திற்கு முழு ஆதரவு மற்றும் உடனே பதில் அளித்த கேரள முதல்வர் பினராயின் விஜயனுக்கு நன்றி. பாரம்பரிய மாநில சுயாட்சியை அழிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக தமிழ்நாடு கேரளா அரணாக நிற்கின்றன” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். மேலும், ‘ீ_பரவட்டும்’ என்று ஹேஷ் டேக் பதிவிட்டுள்ளார்.
Thank you Hon @PinarayiVijayan for your prompt response to my letter & extending full support.TN & Kerala have traditionally stood as a bulwark against any attempt to erode state autonomy. We will win in our crusade against the gubernatorial overreach too.ீ_பரவட்டும்! https://t.co/UdZI4RSRBA
— M.K.Stalin (@mkstalin) April 18, 2023
கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கத்தை கடத்திய வழக்கில், ஏஜென்டுகளாக செயல்பட்டவர்களின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில், கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை 2020ம் ஆண்டு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
விசாரணையில் இதேபோன்று தங்க கடத்தல் பலமுறை நடந்தது அம்பலமான நிலையில், இதற்கு மூளையாக செயல்பட்ட கேடி ரமீஸ் என்பவரை அமலாக்கத்துறை தற்போது கைது செய்துள்ளது.
இதனிடையே கடத்தலுக்கு ஏஜென்டுகளாக இருந்து தங்கத்தை பெற்றுச் சென்றவர்களின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து வருகிறது.
அந்த வகையில், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் கோவையைச் சேர்ந்த நந்தகோபால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 27 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்க, மாநில மொழிகளை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடியின் முன்னெடுப்பை தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு: “தான் வகிக்கும் பதவி எப்போது தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையோ, அப்போது பணியை முடித்துக் கொள்வேன். இடர்ப்பாடுகள் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி பயணித்தால் வாழ்வில் நிச்சயம் முன்னேறலாம். ” என்று என்று பேசினார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதத்துக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் கடிதத்தில், ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் கேரளாவும், தமிழகமும் இணைந்து செயல்படும்; ஆளுநர் விவகாரத்தில் அனைத்து வகையிலும் ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கோடை வெயில் பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பணி நேரத்தை மாற்றியமைப்பது, பணி இடங்களில் குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தவும், கட்டுமான தொழிலாளர்களை வெப்ப நோய்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை ஏப்.30-க்குள் செலுத்த வேண்டும். 2023-2024 ஆண்டுக்கான சொத்து வரியினை ஏப்.30-க்குள் செலுத்துபவர்களுக்கு 5% ஊக்கத்தொகை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கில் வரும் 21ம் தேதி சென்னை-ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று துவங்கியது. கவுன்டரில் விற்பனை தொடங்கிய மூன்றே மணி நேரத்தில் டிக்கெட் தீர்ந்து போனது. இதேபோல், ஆன்லைனிலும் ஒரே நிமிடத்தில் டிக்கெட் தீர்ந்து போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் நடந்த குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்த ஒன்றிய அரசின் அனுமதி ஆவணம் கிடைக்கப்பெறாததால், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் மேலும் கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள ஐதராபாத் – மும்பை அணிகள் இடையேயான போட்டி தொடர்பாக சூதாட்டம் நடந்துள்ளது. 4 பேர் கைதான நிலையில் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
“பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் நடைபெறும் விசாரணையின் மீது நம்பிக்கை உள்ளது. “ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாரியப்பன் பேட்டி அளித்துள்ளார்.
“பிச்சைக்காரன்-2 படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்ததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. படம் வெளியாவதை தடுக்க வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றும், இதனால், மன உளைச்சலால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளார்.
செஞ்சி அருகே வாலிபால் நெட் கம்பத்தில் இளைஞர் ஒருவர் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் நேற்று மாயமான நிலையில், இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இளைஞரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மாடுகள் ஓடுவதை வேடிக்கை பார்த்த சிப்பாயூரை சேர்ந்த முனுசாமி (65) என்பவர் யிரிழந்தார். குட்டூர் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் சோகம் நிலவுகிறது.
சென்னை பெரம்பூர் அரபிக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மசூதியை இடிக்க வேண்டும் என்று, திருப்பூரை சேர்ந்த வக்கீல் கோபிநாத் வழக்கு தொடர்ந்தார்.
உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளார் என்ற அரசின் வாதத்தை ஏற்று, ரூ.25,000 அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழகம், புதுச்சேரியில் வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு . லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்
பென்னாகரம் அருகே மின் கோபுரத்தில் ஏறி விவசாயி ஒருவர் தற்கொலை மிரட்டல் தனது பெயரில் உள்ள நிலத்தை, வேறு ஒருவர் பெயரில் விஏஓ சிட்டா மாற்றியதாக புகார் . கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும். வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும். சென்னை வானிலை மையம்
நாகை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து. நெல் மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு.
நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளத்தினர் வேலைநிறுத்த நோட்டீஸ். போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் . மே மாதத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக நோட்டீஸ்
அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில், வார நாட்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை நீக்கம். அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என அறிவிப்பு.
தீண்டாமை ஒழிப்புக்காக போராடியவர் இளைய பெருமாள். . இளைய பெருமாள் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு அடித்தளமே இளையபெருமாள் ஆணையத்தின் அறிக்கை தான்.
சிதம்பரத்தில் இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் – பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பார் நான் தான். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு. நீதிமன்றம் விதித்திருந்த 10 நாள் கெடு, வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், ஓ,பி.எஸ் மனு
ஊத்துக்கோட்டை அருகே பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வீடியோ வைரலான நிலையில் முதல்வர் பாராட்டு.
கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க ஹெலிகாப்டரில் பண மூட்டைகளை கொண்டு வந்தார் என காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் குற்றச்சாட்டு.
கால விரையத்தைக் குறைப்பதற்காகவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். தோல்வி பயத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எங்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் என கர்நாடக தேர்தல் பா.ஜ.க பொறுப்பாளராக உள்ள அண்ணாமலை பதில்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ. 45,200க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கம் 5,650- க்கு விற்பனை
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் வருகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் பங்கேற்கிறார்
செங்கல்பட்டு அருகே ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை
பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தகவல்
ஆன்லைன் செயலியில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் விபரீத முடிவு
22 வயதான இளைஞர் வசந்தின் உடலை கைப்பற்றி படாளம் போலீசார் விசாரணை
தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போன் சிம்கார்டை உடைத்தெறிந்த வசந்த்
இந்திய அளவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 61,233 ஆக உயர்வு
கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்று எண்ணிக்கை 7,633 ஆக பதிவு
தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும்.
அனுப்ப தவறினால் அந்த பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.
நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு.
ஏப்.21 சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது
காலை 9.30 மணிக்கு தொடங்கும் டிக்கெட் விற்பனைக்கு, நள்ளிரவு முதலே ரசிகர்கள் காத்திருப்பு
காவல்துறை அறிவுறுத்தலையும் மீறி இரவு நேரத்தில் கூடிய இளைஞர்களை விரட்டியடித்த போலீஸ்
உலக பாரம்பரிய தினம்: மாமல்லபுரத்தில் இன்று அனுமதி இலவசம்
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இன்று மாமல்லபுரத்தில் அனுமதி இலவசம்.
மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இன்று இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.